HRE-56:துவாரகை: “குஜராத் மாநிலத்தின் தேவ-பூமி”

Tags

, , , , , , , , , , , , ,

(23-30, May 2017)

முக்தி தரும் ஷேத்ரங்கள்-7: அயோதியா, மதுரா, துவாரகை, காஞ்சி, காசி, கயா, உஜ்ஜையினி  

தாயாருடன் உம்மை காண அருளிய கண்ணா, “உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியர்களைப் பணிந்து”, உமக்கு அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

      துவாரகை-துவாரகா குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. வைணவத் திருத்தலங்கல்-108 ல் ஒன்றாது திருத்துவாரகை. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது.

      கண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், ஜராசந்தன் 18 முறை படையெடுத்தான். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்தான். மேலும் 17 மற்றும் 18வது யுத்தத்துக்கு இடையில், காலயவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான்.

    கண்ணன், கடலின் நடுவே 120 மைல் அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்து மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார்.

     துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் குறிக்கும். எனினும், கிருஷ்ணானுபவத்தின் பெருமையை அறிந்து, துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில தலங்களையும் சேர்த்துபஞ்ச மற்றும் நவ துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

56.1. கோமதி துவாரகை (துவாரகாதீசர் கோயில்)கோமதி நதிக்கரை (24th May, 11.30 am)-குஜராத்-“ஆழ்வார்கள் மங்களாசனம் செய்த திவ்ய தேசம்”

 • பெருமாள்-கல்யாண நாராயணன், துவாரகா நாதன்-துவாராகாதீசன்.
 • தாயார்கல்யாண நாச்சியார்-ருக்மணி, அஷ்டமகிசிகள்.
 • கோமதி தீர்த்தம்; ஹேம கூட விமானம்
 • ஒருநாளில்- 17 முறை பிரசாதம்-உடை–கொடி ஐந்து முறை
 • மீரா கண்ணனுடன் கலந்த தலம்.
 • பிரதான வடக்கு வாயில்- மோட்ச துவாரம்- சிவன் கோவில் குசேஸ்வர் -தெற்கு வாயில் சொர்க்க துவாரம்
 • தெற்கு கோமதி நதிபடித்துறைகள்: சங்கம்காட் சங்கமநாராயணர்-வாசுதேவகாட் ஆஞ்சனேயர், நரசிம்மர்.
 • நான்காவது தளம்-அம்பிகை-சந்நிதி-பலதேவர்-கருடன்-ராஜபலி
 • மேற்கே அம்பிகை,புருஷோத்தமன், தத்தாத்ரேயர், தேவகி, நாராயணன்;கிழக்கே சத்யபாமா-சங்கராச்சாரியார்கள்.     
 • இறைவன் நின்ற திருக்கோலம்-துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம்.

 • கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.

        பக்த மீரா கண்ணனுடன் கலந்த தலம்-கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.ஆலயத்தின் பிரதான வாயில் வடக்கு- மோட்ச துவாரம்- தெற்கு வாயில் சொர்க்க துவாரம் . தெற்கு வாயிலைக் கடந்து 56 படிகள் இறங்கிச் சென்றால் கோமதி நதியை அடையலாம்.

      கோமதி நதி பல படித்துறைகள்: சங்கம்காட்  சங்கமநாராயணர்-வாசுதேவகாட் ஆஞ்சனேயர், நரசிம்மர்.

         துவாரகதீஷ் கிருஷ்ணர் நான்கு கரங்களோடு திகழ்கிறார். இவர் பாதங்களைத் தொட்டு வணங்கலாம். ஆலயத்தின் நான்காவது தளத்தில் அம்பிகைக்கு சந்நிதி உள்ளது. சபாமண்டபத்தில் பலதேவர் சந்நிதி உள்ளது. கருடன், ராஜபலி உள்ளிட்ட சந்நிதிகளும் காணப்படுகின்றன.

           ஆலயத்திற்கு மேற்கே அம்பிகை, புருஷோத்தமன், தத்தாத்ரேயர், தேவகி, லட்சுமி நாராயணன் கோவில்கள் அமைந்துள்ளன. கிழக்கே சத்யபாமா ஆலயம். அருகே சங்கராச்சாரியார்கள் அமரும் அறை சாரதா பீட மடமும் உள்ளது.

       துவாரகதீஷ் ஆலயத்தின் வடக்கு வாசல் அருகில் குசேஸ்வரர் என்னும் சிவன் கோவில் அமைந்துள்ளது. துவாரகை வரும் பக்தர்கள் இவ்வாலயத்தையும் கண்டிப்பாக வணங்கவேண்டுமென்பது நியதி. இவ்வாலயம் சத்ய யுகம் என்னும் கிருத யுகத்தோடு தொடர்புடையது.

       சத்யயுகத்தில் திரிவிக்ரம பெருமாள், அரக்கனுடன் போரிட அவனைக் கொல்லமுடியவில்லை. இறுதியில் அரக்கனை உயிரோடு பூமிக்குள் ஆழ்த்திவிடுகிறார் பெருமாள். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே குசேஸ்வர் சிவலிங்கம் எனப்படுகிறது.

      அந்த அரக்கன் பூமிக்குள் ஆழ்ந்தபோது, “பக்தர்கள் இங்குவந்து வணங்கினால்தான் முழுப் பயனையும் அடைவர் என்றருள வேண்டும்’ என வரம் கேட்டானாம். திரிவிக்ரமரும் அவ்வாறே அருளினார்.

           கோமதி துவாரகை மூல மூர்த்தியை, டாகோருக்கு போடானா எடுத்து வந்த பிறகு, ருக்மிணிதேவி பூஜித்த மூர்த்தமானது, லாட்வா கிராமத்தின் குளத்தில் கிடைத்தது.

      துவாரகைக் கோயிலின் துவஜஸ்தம்பம் உலகின் மிகப் பெரியது. ஒருகாலத்தில், ‘குசஸ் தலீ’ என அழைக்கப்பட்ட இந்த ஊர், மோட்ச துவாரமாகச் சொல்லப்பட்டு, துவாரகை என்றானது!

            The temple has a five-story structure built on 72 pillars. There are two entrances to the temple. The main entrance (North entrance) is called “Moksha Dwara” (Door to Salvation). This entrance takes to the main market. The south entrance is called “Swarga Dwara” (Gate to Heaven). Outside this doorway are 56 steps that leads to the Gomathi River.

       Lord Sri Krishna got married to Rukmini and other 8 Mahisis and 16,000 damsels who were imprisoned by Narakasuran. Lord Sri Krishna lived with His 16,008 wives in this place expanding Himself into as many forms as it was required.

       It was here that “PARIJATHAM TREE’ was brought from Indralokam and planted; the Lord answered Draupadi’s prayers during her Vastrabhaharanam; the Lord went to Hastinapuram as “PAANDAVADOOTHAN

          The marble pieces are believed to be part of Lord Krishna’s palace known as “GOMATHI CHAKRAM” and as “DWARAKA STONES and are treated on par with Salagramams. There are no strict norms for offering worship to these stones like Saligramam. While Salagramam are treated as Lord Vishnu, these Dwaraka stones are considered as Thayar. These stones are in different shapes and sizes.Those who worship Salagramam and Dwaraka Stones will attain moksham.

          மங்களாசாசனம்:நம்மாழ்வார் (3260); பெரியாழ்வார்(333, 398, 399, 415, 472); ஆண்டாள் (507, 541, 594,625) ; திருமங்கையாழ்வார்(1504,1524) ; திருமழிசையாழ்வார் (2452); தொண்டரடிப்பொடியாழ்வார் (916).

பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை
எல்லாரும் சூழச்சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.                          பெரியாழ்வார் திருமொழி-4.2..6; 333

திரைபொரு கடல் சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென்னும் கடிநகரே.
பெரியாழ்வார் திருமொழி-4.7..8; 398

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே.
பெரியாழ்வார் திருமொழி-4.7..9; 399

56.2. பேட் துவாரகை(தீவு-துவாரகை)குஜராத் (24th May, 5pm)

     கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!

    கடலுக்கு நடுவில், ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் உள்ளது. முதலில், ப்ரத்யும் சந்நிதி; நடுவில் கண்ணனின் ஆலயம். தேவகி, மாதவன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்குதான்!

            இந்தத் தீர்த்தக்கரையில்தான், யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டனர்.

      இதை அடுத்து, ப்ராசீ த்ரிவேணி. இங்கு செல்லும் வழியில், பிரம்ம குண்டம் எனும் குளமும், பிரம்ம கமண்டலு எனும் கிணறும் உள்ளன. இவற்றுக்கு முன்னே ஆதிப்ரபாஸம், ஜலப் பிரபாஸம் என இரண்டு குண்டங்கள் உண்டு. ப்ரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா எனும் நதிகள் கடலில் கலக்கின்றன. இதனால் ‘ப்ராசி த்ரிவேணி’ எனப்படுகிறது.

     கோமதி துவாரகை & பேட் துவாரகை (Both together) called துவாரகாபுரி இரண்டுக்கும் நடுவே கடல் அமைந்துள்ளது.

56.3. ருக்மணி துவாரகை – குஜராத்: (24th May,7.30 am)

    துர்வாச முனிவர் ‘கண்ணனைப் பிரிவாய்’ என ருக்மிணிக்குச் சாபம் கொடுத்தாராம். அப்போது, ‘இந்த மூர்த்தத்தில் நான் உறைந்துள்ளேன். இதனை அனுதினமும் பூஜித்து வா’ என மூர்த்தம் ஒன்றைக் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்தாராம். அந்த மூர்த்தமே, குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனை, துவாரகையில் தரிசிக்கலாம்!

    துர்வாசரின் சாபம் காரணமாக, துவாரகையில் இருந்து ஓகா செல்லும் வழியில், தனிக்கோயிலில் காட்சி தருகிறாள் ஸ்ரீருக்மிணிதேவி. இங்கு தண்ணீர் தானம் சிறப்பானது.

56.4. மூல துவாரகைகுஜராத்: The place where Lord Sri Krishna first placed His foot (25th May,11.30 am)

      ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமா மற்றும் ருக்மிணியுடன் இங்கு தங்கி, துவாரகாபுரியை எப்படி நிர்மாணிக்கலாம் என்று ஆலோசனை நடத்திய இடம் என்பதால் இதற்கு மூல துவாரகா என்று பெயர் வந்தது என்றார்கள்.

56.5. சுதாமா துவாரகைகுஜராத் Porbhandhar, the birth place of Gandhiji-Sudhama (Kuselan) lived here(24th May,12.15 pm)

  

 56.6. முக்தி துவாரகை குஜராத்:24th May,12.30 am

      அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது ஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் சந்தித்து, சுபத்திரையை மணந்தார்.ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கனையால் காலில் தாக்கப்பட்டார் என பாகவத புராணம் கூறுகிறது.

பாலகா தீர்த்தம்-வேராவல்-பாலுபூர் கிராமம்- கண்ணன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுந்தம் எழுந்தருளினாராம்-பால குண்டம் குளம், பத்மகுண்டம், அடுத்து அரச மரம் அமைந்துள்ளது. இதனை மோட்ச பீபல்’வைகுண்டம் செல்லக் காத்திருக்கும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணர்.

 56.7.டாகோர் துவாரகை– குஜராத்:(30th May,11.50am)

     போடானா, தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.
      எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம். வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டி வந்தாராம்.

            டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக் கிளையின் இலைகள் இனிப்பாக திகழ்கின்றன!

      இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். ‘தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!’ என்றார் பகவான்.

      போடானா மனைவி, தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். மூக்குத்தி வைத்த தட்டு, கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்தது. வந்தவர்கள் குழம்பியபடி கிளம்பிச் சென்றனர்.     துவாரகை நாயகனே டாகோரில் தரிசனம் தருகிறார்.

           This place came to be known as Dakore Dwaraka as the idol was brought by the old man whom they considered to be a Daaku (thief).

          Perumal ordered them to make another idol and said that they should not open the room in which the idol was kept for 6 months. The people made an idol and kept in a room and locked it . But out of curiosity, even before the specified time was over, they opened the doors of the room. They found to their dismay that the eyes of the Lord were closed. An asareeri was once again heard which said that as they did not obey Lord’s command, the eyes were closed.

56.8. ஸ்ரீநாத்ராஜஸ்தான்(27th May,11.45 am)

        நாதன் இருக்குமிடத்தின் வாயில், அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில்).ராஜஸ்தானில், உதய்பூருக்கு வடக்கே 50 கி.மீ. இறைவன் ஸ்ரீநாத்ஜி. துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை, வைணவ ஆச்சார்யர்களில் முக்கிய மானவரான ஸ்ரீமந்நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது, பூஜித்து வந்ததாகச் சொல்வர். ஸ்ரீ நாத முனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணிய கோயில் இது. அவர் வர இயலாத காரணத்தால், அவர் பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

   அந்நியப் படையெடுப்பின்போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர், ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது, சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுக்கவே, ‘இந்த இடமே இறைவனுக்கு விருப்பம் போலும்’ என உணர்ந்த தாவோஜி, அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்

      இடது கையால் கோவர்த்தனகிரியைச் சுமந்தபடியும், வலது கையை இடுப்பில் வைத்தபடியும் தரிசனம் ஸ்ரீநாத்ஜி. கறுப்பு சலவைக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியனவும் உள்ளன. இங்கே, எம்பெருமாளை குழந்தை கண்ணனாகவே பாவித்து, வணங்குகின்றனர். குழந்தையால் நீண்ட நேரம் நிற்கமுடியாது எனவே, ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார்.

      பக்த மீராவுக்கு, ஸ்ரீகண்ணன் அடைக்கலம் அளித்த தலமும் இதுவே!

56.9.காங்க்ரோலிராஜஸ்தான்(24th May,2.30 pm)

     ஸ்ரீநாத்திலிந்து 12 கி.மீ. . சிறிய மூர்த்தமாகக் அழகுடன் காட்சி தருகிறார் கண்ணன். ருக்மிணி குழந்தை கிருஷ்ணன் விக்ரகத்தை அலங்கரித்து வழிபடும்போது, துர்வாச முனிவர் வருகிறார். அவரை ருக்மிணி கவனிக்கவில்லை. அதனால், ‘உனக்குப் பிறகு இந்த விக்ரகத்திற்கு பூஜை இருக்காது’ என்று சாபமிடுகிறார் முனிவர். ருக்மிணி அவருக்குப் பாத பூஜை செய்து, செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறாள். துர்வாசரும் ‘கலியுகத்தில் இந்தக் கண்ணன் வெளிப்படுவான்; அப்போது பூஜைகள் நடக்கும்’ என்று ஆசீர்வதிக்கிறார்.

    அதன்படியே வல்லபாச்சார்யர் அந்த விக்ரகத்தைக் கண்டெடுத்து ஸ்தாபிக்கிறார். இங்கே எட்டுக் கால பூஜை உண்டு. அரை மணிக்கு ஒரு முறை பால், வெண்ணெய், ரொட்டி போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.

 1. உஜ்ஜயினிமத்திய பிரதேசம்(28th May,11.30 am)

       உஜ்ஜயினி. முன்னாளில் அவந்தி எனப்பட்டது. மகாகவி காளிதாசன் வாழ்ந்த நகரம். விக்ரமாதித்தன் மாளவ நாட்டின் தலைநகராக இருந்தது இந்த நகரமே. சகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன் வாழ்ந்த நகரமும் இதுவே. விக்ரமாதித்தனின் வெற்றிக்குக் காரணமான காளி கோவிலும், காளிதாசனைக் கவி பாடவைத்த காளிகோவிலும் இங்குள்ளன. “உஜ்ஜயினி நித்யகல்யாணி ஓம் சக்தி’ என மகாகவி பாரதியும் இங்குள்ள காளியைப் பாடியுள்ளார். ஏராளமாக கவிகள் தோன்றி மிகச்சிறந்த காவியங்களைப் படைத்துள்ளனர்.

சாந்திபினி ஆஸ்ரமம்-உஜ்ஜயினி. (28th May,7.30 pm)

      உஜ்ஜயினியில் கண்ணன்-சாந்திபினீ முனிவாிடம் கல்வி கற்கும் பொழுது பலகையில் “தான் எழுதியதை” அழித்து அடுத்த பாடம் எழுத வேண்டியிருந்தது.

         தான் எழுதின எழுத்தை அழிக்க முடியவில்லை என்றார் கண்ணன். அதற்கு சாந்திபினீ தான் ஸ்நான அனுஷ்டானங்கள் செய்யும் குளத்திலிருந்த ஜலத்தால் அழிக்கச் சொன்னவுடன் சிலேட்டில் கண்ணன் எழுதிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.

     பகவான் எழுதின எழுத்தை பகவானே நீக்க முடியவில்லை என்றாலும் ஆச்சாா்யனின் ஸ்ரீபாத தீா்த்தம் நீக்கிவிடும்………………..!!!!!!

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

      Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள் (78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

$$$$$$$$$$$

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

&&&&&&&&&&&&&&&&

HRE-55:இராமாநுஜர்

Tags

, , , , , , , , , , , , , ,

Please click below for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

அனந்தன் என்னும் ஆதிசேஷனின் அம்சமான, இராமாநுஜர் 1000 ம் ஆண்டு அவதாரத் திருநாள் 1-5-2017 

Ramanujar

{அவதாரம்: ஸ்ரீபெரும்பூதூர், பிங்கள ,1017, ஆண்டு சித்திரை மாதம், சுக்ல- பஞ்சமி-திருவாதிரை}

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறனடி பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமாநுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே.

வைகுந்த ஆலோசனை-அனந்தனின் இராமாநுஜ அவதாரம்

                மனதைக்குழப்பும் வகையில் பிற மதங்களின் ஆதிக்கம் ஓங்கி, இருந்த  காலம்.  திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணன் ஸயனித்து இருக்க, அவர் அருகில் கவலையே உருவாக ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறார்.

      நீங்கள் பகவத்கீதையில் கூறியதை மறந்து பிற மதவாதிகளின் பேச்சில் மயங்கி, உம்மை மறந்து பிற தேவதைகளின் அருளை நாடிச் செல்கின்றனர். மேலும் அந்த தேவதைகளுக்கு சக்திகளை அளிப்பதும் நீங்கள் தாம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.  முக்தி அடைவதற்கான மார்கமான சரணாகதியை நீங்கள் காட்டியிருந்தும், அதனை மறந்து அவர்கள் இந்த உலகில் பிறந்து உழல்வதையே விரும்புகின்றனர்.

     நீங்கள், பூவுலகில் அதர்மத்தை ஒடுக்க ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்  “என்று முடிப்பதற்கு முன்பே பகவான்,  அந்த அளவிற்கு பயங்கரம் நடந்துவிடவில்லை மேலும் என் அவதாரமான ‘கல்கி”அவதாரம் கலியுக முடிவில்தானே நிகழவேண்டும்.

     அவ்வப்போது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் அவதரிக்கச்செய்து அவர்கள் மூலம் அருளிச்செயல்களை அளிக்க மக்கள் உம்மை வந்து சரணாகதி அடைவதில்லையே.   மற்ற மதவாதிகளின் அழகான பேச்சில் மயங்கிக் கிடக்கிறார்களே, அந்த ஜீவாத்மாக்கள் நம்மிடம் எப்போது வந்து சேர்வது? என்று வாஞ்சையுடன் ஸ்ரீதேவி கேட்க, வேறு ஒருவரை ஆச்சார்யனாக அவதரிக்கச் செய்து அவர்மூலம் சரணாகதி தத்துவத்தை, எளிய முறையில், எடுத்துச் சொல்லச் செய்து நம்மிடம் வந்து சேரவேண்டும்.

     பகவான், அநந்தனை நியமிக்க, ஆதிஸேஷன், தனியாக நான் மட்டும் பிறந்து எதைச்சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஆதிசேஷன் தன் பேச்சை முடிப்பதற்குள், எம்பெருமான், அநந்தா விஷத்தை விஷத்தால்தான் முறிக்கமுடியும். உன் சக்தி அவர்கள் மனதை உன் திறமையான வாதங்களால் மாற்றிவிடும் என்று முடித்தார்.

    நீ பூலோகத்தில் வாஸம் செய்யப் போவது 120 ஆண்டுகளே.  அவை நம் நாட்கணக்கில் கண்ணிமைக்கும் நாழிகை.அநந்தன் ப்ரபோ! அடியேனுக்கு சரணாகதியைப் பற்றி என்ன தெரியும்“ என்று கேட்க, எம்பெருமான்,

    ராமாவதாரத்தில் காகாசுரன், விபீஷணன், ஸமுத்ரராஜன்; கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் போன்றோர் என்னை சரணடைந்து அவர்களைக் காப்பாற்றியது மறந்துவிட்டாயா? நான் பகவத் கீதையில் கூறிய சரம-ஸ்லோகத்தின் பொருளையும் மக்களுக்கு உன் உபதேஸங்களாக எடுத்துக் கூறு, மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அநந்தன் பூலோகத்தில் பிறவி எடுக்கத் தயாரானார்.

                ஸ்ரீஆளவந்தாரின் சிஷ்யர்களில் ஒருவரான, பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர்.  அவர்கள் பூமிபிராட்டி மற்றும் பெரியபிராட்டி.  இவர்களில் மூத்த காந்திமதிஅம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.பெரிய திருமலை நம்பிகள் திருமலைக்குச்சென்று வேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்வதில் ஈடுபட்டார்.

55.1. இராமாநுஜர் திருஅவதாரம் (1017)

  சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமான்- காந்திமதிஅம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி திருத்தலத்திற்கு வந்தனர்.  அங்கு பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.

Also please refer:-

      வேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள்.  கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

    தம் சகோதரிக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்த பெரிய திருமலைநம்பிகள்(ஸ்ரீசைலபூரணர்), திருமலையிலிருந்து, ஸ்ரீபெரும்பூதூர் வந்தார்.  குழந்தையைப் பார்த்ததும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்யும் காந்தி  குழந்தையின் முகத்தில் தெரிந்ததால் “இராமாநுஜன்” , “இளையாழ்வார் “ என்ற பெயரும் வைத்தார்கள்.

     மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர்-ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு குரோதன ஆண்டு தை மாதம், புனர்பூஸ நக்ஷத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  பெரிய திருமலை நம்பிகள், மதுரமங்கலம் கடாக்ஷித்து அதற்கு “ கோவிந்தபட்டர் “ என்று பெயர் சூட்டினார்.

    இராமாநுஜர்16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார்.

    கோவிந்தபட்டரும் வேத அத்யனம் பண்ணி ஸாமாந்ய சாஸ்திரங்களைக் கற்றார்.  பிறகு உரியகாலத்தில் திருமணமும் செய்து கொண்டார்.

55.2.முதல் குருயாதவப்ரகாசர்

    இராமாநுஜர், திருப்புட்குழி யாதவப்ரகாசரிடம் வாசித்து வருவது கேட்டு கோவிந்தபட்டரும், அவரிடம் சென்று வாசிக்கத் தொடங்கினார்.

   

        ஒருநாள் தம் குருவிற்கு, இராமாநுஜர் எண்ணைத்தேய்த்துக் கொண்டு இருந்தார், அச்சமயம், ஒரு சிஷ்யன் குருவிடம் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷீணி” என்ற ஸ்ருதி வாக்யத்திற்கு அர்த்தம் கேட்க, குரு,கபி=, குரங்கு, ஆஸம்=பின்பாகம், (குரங்கினுடைய பின்பாகத்  தைப் போன்று சிவந்த கண்களையுடையவன் பகவான்) என்று பொருள் கூறினார்.

     இதைக்கேட்ட ராமாநுஜரின் கண்ணீர் பெருகியது. குரு, காரணம் கேட்க, ராமாநுஜரும், ஸ்வாமி, உயர்ந்த எம்பெருமானின் திருக்கண்களைத் தாங்கள் குரங்கின் பின்பாகத்துடன் ஒப்பிடுவது சரியில்லை. நிறைய நீருள்ள தடாகத்தில், தண்டு பெருத்ததாய் ஸூர்ய கிரணத்தினால் மலர்ந்ததாய் இருக்கும் தாமரை மலர் போன்ற கண்களையுடையவன் பகவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  என்றார்.

       யாதவபிரகாஸரின் மனம் கொந்தளித்தது.  தமக்குப் பிரியமான சில சீடர்களை அழைத்து, ராமாநுஜன் போக்கே சரியில்லை.  அவனை இப்படியே விட்டால் நம் மதத்திற்குதான் ஆபத்து.ஆகவே அவன் கதையை முடித்துவிடவேண்டும்.

     நான் கங்கா யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறேன்.  அங்கே கங்கையின் பிரவாகத்தில் அவனைத்தள்ளிவிட்டு, தவறி விழுந்து விட்டான் என்று சொல்லி விடலாம் “  என்றார்.  கள்ளம் கபடமறியாத இராமாநுஜரும், கோவிந்தனும் வர குருவும் சீடர்களும் வடதேஸ யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

    ஒரு நாள் குருவும்-சீடர்களும் விந்திய மலைச்சாரலில் முன்னேறி கொண்டு இருக்க, இளையாழ்வாரும், பட்டரும் மிக பின் தங்கியிருந்தார்கள்  கோவிந்தன் தன் அண்ணனிடம் குருவின் சூழ்ச்சியைப் பற்றி தெரிவித்து, அவரை அங்கிருந்து தப்பிப்போகச் செய்துவிட்டு தான் மட்டும் வேகமாகச் சென்று குருவின் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார்.  இளையாழ்வாரும் தம் ஊர் நோக்கி திரும்பிச் செல்ல பயணமானார்.

          யாதவபிரகாஸரும் அவர் சிஷ்யர்களும், வேகுநேரமாகியும் இராமாநுஜர் காணாமல் போகவே, பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் இளயாழ்வார் கிடைக்கவில்லை.  ஆகவே , ஏதாவது காட்டு-மிருகம், இராமாநுஜரைக் கொன்றுறிருக்கக்கூடும்  என்ற முடிவிற்கு வந்தவர்களாக, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

     தனியே இளையாழ்வார், பிரயாணம் செய்து களைத்து, அஸ்தமிக்கும் தருணத்தில் ஒருமரத்தடியில், அமர்ந்தார்.

        ஒரு வில்லியும், வில்லிச்சியும் காஞ்சீபுரம் போய்க் கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வாருங்கள் என்றதும், இளையாழ்வார் பின்னே தொடர்ந்தார்.இரவு மூவரும், ஒருமரத்தடியில் தங்கினார்கள். பொழுது விடிந்தது.வில்லிச்சி தனக்கு தாகமாக இருக்கிறது என்று சொல்ல இளையாழ்வார் சாலையோரமிருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்தபோது அவர்களை அங்கு காணவில்லை.  தலையை உயர்த்திப்-பார்த்தவருக்கு, புண்யகோடி விமானம் கண்களில் பட்டது. தாம் இப்போது இருப்பது காஞ்சீபுரம் தான்,  வந்த தம்பதிகள் பேரருளனான வரதராஜனும், பெருந்தேவித்தாயாருமே என்பது. எம்பெருமானின் கருணையை நினைந்து, நினைந்து மூர்ச்சையானார்.

               கோயிலுக்குச்சென்று  பேரருளாளனை தரிசித்தார்.  அன்று முதல் தாம் அந்த திவ்ய தம்பதிகளுக்கு நீர் கொண்டு வந்த கிணற்றிலிருந்தே தீர்தம் கொண்டுவந்து, பேரருளாளனின் திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.

    இன்றும் அந்த சாலைக்கிணற்றிலிருந்துதான் பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டுவரப் படுகின்றது. அருகில் இராமாநுஜருக்கு  சந்நிதியுள்ளது.  பிரதி வருடமும், இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் அருளாளன் இந்த இளையாழ்வார் சந்நிக்கு எழுந்தருள, அவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.  அன்று எம்பெருமானும்-தாயாரும், வில்லி, வில்லிச்சியாக கையில் வில்லும், அம்பும் ஸமர்பித்து அலங்காரம் செய்யப்படுகின்றது.

உள்ளங்கை கொணர்ந்த நாயனார்

           யாதவப்ரகாஸர் மந்திரசக்தியினால், கங்கையில் ஸ்நாநம் செய்த கோவிந்த பட்டரின், கையில் ஒரு சிவலிங்கத்தை வரவழைதர்.  நீ இதனை தினமும் பூஜித்து வா இன்று முதல் உன் பெயர் உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று வாழ்த்னார் , தன் ஸ்ரீவைஷ்ணவ சீடன் ஒருவனை அத்வைதியாக மாற்றி விட்டோம் என்று மகிழ்ந்தார். கோவிந்தனும் சிவமதத்தைச் சேர்ந்தவராக மாறியதுடன் அந்த லிங்கத்தை தம் சொந்த ஊரான மதுர மங்கலத்தில் ப்ரதிஷ்டை செய்து பூஜித்து வரலானார்.  பின்பு காளஹஸ்தி சென்று காளஹஸ்திநாதனுக்கு சிவபூஜை செய்து வரலானார்.

            சீடர்களுடன் காஞ்சீபுரம் திரும்பிய யாதவப்ரகாஸர் இராமாநுஜரைக் கண்டு, ஆச்சர்யப் பட்டார். இராமநுஜர் முன் போல் அவரிடம் பாடம் கற்கச் சென்றார்.

          காஞ்சி மன்னனின் மகளை ஒரு சமயம் ப்ரஹ்ம-ராக்ஷஸ் பற்றிக்கொண்டது.  பலர் முயன்றும் அதை விரட்ட முடியவில்லை.  சிலர் யாதவப்ரகாஸர் அதை விரட்டமுடியும் என்று கூற, மன்னன் ஆட்களை அனுப்பினான்.

               அவர் அதை விரட்ட அது“ நீர் போன ஜன்மத்தில் மதுராந்தகம் ஏரியில் ஒரு உடும்பாக இருந்தீர். அங்கு வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தை நீ உண்டதால் இந்த ஜன்மாவில் பிறவியைப் பெற்றீர். நானோ போன ஜன்மாவில், ப்ராஹ்மண ஸ்ரேஸ்ஷடனாக இருந்தேன்.  ஒரு யாகம் செய்யும் போது நேர்ந்த சிறிய தவரினால் இதுபோல் மாறிவிட்டேன். ஆகவே நீ போகச்சொன்னால் போகமாட்டேன்.  உன் சீடரான இராமாநுஜர் சொன்னால் போவேன் என்றது. “  மன்னன் இளையாழ்வாரிடம் வேண்ட அவரும் இந்த பெண்ணை விட்டுச் சென்று விடு என உடனே அகன்றது.

            யாதவப்பிரகாஸர் உபநிஷத் வாக்யங்களுக்கு, அர்த்தம் சொல்லிக் கொண்டு இருந்தார். உபநிஷத் வாக்யத்திற்கு அத்வைத மதப்படி அர்த்தம் கூறினார்.  ஆனால் இளையாழ்வாரின் மனம் அதை ஒப்பவில்லை.  அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, பொருள்கூற, குருவிற்கு கோபம் வந்தது.

         இனி நீ உனக்கு உகந்த இடத்தைத் தேர்ந்து கொள் “ என்று கூறிவிடவே, இராமாநுஜரும் தம் வீட்டிற்குத் திரும்பினார்.  அவருடைய தாயாரும், பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிரு“ என்று கூறிவிடவே, இளையாழ்வாரும்  தினம் சாலைக்கிணற்றிலிருந்து, பேரருளாளனுக்கு  தீர்த்தம் கொண்டுவரும் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு வந்தார்.

55.3.திருக்கச்சி நம்பிகள்

தஞ்சம்மாள் செய்கை-1

       திருகச்சி நம்பிகளைப் பற்றி கேள்வியுற்ற இராமாநுஜர், அவரைத்தம் இல்லத்திற்கு அழைத்து ஆஸனமிட்டு, தண்டன் சமர்ப்பித்து நம்பிகள் புறப்பட, அவரை வழியனுப்புவதற்காக, இராமாநுஜர், கொஞ்ச தூரம் அவரைப்பின் தொடர்ந்தார்.  ஆனால் அதற்குள் ராமாநுஜரின் மனைவி நம்பிகள் அமர்ந்திருந்த இடத்தை கோமயத்தால், சுத்தி செய்தாள்.  திரும்பி வந்த இளையாழ்வார், இதனால் கோபமுற்று தம் தேவியைக் கோபித்துக்கொண்டார்

           `தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்றுக்கொண்டவர்.

அருளாளன் வாக்கு-அற்புதங்கள் ஆறு

             இராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

 1. அஹமேவ பரம் தத்துவம்

நாமே உயர்ந்த தத்துவம்-நாராயணனே பரம் பொருள்.

 1. தர்சநம் பேத ஏவச

சித்தாந்தம், ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

 1. உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்

  மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம். சரணாகதியே மோட்சத்திற்கு வழி. சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

 1. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்

அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

 1. தேஹாவஸாகே முக்கிஸ் யாத்

சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

 1. பூர்ணாசார்ய ஸ்மாச்ரய

     பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

       இந்த  “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.

55.4.ஆளவந்தார்

      ஒருசமயம், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், ஸ்ரீரங்கம் சென்று, ஸ்ரீஆளவந்தாரை, தரிசித்தனர். இராமாநுஜரைப்பற்றி கூறினார்கள்.அவற்றைக் கேட்ட ஆளவந்தார் இராமாநுஜரைக்காண காஞ்சீபுரம் எழுந்தருளினார்.  திருக்கச்சி நம்பிகளும் அவரை எதிர்கொண்டு அழைத்து கோயிலுக்கு அழைத்துச் சென்று, பெருமாள் சேவை செய்து வைத்தார்.ஆளவந்தார், “ இராமாநுஜர் யார்? “ என்றுகேட்க, நம்பியும், யாதவப்ரகாஸருடன் இருந்த சீடர்களில், அவர்தான் இராமாநுஜர் என்று கூற, ஆளவந்தாரும், இளையாழ்வாரை கண்குளிரக் கடாக்ஷித்தார்.

     இந்த சமயத்தில், திருவரங்கத்தில், ஸ்ரீஆளவந்தாரின், திருமேனி தளர்ந்தது. இதைக்கேள்வி பட்டு ஸ்ரீவைஷ்ணவகள், காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தனர்.  அவர்களிடம் ஆளவந்தார், ராமாநுஜரைப்பற்றி விசாரிக்க அவர்கள், இளையாழ்வார் யாதவப்ரகாஸரிடமிருந்து, பிரிந்து வந்து விட்ட நிகழ்ச்சியைச் சொல்ல, அதற்கு, ஆளவந்தார், “அடியேனுடைய ப்ரபத்தி வீண்போகவில்லை. “ என்று கூறி பெரிய நம்பிகளை அழைத்து, “ நீர் காஞ்சி சென்று இராமாநுஜரை இங்கு அழைத்துவாரும் “ என்று நியமித்தார்.

      ஸ்ரீஆளவந்தாரின் முகத்தில் தெரிந்த கவலையை நோக்கிய சீடர்கள், உமது திருவுள்ளத்தில் என்ன குறை என்று கேட்க அவரும்,இராமாநுஜரைக் காணாத குறை; வ்யாஸ சூக்தத்திற்கு பாஷ்யம் செய்ய வேண்டும்; நம்மாழ்வாருடைய ஸ்ரீசூக்திகளுக்கு வியாக்யானம் செய்ய வேண்டும் என்ற கவலை என்று கூறியவர், மூன்று விரல்களை மூடிக்கொண்டார்.

       சீடர்கள், “ பெரியபெருமாள் உம் எண்ண-த்தை நிறைவேற்றி வைப்பார் “ என்று கூற, நாதமுனிகளின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

       ஸ்ரீரங்கத்தை நெருங்கிய பெரிய நம்பிகளும், ராமாநுஜரும், “ஆளவந்தார் பரமபதித்து விட்டார் “ என்ற விஷயத்தைக் கேட்ட இருவரும், வாய்விட்டு அழுதனர்.

   ஆளவந்தாரின் திருமேனியை தரிசித்தபோது, மூடியிருந்த மூன்று விரல்களைப்பார்த்து கேட்க, அருகிலிருந்தவர்கள், அவர் மனதிலிருந்த மூன்று கவலைகளைப் பற்றி விரிவாகக் கூற,“ஆளவந்தாரின் அநுக்ரஹத்திற்கு பாத்திரனான அடியேனைக்கொண்டு அம்மூன்று கைங்கர்யங்களையும் பேரருளாளன் பூர்த்தி செய்வான் என்று இராமாநுஜர் கூறிய மறுகணமே, ஆளவந்தாரின் மூடியிருந்த மூன்று விரல்களும் திறந்தன.

இராமானுசர் எடுத்துக்கொண்ட சபதம்

 • பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி,உரை எழுதுவது.
 • விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர்; பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை அழியாத புகழுக்கு வழி கோலுவது;
 • வேதத்தை தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் புகழ், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.Also please refer:-

HRE-15:ஆளவந்தார்: https://drdayalan.wordpress.com/2015/06/12/hre-13

5.5. பெரியநம்பிகள்

      ஆளவந்தாருக்குப்பின் மடாதிபதியாக பொருப்பேற்றுக்கொண்ட திருவரங்கர், இராமநுசரை அழைக்கும்படி வேண்டி, ஆனால் அவர் திருக்கச்சிநம்பிகளையும் பேரருளாணையும் பிரிய மனம் இல்லையனில் அவரை வர்புருத்தவேண்டாம் என கூறியனுப்பினார்.

ஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதி(துவயம் விளைந்த திருப்பதி)

            அதே சமயம், பேரருளாளன் நியமனப்படி, இராமாநுஜரும், பெரிய நம்பிகளைக்காண ஸ்ரீரங்கத்திற்கு யாத்திரை மேற்க்கொண்டார்.இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்துக் கொண்டனர்.  இராமாநுஜர், பெரியநம்பிகளிடம், பேரருளாளன் நியமனத்தைக்கூறி, தண்டம் சமர்ப்பித்தார்.

       பெரியநம்பிகள்,ஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதியில், ஒரு மகிழ மரத்தின் அடியில் ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார்.எல்லா மந்திரங்களையும், த்வயத்தின் அர்த்தத்தையும் உபதேஸித்தார்.ஆகவே இந்த க்ஷேத்திரத்தை துவயம் விளைந்த திருப்பதி என்று சொல்வார்கள்.  இந்தத்தலத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு பின்புறத்தில் மகிழ மரத்துடன் ஒரு மேடை இருக்கிறது.  அங்குள்ள மதில் சுவரில், பஞ்ச ஸம்ஸ்காரம் நடைபெறும் காட்சி சித்திரமாகக்காணப்படுகின்றது.  ஒவ்வொரு வருடமும், ஆவணிமாதம், சுக்ல பஞ்சமியில் பஞ்ச ஸம்ஸ்கார உத்ஸவம் நடைபெறுகிறது.

பஞ்ச ஸம்ஸ்காரம்

   எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஐந்து சாதனைகள்- ஸம்ஸ்காரம்.

 • எம்பெருமானின் அடையாளமாகிற சங்க-சக்ரங்களை தரிப்பது.-தாப ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானின் திருவடிகள் போல ஊர்த்வ புண்ட்ரத்தை (நெடுக்காக திருமண்காப்பு) தரிப்பது- புண்ட்ர ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானது அடியார்களான ஆசார்யர்களின் திருநாமத்தை அவர்களின்- தாஸன் என்று சேர்த்துச் சொல்லுதல்-தாஸ ஸம்ஸ்காரம்.
 • எம்பெருமானுக்கும் நமக்கும் உண்டான உறவை உணர்த்தும் மந்த்ரத்தை அநுசரிதித்தல்-‘மந்த்ர ஸம்ஸ்காரம்.
 • தனது தாஸத்வம் சித்திப்பதற்கு ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்தல்யாக ஸம்ஸ்காரம்.

     இந்த ஐந்து ஸம்ஸ்கரங்களும் எல்லா ஜீவாத்மாக்களும் அவசியம் பெற வேண்டிய ‘ஸ்ரீவைஷ்ணவ தீட்சை ஆகும். இந்த தீக்ஷை ஆத்மாவைப் பற்றியதே தவிர சரீரத்தைப் பற்றியது அல்ல. கர்மாக்களின் அடியாகவே சரீரங்கள் வேறுபடுகிறதேயொழிய ஆத்மாக்கள் எல்லாம் ஞானத்துக்கும் ஆநந்தத்திற்கும் இருப்பிடமாய் ஸ்வயம் ப்ரகாசமாய் எம்பெருமானுக்கு பத்நியாய் சேஷமாய் இருக்கிறது என்பதை வேதம் முதலான சாஸ்திரங்கள் உத்கோஷிக்கின்றன என்று பராசர பகவானும் அருளிச் செய்தார்.

“தாப: புண்ட்ர ஸ்ததாநாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:| அபீபரம ஸம்ஸ்காரா: பாரமைகாந்த்ய ஹேதவே:||

      இப்படிப்பட்ட பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷை) என்னும் விஷயத்தை பராசர பகவான் முதலான பல பல ரிஷிகள், உபதேசித்துள்ளதில் மேற்சொன்னது புண்ட்ர ஸம்ஸ்காரம். ரிய

     ஏரியில் பாஷ்யகாரர் படித்துறை என்று இராமாநுஜர், அனுஷ்டானம் செய்த இடமும் உள்ளது.  பெரியவர்கள் தினமும், இவ்விடத்தில் தங்கள் நித்யகர்மாநுஷ்டானங்களை செய்து வருகிறார்கள்.

   இந்த ஒரு தலத்தில்தான் இளையாழ்வார் க்ருஹஸ்தராக, வெள்ளை ஆடையுடன் சேவைசாதிக்கின்றார்.

சபதம்-1 (நிறைவேற்றம்)

      பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.

சபதம்-2(நிறைவேற்றம்)

       தன் சீடன் திருக்குருகைப்பிரான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி இருக்கும்படிச் செய்தார்.

      காஞ்சிபுரத்தை அடைந்த ராமாநுஜர், தம் கிருஹத்தின் ஒருபாகத்தில், பெரியநம்பிகளை வசிக்கச்செய்தார்.  பகவத் ஆராதனத்திற்கு வேண்டிய த்ரவியங்களையும், நம்பிகளுக்கு சமர்பித்து,அவரிடத்தில் மிகுந்த பக்தியுடன் வ்யாஸ சூத்திரங்களையும் அதன் அர்த்த விசேஷங்களையும், திவ்யப்ரபந்த பாசுரங்களையும் கற்று வந்தார்.

தஞ்சம்மாள் செய்கை-2

         ஒருநாள், இளையாழ்வாருக்கு எண்ணைத் தேய்க்க ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவர் தமக்கு மிக பசியாக இருக்கிறது என்று கூற, இராமாநுஜர் தம் தேவியிடம் அவருக்குச் சாப்பிட ஏதாவது உணவு தருமாறு கூற, அவர் தேவி,   “இன்று கொடுப்பதற்கு ஒன்றுமில்லை“ என்று கூறிச் சென்றுவிட்டாள். பிறகு இராமாநுஜர், உள்ளேச் சென்று பார்த்தபோது, ஒருபாத்திரத்தில் உணவு இருப்பதைக் கண்டு, அதை அந்த வைஷ்ணவருக்குக் கொடுத்து பசியாறச் செய்ததுடன், தன் மனைவி பொய்சொன்னதற்காக அவளையும் கடிந்து கொண்டார்.

தஞ்சம்மாள் செய்கை-3

    பின்பொரு சமயம், இராமாநுஜர், ஸ்ரீபெரும்பூதூர் செல்ல நேரிட்டது.  தம் ஆச்சார்யரிடம், நியமனம் பெற்று சென்றார்.  அப்போது கிணற்றடியில், ஜலம் தூக்கும்போது, இராமாநுஜர் தேவிக்கும், பெரியநம்பிகள் தேவிக்கும் அல்ப விஷயத்தில் சண்டை ஏற்பட்டது.

     இதனையறிந்த பெரியநம்பிகள், அங்கு இனி இருப்பது உசிதமில்லை என்று எண்ணி, இராமாநுஜர் திரும்புவதற்கு முன்பு தன் தேவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

      ஸ்ரீபெரும்பூதூரிலிருந்து திரும்பிவந்த இராமாநுஜர் நடந்த விஷயங்களைக் கேள்வியுற்று, தம் மனைவியைக்கடிந்து“இனி நீ இங்கு வசிக்க வேண்டாம், உன் பிறந்தகம் போய்சேர் “ என்று நடந்த மூன்று தவருகளுக்காக, தேவிகளின் சொத்துக்கள் யாவற்றையும் கொடுத்து, அவளைப் பிறந்தகம் அனுப்பிவைத்தார்.

55.6.இராமாநுஜர்-சந்யாசம்

      ஸன்யாஸம் மேற்கொள்வதே நல்லது, என்று எண்ணி பேரருளாளனும், பேரவாவுடன் அர்ச்சகர் முகமாக,” யதிராஜன் “ என்ற திருநாமத்தைச் சாற்றினார்.

முதலியாண்டான்

   பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘முதலியாண்டான்’ எனும் திருநாமம் பெற்ற இராமனுஜரின் ‘தண்டு’ (திரிதண்டம்) எனவும், ‘பாதுகை’ என்றும் புகழப்பட்டார்.

கூரத்தாழ்வான்

     இராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்  தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீராமனின் அம்சமாய் அவதரித்தவர் பேரருளாளன் செல்வத்தின் மேல் விரக்தி ஏற்படுத்தி இராமனுஜரிடத்து சீடராக்கினார். பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘கூரத்தாழ்வான்’ என்று திருநாமம் பெற்றார். இவர் இராமனுஜரின் இரண்டாவது சீடர். இவர்; இராமனுஜரின் ‘பவித்திரம்’ என்று புகழப்பட்டவர்.

நடாதுராழ்வான்

   நடாதுராழ்வான் ஸ்ரீஇராமனுஜரின் ஸ்ரீபாஷ்ய வியாக்யானதிற்கு நியமிக்கப்பட்டவர்.

         ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன.

        யதிராஜரான, இராமாநுஜர் நியமனப்படி, அநுஷ்டானங்களை செய்து கொண்டு வந்தவர் ஸ்ரீஆளவந்தாரின், நியமனப்படிக் காரியங்களை செய்துமுடிக்க உத்தேசித்தார்.  தமக்கு உதவியாக எண்ணி தம் சகோதரரான கோவிந்தபட்டர் நினைவு வந்தது.  ஒருவரை திருமலைநம்பிகளிடம் அனுப்பி அவர் மூலமாக, அத்வைதியாக மாறிய கோவிந்தபட்டரை திருத்தி பணிகொள்ள வேணடுமாறு விண்ணப்பிக்கச் செய்தார்.

55.7.முதல் குருயாதவப்ரகாஸர்சீடானாகுதல்-யதிராஜர்

      யாதவப்ரகாஸரின் தாயார் பலர் ராமாநுஜருடைய வைபவத்தைக் கூற கேட்க, தன் மகனும் யதிராஜருக்கு சிஷ்யனாக வேண்டுமென எண்ணி இராமாநுஜரைப்போல, சிகை, திரிதண்டம், யஞ்ஞோபவீதம் ஆகியவைகளை ஸ்வீகரித்துக் கொள்வாயாக என்று கூறினார்.யாதவப்ரகாஸர் மனதிலும் பழய நிகழ்ச்சிகள் தோன்றலாயின.

      இராமநுஜரிடம் சென்று அவரை சரணடையத் தமக்குத் தகுதியுண்டு என்று வருந்தியவரின் ஸ்வப்னத்தில், ராமாநுஜரை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்தாலே பலன் என்று பேரருளாளன் நியமிக்க, அவர் திருக்கச்சிநம்பிகளிடம் தாம் இரவுகண்ட கனவையும்கூறி, பேரருளாளன் திருவுள்ளத்தைக்கேட்டுத் தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்க, அவரும் வரதன் இராமாநுஜரை ப்ரதக்ஷிணம் செய்தால் போதும் என்று கூற, யாதவப்ரகாஸரிடம் தெரிவிக்க, உடனே இராமாநுஜர் எழுந்தருளியிருக்கும் இடம் சென்று அவரை வலம் வந்து தெண்டம் சமர்பித்து “ என்னை உமதடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று ப்ரார்த்திக்க, இராமாநுஜரும், யாதவப்ரகாஸருக்கு ஸாத்திர முறைப்படி செய்துவைத்து  காஷாயம் ஆகியவைகளைத் தந்து கோவிந்தஜீயர் என்ற திருநாமத்தையும் இட்டு அருளினார்.

       தம்முடைய குருவிற்கே ஆசானாக ஆன இராமனுஜர். யதிகளுக்கெல்லாம் யதியாக விளங்கினார், யதிராஜா ஆனார்.

      காஞ்சியில், யதிராஜர் தம்மிடம் வந்து சேர்ந்த, கூரத்தாழ்வான், முதலியாண்டான் முதலான சிஷ்யர்களுக்கு, மீமாம்ஸா, சாஸ்த்திரங்கள் இரண்டையும் உபதேஸித்துவந்தார். இதனைக்கேள்வியுற்ற ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள் எல்லோரும் மிக சந்தோஷமடைந்தனர். ஆளவந்தாரின் சிஷ்யர்களான, பெரியநம்பிகள் முதலானோர் எல்லாம் ஆலோசித்து, ஸ்ரீராமாநுஜரைப் பெரியகோயிலுக்கு அழைத்துவந்து அங்கு நம் சம்பிரதாயங்களை ப்ரவசனம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிச்சயித்து அதற்கு திருவரங்கப் பெருமாளரயரை வேண்டிக்கொள்ள அவரும் காஞ்சீபுரம் புறப்பட்டார்.

     காஞ்சீபுரம் வரதன் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தான். அவரை சேவித்த அரையர் ஸ்ரீஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னத்தையும், ஆழ்வார்கள் பாசுரங்களையும் சொல்ல, வரதன் “ நீர் வேண்டுவது என்ன ? “ என்று அர்சகர்கள் மூலம் கேட்க, அரையர் “ ராமாநுஜரைத் தந்தருள வேண்டும்  “ என்று விண்ணப்பிக்க, அருளாளனும் “ தந்தோம் “ என்று கூறி ராமாநுஜரை அழைத்து, “ திருவரங்கப் பெருமாள் அரையருடன் போங்கள் “ என்று நியமித்து அருளினார்.

55.8.இராமாநுஜர் ஸ்ரீரங்கம் வந்து சேர்தல்- உடையவர்

       யதிராஜரும், பகவத் நியமனப்படி திருவரங்கம் செல்ல நிச்சயித்து, தாம் ஆராதித்து வரும் பேரருளாளப் பெருமாளையும், பகவத் ஆராதனத்திற்கு வேண்டியவைகளையும் செய்து தாம் மீண்டும் மடத்திற்குச் செல்லாமலே, தம் சீடர்களுடன் திருக்கச்சி நம்பிகள் வழியனுப்ப ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

        பெருமாள், “ யதிராஜரே ! உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கு அளித்தோம்.  இனி நம் கோயில் காரியங்களை எல்லாம் ஆராய்ந்து நடத்திவர வேண்டும்.  நீர் இனி நம் உடையவர் “ என்று அர்ச்சகர் முகமாக அருளினார். பிறகு பெரியபெருமாள் நியமனப்படி, அகளங்க நாட்டாழ்வான் என்பவரைத்தம் சீடராக ஆக்கி, அவர் மூலம், கோயில் கார்யங்களை நன்கு நடத்தி வந்தார்

       ஸ்ரீரங்கம் கோயிலில்  பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக காட்டிக்கொண்டதை இராமாநுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

55.9.திருமலைநம்பிகள்

    தம் சகோதரர் கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளும்படி, திருமலை நம்பிகளிடம் அனுப்பிய ஸ்ரீவைஷ்ணவர்கள், திருமலை நம்பிகளிடம் சென்று நாங்கள் வந்த விஷயத்தைக்கூற, அவரும் காளஹஸ்திக்கு வர, உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயருடன் விளங்கும் கோவிந்தபட்டரை வழியில் சந்தித்தனர்.

    ஆளவந்தார் அருளிய “ ஸ்வாபாவிகாநவதிகாதி ஸயே சித்ருத்வம்  “ என்ற ஸ்லோகத்தைச் சொல்ல நாயனாரும், மனம் சலித்தார்.  ஒரு மரத்தடியில், உட்கார்ந்து திருமலைநம்பிகள் எங்களுக்கு திருவாய்மொழி அர்த்தத்தைச் சொல்லிக்கொண்டு இருக்க, அங்கிருந்த நாயனாரும் புஷ்பம் பறிப்பதை நிறுத்திக்கொண்டு, பாசுர அர்த்தங்களைக்கேட்டார்.  நான்காம் பாட்டில்,  “ எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே “ என்றுவர, இதனைக்கேட்ட நாயனாரும் கையில் வைத்திருந்தப் பூக்கூடையை விட்டெறிந்து “ தகாது, தகாது “ என்று திறவுகோலையும், மோதிரத்தையும் திருப்பித் தந்துவிட்டு, திருமலைநம்பிகள் பாதத்தில் விழுந்து, தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

     அவரை அழைத்துக்கொண்டு திருமலைக்கு வந்து, உபயநாதிகளையும், பஞ்ச ஸம்ஸ்காரத்தையும் செய்து வைத்து, ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களை உபதேஸித்து வருகிறார்.”  என்று அவர்கள் கூறிமுடிக்க, அவற்றைக்கேட்ட இராமாநுஜர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.

       உடையவர், பெரியநம்பிகளிடம்” ஸ்ரீஆளவந்தார் திருவடிகளில் சேவிக்காத குறை தீரத் தேவரீர் திருவடிகளை ஆச்ரயித்தேன்.  நீரே அர்த்த விசேஷங்களை அடியேனுக்கு அருளிச்செய்தருளவேண்டும்” என்று பிரார்த்திக்க, அவரும் சில நாட்கள் உபதேஸித்துவிட்டு திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று திருமந்திரத்தையும், சரம ஸ்லோக அர்தங்களையும் கேட்டு அறிந்து கொள்ளச் சொன்னார்.

55.10. திருக்கோஷ்டியூர் நம்பிகள்

            பெரியநமபிகள் நியமனப்படி, உடையவர் தம்சீடர்களுடன் ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தண்டனிட்டு, தம் விருப்பத்தை வெளியிட்டார்.  அவரும் மற்றொரு சமயம் உபதேஸிக்கின்றோம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.  ஸ்ரீஇராமாநுஜர் திரும்ப வந்தார்.   இதுபோன்று பதினேழு முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளிடம் வேண்ட அவரும், பிறகு உபதேஸிக்கின்றோம் என்ற பதிலையே சொல்லி அனுப்பி வைத்தார்.

      பின்பு ஒருசமயம், திருக்கோட்டியூர் நம்பிகளே, ஒரு ஸ்ரீவைஷ்ணவரையனுப்பி, ராமாநுஜரை அழைத்து வரும்படிக்கூற, பெருமகிழ்ச்சியடைந்த யதிராஜரும், தம்முடன், கூரத்தாழ்வான், முதலியாண்டான்  மற்றும் நடாதூர்ஆழ்வான்   என்ற சீடர்களுடன் திருக்கோட்டியூர் சென்றார்.

        மற்றமூவரையும் வெளியில் இருக்கச் செய்துவிட்டு, தாம் மட்டுமே நம்பிகள் இல்லத்துள் சென்று, நின்றார்.  நம்பிகள், நாம் உபதேஸிக்கும் மந்த்ரார்த்தங்களை வேறு ஒருவருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உபதேஸித்து அருளினார்.

        மறுநாள் காலை , கூரத்தாழ்வான் மற்றும் பல சீடர்களுக்கு, தாம் கேட்டறிந்த ரகஸ்யார்த்தங்களை உபதேஸித்தார்.

         இராமாநுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை  இந்த உலகமே அறியும் படி உறக்க கூறினார்.

      இதனைக் கேள்வியுற்ற நம்பிகள் ராமாநுஜரை அழைத்து, நாம் இந்த ரஹஸ்யார்த்தங்களை யாருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்று நியமித்தும் நீர் ஏன் கூறினீர் என்று கேட்க, யதிராஜரும், அடியேன் ஒருவன் மட்டும்தானே நரகம் செல்வேன்.  இந்த அர்த்த விசேஷத்தைக்கேட்ட ஆத்மகோடிகள் அனைவருமே உங்கள் திருவடி சம்பந்தத்தால் பரமபதம் அடைவார்களன்றோ என்று யதிராஜர் சொல்லக் கேட்ட நம்பிகள், உடையவர் உள்ளக்கருத்தைப் புரிந்து கொண்டு,  மனமுகந்து, “  இத்தகய பரந்த எண்ணம் எமக்கில்லாமல் போயிற்றே “ என்று மனம் மிகவருந்தினார்.

        இவர் எம்பெருமானாரே என்று நம்பிகள் அருளிச்செய்தார்.அன்று முதல், ராமாநுஜருக்கு, “ எம்பெருமானார் “ என்ற பெயரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்த்திற்கு  “ ராமாநுஜ சித்தாந்தம்  “ என்ற பெயரும் வழங்கிவரலாயிற்று.

      பிறகு எம்பெருமானார், பெரியநம்பிகள் தெரிவித்தபடி, திருவரங்கப்பெருமாள் அரையரிடம், சென்று, அவருக்கு ஆறுமாத காலங்கள் கைங்கர்யங்களைச் செய்துகொண்டே திருவாய்மொழியையும் கற்றார்.

           எம்பெருமான் கீதையின் முடிவில் சரமஸ்லோகத்தில் அருளிச்செய்த உபாயமான சரணாகதியை அனுஷ்டிக்கவேண்டும்.  இஹத்திலும், பரத்திலும் க்ஷேமத்தையளிக்க வல்லது ஆச்சார்யன் அநுக்ரஹம் ஒன்றே. “ இதற்கு உதாரணமாக விளங்கியவர் மதுரகவியாழ்வார் என்று எடுத்துக்கூறினார் .  யதிராஜர் தம் ஆச்சார்யன் நியமனப்படி, திருமலையாண்டானிடம், திருவாய்மொழிக்கு அர்த்தம் பயின்றார்.

       உடையவர் பெரியபெருமாள் நியமனப்படி, கோயில் கைங்கர்யத்தை, சிறந்த முறையில் நிர்வகித்துக் கொண்டு வந்தார்.  இருந்தபோதும், சில விரோதிகள் அவரைக் கொல்ல எண்ணி, அவர் உணவில் விஷம் கலந்திட திட்டமிட்டு, ஒரு கிருஹஸ்தரிடம் சொல்லி, அவருக்கு இடும் பிக்ஷையில் விஷம் கலக்கச் சொன்னார்கள். யதிராஜரின் பரம சிஷ்யையான அந்தப் பெண்மணி முதலில் மறுத்தாலும் பிறகு கணவனின் பயமுறுத்தலுக்கு அடி பணிந்தாள்.  தாம் இடும் அன்னத்தில் விஷம் கலந்து இட்டவள் உடனே கண்களில் நீர் மல்க அவரைத் தண்டனிட்டு விட்டு, கதறியபடியே வீட்டிற்குள் சென்றாள்.  ஒரு ஸந்யாசிக்குப் பிக்ஷை இட்ட பிறகு அவரை சேவிக்கக்கூடாது.  அப்படி சேவித்துவிட்டால் அந்த ஸந்யாஸி அன்று உபவாஸம் இருக்கவேண்டும் என்பது நியதி.

     அந்தப் பெண்மணியின் நடவடிக்கையைக் கண்ட யதிராஜர், காவேரிக்குச்சென்று, பிக்ஷை ப்ரஸாதத்தை ஆற்றுநீரில் சேர்த்துவிட்டு, பிக்ஷைவாங்கிய வஸ்த்ரத்தையும் உதறிக்கசக்கி எடுத்துக் கொண்டு, காவேரிக்கரையில் ஒருமரத்தடியில், மனவேதனையுடன் அமர்ந்தார்.  அவர் உதறிய வஸ்த்ரத்திலிருந்து கரையில் சிந்திய ப்ரஸாதத்தைச் சாப்பிட்ட காக்கை ஒன்று இறந்ததைக் கண்ட அவர் அன்று முதல் சிலநாட்களுக்கு உபவாசம் இருந்தார்.

     அதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.  

          ராமநுஜர் ஸ்ரீஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தார்.மேலும் வேதாந்தஸாரம், வேதாந்த தீபம் வேதாந்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம் ஆகியவற்றையும் அருளிச்செய்தார். பங்குனி உத்ரத் திருநாளில், ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் கண்டருளியபோது, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் ஆகியவற்றை அருளிச் செய்தார்.

     பிறகு கூரத்தாழ்வான், நடாதூராழ்வான், பிள்ளான் இவர்களின் விருப்பப்படி திவ்யதேஸம் தோறும் எம்பெருமான்களை சேவித்து இதர சமயத்தவர்களை வாதத்தில் ஜெயித்து தர்ஸன ஸ்தாபனம் செய்தருள யாத்ரை புறப்பட்டார்.

       திருக்குடந்தை ஆரவாமுதனை மங்களாஸாஸனம் செய்த பிறகு, திருமாலிருஞ்சோலை, திருப்புல்லாணி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்று, திருக்குறுங்குடிக்கு எழுந்தருளினார். இந்த திவ்யதேஸத்து எம்பெருமானான, திருக்குறுங்ருடி நம்பியே ஒரு வைஷ்ணவராக வந்து, உடையவரிடம், மந்திரோபதேஸம் செய்ய வேண்டினார்.  யதிராஜரும், அவருக்கு, ஸமாச்ரயணம் பண்ணி திருமண்காப்புகளைச்சாற்றி, திருமந்திரத்தை உபதேஸித்து, “ ஸ்ரீவைஷ்ணவ நம்பி “ என்ற நாமத்தையும் சூட்டினார்.

     அடுத்தகணம் அந்த ஸ்ரீவைஷ்ணவரைக் காணவில்லை மறுநாள், சந்நிக்கு அனைவரும், சென்றபோது, பெருமாள் நெற்றியில், உடையவர் முந்தினம் வைணவருக்கு சாற்றிய திருமண்காப்பைக் கண்டு, வந்தது இந்த எம்பெருமான்தான் என உணர்ந்து அதிசயத்தினர்.

55.11.பாஷ்யகாரர்-ஸரஸ்வதி தேவி

        மலைநாட்டுத் திருப்பதிகளை மங்களாஸாஸனம்  செய்த பிறகு இராமாநுஜர்,  வடதேஸ யாத்ரை புறப்பட்டார்.கோகுலம், ப்ருந்தாவனம், அயோத்தி, நைமிசாரண்யம், பதரி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்றார்.

சபதம்-3(நிறைவேற்றம்)

   அதன்பிறகு, ஸரஸ்வதீ வித்யா பீடத்திற்கு, எழுந்தருளினார்.  அப்போது ஸரஸ்வதிதேவியே, இவரை எதிர்கொண்டு அழைத்தாள்.  சங்கராதிகளைப்போல் இன்றி யதார்-த்தங்களைக்கொண்டு, வ்யாஸ ஸூக்தத்திற்கு நீர் பாஷ்யம் செய்ததினால், உமது பாஷ்யத்திற்கு“ ஸ்ரீபாஷ்யம் “என்ற பெயரும், அதனை இயற்றிய உமக்கு பாஷ்யகாரர் என்ற நாமத்தையும் சூட்டினோம் என்றாள்..

         பிறகு ஸரஸ்வதிதேவி, ஸ்ரீபாஷ்யத்தைத் தம் சிரஸ்ஸில் வைத்துக்கொண்டு, அந்த ஸ்ரீபாஷ்யத்தையும், தாம் ஆராதித்து வந்த, ஸ்ரீஹயக்ரீவர் விக்ரஹத்தையும், பாஷ்யகாரரிடம் கொடுத்து ஆசீர்வதித்தாள்.  உடையவர்  அவற்றைப்பெற்றுக்கொண்டு, சந்தோஷத்துடன் இருப்பிடம் திரும்பினார். இதனைக் கேள்வியுற்ற அந்த தேசத்து அரசன் உடையவரை வந்து வணங்கிச் சென்றான்.  இதனால் பொறாமை கொண்ட சிலர், அவரை மாய்த்திட எண்ணினர்.  அதற்காக,அபிசார யாகம் செய்தனர்.  அது அவர்களுக்கே தீங்காய் முடிந்து, அவர்கள் பைத்தியம் பிடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு,திரியலானார்கள்.ஆனால் அரசனின் ப்ரார்த்தனைக்கு மதிப்பளித்து உடையவர், அவர்களையும் ரக்ஷிக்க, அவர்களும் பழையபடியாகி, பாஷ்யகாரரின் திருவடி தொழுதனர்.

55.12.அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்

     வடமதுரை முதலிய இடங்களுக்குச்சென்று, கங்கையில் நீராடி, புருஷோத்தமம், ஸ்ரீகூர்மம், ஸிம்ஹாசலம், அஹோபிலம், முதலிய திவ்ய தேசங்களைத் தரிசித்துக்கொண்டு திருமலைக்கு வந்தார்.

            அப்போது திருமலையில்,சைவர்கள் ஸ்ரீநிவாஸன் எங்களுக்கே சொந்தம், அவர்கள் எங்கள் தெய்வம், என்று பெரியதிருமலைநம்பிகளுடன் வாதிட்டு வந்த நேரம்.

     சிலர் சிவனுடைய சின்னங்களையே பெருமாள் தாங்கியிருக்கிறார் என்று வாதிட்டனர்.

           பாஷ்யகாரர் இன்றிரவு, உங்கள் தம்பிரான் சின்னங்களான சூலம், டமரு போன்றவைகளையும், எங்கள் எம்பெருமான், சின்னங்களான ஆழி, சங்கம் ஆகியவற்றையும் பெருமாள் சந்நதியில் வைத்து விட்டு  கர்பக்ருஹத்தைப்பூட்டி, இருதரப்பினரும் காவல் காத்து வரவேண்டியது.  மறுநாள் காலை ஸ்வாமி எந்தச் சின்னங்களைத் தாங்கி இருக்கிறாரோ அதனையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கூறினார்.

            எல்லோரும் சம்மதிக்க அதுபோலவே செய்ய, இருதரப்பினரும் அன்று இரவு காவல் இருந்தனர்.  மறுநாள், ஸூர்யோதயம் ஆனதும், திருகாப்பு நீக்கி, உள்ளேச் சென்று சேவித்தனர்.    எம்பெருமான் வேங்கடவன் திருக்கரங்களில் சங்கும், சக்ரமும் ஜொலிக்க, கண்டு அனைவரும் வியந்தனர்.

     “மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்ட மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி. சிபாரிசு கடிதம் வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலை பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள்.

     இராமாநுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,””உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

          பிறகு திருவேங்கடமுடையானின் திருவாராதனம் முன்போல நடைபெற ஏற்பாடு செய்த பிறகு திருவரங்கம் பெரிய கோயிலுக்குத் திரும்பினார்.

கிருமிகண்டசோழனும் நாலுரானும்

       ஸ்ரீரங்கத்தில், இராமாநுஜர், ஸ்ரீபாஷ்யத்தைப் ப்ரவசனம் பண்ணிக்கொண்டிருந்த சமயம், சோழநாட்டரசன் மிக குரூரமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான்.  அவன் சிவமதத்தைச் சேர்ந்தவன்.அவன் வைஷ்ணவ வித்வான்களிடமிருந்து, சிவனைவிட உயர்ந்தவர் கிடையாது என்று ஓலையில் எழுதி கையெழுத்துப் போடச் செய்தனர்.

             சில வைஷ்ணவர்கள், பணம், வீடு இவைகளுக்கு ஆசைப்பட்டும், மன்னனது இம்சை தாளாமலும் கையெழுத்து போட்டனர்.  இவனுடைய மந்திரியான நாலூரான், என்பவன் அரசனிடம்,இவர்கள் கையெழுத்து இடுவதனால் மட்டும், சிவன் பரதேவதையாகிவிட முடியாது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இவர்கள் மதகுரு இராமாநுஜர் என்பவர் எழுதிக் கையெழுத்து இட்டால் மட்டுமே இவர்கள் ஒப்புவார்கள்,என்று கூற, அரசன், உடனே தன்ஆட்களையனுப்பி, ராமாநுஜரையும், அவர் சீடர்களை-யும் அழைத்து வரும்படி ஆணையிட்டான்.

55.13.மேல்கோட்டையூர்திருநாராயணபுரம்

     அதிகாரிகள், ராமாநுஜரை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர்கள் வந்த நோக்கத்தையறிந்த கூரத்தாழ்வானும் மற்ற சீடர்களும், ராமாநுஜரை வற்புறுத்தி அவர் காஷாயத்தின் மேலேயே வெள்ளை வேட்டியை உடுக்கச்செய்து, அவருடன் சில சீடர்களையும் சேர்த்து மேல்நாட்டை நோக்கி பயணிக்க வைத்துவிட்டு, கூரத்தாழ்வான் காஷாயம் உடுத்திக்கொண்டு, தண்டம் ஏந்தி, பெரியநம்பிகளுடன், வந்திருந்த அதிகாரிகளுடன், சோழமன்னன் சபைக்கு தம்மையே இராமாநுஜர் என்று கூறிக்கொண்டு சென்றார்.

      சில அதிகாரிகள் இராமாநுஜர் செல்வதை அறிந்து, அவரைப்பின் தொடர, உடையவர், பிடிமணலை எடுத்து,“கொடுமை செய்யும் கூற்றமும் என்கோலாடி குறுகப்பெறாதடவரைதோள் சக்ரபாணீ சார்ங்கவிற்சேவகனே” என்று ஓதி, அவர்கள் வரும் வழிநெடுக கொட்டி சென்றார்.

      அந்த மணலைமிதித்த அதிகாரிகள், மயங்கிவிழ, இராமாநுஜர் தம் சீடர்களுடன் மேல்நாட்டைநோக்கி நடந்து ஓர் இரவு நீலகிரி மலைச்சாரல் வந்து சேர்ந்தார்.

   மிதிலாபுரி, ஸ்ரீசாளக்ராமம் முதலிய இடங்களுக்கு எழுந்தருளினார். தம்திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காராதிகளைச் செய்வித்து விசிஷ்டாத்வைத க்ரந்தங்களை எல்லோருக்கும் உபதேஸித்தார்.  அவர்களில் மிகவும் முக்யமானவர் வடுகநம்பி என்பவர்.  பிறகு அங்கிருந்து, சிங்கபுரம் சென்றார்.  அங்கிருந்போது, சோழ மன்னன் கழுத்தில் புழுபுழுத்து, அவன் மாண்டான் என்ற செய்தி வந்தது.

     உடையவர் இட்டுக்கொள்ளப் போதிய திருண்காப்பு, இல்லாமல் போகவே, அவர் கவலையுற்றார்.அன்று இரவு அவர் கனவில் திருநாராயணன் தோன்றி, யதுகிரியில் மகிழமரத்தின் அடியில் திருத்துழாய் செடியின்கீழ், பெரிய புற்று ஒன்று இருக்கின்றது.  அதனுள் நாம் கோயில் கொண்டிருக்கின்றோம்.  திருமண்ணும் வேண்டிய அளவு கிட்டும். “ என்று கூற, மறுநாளே அவர் மன்னனிடம் தம் கனவைப் பற்றிக்கூறி, யதுகிரியை அடைந்து தாம்கனவில் கண்ட இடத்திற்குத் தேடிச் சென்றார்.

     அங்கு புற்றை நீக்கிப் பார்த்ததும், அதனுள் ஒரு கோயில் தெரிந்தது.  திருநாராயணனை வெளியில் கொணர்ந்து தாமும், சேவித்து, மன்னர் மற்றுமுள்ளவர்களையும் சேவிக்கச்செய்து மகிழ்ந்தார்.பிறகு திருமண் இருக்குமிடம் தேடிச்சென்று அதனை ஸ்வீகரித்துக்கொண்டு தாமும் சாற்றிக்கொண்டு, தம் ஆராதனப் பெருமாளுக்கும், திருநாராயணனுக்கும் சாற்றினார்.  யதுகிரிக்கு “ திருநாராயணபுரம் “ என்ற பெயரை வைத்து, தினமும், திருவாராதனமும் செய்ய ஏற்பாடு செய்தார்.    –

     ஆனால் திருநாராயணனுக்கு உத்ஸவமூர்த்தியில்லையே என்று கவலைப்பட்ட எம்பெருமானார் ஸ்வப்னத்தில், திருநாராயணனேத் தோன்றி, நம்முடைய உத்ஸவர் ராமப்ரியர் இப்போது டில்லி பாதுஷா அரண்மனையில் இருக்கிறார் அங்கேச் சென்று, கொண்டுவாரும் என்று கூற, ராமாநுஜரும் டில்லிச் சென்றடைந்தார்.

55.14.டில்லிபாதுஷாவும் அவர்மகளும்

     ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள்.

            வந்த காரியம் என்ன என்று பாதுஷா வினவ, அவரும் வந்தக் காரியத்தைச்-சொல்ல, நவாப் தான் கொள்ளையடித்து வந்த பொருள்களையெல்லாம் அவருக்குக் காண்பித்து, அதில் அவர் தேடிவந்த பொருள் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினான்.

            அதில் தாம் தேடிவந்த விக்ரஹம் இல்லை என்றதும், நவாப் தன் பெண், சிலவற்றை வைத்துக்கொண்டு விளையாடுவதாகக்கூறி, உடையவரை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தான்.  எம்பெருமானார், அந்தப்ரத்தின் வாசலில் நின்று கொண்டு,  எம் ராமப்ரியரே!, எம் செல்லப்பிள்ளையே !  வாரும்“ என்று அழைத்த அடுத்த கணம், ஜல், ஜல் என்று சலங்கை ஒலிக்க ராமப்ரியரின் விக்ரஹம் அழகாக நடந்துவந்து, உடையவரின், துடையில் அமர்ந்தது.  அந்தக் காட்சியைக் கண்ட நவாப் நெக்குருகிப் போனான்.

Ramanujar-1

     தன் மகள் அந்தச்சிலையை விட்டு ஒரு க்ஷணமும் இருக்க மாட்டாள் என்ற காரணத்தால், மகளுக்குத் தெரியாமல் அந்த சிலையை உடையவருடன் பாதுகாப்பாக தம் நகர எல்லைவரை அனுப்பிவைக்க, இராமாநுஜர், விக்ரஹத்துடன் திருநாராயணபுரம் வந்து அதனை ப்ரதிஷ்டை செய்தார்.

     பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும்முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும்.

     ஏகாதசி திருவிழா பகல்பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம்இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் இன்றும் நடந்துவருகிறது.

      அவர் அதுநாள் வரை மறைந்து வாழ்வதற்கு உதவி புரிந்த ஹரிஜன மக்களுக்குதிருக்குலத்தோர்“ என்று பெயர் சூட்டி, அவர்களையும், திருத்தேர் முதல், தீர்த்தவாரிவரை கோயிலில் அவர்கள் பெருமாளை தரிசிக்கவும், தீர்த்தம் பெற்றுக் கொள்ளவும் அநுமதித்து, அவர்களை கௌரவித்தார்.

55.15.பெரிய நம்பிகள் திருநாடு அடைதல்

      திருநாராயணபுரம் தலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.  அப்போது ஸ்ரீரங்கத்திலிருந்து, வந்த ஒரு வைணவரிடம், கூரத்தாழ்வானும், பெரியநம்பிகளும் நலமா? என்று கேட்க, அவர்,ஆழ்வானையும், பெரியநம்பிகளையும், சோழமன்னனின் ஆட்கள் சபைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு மன்னன் ஆழ்வானை “ சிவாத்பரதரம் நாஸ்தி “ என்று ஓலையில் எழுதிக் கையெழுத்திடச் சொன்னான்.  அவரோ, “ த்ரோணமஸ்தி தத: பரம் “ என்று எழுதினார்.  சிவம் என்றால், குறுணி.  அதற்குமேல் அளவு த்ரோணம்பதக்கு உள்ளது என்று பொருள். இதனால் கோபமுற்ற சோழன், இந்த அந்தணர்களின் விழிகளைப் பறியுங்கள் என்று ஆணையிட்டான்.  ஆனால் கூரத்தாழ்வானோ “ சோழனே உம்மைப்பார்த்த இந்தக் கண்கள் இனி எமக்குத்தேவையில்லை“என்று கூறித் தாமேத்தன் விழிகளை பிடுங்கிக்கொண்டார்.

     பிறகு அவர்கள் பெரிய நம்பிகளின் கண்களையும் பிடுங்கிவிட்டனர்.  அந்த இருவரும் நம் மதத்திற்காக கண்களைக் கொடுத்தனர். அப்போது அருகிலிருந்த பெரியநம்பிகளின் மகள் அத்துழாய் அவர்கள் இருவரையும் அரசவையிலிருந்து, அழைத்துச் சென்றாள்.

      இந்த வேதனை தாங்காத பெரியநம்பிகள் ஆழ்வான் மடியில் தலையையும், மகளின் மடியில் பாதங்களையும் வைத்து தன் ஆச்சார்யரான ஸ்ரீஆளவந்தாரின் திருவடிகளைத்தம் தலையில் வைத்துக் கொண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார் ”என்று நடந்து முடிந்தவற்றைக் கூற, எம்பெருமானார் மிகவும் மனம் வருந்தினார்.

    ஆழ்வானுக்கும், நம்பிகளுக்கும் துரோகமிழைத்த சோழன் கழுத்தில், புண் உண்டாகி, புழுத்துப் புரண்டு மாண்டதையும் கூறினார்.

55.16. இராமாநுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியது

    பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, திருவரங்கம் திரும்பினார். பாஷ்யகாரர். கூரத்தாழ்வான் இல்லத்திற்குச் சென்ற யதிராஜர், அவரை அப்படியே வாரித்தழுவிக்கொண்டார்.

 • நம் கோயில் அண்ணன்

    ஒரு சமயம், எம்பெருமானார், மதுராந்தம் வழியாக ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது, அங்கு திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடந்து கொண்டு இருந்தது.“நூறுதடா நிறை அக்காரவடிசல் சொன்னேன்“ என்ற ஆண்டாள் பாசுரம் வந்தது.   உடனே அவர், கோதைப்ராட்டியின் திருவுள்ளத்தை நிறைவேற்ற,திருமாலிருஞ்சோலை சென்று நூறு தடா நிறைய அக்காரவடிசலை சமர்பித்தார்.

Ramanujar & Alagar

     அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.  வடபெருங்கோயிலுடையானை தரிசித்துவிட்டு, ஆண்டாள் சந்நிதிக்கு வந்தபோது, அர்ச்சகர் வாயிலாக ஆண்டாளே,“நம்கோயில்அண்ணன்“ என்று கொண்டாடப்பட்டு, மாலைமறியாதைகள் செய்து வைத்தனர்.

              சிலநாட்கள் கழித்து உடையவர், பெரிய பெருமாளை சேவித்து, மேல்வீடு பெற அநுக்ரஹிக்க வேண்டி ப்ரார்த்தித்தார்.  பெருமாளும் அவ்விதமே திருவுள்ளம் பற்றினார்.

55.17.இராமாநுஜர் திருநாட்டை அலங்கரித்தல்(1137)

             பிள்ளான், கிடாம்பியாச்சான், முதலியாண்டான், ஆழ்வார்கள் ஸ்வாமியின் விக்ரஹங்களையும் திருக்கோயில்கள் தோறும் ப்ரதிஷ்டைசெய்து, ஆராதிக்க நியமித்தருள வேண்டும் “என்று விண்ணப்பிக்க, அவரும் சம்மதித்து மூன்று விக்ரஹங்களை ஆலிங்கலித்து, கொடுக்க, அவற்றை ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்பூதூர், திரு நாராயணபுரம் ஆகிய மூன்று க்ஷேத்ரங்களில் தாம் முன்பே உகந்தளித்த சில விக்ரஹங்களோடு எழுந்தருளப்பண்ணி திருவாராதனம் செய்ய திருவுள்ளம் பற்றினார்.

              ஸ்ரீஆளவந்தாரின் பாதுகைகளில் தீர்த்தம் சேர்த்து, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை தாமும் ஸ்வீகரித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்கும் அளித்தார்.  பிள்ளானையும், கிடாம்பியாச்சானையும் அருகில் வரவழைத்து, சில விசேஷ அர்த்தங்களை உபதேசித்து விட்டு, பிள்ளான் மடியில் திருமுடியும், ஆச்சான் மடியில் திருவடிகளையும் வைத்துக்கொண்டு, சயனித்தார்.

       பெரியதிருமலைநம்பிகளின் திருவடிகளை த்யானித்தப் படியே எம்பெருமானார் கி.பி.1137ல் திருநாடு எழுந்தருளினார்.  அவர் நியமனப்படியே, முதலியாண்டான் ஸ்ரீபெரும்பூதூரிலும், கிடாம்பியாச்சான், நல்லான் முதலானவர்கள் திருநாராயணபுரத்திலும், பிள்ளான் கோயிலிலும், நடாதூராழ்வான் பெருமாள் கோயிலிலும், உடையவர் திருவிக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து வைத்தார்கள்.

55.18.ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகள்

தமர் உகந்த திருமேனி (திருநாராயணபுரம்)

     மேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி’, திருநாராயணபுரத்திலிருந்து இராமாநுஜர் விடைபெற்றபோது, அங்கிருந்த அடியார்கள் அவரைப் பிரிந்து வாழவேண்டுமே என வருந்தினார்கள். அப்போது இராமாநுஜர் தம்மைப் போல விக்கிரகம் ஒன்றை செய்வித்து, அதில் தம் சக்திகளை பிரதிஷ்டை செய்து, அவர்களிடம் அதை ஒப்படைத்து, ‘‘நான உங்களுடன் இருப்பதாக எண்ணி இந்த விக்கிரகத்தை கண்டு மன அமைதி பெறுங்கள்..’’ எனக் கூறி விடைபெற்றார்.

தாம் உகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)

     ஸ்ரீபெரும்புதூரில் “தாம் உகந்த திருமேனி’யாக இராமாநுஜர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சந்நிதி கொண்டிருக்கிறார். உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற திருப்பெயர்.

       உடையவரின் விக்கிரகத்தில் முறைப்படி கண்களைத் திறக்கும்போது உளி கண்ணில்பட்டு ரத்தம் கசிந்தது. அதேசமயம் திருவரங்கத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த உடையவரின் கண்களிலும் ரத்தம் வழிந்தது என்றும் ஒரு கருத்துண்டு. தம் விக்கிரகத்தை தான தழுவித் தந்ததால் ‘தான் உகந்த திருமேனி’ என்று வழங்கலாயிற்று.

தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

         ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.

       எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே ராமானுஜருடைய திவ்ய மங்கள திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள்.

     அத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்.

 • திருநாட்டில் எம்பெருமானுடன்-இராமாநுஜர்

       அடியேன் இங்கே வந்த பிறகு, என்ன ஆகுமோத்தெரியவில்லையே  என்றுகவலையுடன் கூற, அதற்கு எம்பெருமான், “ அநந்தா இனி நீ கலங்க வேண்டாம். நீர் விதைத்த விதை அவர்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கும்.  மேலும் அவ்வப்போது, வேதாந்ததேசிகன், மணவாளமாமுனிகள் போன்ற ஆச்சார்யர்களை அவதரிக்கவைத்து நீர் விதைத்த விதைக்கு நீர்வார்த்து நன்றாக தழைத்து வளரச்செய்வோம். நிச்சயம் உமது பணி கலிமுடியும்வரை ஜீவாத்மாக்களின் சிந்தைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.  அவர்கள் இந்தப்பிறவியில் இல்லாவிடினும் அடுத்தப் பிறவியில் அதனைவுணர்ந்து, எம்மிடமே வந்துசேர்வார்கள்.  சோர்வுடன் வந்த நீர் சிறிதுநேரம் சயனியும்”

 • இராமானுசர் இயற்றிய நூல்கள்

        வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல் அதைத்தவிர அவர் இயற்றியவை:

 • வேதாந்த சங்கிரகம்-உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.
 • வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்-பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய உரைகள்.
 • கீதா பாஷ்யம்- கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
 • நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

 கத்யத்ரயம்= உரைநடை நூல்கள்.

 • சரணாகதி கத்யம்- பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.
 • ஸ்ரீரங்க கத்யம்-ரங்கநாதப் பெருமானை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.
 • வைகுண்ட கத்யம்-வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

       புருஷ குணங்கள் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவத தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான ராமானுஜரை  வணங்கினால்  கண் பார்வை கோளாறுகளும் விலகும்.

                ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை நம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ இராமாநுஜர் சரணாகதி அடந்த நாள். அன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆதிசேஷனின் அவதாரங்கள்-இராமாநுஜர்

 ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக அவருடனே  இருந்து உதவி புரிந்தவர்.

ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக கிருஷ்ணருக்கு  உதவி புரிந்தார்.

இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பெருமாளுக்கு தொண்டு செய்தார்.

       ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாறுகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.

Ramanujar-4

இராமாநுஜருடைய குருமார்கள்

 1. யாதவப்ரகாசர் உபநிஷத்துக்கள்.

 2. திருக்கச்சி நம்பிகள் வரதராஜப்பெருமாளிடம் நேரடி உரையாடல்; ஸ்ரீ இராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர்.

 3. ஆளவந்தார் மூன்று கட்டளைகள்
 4. திருக்கோஷ்டியூர் நம்பிகள் திருமந்திரம்
 5. பெரிய நம்பிகள் (மகாபூரணர்)-துவயம்-பஞ்ச ஸமம்ஸ்காரம்- வியாச சூத்திரம், திவ்யபிரபந்தங்கள்.
 6. திருவரங்கப்பெருமாள் அரையர்-திருவாய்மொழி.
 7. திருலைநம்பிகள்(ஸ்ரீசைலேசர்)-இராமயணம்

இராமாநுஜருடைய திருநாமங்கள்

 • இளையாழ்வார் – பிறப்புப் பெயர் – பெரிய திருமலை நம்பிகள் இட்டது
 • இராமாநுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்)-பெரிய திருமலை நம்பிகள் தந்தது.
 • பரதபுரீசர் – பெரிய திருமலை நம்பிகள் தந்தது
 • யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) – காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது
 • உடையவர் – ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, தந்தது.
 • தேசிகேந்திரன் – திருமலை வேங்கடேசன் தந்தது.
 • ஸ்ரீ பாஷ்யகாரர் – சரஸ்வதி தேவி தந்தது
 • திருப்பாவை ஜீயர் – பெரிய நம்பிகள் தந்தது.
 • எம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி தந்தது.
 • நம் கோயில் அண்ணன் – வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது.
 • சடகோபன் பொன்னடி திருமலையாண்டான் தந்தது.
 • லக்ஷ்மண முனி – திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது
 • அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்-திருவேங்கட சம்பவம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-54: இராமாயணமும்-மஹாபாரதமும்

Tags

, , , , , , , , , , , ,

இராமாயணம்                         மஹாபாரதம்

இராமாயணம் (திராதா யுகம்) மஹாபாரதம் (துவாபர யுகம்)
1        வால்மிகி இராமாயணம்: 24,000 ஸ்லோகங்கள்; 644 ஸர்க்கங்கள்; 7 காண்டங்கள். வியாச பாரதம்:1,00,000 ஸ்லோகங்கள்; 18 பர்வங்கள் (100 உப பர்வங்கள்)2314 அத்தியாயங்கள். (60 லட்சம் ஸ்லோகங்கள்; அதில் 30 லட்சம் தேவ லோகம் ; 14 லட்சம்  யட்ச லோகம் ;15 லட்சம் அசுர லோகம் சென்றன, மீதி ஸ்லோகங்கள் 1,00,000 பூலோகம்)
2        வடமொழியில் இயற்றியது-வால்மிகி முனிவர் (தமிழில்-கம்பர் 10569 பாடல்கள்) வடமொழியில் வியாசர் கூற, விநாயகர் எழுதியது (தமிழில்-திருமுனைப்பாடி-சனியூர்  வில்லிபுத்தூரார்-4351 பாடல்கள்)
3        கம்பரை தமிழில் இராமயணம் பாட வைத்தவர்  சடையப்ப வள்ளல் பல புலவர்களைத் தன் வாதத்தால் வென்று பழிதீர்த்த வில்லிபுத்தூர் ஆழ்வாரை திருத்தி மஹாபாரதத்தைப் தமிழில் பாட வைத்தவர்  அருணகிரிநாதர்
4        இராமபிரானை மையமாக கொண்டது பலரை விவரிப்பதாக கொண்டது
5        இராமர் சூரிய வம்சம் பாண்டவர் & கௌரவரகள் சந்திர வம்சம்
6        இராமபிரான் மூதாதையர்கள் சிலர்: சூரியன், இஷ்வாகு, திரிசங்கு, அரிசந்திரன், மாந்தாத, பரதன், தீலீபன், அம்பரிஷன் பாண்டவ-கௌரவர்கள்  மூதாதையர்கள் சிலர்: சந்திரன், புதன், யயாதி, புரு, துஷ்யந்தன், பரதன், குரு, பிரதீபன், சந்தனு
7        ராமாவதாரம் சித்திரை புனர்பூசம் வளர்பிரை நவமி கிருஷணாவதாரம் ஆவணி ரோகிணி தேய்பிரை அஷ்டமி
8        தாயாரும் அவதாரம் தாயாரும் அவதாரம்
9        இராமன் பால வயது முதல் அரச குமாரனாகவே வாழ்ந்தார் கண்ணன் செய்த பால லீலைகளும்  மாயைகளும் பல
10     வெண்ணைப் பிரியன் அனுமான் வெண்ணைப் பிரியன் கண்ணன்
11     ஜனகனின் வளர்ப்பு மகளான சீதா (ஜானகி)  பூமியில் அவதாரம் திரௌபத ராஜனின் வளர்ப்பு மகளான திரௌபதை (பாஞ்சாலி) யாக குண்டத்தில் அவதாரம்
12     பரமாத்மா-இராமன்; ஜீவாத்மா-லஷ்மணன், விபீஷணன், அநுமான் பரமாத்மா-கீருஷ்ணன் ; ஜீவாத்மா-அர்ஜுனன்
13     ஆதிசேஷன் அம்சமாக லஷ்மணன் (பகவானுக்கு-தம்பி) ஆதிசேஷன் அவதாரமாக பலராமன் (பகவானுக்கு-அண்ணன்)-தசாவதார ஸ்தானம்
14     இராமன், ராமபத்ரன் என்றழைக்கப்பட்டார் பலராமன், பலபத்ரன் என்றழைக்கப்பட்டார்
15     இராமன் குருமார்கள்:வசிஷ்டர் & விஸ்வாமித்திரர் கிருஷ்ணன் குருமார்கள்: கர்கர் & சாந்திபினி முனிவர்
16     இராமன், முதலில் ஒரு அரக்கியை (தாடகை) வதம் செய்தார் கண்ணன், முதலில் ஒரு அரக்கியை (பூதகி) வதம் செய்தார்
17     சீதை சுயம்வரத்தில், இராமன் வில்லை உடைத்து வெற்றி திரௌபதி சுயம்வரத்தில், அர்ஜுனன் வில்லை வளைத்து வெற்றி
18     உலகில், இரு அவதாரங்கள் (இராமன் & பரசுராமன்) சந்தித்த காலம் உலகில், இரு அவதாரங்கள் (கண்ணன் & பலராமன்) சேர்ந்து வாழ்ந்த காலம்
19     சதி செய்தது கூனி சதி செய்தது சகுனி
20     அரசாளும் உரிமையை கோசலை மைந்தன் இராமனுக்கு பதிலாக தன்மகனுக்காக பெற்றாள் சிற்றன்னை கைகேயி அரசாளும் உரிமையை கங்கை மைந்தன் பீஷ்மருக்கு அல்லாமல் தன்மகனுக்காக பெற்றாள் சிற்றன்னை சத்தியவதி
21     இராமனுக்கு பதிலாக பெற்ற அரசை துறந்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டான் பரதன் பீஷ்மருக்கு அல்லாமல் தனக்கு கிடைத்த அரசை செய்ய முடியாமல் உடல் நலக்குறைவால் உயிர் துறந்தான் விசித்ரவீரீயன்
22     எந்த தவறும் செய்யாத பரமாத்மா (இராமன்), தர்ம பத்தினியுடன் 14-ஆண்டுகள் வனவாசம் சூதினால் நாடு இழந்த ஜீவாத்மா (பாண்டவர்), தர்ம பத்தினியுடன் 13-ஆண்டுகள் வனவாசம்
23     இராமன், கானகத்தில், அமைத்துக்கொண்ட தம்பிமார்கள் நால்வர் (லஷ்மணன், குகன், சுக்ரீவன் & விபீஷணன்) தர்மருக்கு கானகத்தில், தன் தம்பிமார்கள் நால்வர்
24     இராமன் எளிய சபரி தந்த கனியை உண்டார் கண்ணன்  எளிய குசேலர் தந்த அவலை உண்டார்
25     பரமாத்மா (இராமன்), இந்திரனின் மகனான வாலியை, சூரியனின் மகனான சுக்ரீவன் துணைக்கொண்டு வதம் செய்தார் பரமாத்மா (கண்ணன்), சூரியனின் மகனான கர்ணனை, இந்திரனின் மகனான அர்ஜுனன் துணைக்கொண்டு  வதம் செய்தார்.
26     நைஷ்டிக பிரம்மச்சாரி-ஆஞ்சநேயன் நைஷ்டிக பிரம்மச்சாரி-பீஷ்மர்
27     ஆஞ்சநேயன்-விஸ்வரூப காட்சி; அங்கதன் தூது கிருஷ்ணன் தூது-கிருஷ்ணன் விஸ்வரூப காட்சி
28     போரில் முக்ய அம்சம் ஆஞ்சநேயன் போரில் முக்ய அம்சம் கண்ணன்
29     இளஞ்சிங்கமாக போர் புரிந்தது இராவணின் மைந்தன் இந்திரஜித். இளஞ்சிங்கமாக போர் புரிந்தது அர்சுனனின் மைந்தன் அபிமன்னன்
30     இராவணனின் செஞ்சோற்று கடன் தீர்க்க போர்களம் புகுந்தான் கும்பகர்ணன் துரியோதனின் செஞ்சோற்று கடன் தீர்க்க போர்களம் புகுந்தான் கர்ணன்
31     இராமன், தனது தெய்வீகத் தன்மையை ஒருபோதும் உணர்த்தவில்லை கண்ணன் , தனது தெய்வீகத் தன்மையை ஆங்காங்கே உணர்த்தினார்.
32     பரமாத்வுக்கு பக்தன் சேவை செய்தான்: நாகபாணத்தின் வீரியத்தை கருடன் தீர்த்தார், சஞ்சீவிமலையைக் கொண்டு வந்து அஞ்சநேயர் சேவை செய்தார், போரில் விபீஷணன் தகுந்த நேரத்தில் தக்க ஆலோசனைகளை வழங்கினார் பக்தனுக்கு பரமாத்மா அருள்செய்தார்: பக்தனுக்கு தேரோட்டி கர்ணனின் நாக பாணத்திலிருந்து அர்சுனனை கார்த்தார். தனது சக்ராயுத மகிமையால் அர்சுனனை அக்னி பிரவேசத்திலிருந்து கார்த்தார். போரில், பாண்டவருக்கு தகுந்த நேரத்தில் தக்க ஆலோசனைகளை வழங்கினார்
33     இராமன், உபதேசங்களைப் பெற்றார்:-விஸ்வாமித்திரரிடம் பலா-அதிபலா;  அகஸ்தியரிடம் ஆதித்ய ஹிருதயம் கண்ணன், தனது உபதேசங்களை கீதையாக அர்சுனன் மூலமாக நமக்கு அளித்தார்
34     சத்வம்-விபீஷணன்; ரஜஸ்-இராவணன் ; தாமஸம்-கும்பகர்ணன் சத்வம்– தருமர் ,பீஷ்மர், துரோணர், விதுரர் ; ரஜஸ்– கௌரவர்கள்; தாமஸம்-திருதராஷ்டிரன்
35     வாழ்ககைக்கு நேர்மறை (இராமன்) & எதிர்மறை (இராவணன்) பாடங்கள் வாழ்ககைக்கு எதிர்மறை (கௌரவர்கள்) & நேர்மறை (பாண்டவர்கள்) பாடங்கள்
36     தந்தை சொல்போற்றிய கதாநாயகன் இராமன் தந்தை சொல்தூற்றிய வில்லன் துரியோதனன்
37     சங்கல்பங்கள் நிறைந்தது சபதங்கள் நிறைந்தது
38     இராவணன் கடைசி தம்பி விபீஷணன் நீதியைக் கூறினான் துரியோதனின் கடைசி தம்பி விகர்ணன் நீதியைக் கூறினான்
39     பெண்ணுக்கு (சீதைக்கு) இராவணன் இழைத்த அநீதியால் விளைந்த போர் பெண்ணுக்கு (திரௌபதைக்கு) துரியோதனன் இழைத்த அநீதியால் விளைந்த போர்
40     பெண்ணாசையால் விளைந்த விபரீதம் மண்ணாசையால் விளைந்த விபரீதம்
41     ஏழு நாள் போர் பதினெட்டு நாள் போர்
42     ஆஞ்சநேயன் சங்கல்பத்தால், இராவணனின் மார்புக்கு சென்ற இராமபாணம், இராவணனின் வயிற்றை தாக்கி வதம் கண்ணனின் சங்கல்பத்தால், பீமனினின் கதாயுதம், துரியோதனின் தொடையை தாக்கி வதம்
43     இராவண-கும்பகர்ணனாக,  ஜெய-விஜயர்களின் இரண்டாம் பிறவி சாபவிமோசனம் கம்ச-தந்தவக்ரனாக,  ஜெய-விஜயர்களின் மூன்றாம் பிறவி சாபவிமோசனம்
44     பரமாத்மா இராமன் போர்முடிந்து சிவபூஜை ஜீவாத்மா அர்சுனன் போருக்கு முன் சிவதவம்
45     கோதண்டம்-இராமனின் வில் (கோதண்டன்) காண்டீபம்-அர்ஜுனனின் வில் (காண்டீபன்)
46     வனவாசம் , அந்நியர் மீது போர் முடிந்து, இராமர் பட்டாபிஷேகம் வனவாசம் ,தயாதியர் மீது போர் முடிந்து, தருமர் பட்டாபிஷேகம்
47     அவதார முடிவில், ஆதிசேஷன் அம்சமான லஷ்மணன், முதலில் வைகுந்தம் அடைதல் அவதார முடிவில், ஆதிசேஷன் அவதாரமான பலராமன், முதலில் வைகுந்தம் அடைதல்
48     சிரஞ்சீவிகள்-ஆஞ்சநேயன், விபீஷணன் சிரஞ்சீவிகள்-அஸ்வத்தாமன், வியாசர்
49     இராமன் இந்த உலகிற்குத் தந்தது தன் குல தெய்வமான ரங்கநாதன் கண்ணன் இந்த உலகிற்குத் தந்தது தனான குருவாயுரப்பன்
50     இராமர் கானகம் சென்று போர் முடிந்து அஸ்வமேத யாகம் செய்தார். தருமர் கானகம் செல்லும் முன்பு அஸ்வமேத யாகம் செய்தார்.
51     இராமயண காலத்தில் மறைந்து வாலியின் மீது அம்பெய்திய இராமனை  மஹாபாரத இறுதி காலத்தில் கண்ணன் மீது வாலி-வேடனாக அம்பெய்தல்
52     பரசுராமர் இரு யுகங்களிலும் தனது திறமையை நிலை நாட்டினார்
53     மனிதரிடையே மானிடராய் குடும்பத்துடன் பல காலம் வாழ்ந்த அவதாரங்கள் இராமன்-கிருஷ்ணன்
54     மஹாபாரதம் விதுர நீதி, பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், பாகவதம் உருவாக காரணமாக இருந்தது
55     இராமயண காலத்தில் இராமனை அடைய தவமிருந்த வேதவதியை, மஹாபாரத காலத்தில் கண்ணனின் வளர்ப்பு அன்னையான யசோதா, கலியுகத்தில் வகுளாதேவியாக, பத்மாவதியை சீனிவாசனுக்கு திருமணம் செய்வித்தல்-கலியுக வரதன் திருமலை சீனிவாசனின் மகிமையாக , இருயுக வரங்கள் கலியுகத்தில் பலன்.
 • இறைவன் நிகழ்த்தும் நிகழ்வுகளை நடைபெறும் காலத்திலேயே தொகுத்து எழுதப்படுவது இதிகாசங்கள்.
 • நிகழ்வுகள் நடந்தேறிய பின்பு வேறு ஒரு கால கட்டத்தில் எழுதப்படுவது  புராணங்கள்.
 • மஹாபாரதம்: ஐந்தாவது வேதம்
 • நாலாயிர திவ்விய பிரபந்தம்: திராவிட வேதம், திராவிட பிரபந்தம்

  Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 

HRE-53:அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்)- நவ நரசிம்மத்தலம்: 1 + (1 to 9)

Tags

, , , , , , , , , , , , ,

அறிவோம் “அரிய-அரியின் ஆலயம்”

அஹோபிலம்; ஆச்சரியம் மிக்க பலம்; சிங்க-குகை.

August, 12 & 13, 2016

      ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கலியுக வரதனாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி. அகோபிலம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

      திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான், அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

0.0      கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

         இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம். இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது.

      “அஹோ’ என்றால் “சிங்க. “பிலம்’ என்றால் “குகை. அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார்.

         இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று சொல்லி வணங்கினர்.

    இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன.

       மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்றும் அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்றும் அழைப்படுகின்றது. நவ நரசிம்மர் ஆலயங்கள் மேலும் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

      மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களை சேவிக்க முடியும் என திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் “தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!” என்று பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே.
                   (பெரியதிருமொழி:1.7.4; 1011)

       ஒரே ஒரு அரக்கனை வதைக்க மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது!

        பிரபலமான ராம, கிருஷ்ண அவதாரங்கள் பல அசுரர்களை வதம் செய்தன. அடுத்தடுத்த யுகங்களில் அரக்கத்தனம் அதிகரித்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

       ஹிரண்யன் என்ற ஒரு அரக்கன், பல்லாயிர அசுரர்களின் ஒட்டு மொத்த உருவம். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அதை ஏற்காதவர்களை, இரக்கமின்றி கொன்றழித்தவன்.

      அவனுடைய மகனே அவனுக்கு எதிரானான்.ஹிரண்யன், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத்துன்புறுத்தினான்

       அஹோபிலம் திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்த  தூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் இன்றளவும் திகழ்கின்றன.

     இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோது உண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள்.

     நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்  ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

     கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம்.

      கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்று போற்றிப் பணிந்தார். உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம் என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது.

     மகா பெரிய அசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்த
தாகவும் சொல்வார்கள்.

கீழ்-அகோபிலம்

லக்ஷ்மி நரசிம்மர்-பிரகலாத வரதன் (லஷ்மி நரசிம்மர்- அம்ருதவல்லி, செஞ்சுலஷ்மி): GROUND LEVEL.

Will not come under Nava Nasimhar-Blesses Nava Nasimhar Darshans

       திருப்பதி சீனிவாசப் பெருமாள் தனது திருக்கல்யாணம் முடிந்து வணங்கிய பெருமாள்-சீனிவாசப் பெருமாள் சநநிதியும் உண்டு.

A-Lower Akblm

          நவ-நரசிம்மர்களில் ஏழு உற்ச்சவ நரசிம்மர்கள் இங்கு உள்ளனர்; (உற்ச்சவ-ஜ்வாலா நரசிம்மர் அகோபில (உக்ர) நரசிம்மர் சந்நதியிலும், மாலோல-உற்ச்சவர் அகோபில மட திருவராதனையிலும் உள்ளனர்).

      தூணில் நவ-நரசிம்மர்கள்- பெருமானின் இடது பக்கத்தில், ஒரே பக்கமாக மஹாலஷ்மி தாயார் ஆண்டாள் சந்நதிகள்.

A1.ஜெயஸ்தம்பம்

      மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை “ஜெயஸ்தம்பம்’ அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது

        புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! –

மூலவர்:
மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்
A-Lower Akblm-2உற்சவர்:
மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.

தாயார்:
மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்:      லட்சுமி

     கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் நவநரசிம்மர்களில் ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர். நவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும், ஆசியையும் முதலில் பெறுவது சம்பிரதாயம்.

A1-Lower Akblm

     இந்தக்கோயில் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான சந்நதி அமைந்திருக்கிறது. இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம் கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார்.

A2.ஸ்ரீநிவாசன்-பத்மாவதி

     வசந்த மண்டபம். கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஸ்ரீநிவாசன்-பத்மாவதி மங்கைத் தாயார்-விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு ஸ்ரீநிவாசனும், பத்மாவதி தாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

A3.ராமபிரான்

     திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுது ராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் பிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயர்

        லக்ஷ்மணன் இரு வில்களைத் தாங்கி-அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்! ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்த கல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது.

தூணில் நவநரசிம்மர்கள்

     நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாக இந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், தூணைப்பிளந்து கொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப்  பற்றும் நரசிம்மர், அவனை வதம் செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன் மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர், ராம-லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், அருள் புரிகிறார்கள்

           ஆண்டாள், சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக்சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக
அருள் புரிகிறார்கள்.

    காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப்பெருமாள்,

      சாளக்கிராம மாலை-காலடியில் ஆஞ்சநேயர்-உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர் புஜங்கள் தான். அவை, சங்கு, சக்கரம்,கதை தாங்கி அபய ஹஸ்தம்- ஸ்ரீதேவி-பூதேவியையும் காணலாம்.

           ஆழ்வார்கள்-ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் மாலோல நரசிம்மருடன்-முக்கியமாக இந்த கீழ் அஹோபிலக்கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் இங்கு கோயில் கொண்டுள்ளார்கள்.

          மூலவராக அமிருதவல்லித் தாயார், இதே கருவறையில் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார்.

         மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரான செஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாரு சந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாக தனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள்.

A4.அஹோபில மடம்

ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகர் (வண் சடகோப ஜீயர், அழகிய சிங்கர்)

     இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.
A4-Akb Madam     உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய இந்த மகான், மைசூர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்தவர். கிடாம்பி கேசவாசார்யா என்பது இவரது பூர்வீகப் பெயர்.

     வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் கோவிலில் எழுந்தருளியுள்ளார்கள். இப்படி ஒரு சேவை செய்திருக்கும் இவருக்கு இத்தலத்தில் உறையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மரே மரியாதை செய்திருப்பதிலிருந்து இந்த மகானின் பெருமையைப்  புரிந்துகொள்ளலாம்

    இவருக்கு வண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும், காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் பரந்தாமனைத் தொடர்ந்து  ஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தை அளித்திருக்கிறார். மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.

      அகோபில மடம்-Head Quarters. 45-வது பீடாதிபதி- ஸ்ரீநாராயண யதீந்திர மகாதேசிகன்; 46-வது பீடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்

     ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி-இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டு சுதர்சன பீடத்தில் அமர்ந்திருக்கும் தோரணை-ஆதிசேஷன் குடை-சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது.

 மேல்-அஹோபிலம் (நவ நரசிம்மத் தலங்கள்; 1 to 9)

 • ஜ்வாலா நரசிம்மர்-செவ்வாய்
 • அஹோபில (உக்ர) நரசிம்மர்-குரு.
 • மாலோல நரசிம்மர்-சுக்கிரன்
 • க்ரோட (வராஹ) நரசிம்மர்-ராகு
 • காரஞ்ச நரசிம்மர்-வில்லேந்திய நரசிம்மர்- சந்திரன்
 • பார்கவ நரசிம்மர்- சூரியன்
 • யோக நரசிம்மர்-சனி
 • சத்ரவட நரசிம்மர்கேது
 • பாவன நரசிம்மர்-புதன்11
 1. ஜ்வாலா நரசிம்மர்-மலை மேல்செவ்வாய்

         Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by மிக கடின நடை வழி & very long 200-step path.

1.1-Jula.png
இரண்யனை வதைத்தவர். வதைத்த இடமும் இது. இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

1.2-Jula

         மேல் அஹோபிலத்திலிருந்து 3½ கி.மீ. தொலைவு. கருடாசலம், வேதாசலம் எனும் இரு மலைச் சிகரங்களுக்கு இடையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உக்ர ஸ்தம்பம் தெரிகிறது.

1.3-Jula   அந்த ஸ்தம்பத்திலிருந்துதான் நரசிம்மர் வெளிப்பட்டு ஹிரண்யனை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது.

       இந்த ஸ்தம்பத்தை அடைய ஜ்வாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மேலும் 4 கி.மீ. உயரே செல்ல வேண்டும்.

1.4-Jula^^^உபாதை இல்லா பாதை—->>>     

           ஜ்வாலா நரசிம்மர் சந்நதி-இரண்யனின் அரண்மனை-இரண்யன், ஹரி  நாம சங்கீர்த்தனம் செய்த தன் மகன் பிரகலாதனை பலவாறு  துன்புருத்திய இடம்-அதை நினைத்து சென்றால் செல்லும் பாதை உபாதையே இல்லை……… ஹரி நாராயணா!!!!.

ஜ்வாலாநரசிம்மர் அக்னிபோல் சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் அவதரித்த உக்ரம் நிறைந்த நரசிம்மர். ஹிரண்யன் மீது கோபம் கொண்டிருந்தபோதும், பிரகலாதன் மீது கொண்டது போல், நம்மீது இரக்கம் கொண்டவர்.

         ஆகையால் தான் அவர் ஆலயமுன், பக்தர்கள் தன்னை தரிசிக்கும் முன்னறே, குளிர் அருவியாய் தமது அருளைப் பொழிகின்றார். பொழியும் அருவியை அடுத்து ஜ்வாலா நரசிம்மர் சந்நதி.

1.5-Jula           இவர் தரிசனம் தருவது ‘அசலாசல மேரு’ என்னும் மலைப் பகுதியில்.  ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிகவும் சிரமமானது. வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் டோலியில் செல்லலாம். சீரான நடைபாதை வசதியை தற்சமயம் அஹோபில மடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
1.6-Jula1.7-Jula        மற்ற கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளன. மீதி இரண்டு கரங்கள் குடலை மாலையாக அணிந்துகொள்கின்றன. மேலும் வலது பக்கம் அவதார சமயத்தில் நரசிம்மர் தோற்றம் காட்டும் சிலை. இடது பக்கம் ஹிரண்யனுடன் போர் புரிவது போல சிலை.

          இதற்கு அருகில் ஒரு சிறிய நீர்த் தேக்கம் (குண்டம்) இருக்கிறது. ஹிரண்ய வதம் முடிந்ததும் நரசிம்ம பகவான் இதில் கையைக் கழுவியதாகச் சொல்கிறார்கள்.இதிலுள்ள நீர் சிறிது சிவப்பு நிறமாக உள்ளது. இதனை ரத்த குண்டம் என்கிறார்கள்.

1.8-Jula.png

     சந்நதிக்கதவுகள் திறந்தே உள்ளன. பொதுவாக மூடுவதில்லை.சந்நதிக்குள் நரசிம்மரை ஹிரண்யவத கோலத்தில் தரிசிக்கலாம்.

      இரண்யனை வதைத்தவர் ஜ்வாலா நரசிம்மர் -வதைத்த இடம்தான்-ஜ்வாலா நரசிம்மர் சந்நதி-இரண்யனின் அரண்மனை வாயில்படி.

      இந்த சந்நதி அமைந்திருப்பது மலையின் நடுபாகம்-பூமியும் இல்லை ஆகாயமும் இல்லை-பிரம்மா வரத்தை அனுசரித்து இரண்யன் வதம் நிகழ்ந்த இடம்.

 1. அஹோபில (உக்ர) நரசிம்மர்- மலை மேல்-குரு.

Auto or CAR travel upto to a certain point followed by a short step path

     புராதனப் பெருமாள் இவரே. சிறிய மூர்த்தி-ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொருகரத்தால் அவனுடைய உடலையும் பிடித்துக் கொண்டிருக்கிறார்-பக்கத்திலேயே பிரஹலாதன்-  லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும் தரிசனம். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம்.
2.1 Ahobila Narasimhar     இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும், அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்துகொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

2.3    இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார்.

     வேடுவ குலத்துக்குப்பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன.

2.2      சற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்கு அருகில், நூறு தூண்களைக் கொண்ட காலக்ஷேப மண்டபத்தைக் காணலாம்.

 1. மாலோல நரசிம்மர்- மலை மேல்-சுக்கிரன்

     Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by a long கடின நடை வழி & a long step path

3      “மா‘ என்றால் லட்சுமி. “லோலன்‘ என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.

      வராஹ நரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில். செல்லும்வழி சற்றுக் கடுமையான அகலம் குறைவான பாதை.

      மாலோல  நரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. ஆதிசங்கரர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன்.

         அப்போது சங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார். குருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள, பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர் மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான் இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.

       இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தி சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார்.

   மூலவரின் சிரசுக்கு நிழல் ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் திருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் காணலாம்.

   மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். அஹோபில மடத்து ஜீயர்கள் ஆன்மீக பயணம் செய்யும்போது மாலோலநரசிம்மரின் உற்சவர் விக்கிரகம் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

 1. க்ரோட (வராஹ) நரசிம்மர்- மலை மேல்-ராகு

     Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by a short நடை வழி & some steps

      பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையே பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் காணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தம்-வராஹ நரசிம்மர். குடவரை குகைக்கோயில்-இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.
4      நாசி மீது பூமிபிராட்டியார்-வராஹ நரசிம்மர்அருள் பாலிக்கிறார். இந்தக் கருவறையிலேயே லக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள்! திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம்.

 1. காரஞ்ச நரசிம்மர்- மலை மேல்-சந்திரன்

Auto or CAR travel, on the way to Ugra-Narasimhar–Temple, on the Road.

            கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்துக்குச் செல்லும் வழியில் வலது புறத்தில் இவருக்கான கோயில் உள்ளது. இது சுமார் 1 கி.மீ. தொலைவில் மேல் அஹோபிலத்துக்கு முன்னாலும், கருடாத்ரி மலைத் தொடரின் மேற்கு திசையிலும் அமைந்துள்ளது.

       தெலுங்கு மொழியில் கர என்றால் கை என்றும் அஞ்ச என்றால் வில் என்றும் பொருள். அதாவது, கரஞ்ச நரசிம்மர் என்றால் வில்லேந்திய நரசிம்மர் என்று பொருள்.
5           ஆஞ்சநேயர் கருங்காலி மரத்தின்கீழே அமர்ந்து ராமனை நினைத்து ஆழ்ந்த தவம் மேற்கொண்டிருந்தார். அப்போது இங்குள்ள நரசிம்மர் சாந்த சொரூபியாய் ஆதிசேஷன் படமெடுத்து குடைபிடிக்க அனுமனுக்குக் காட்சி தந்தார். அவர் வலது கையில் சக்கரமும், இடது கையில் வில்லும் இருப்பதைப்பார்த்து திகைத்த ஆஞ்சநேயர், ‘‘நீர் எம் இறைவன் ராமர் போலத் தோற்றமளிக்க முயற்சித்தாலும் நீர் அவர் அல்லர். உடனே ராமனாக வில்லேந்திய அழகிய கோலத்தில் நரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்தார். அனுமன் இந்தக் காட்சியில் மனம் மகிழ்ந்தார்.

         ஆதிசேஷன் குடைபிடிக்க பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் காரஞ்ச நரசிம்மர். சதுர் புஜங்கள்கொண்ட இந்த பகவான் தன் வலது மேல் கரத்தில் சக்கரம், இடது கரத்தில் வில், கீழ் வலதுகரத்தில் தியான முத்திரை ஆகியன கொண்டுள்ளார். மூன்றாவது கண் கொண்டிருப்பது இவரது தனிச்சிறப்பு.

      நெற்றிக்கண்தான்! தன்னை மட்டுமல்லாமல், நவ நரசிம்மர்களையும் தன் நெற்றிக்கண் திரை மூலமாகவே ஆஞ்சநேயருக்குக்காட்டி அவரை மகிழ்வித்திருக்கிறார் இந்தப் பெருமாள். ஞான மூர்த்தியான இவரை தரிசித்தால் கல்விச் செல்வம் நிரம்பப் பெறலாம். இக்கோயிலில் மடப்பள்ளி உள்ளது. ஆகவே காரஞ்ச நரசிம்மர் பிரசாதம் பக்தர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேல் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர்கள் ஆலயங்களிலேயே காரஞ்ச நரசிம்மர் கோயில் தான் முதலாவதாகவும் எளிதாகவும் தரிசிக்கக் கூடியது.

 1. பார்கவ நரசிம்மர்- மலை மேல்- சூரியன்

         Auto or Car or JEEP travel upto a certain point followed by a short foot path & then about 100 steps

பார்கவ ரிஷி-சுக்கிராச்சார்.

     வேதாத்ரி மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுகுன்றின்மேல் அமைந்துள்ள உயரமான ஆனால், சமமான 130 படிகளில் ஏறிச் சென்று பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம். படி ஏறுமுன் பக்கவாட்டில் ஒரு திருக்குளம்.

        இதனை பார்கவ தீர்த்தம் என்கிறார்கள். இது என்றைக்குமே வற்றியதில்லை என்பதால் இதனை ஆகாய தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். பார்கவ ரிஷி இத்தலத்துக்கு, பரந்தாமனை தரிசிக்க வந்ததாகவும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாராயணன்தன் தசாவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேரக் காட்டி அவரை இன்பத்தால் திகைக்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.
6     அதனாலேயே இக்கோயிலுக்கு பார்கவ நரசிம்மர்கோயில் என்று பெயர் வந்ததாம். இந்த க்ஷேத்திரத்தின் உற்சவ மூர்த்தி வடநாட்டில் ஆஜ்மீரை அடுத்த புஷ்கரரில் உள்ளார்.

      பார்கவன் என்று சுக்கிரனுக்கு இன்னொரு பெயர் உண்டு என்றும், அதனால் அசுர குருவான சுக்கிராச்சார்யாருக்கு பிரத்யட்சமான தெய்வம் இந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள்.

       பார்கவ நரசிம்மர் நான்கு கரங்கள்-மேல் கரங்களில் சங்கும், சக்கரமம்-, கீழ்க் கரங்களால் ஹிரண்யனைத் தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில்வீற்றிருக்கிறார். ஹிரண்யனின் உயர்த்திய வலது கையில் ஒரு வாள் தெரிகிறது. நரசிம்மருடன் போரிட முற்பட்டிருக்கிறான் போலிருக்கிறது! நரசிம்மர் பாதுகைக்கு அருகே பிரஹலாதன் பெருமாளை சேவிக்கும் தோற்றத்தில் பணிவுடன் நிற்கிறான்.

     மூலவருக்குப் பின்னால் கல்லில் செதுக்கப்பட்ட தசாவதார தோரணம் தனிச்சந்நதியில் ராமானுஜரும் பக்தவத்சலப் பெருமாளும் திவ்ய தரிசனம் அருள்கிறார்கள். பக்தவத்சலப்பெருமாள், சங்கு, சக்கரம், பத்மம், கதாயுதம் தாங்கி நாற்கரங்களுடன் திகழ்கிறார். இவருக்குப்பின்னாலும் தசாவதார தோரணத்தைக் காணலாம்.

     ஹிரண்யனைவதைக்கும் பார்கவ நரசிம்மர் உக்கிர மூர்த்தியேயானாலும், பவ்யமான பிரஹலாதனாலும், தோரணமாகக் காட்சிதரும் தசாவதார மூர்த்திகளாலும், பக்தவத்சலப் பெருமாளாலும், கோபம் முற்றிலும் தணிந்த, சாந்த மூர்த்தியாகவே கருதப்படுகிறார்.

 1. யோக நரசிம்மர்-சனி– GROUND LEVEL

     வேதாத்ரி மலைத்தொடரில் மேற்கே கீழ் அஹோபிலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
7     ஹிரண்ய வதம் முடிந்ததும் பிரஹலாதனுக்கு நரசிம்மர் யோக மந்திரங்களை உபதேசித்து, யோக முத்திரைகளையும் சொல்லிக் கொடுத்தாராம்.

 1. சத்ரவட நரசிம்மர்கேது GROUND LEVEL

       சங்கீதத்தில் முன்னேற விரும்புபவர்கள் இந்தப் பெருமாளை வழிபடுகிறார்கள்.
8 .            நவநரசிம்மர்களிலேயே இவரை ‘சுந்தர ரூபன்’ என்று வர்ணிக்கிறார்கள். இவர் சத்ரவடநரசிம்மர் நரசிம்மர், என்றும் இந்த ஆலமரமே ஒரு குடைபோல கோயில் விமானத்தைக்காக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

 1. பாவன நரசிம்மர்- மலை மேல்புதன்

         JEEP Travel (not auto not car)-கடின காட்டு வழி-(22 km from lower Ahobilam)

     கருடாத்ரி மலையின் தென்புறம் அடர்ந்த காட்டுப் பகுதியில் பவன நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
9.1 Bavana Narasimhar     மேல் அஹோபிலத்திலிருந்துசுமார் 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த மலைக் காட்டுப் பகுதியில் உள்ளது. இந்தக் கோயிலை நடைப் பயணமாகவும் சென்றடையலாம்; ஜீப், டிராக்டர் ஆகிய வாகன வசதியுடனும் போகலாம். கருவறையில் நரசிம்ம மூர்த்தி சதுர்புஜங்களுடன் வீற்றிருக்கிறார். இடது மடியில் லக்ஷ்மி பிராட்டியைத்தாங்கியுள்ளார்.
9.2 Bavana Narasimhar     சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலது கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடது கரம் தாயாரை அரவணைத்துக்கொண்டிருக்கிறது. இவருடைய இருக்கை, சுருட்டி அடுக்கினாற் போல் அமைந்த ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷனின் உடல்.

     இவரது சந்நதியில் வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், ஆஞ்சநேயர் ஆகியோரையும் கண்டுகளிக்கலாம். இது பரத்வாஜ மகரிஷியால் ஏற்பட்டது. தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இந்தக் கோயிலுக்கு வந்த அவர், இங்கு தியானம் செய்து அந்தப் பாவத்தைப்போக்கிக்கொண்டு, புனிதமடைந்ததார்.

     தாயார் (செஞ்சுலஷ்மி), வேடுவ குலத்தைச் சேர்ந்தவளாக இங்கே அவதரித்திருக்கிறார். இந்தத்தாயாரை பகவான் இங்கு வந்து திருமணம் செய்துகொண்டதால் வேடுவ குலத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு வந்து விழா கொண்டாடுகிறார்கள். அச்சமயம் அவர்கள் கோழி, ஆடுபோன்றவற்றை பலி கொடுக்கிறார்கள்.

        ஆழ்வார் குறிப்பிட்டுள்ள ‘புனிதன் என்ற சொல், இந்த பாவன நரசிம்மரையே குறிக்கிறது. பிரம்மஹத்தி போன்ற கொடிய தோஷங்களையும் தீர்த்து வைக்கும் புனிதனல்லவா அவர்! இந்த பாவன நரசிம்மரை தரிசிப்போர், கொடிய பாவிகளாகவே இருந்தாலும், அந்தப் பாவங்களிலிருந்து எளிதாக விடுபட்டு அனைத்து விதமானநலன்களையும், வளங்களையும்அடைவார்கள் என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.
10&&&&&&&&&&&&&&&&&

 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும் பூடிரிய,
சென்றுகாண்டற்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே.                 
(பெரியதிருமொழி::1.7.5; 1012)

      சீற்றத்தாலே மடித்த பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையுமுடையதாய் ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி செத்துப்போன இரணியனுடைய உடலை கூர்மையான நகங்களாலே பிளந்திட்ட புனிதன் (பரிசுத்தனான பகவான்) எழுந்தருளியிருக்குமிடமாவது சுழல் காற்றானது குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே கிட்டிச் சென்று ஸேவிக்க முடியா சிங்கவேள்குன்றம்

வேடுவ குலம்

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாதசிங்கவேள்குன்றமே.
                      (பெரியதிருமொழி::1.7.2; 1009)

     நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும் ஒளி பொருந்திய பற்களையும் உடையதாய் ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரஸிம்ஹமாய்க் கொண்டு ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்பைைைக் கிழித்தெறிந்த கூர்மையான நகங்களை உடைய எம்பெருமான்  எழுந்தருளி இருக்கு மிடமாவது வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே செய்யப்பட்ட சண்டையிலே கொடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய, வில்லைக் கையிலே உடைய வேடருடைய ஆரவாரமானது எப்போதும் மாறாத சிங்கவேள் குன்றம்.

          பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமானது .வாழ்வில் மறக்க இயலாது.      மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9-நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இது “நவ நரசிம்ம க்ஷேத்ரம்’.

     மேல் அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்- ஊன்றுகோல் அங்கே கிடைகிறது.

     இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

      அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய–திருத்தலம்.

உக்ர ஸ்தம்பம்

     மிகக் குறுகிய பாறைகளுக்கு இடுக்கிலான பாதையில், இயற்கையாக பகவான் உருவாக்கியிருக்கும் பாறைப் படிகள் மீது மெல்ல பாதம் பதித்து மேலேற வேண்டும்.உக்ரஸ்தம்பம் நிறுவப்பட்டிருக்கும் உச்சி முற்றிலும் பாதுகாப்பற்றது.

     இரண்டடிக்கு இரண்டடி சதுரத்தின் மையத்தில் தூண் ஊன்றி நிற்கிறது. அதனருகே நரசிம்மரின் பாதங்கள் காட்சி அளிக்கின்றன.  தூணைப்பிடித்துக் கொண்டு வருவதுதான் பாதுகாப்பானது. இந்தத் தூணைப் பிளந்துகொண்டு தான் நரசிம்மர் தோன்றினார் என்ற ஐதீகம் நிலவுவ தால், இத்தூணைத்தொட்டு வணங்க சிலர் விரும்பக்கூடும். இந்த உச்சிக்கு வருவது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.பொதுவாக இங்கு செல்ல யாருமே தயங்குவார்கள்.

     உறுதியான மனோதைரியமும், மலையேறும் அனுபவமும் கொண்ட இளவயதினர் மட்டுமே இங்கு செல்ல முயற்சிக்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&

சென்றறியா “அரிய-அரியின் ஆலயம்”

திருமங்கையாழ்வார்: பெரியதிருமொழி:1.7.1 to 10; 1008 to 1017

 • புனிதன்

அங்கண் ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
பைங்கணானைக்கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. (1.7.1; 1008)

     விஷ்ணு இங்கு இல்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த அவ்விடத்திலே பூமியிலுள்ள எல்லோரும் பயப்படும்படி ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு) இரணியன் கிளர்ந்த வளவிலே, அவனது உடலை கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் (சீற்றத்தால்) சிவந்த கண்களை உடைய சிங்கங்களானவை பசுமையான கண்களை உடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து பக்தியினாலே (பகவானுடைய) திருவடிகளிலே ஸமர்ப்பித்து ஆச்ரயிக்கப்பெற்ற சிங்கவேள்குன்றம்..

 • வேடர் குலம்

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்த செல்சாத்தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. (1.7.2; 1009)

       நாக்கு அலையா நின்ற பெரிய வாயையும் ஒளி பொருந்திய பற்களையும் உடையதாய் ஒப்பற்ற மிடுக்கையுடைய நரஸிம்ஹமாய்க் கொண்டு ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்பைக் கிழித்தெறிந்த கூர்மையான நகங்களை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் வேடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே செய்யப்பட்ட சண்டையிலே கொடூரமான தொனியை உடை பறை கோஷம் செய்ய, வில்லைக் கையிலே உடைய வேடருடைய ஆரவாரமானது எப்போதும் மாறாத சிங்கவேள்குன்றம்.      

 • கடின நிலம்

ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. (1.7.3; 1010)

     வடிவுக்கு தக்கப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களை உடைய ஒப்பற்ற மிடுக்கையுடைய நரசிங்கமாகி இரணியனுடைய வளர்ந்த உடலை கூர்மையான நகங்களாலே கிழித்தெறிந்த ஸ்வாமி எழுந்தருளி இருக்கின்ற இடமாவது கடினமான நிலங்களில் திரிந்து களைத்த மிருகங்களும் உடைந்த சிறு மலைகளும் இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய சிங்கவேள்குன்றம்.

 • தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்

     திருமங்கை ஆழ்வார் மானிடர்கள் தரிசிப்பது கடினம் என்றும், “தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!” என்றும் பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வு நாயும் கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே(1.7.4; 1011)

     துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தை உடையனாய் பாகவத விரோதியான இரணியனுடைய பிராணணை அபஹரித்து அவனுடைய சரீரத்தை கூர்மையான நகங்களாலே கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் கண்டவர்களை கவர்கின்ற நாய்களும் கழுகுகளும் நிறைந்திருப்பதனாலும் கொழுத்த வெய்யிலும் சுழல் காற்றும் எப்போதும் இருப்பதனாலும் தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட முடியா சிங்கவேள்குன்றம்.

 • பேழ்வாய் புனிதன்

மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும் பூடிரிய,
சென்று காண்டற்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. (1.7.5; 1012)

      சீற்றத்தால் மடித்த பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையும் உடையதாய் ஒப்பற்ற மிடுக்கை உடைய நரசிங்கமாகி செத்துப்போன இரணியனுடைய உடலை கூர்மையான நகங்களாலே பிளந்திட்ட புனிதன் (பரிசுத்தனான பகவான்) எழுந்தருளியிருக்கும் இடமாவது:- சுழல் காற்று குறைவில்லாமல் இருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியால் கிட்டிச் சென்று ஸேவிக்க முடியா சிங்கவேள்குன்றம்

 • தேவர்கள் அஞ்சிய பேழ்வாய்

எரிந்தபைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. (1.7.6; 1013)

     சீற்றத்தால் ஜ்வலிக்கின்ற கண்களோடும் விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடி இருக்கிற இந்த நரசிங்கத் திருக்கோலமானது என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி தேவர்கள் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக எழுந்தருளியிருந்த ஸர்வேசரனுடைய இடமாவது:-புலிகளானவை நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும் பெரிய வழியிலே காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான சிங்கவேள்குன்றம்

 • தினை அளவும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றம்

முனைத்தசீற்றம் விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ் சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்,
தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.(1.7.7; 1014)

      கோபமானது வளர்ந்து சென்று ஆகாயத்தைக் கொளுத்தவும் மூன்று லோகங்களும் மற்றும் உள்ளவைகளும் எல்லாம் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் பயப்படவும் ஒலி செய்கின்ற நெருப்பும் அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும் உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனால் தினை அளவும் செல்ல முடியாச் சிங்கவேள்குன்றம்.

 • நாத்தழும்ப நான் முகனும் ஈசனும்

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. (1.7.8; 1015)

     பிரமனும் சிவனும் நாக்குத் தடிக்கும்படி ஸ்தோத்ரம் பண்ண ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.காய்கள் நிறைந்த வாகை மரங்களினுடைய நெற்றுகளானவை சப்திக்க, கல்வழிகளிலேயுண்டான குழல் மூங்கிற் செடிகள் ஆகாசத்தை அளாவிப்போய் (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினால் உண்டான நெருப்பினால் ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற சிங்கவேள்குன்றம்

 • ஆயிரந்தோளன்

நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. (1.7.9; 1016)

     ஓ மனமே! நமக்கு ஸ்வாமியாய் பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்  ஆயிரந்தோள்களை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமாய், நெல்லி மரங்கள் நிறைந்து கற்களினுள்ளே வேரோட்டத்தினால் பாறைகளை உடைக்கவும் பனையோலைகள் ஒலிசெய்யவும் வழிகளிலே சுவர்க்கோழிகள் ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற சிங்கவேள்குன்றத்தை  ஸேவிப்போம்.

 • மங்களம்

செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. (1.7.10; 1017)

     சிவந்த கண்களை உடைய சிங்கங்கள் (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கும் இடமான சிங்கவேள் குன்றத்தை இருப்பிடமாக ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் உபகாரகனாமாக உள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை உடையவராய் வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் மிக்க உதாரரான ஆழ்வாரருளிச்செய்த செவ்விய இச்சொல் மாலையை ஓதவல்லவர்கள் தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

&&&&&&&&&&&&

     நடைப்பயணம் மற்றும் மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவ நரசிம்மர்களையும் சேவிக்க முடியும்.

 • கடின நிலம்
 • தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்
 • தினை அளவும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றம்

     திருமங்கையாழ்வாரே கூறியது அனைத்தும் உண்மைதான், எனினும் சிரத்தையுடன் பக்தர்கள் முயர்ச்சி செய்தால், பகவானை வழியில் கண்ட கலியன்-திருமங்கையாழ்வாரே, பகவானிடம் விண்ணப்பித்து, அதற்க்கான வழிசெய்வார்.

D. நரசிம்ம தலங்கள்

நவநரசிம்ம தலங்கள்

 1. அகோபிலம்
 2. நவநரசிம்மர், மேல்-அகோபிலம்

அட்ட நரசிம்ம தலங்கள்

 1. அந்திலி
 2. சிங்கரி கோவில்
 3. சிங்கப்பெருமாள் கோவில்
 4. சிந்தலவாடி
 5. சோளிங்கர்
 6. நாமக்கல்
 7. பரிக்கல்
 8. பூவரசன்குப்பம்

பஞ்ச நரசிம்ம தலங்கள்

 1. கேதவரம்
 2. மங்களகிரி பானக நரசிம்மர்
 3. மட்டப்பல்லி
 4. வாடப்பல்லி
 5. வேதாத்திரி

ஆந்திரப் பிரதேசம்

 1. அகிரபள்ளி வியாக்ர நரசிம்மர்
 2. எர்ரகுண்டா நரசிம்மர்
 3. கதிரி லட்சுமி நரசிம்மர்
 4. கம்மம்
 5. சிம்மாசலம்
 6. யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்

கர்நாடகம்

 1. அகர பஞ்சமுக நரசிம்மர்
 2. கர்பரா நரசிம்மர் (அரசமரம்)
 3. கனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)
 4. நரசிப்பூர் குஞ்சால நரசிம்மர்
 5. பாண்டவபுரம்-யோக நரசிம்மர்
 6. ஹம்பி லட்சுமி நரசிம்ஹர்

தமிழ்நாடு

 1. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் யானைமலை மதுரை
 2. கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள்
 3. நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்
 4. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் யானைமலை மதுரை
 5. காட்டழகிய சிங்கப் பெருமாள், திருவரங்கம்
 6. ஸ்ரீநவனித கிருஷ்ணன் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், நங்கநல்லூர், சென்னை.
 7. ஸ்ரீ நரசிம்மர், வேளச்சேரி, சென்னை.
 8. சிங்கபெருமாள் ஸ்ரீ உக்கர நரசிம்மர், தாம்பரம், சென்னை.
 9. ஸ்ரீ அழகிய நரசிங்க பெருமாள், எண்ணாயிரம், பாண்டிசேரி.
 10. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இராமாபுரம், சென்னை
 11. ஸ்ரீ நரசிம்மர், பரிக்கல்
 12. ஸ்ரீ யோக லட்சுமி நரசிங்கப் ஸ்வாமி சோளிங்கர்
 13. ஸ்ரீ யோக நரசிம்மர் சிந்தலவாடி
 14. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உக்கடம், கோயம்புத்தூர்
 15. ஸ்ரீ உக்கர நரசிம்மர், நாமக்கல்
 16. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பொள்ளாச்சி
 17. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உக்கடம், கோயம்புத்தூர்

நரசிம்மர் சன்னதிகள்

 1. தாடிக்கொம்பு-சுதர்சன நரசிம்மர்
 2. திருகோஷ்டியூர்
 3. திருநீர்மலை-சாந்த நரசிம்மர்
 4. திருவல்லிக்கேணி-அழகியசிங்கர்
 5. திருவாலி-லக்ஷ்மி நரசிம்மர்
 6. நாகப்பட்டினம்-அஷ்டபுஜ நரசிம்மர்
 7. வேளுக்கை-அழகியசிங்கர்
 8. ஸ்ரீரங்கம்-மேட்டழகிய சிங்கர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

      Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள் (78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)-To be published soon

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-52: குருஷேத்திரம்:”ஸ்ரீமத்பகவத்கீதையும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும்” உபதேசிக்கப்பட்ட புண்ணிய பூமி

Tags

, , , , ,

     3-6-2016

      மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம் ஒரு புண்ணிய பூமி. இங்கு தான் பஞ்ச பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் 18 நாட்கள் யுத்தம் நடைபெற்றது. இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி. இதுவாகும்.

    மனிதன், தன் உள்-வெளி போராட்டங்களை வெல்ல, மஹாபாரத யுத்த தொடக்கத்தில், ஸ்ரீமத்பகவத்கீதையும் யுத்த முடிவில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்ட  புண்ணிய பூமி-குருஷேத்திரம் 

 44.0

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

52. 1.ஸ்ரீமத்பகவத்கீதை உபதேசம்-சோதிசர்

அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்

கீதை முதல் ஸ்லோகம்(1.1)

திருதராஷ்ட்ர உவாச ……………………திருதராஷ்ட்ரன் முதல் ஸ்லோகம்

தர்ம க்ஷேத்ரே  குரு க்ஷேத்ரே  ஸமவேதா யுயுத்ஸவ😐
மாமகாபாண்டவா ஸ்சைவ  கிம குர்வத  ஸஞ்ஜய ||1-1||

     திருதராஷ்டிரன் சொல்லுகிறான் (கேட்கின்றான்), சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்? 44.1(1)

      பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்ட பகவத் கீதை பிறந்த பெருமை குருஷேத்திரத்திற்கு உண்டு.

44.1(2)      கீதோபதேசம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது

கீதை கடைசி ஸ்லோகம்(18.78)

யத்ர யோகே³ஸ்²வரக்ருஷ்ணோ யத்ர பார்தோ²   நுர்த: |
தத்ர  ஸ்ரீர் விஜயோ  பூதிர் த்ருவா  நீதிர் மதிர்மம || 18- 78||

       யோகக் கடவுள் கண்ணன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.

52.2. ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்-உபதேசம்-பீஷ்ம குண்டம்

பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்

 44.2(1)        அருச்சுனன் தன் அம்பினால் (பாணத்தால்) உண்டாக்கிய தீர்த்தக் கிணறு “பாண கங்கா” என்ற பெயரில் இத்தலத்தில் உள்ளது. குந்தி தேவி வழிபட்ட சிவாலயமும் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

44.2(2)52. 3. பிரம்ம சரோவர் (Brahma Sarovar)

    மாபெரும் புண்ணிய தீர்த்த குளம்

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் குருச்சேத்திரம் எனுமிடத்தில் அமைந்த இந்தியாவின் தொன்மை வாய்ந்த மிகப்பெரிய புனித குளம் ஆகும்.

      இப்புனித பிரம்ம சரோவர் குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும் என்பது இந்து சமய மக்களின் தொன்மையான நம்பிக்கையாகும்.

     இத்தலத்திலுள்ள பிரம்மசரோவர் என்ற தீர்த்தம் 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது. தீர்த்த விசேஷம் உள்ள இடம் குருஷேத்திரம்.

    மத்சய புராணத்திலும், பத்ம புராணத்திலும் இங்குள்ள பிரம்மசரோவர் என்ற தீர்த்தத்தின் மகிமையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தின் போது இந்த தீர்த்தத்தில் மூழ்கி நீராடுவர்கள் 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள் என்று இந்த இரண்டு புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

44.3(1)இதிகாச புராணங்களின்படி மிகப்பெரிய வேள்வி செய்தபின் குருச்சேத்திரம் எனும் இடத்திலிருந்து (பிரம்ம சரோவர்) பிரம்மா இப்பிரபஞ்சத்தை படைத்தார்.

44.3(2)     பிரம்ம சரோவரின் அமைவிடம் பண்டைய பாரத நாட்டின் நாகரீகத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது. பிரம்ம சரோவர் அமைந்த பகுதியான குருச்சேத்திரல் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரும் போர் நிகழ்ந்தது என மகாபாரதம் வாயிலாக அறியப்படுகிறது.

      பிரம்ம சரோவர் குளக்கரையில் சிவன், துர்கை கோயில்கள் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிர்லா மந்திர், பாபாநாத் கோயில், மடாலயங்கள் அமைந்துள்ளன.

44.3(3)

52.4. குருச்சேத்திரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்

 • பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய இரதம் அமைந்த இடம்
 • கிருஷ்ணா அருங்காட்சியகம், மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம்
 • பீஷ்ம குண்டம், பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்
 • சோதிசர் அருச்சுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம்
 • பிரம்ம குண்டம், அருச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-51:தீர்க்க (Longitude)-அட்ச (Latitude) ரேகைகள்: நேரமும்-தூரமும்

Tags

, , , , , , , ,

தீர்க்க (Longitude E &W ): 0-180º and அட்ச (Latitude N & S)ரேகைகள்:0-90

1 L & L

2 L & L

LONGITUDE-தீர்க்க ரேகை (நிலநிரைக்கோடு)-E & W

            பூமியின் தெற்கு வடக்காக வரையப்படும் கோடுகள். இங்கிலாந்து நாட்டில் உள்ள  கிரீன்விச் நகரத்தில் அமைந்திருக்கும் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தை மையமாக வைத்து செல்லும் தீர்க்க ரேகையை 0 டிகிரி என ஆரம்பமாக கணக்கிட்டு கிழக்குப்பகுதி (Major part of Africa, Asia & Australia) சர்வதேச தேதிக்கோடு வரை 180 டிகிரி கிழக்கு எனவும், மேற்குப்பகுதி (Greenland , North & South America) சர்வதேச தேதிக்கோடு வரை 180 டிகிரி மேற்கு எனவும் கணக்கிடப்படுகிறது.

E & W
3 E & W

4 E & W

5 E & W

GMT தீர்க்க ரேகை-0 டிகிரி 

        GMT தீர்க்க ரேகையின் கிழக்கு நோக்கி செல்ல கூடுதல் மணியாகவும் மேற்கு நோக்கி செல்ல குறைவான மணியாகவும் கணக்கிடப்படுகிறது.இந்தக்கோட்டிற்கு மறுபகுதியில் அதாவது பூமிக்கு அடுத்த பாதியில் International Date Line (IDL) தீர்க்க ரேகை 180 டிகிரி ஆகும்.

 The International date line(IDL)

        The International date line is shown as an uneven black vertical line in the Time Zone Map above and marks the divide where the date changes by one day. It makes some deviations from the 180-degree meridian to avoid dividing countries in two, especially in the Polynesia region.

            The time difference between either side of the International Date Line is not always exactly 24 hours because of local time zone variations.

Coordinated Universal Time (UTC)

                In 1960, the International Radio Consultative Committee formalized the concept of UTC, and it was put into practice the year after. The name Coordinated Universal Time was officially adopted in 1967.

UTC-GMT

       Prior to 1972, this time (UTC) was called Greenwich Mean Time (GMT) but is now referred to as Coordinated Universal Time or Universal Time Coordinated (UTC). It is a coordinated time scale, maintained by the Bureau International des Poids et Mesures (BIPM). It is also known as “Z time” or “Zulu Time”.

       Since then, GMT is no longer a time standard. Today, Greenwich Mean Time is only the name of a time zone that is used by a few countries in Africa and Western Europe, including the UK during winter and all year in Iceland.

       The line (IDL) divides the Earth into eastern and western hemispheres just as the equator divides the northern and southern hemispheres.

      15 டிகிரி (1 hr) இடைவளியில் (360/24 = 15) ஒரு தீர்க்க ரேகை. கிரீன்விச்சில் மணி பகல் 12 என்றால்,  கிரீன்விச்சுக்கு மேற்கே உள்ள தீர்க்க ரேகையில் காலை 11 மணி; கிழக்கேயுள்ள தீர்க்க ரேகையில் மதியம் 1 மணி.

ஜப்பான் (36.2048° N, 138.2529° E)

   சூரியன் உதிக்கும் நாடு .உலகின் கிழக்கு கடைசியில் இருக்கும் ஜப்பான் (முதலில் சூரியனைப் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்).

    இந்தியா கிரீன்விச் நேரத்திலிருந்து 5:30 மணி நேரம் முன்னால்=GMT+ 5:30.

 &&&&&&&&&&&&&

LATITUDE-அட்ச ரேகை (நில நேர்க்கோடு): 0-90 டிகிரி N &

0-90 டிகிரி S

     கிழமேற்காக கோடு. பூமியின் மையப்பகுதியில் அதிக விட்டத்தைக்கொண்டது. பூமியை சரிபாதியாக பிரிக்கிறது. அதனை பூமத்தியரேகை என்கிறோம். இந்த நிலநேர்க்கோடு  தென் துருவம் மற்றும் வடதுருவம் செல்ல அதன் விட்ட அளவு குறையும்.

          பூமத்திய ரேகையை 0 டிகிரி என வைத்து வடதுருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும் (0- 90 N Degree) தென் துருவம் வரை செல்லும்போது 0-90S டிகிரியாகவும் கணக்கிடப்படுகிறது.

அட்ச ரேகைகளில் மூன்று கோடுகளுக்கு சிறப்பு பெயர்கள்.

 • நடு நாயகமாக இருப்பது பூமத்திய ரேகை.
 • பூமத்திய ரேகைக்கு மேலே(வடக்கே) 23.5 டிகிரி கடக ரேகை,Tropic of CANCER
 • கீழே (தெற்கே) 23.5 டிகிரியில் மகர ரேகை,Tropic of CAPRICORN.

    தீர்க்க ரேகைகள் : 180+180 – கால நிலை அறிய ; அட்ச ரேகைகள் : 90+90; (90 N & 90 S)- பருவ காலம் அறிய

&&&&&&&&&&&&&&&&&

THE EARTH

  Latitude comes before longitude
  North latitude is positive
  East longitude is positive

பூமி° சாய்ந்து 23½° சுற்றுகிறது
பூமியில் உள்ள கண்டங்கள் – 7
பூமியில் உள்ள பெருங்கடல்கள் – 5
பூமியின் ஓரே துணை கோள் நிலவு
பூமியின் நீர் சதவீதம் – 71% பூமியின் நிலம் சதவீதம் – 29%
நிலவின் மனிதன் காலடி வைத்த ஆண்டு – 1969 ஜூலை
நிலவொளி பூமியை வந்தடையும் நேரம்-1.3 நொடி

The escape velocity from Earth is about 1.2 km/s; 40,270 km/h
சூரிய ஒளி பூமியை வந்தடையஆகும் காலம்-8 நிமிடம் 16.6 நொடி

நவ-கிரக மண்டலம்

(பூமியைச் சுற்றி நவகிரக வரிசை)

   சூரியன்(Sun); புதன்(Mercury); சுக்கிரன்(Venus)
;பூமி (Earth); சந்திரன்(Moon) ; செவ்வாய்(Mars) ; குரு(Jupiter); சனி (Saturn)
ராகு (Raghu) & கேது (Kethu) – உருவில்லா நிழல் கிரகங்கள்

6 Planets

&&&&&&&&&&&&&&&&&

THE WORLD

0° அட்ச ரேகை – பூமத்திய ரேகை
66½° வடக்கு அட்ச ரேகை வடதுருவம் வரை– ஆர்டிக் வட்டம்
66½° தெற்கு அட்ச ரேகை தென் துருவம் வரை-அண்டார்டிக் வட்டம்

90°N வடக்கு – வடதுருவம்
90°S தெற்கு – தென்துருவம்
0° தீர்க்க கோடு – கிரீன்விச் கோடு
180° தீர்க்க கோடு – சர்வதேச நாள் கோடு(IDL).

உலகில் உள்ள நேரமண்டலங்களின் எண்ணிக்கை, 24.

      மார்ச்-21 & செப்டம்பர்-23: சூரியனின் மையம் பூமத்திய ரேகையை நோக்கி இருக்கும்-சம இரவு பகல் நாட்கள்.

HRE-51 Dates

ஜுன் 21 கடக ரேகை (Tropic of CANCER) – நீண்ட பகல் நாள்-SOLSTICE-North

This occurs on the June solstice, when the Northern Hemisphere is tilted toward the Sun to its maximum extent
டிசம்பர் 21 மகர ரேகை(Tropic of CAPRICORN) – நீண்ட இரவு நாள்-SOLSTICE-South

     These tropics are two of the five major circles of latitude that mark maps of Earth, besides the Arctic and Antarctic Circles and the Equator

  பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணி 56 நிமிடம் 4.1 நொடிகள்=86164.1 நொடிகள்

        சூரியனை பூமி சுற்றி வர ஓராண்டு (365.25 நாட்கள்) ஆகிறது..அதாவது., ஒரு வருடத்தில் நகரும் கோணம் = 360°;  ஒரு நாளுக்கு நகரும் கோணம் = 360/365.25 = 0.985°

&&&&&&&&&&&&&&&&&

       INDIA (From equator, 80, 4′, 28”N to 370, 17′, 53”N & From Greenwich, 680, 7′, 53”E to 970, 24′, 47”E)

Indian Standard Time (IST)

         இந்தியாவில் மொத்தம் 29 தீர்க்கக்கோடுகள் செல்கின்றன. இந்தியாவின் திட்டநேரம் (IST), 82½° கிழக்குத் தீர்க்ககோடு செல்லும் அலகாபாத்தை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.

    இது (IST) கிரீன்வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது(அதிகம்).

HRE-51 India

      இந்தியாவில் சூரிய உதயத்தைக்கானும் முதல் மாநிலம், அருணாச்சல பிரதேசம். (97°E தீர்க்ககோடு)

     இந்தியாவில் கடைசியாக சூரிய உதயத்தைக்காணும் மாநிலம், குஜராத் (68°E தீர்க்ககோடு)

     அருணாச்சல பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள சூரிய உதய நேரம், 1 மணி 56 நிமிடங்கள்(2 hrs).

   *இந்தியா அட்ச ரேகை 80 4′ 28” வடக்கு முதல் 370 17′ 53” வடக்கு வரை.

   *இந்தியா தீர்க்க ரேகை 680 7′ 53” (E) கிழக்கு முதல் 970 24′ 47”(E) கிழக்கு வரை. * 230 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது.

கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.

   இந்தியா, வட அரைகோளப் பகுதியில், கிரீன் வீச்சுக்கு கிழக்குப் பகுதியில் உள்ளது.

     இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.

    *இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம்3214 கிலோமீட்டர். கிழக்கு மேற்கு தூரம் 2933 கிலோ மாட்டர். தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700 கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).

    *இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிக அளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.

   *இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.

&&&&&&&&&&&

TAMIL NADU (From equator, 8′ 5’N to 13′ 35’N & From Greenwich, 76′ 15’E to 80′ 20E)

தமிழகம் 8′ 5’N வட அட்ச ரேகை முதல் 13′ 35’E வட அட்ச ரேகை வரையிலும், 76′ 15’E கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80′ 20E; கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது.

CHENNAILongitude-தீர்க்க ரேகை 80.2707° E ; Latitude-அட்ச ரேகை: 13.0827° N,

&&&&&&&&&&&&&

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-50 : தசாவதாரம் (10.கல்கி அவதாரம்)

Tags

, , , , , , ,

     Please, மேலும் இது போன்று தொடர்புடைய தசாவதாரக் கட்டுரைகளுக்கு (LINKs) இக்கட்டுரையின் முடிவில் காணவும்.

For further Dasavathara related articles (LINKs), please refer at the END of this article.

ஓம் பரமபுருஷாய வித்மஹே
பாபஹராய தீமஹி
தன்னோ கல்கி ப்ரசோதயாத் (தசாவதார-கல்கி காயத்திரி)

Untitled

        மனிதன் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்

        அதாவது பத்தாவது அவதாரமாக நாம் எதிர்பார்த்திருப்பது கல்கி அவதாரம். இதில் கல்கி பகவான் தேவதாதி என்னும் வேகமான குதிரையில் வந்து உலகை அழிப்பார் என நம்பப்படுகிறது. இன்று இடம்பெரும் இயற்கை அழிவுகளும் மனிதனால் மேற்கொள்ளப்டும் அழிவை நோக்கிய செயற்பாடுகளும் இதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.

        கலியுகத்தின் முடிவில் யசாஸ் எனும் பிராமணரின் மகனாக, மகாவி..ஷ்ணு பிறப்பு எடுப்பார்.கவர்ச்சியான முகத்துடன், சகல வல்லமையும் பெற்றவராக திகழ்வார்.

     சிரஞ்சீவியான பரசுராமர் இடம் சென்று சகல கலைகளையும் கற்று, உபதேசமும் பெற்றுக் கொள்வார்.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

50. 1. கல்கி அவதாரத்திருநாள்

மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:
ம்லேச்சாக்ராந்த
கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

     கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

     வெள்ளை குதிரை மீதேறி உலகினை சுற்றி வருவார். அக்கிரம செயல்களை எதிர்த்து, அதர்ம செயல்கள் புரிவோரை அழித்து தருமத்தினை நிலை நாட்டுவார்.அத்துடன் கலியுகம் முடிவுக்கு வரும்.

      கல்கி அவதாரத்திற்க்கு, நந்தகம் என்ற வாள் ஆயுதமாக அமையப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது

50. 2. கலியுகம்-கலி தோஷம்

     இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும்.

      கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள்.

        கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் மயமாகும்.

         பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும்.

50. 3. கல்கி பகவான்

          சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து  நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.

         அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர். அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும்.

        தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.

50.4.சதுர் யுகம்

            யுகங்கள் நான்கு (கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம்). கிருத யுகம்:17,28,600(4L) கலியுகவருடங்கள், திரோதா யுகம்: 12,96,000(3L) கலியுகவருடங்கள், துவாபர யுகம்: 8,64,000(2L) கலியுகவருடங்கள், கலியுகம்:4,32,000(L) கலியுகவருடங்கள்(வருடங்கள்). இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம்(10L) ஆகும்.

50.5. மன்வந்தரம்

 • ஒரு சதுர்யுகம்-மகாயுகம்(10L); 1000சதுர் யுகம்=10,000L=கல்பம் (பிரம்மா பகல்) = 14 மன்வந்தரம்(14-மனுகள் & 14 இந்திரன்கள்) ;(1-மன்வந்தரம் 71 சதுர்யுகங்கள்)
 • நடப்பு மன்வந்தரம்=7; 7 வது மன்வந்தரத்தில் (71சதுர்யுகத்தில்) 28 வது சதுர்யுகம்- வைஸ்வத மன்வந்தரம் (வைஸ்வத மனு);
 • 8-வது மன்வந்தரத்தில் மனு-சர்வாணி.
 • பிரம்மா பகல்= 1 கல்பம் (14 மன்வந்தரம்) முடிவு “மகா-பிரளையம்
 • மாறுதல் அடையும் காலங்கள்: யுக முடிவு (4L, 3L, 2L, L) , சதுர்யுக முடிவு(10L), மன்வந்தர முடிவு(71 சதுர்யுகம்=710L), கல்ப முடிவு (10,000L), பிரளையம் …………………பிரம்மா முடிவு (100x365x2x10,000L)………… மஹாப் பிரளையம்!

 50. 6. ஸ்ரீமஹாவிஷ்ணு யுகந்தோறும் அவதாரம்

            ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான்,  பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

      பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய துஷ்க்ருதாம்|
     தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி  யுகே  யுகே || கீதை:4-8||

ஸாதூநாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்
துஷ்க்ருதாம் விநாஸாய ச = தீயன செய்வோரை அழிக்கவும்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய = அறத்தை நிலை நிறுத்தவும்
யுகே யுகே ஸம்பவாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்

          (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-31; ஸ்ரீபகவானுவாச; p-53)

     நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன் (பிறக்கிறேன்)*.

“1000சதுர் யுகம்=10,000L=கல்பம், பிரம்மா பகல்”

      ஸஹஸ்ர யுக பர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது: |
      ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ  ஜநா: ||கீதை: 8- 17||

ப்ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)
ஸஹஸ்ர யுக பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது
ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று
விது: = அறிகிறார்களோ
தே ஜநா: அஹோராத்ரவித: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்

          பிரம்மாவுக்கு ஆயிரம் சதுரயுகம் ஒரு பகல், ஆயிரம் சதுரயுகம் ஒரு இரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.

      ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றுவதற்காக கல்கி, பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

      இதற்கு முன் சதுர் யுகத்தில் கல்கி அவதாரம் எடுத்த நன்னாளே கல்கி ஜெயந்தி. அந்த நன்நாள் ஆகஸ்ட் 27 அன்று கல்கி ஜெயந்தி என்று குறிக்கப்பட்டுள்ளது.

         தற்போது நடப்புச் சதுர்யுகத்தில் கலியுகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என்கின்றனர் சான்றோர். இந்த கலியுகத்தில் கல்கி பிறக்க இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகள் உள்ளன என்றால் மிகையில்லை.

     கலியை இறுதி யுகமாகக் கொண்ட சதுர் யுகம் முடிவுறும். மீண்டும் இனிமையான கிருத யுகம் (சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் கூடும்பொழுது) தோன்றும் என்கின்றனர் சான்றோர்.

     ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED ARTICLES:-

Pl Also, Click & Look for each தசாவதாரம் at HRE Links for தசாவதாரம் given below

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE- 49 : தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)

Tags

, , , ,

       Please, மேலும் இது போன்று தொடர்புடைய தசாவதாரக் கட்டுரைகளுக்கு (LINKs) இக்கட்டுரையின் முடிவில் காணவும்;
For further
Dasavathara related articles (LINKs), please refer at the END of this article.

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

ஹரே கிருஷண ஹரே கிருஷண கிருஷண கிருஷண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

49.1. கிருஷ்ண-அவதாரம்,

       ஒன்பதாவது அவதாரம். கிருஷ்ண பகவான் பசுக்களுடன்,மனிதன் மிருகங்களை வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கியமையையும், கால் நடை வளர்ப்பை மேற்கொண்டமையையும் , அன்று நிலவிய பொருளாதார  மேம்பாட்டையும் காட்டுகின்றது.

1

     கிருஷ்ண அவதாரத்தில், பகவான் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும் சுதரசனம் என்ற சக்கரத்தையும் ஆயுதமாக கொண்டார்

கிருஷ்ண அவதாரத்திருநாள்

மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே
ப்ரஜாபத்யக்ஷர்
சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

ஆவணி மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

49. 2. யுகந்தோறும் அவதாரம்

            ***யுகங்கள் நான்கு (கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம்). கிருத யுகம்:17,28,600(4L) வருடங்கள், திரோதா யுகம்: 12,96,000(3L) வருடங்கள், துவாபர யுகம்: 8,64,000(2L) வருடங்கள்,கலியுகம்:4,32,000(L) வருடங்கள். இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம்(10L) ஆகும்.

        ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான்,  பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

       பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய துஷ்க்ருதாம்|
      தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி  யுகே  யுகே || கீதை:4-8||

          (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-31; ஸ்ரீபகவானுவாச; p-53)

      நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்***.

1000 சதுர் யுகம்=10,000L=கல்பம் பிரம்மா பகல் முடிவு “பிரளையம்”

      ஸஹஸ்ர யுக பர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது: |
      ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ  ஜநா: ||கீதை: 8- 17||

ப்ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)
ஸஹஸ்ர யுக பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது
ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று
விது: = அறிகிறார்களோ
தே ஜநா: அஹோராத்ரவித: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்

      பிரம்மாவுக்கு ஆயிரம் சதுரயுகம் ஒரு பகல், ஆயிரம் சதுரயுகம் ஒரு இரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.

49. 3. கம்சன்-தேவகி-வசுதேவர்.

       உக்ரசேனனின் மகன் கம்சன். இவன் வட மதுராவை ஆண்டு வந்தான். சகோதரி தேவகி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். தேவகியை, சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

        இவர்கள் இருவரையும், கம்சன் தன் ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற போது, அசரீரி ”கம்சா, தேவகியின் எட்டாவது பிள்ளையால் நீ கொல்லப்படுவாய்” என்று கூறியது.

      இதனால் கடும் குழப்பமடைந்த கம்சன் தன் தங்கையை கொல்ல முற்பட, வசுதேவர் தடுத்து, இவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் கொடுத்து விடுகிறேன். அவற்றைக் கொன்றுவிடு”. என்று கூற, அதனை ஏற்று தேவகியை உயிருடன் விட்டான். எனினும் அவர்கள் இருவரையும் சிறை வைத்தான். தேவகிக்கு சிறையுள் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொலை செய்தான்.

49. 4. எழாவது குழந்தை-பலராமன்

     எழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல் மனைவி ரோகினியின் கருவில் சேர்க்கப்பட்டு பலராமனாக பிறந்தார்.

49. 5. எட்டாவது குழந்தை-கிருஷ்ணர்

     தேவகிக்கு பிறக்க போகும் எட்டாவது குழந்தைக்காக ஆவேசத்துடன் காத்திருந்தான் கம்சன். வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார்.5

49.6. யோகமயை

     அவருடைய ஆணைப்படி அக்குழந்தையை கோகுலத்தில் இருந்த நந்த கோபரின் மனைவி யசோதையிடம் மாற்றி அவள் பெற்ற பெண் குழந்தையை தேவகியிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர்.

6     கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் அதனை கொல்ல முயன்ற போது அது அவன் பிடியில் இருந்து தப்பி வானத்தில் பறந்து சென்றது. ”கம்சா!, நீ என்னை கொல்ல முடியாது. உன்னை கொல்பவன் ஏற்கனவே பிறந்து விட்டான்”. என்று கூறி மறைந்தது.

49. 7. பலராமனும், கிருஷ்னனும்

     கோகுலத்தில் பலராமனும், கிருஷ்னனும் ஒன்றாகவே வளர்ந்து கன்றுகளை மேய்த்து வந்தனர்.

1     கம்சன் தன்னை அழிக்கப் பிறந்திருக்கும் குழந்தையை தேடி அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். எதுவுமே வெற்றி பெறவில்லை. கிருஷ்ணனை கொல்ல நினைத்த கம்சனின் முயற்சிகள் பலவும் வீணாகின.

     குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார், யமுனை நதிக்கரையில் இருந்த கலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார்.

7(a)     ஆயர்பாடியில் கிருஷ்ணன், வருடாந்த இந்திர விழா தடுக்கப்பட்டதால், கோபம் அடைந்த இந்திரனின் ஆணவத்தினை, கோவர்த்தன மலையை குடையாக ஏந்தி, மக்களை காத்ததன் மூலம் அழித்தான்.

7(b)     இறுதியாக கம்சன், மல்யுத்த வீரர் இருவரை அனுப்பி பலராமன், கிருஷ்ணன் இருவரையும் மல்யுத்தம் மூலம் கொல்ல முயன்றான். எனினும் இருவரும் கொல்லப்பட கம்சன் தானே கிருஷ்ணனுடன் மோத முயன்றான்.இறுதியில் கிருஷ்ணன், கம்சனை தரையில் தள்ளி அவன் மீது பாய்ந்து மேலே அமர்ந்ததும் பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான.

     பின்னர் பலராமனும், கிருஷ்ணனும் சிறையில் இருந்த தமது தாய், தந்தையரை விடுவித்தனர். அதன் பிறகு இருவரும் கோகுலத்துக்கு செல்லாமல் வசுதேவருடனே இருந்து வந்தனர்.

49. 8. குருகுலம்சாந்தீப முனிவர்

     இருவருக்கும் சாந்தீப முனிவர் கல்வி போதித்து வந்தார். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை மீட்டு கொடுத்தார்கள்.

8     கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான்.

     இதனால் யாதவ குலத்தினை காக்க, விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிருமானித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான் கிருஷ்ணன்.

49. 9. கிருஷ்ணன் மனைவிகள்

     விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயத்திருபதனை அறிந்து, தன்னை காப்பாறும்மாறு கிருஷ்ணனிடம் தகவல் அனுப்ப அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான்.

         இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

     கிருஷ்ணன் மொத்தம் 16,108 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர்.

      அவர்கள் ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, சம்பவதி, நாக்னஜிதி, காலிந்தி, மித்ரவிந்தா, பத்ரா, லக்ஷ்மணா ஆவர்.  பிற 16,100 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார். எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

      கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணனின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார்.

49.10. பாண்டவர்களுடன் நட்பு

           தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

     அத்தை குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

        அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன சொன்ன துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான்.

            பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.

49.11. பகவத் கீதை உபதேசம்

           இதனால் பாரத போர் மூண்டது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு தேர்ரோட்டியாக இருந்து போரை நடத்தினான். தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார். பாரத போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.

44.1(1)      கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது. குருச்சேத்திரப் போர் முடிந்த பின், ஒரு நாள் சாம்பன் கர்ப்பிணி பெண் வேடமிட்டு நண்பர்கள் புடைசூழ, துவாரகைக்கு வந்திருந்த முனிவர்களிடம், தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்க, அதற்கு உங்கள் குலத்தை அழிக்க உலக்கை ஒன்று பிறக்கும் என சாபமிட்டனர்.

4

49. 12. அவதார முடிவு

          அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர்.

           ஒருசமயம் துவாரகை வந்த முனிவர்கள் சிலரை ஏளனம் செய்து, ஒரு ஆடவனை கர்ப்பவதி போல காட்டி இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் ‘இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே உங்கள் குலத்தினையே அழிக்கும்”. என சாபமிட்டனர்.

         முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை அவன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.

        அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான்.

          கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப்புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டை இட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்தது வைகுண்டம் சென்றார்.

     பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவர் வேண்டுதலுக்கு ஏற்ப அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர்.

        முனிவர்களின் சாபத்தின்படி யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.

     ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருஷ்ணர், தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 RELATED ARTICLES:-

Pl Also, Click & Look for each தசாவதாரம் at HRE Links for தசாவதாரம் given below

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-48 : தசாவதாரம் (8.பலராம அவதாரம்)

Tags

, , , , , , ,

Untitled        Please, மேலும் இது போன்று தொடர்புடைய தசாவதாரக் கட்டுரைகளுக்கு (LINKs) இக்கட்டுரையின் முடிவில் காணவும்; For further Dasavathara related articles (LINKs), please refer at the END of this article.

ஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

       பெருமாளின் அவதாரங்களில் 8-வது அவதாரம். கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பலராமன் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம். ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றார். பலராம அவதாரம் கலைப்பையுடன் காணப்படுகிறார். இது மனித நாகரீகத்தில் விவசாய அபிவிருத்தி ஏற்பட்டதைக் காட்டுகிறது.

       பலராம அவதாரத்தில், பகவான் கலபபையை தாங்கி இருந்தாலும் போரில் கௌமோதகி என்ற கதாயுதத்தையே பிரதானமாக கொண்டார். பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத ஆசானாவார்.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

48. 1. பலராம அவதாரத்திருநாள்

வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:
சம்கர்ஷணோ
பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

        வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்.

48.2. யுகந்தோறும் அவதாரம்

        ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான்,  பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.

        பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய துஷ்க்ருதாம்|
       தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி  யுகே  யுகே || கீதை:4-8||

          (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-31; ஸ்ரீபகவானுவாச; p-53)

      நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்***.

48. 3. கம்ஸன்

      சூரசேனன் மத்ரா (மதுரையை) ஆண்டு வந்தான்.சூரசேனனுக்கு தம்பி உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதியர் ஊர்வலமாக தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அசரீரி கம்ஸா, உன் தங்கை தேவகிக்கு எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று சொல்லியது.

        கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார்.

    சினம் தணிந்த கம்ஸன் கம்ஸன் வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்று தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

48.4. ரோகிணி (பலராமன் அவதாரம்)

            ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன்.

       ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்று பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

           இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார்.

          கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன்  பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

48. 5.தேனுகன்

             இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டு அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான்.

         அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் கோகுலச் சிறுவர்களும், சேர்ந்து அங்கே போனார்கள். தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

48. 6. பிரலம்பன்

         ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். ஓடியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் கீழே போட்டான்.

          சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். பலராமன் விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் ஓங்கி குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான்.

48. 7. சங்கசூடன்

    ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

48. 8. பலராமரும்-ரேவதியும்

           பலராமர் ககுத்மி என்ற அரசனின் மகள் இரேவதியை மணந்ததில் ஒரு விசித்திரம் உள்ளது. ககுத்மியும் ரேவதியும் தோன்றியது வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தில். பலராமர் தோன்றியது அதே மன்வந்தரத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 28-வது மகாயுகத்தின் துவாபர யுகத்தில். இடையில் 27 x 43,20,000 மனித ஆண்டுகள் உள்ளன. இந்தப் புராணக்கதை ஸ்ரீமத்பாகவதத்தில் 9-வது ஸ்கந்தம் மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

    வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தின் முதல் யுகமான கிருதயுகத்தில் இச்சம்பவம் நடந்தது. அரசன் ககுத்மி வைவஸ்வத மனுவின் பேரனுடைய பேரன். ககுத்மி தன் பெண் ரேவதிக்கு மணம் முடிப்பதில் ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டார். பூவுலகத்தில் உள்ள யார் சொல்லையும் கேட்பதில்லை என்று தீர்மானித்தார். எல்லோரையும் படைத்து எல்லாமறிந்த பிரம்மனையே கேட்டுத் தெளிவடைவது என்று பிரம்ம லோகத்திற்கே சென்றார். போகும்போது தன் பெண் ரேவதியையும் அழைத்துச் சென்றார். கிருதயுகத்தில் மேலுலகத்திற்கும் பூவுலகிற்கும் அரசர்கள் இப்படிப் போய்வருவது சாத்தியமாம்.

பிரம்மலோகத்தில்

            பிரம்மலோகத்துக்குச் சென்றவர் அங்கு ஓர் இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிரம்மன் ஒரு சங்கீதக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். அது முடிந்தவுடன் ககுத்மி பிரம்மாவை சந்தித்து ‘என் மகளுக்குச் சரியான மணவாளன் யார்?’ என்ற தன் கேள்வியைக் கேட்டதும் பிரம்மா ‘நீர் இங்கு வந்து காத்திருந்த 20 நிமிடங்களில் பூவுலகில் உமக்குத் தெரிந்த யாவரும் அவர்களுடைய சந்ததிகளும் காலமாகி விட்டனர். உங்கள் மனதிலுள்ள யாரும் இப்பொழுது அங்கில்லை. நீர் இங்கு வந்தபிறகு அங்கு 27 மகாயுகங்கள் ஆகி முடிந்துவிட்டன. இப்பொழுதுள்ள மகாயுகத்தில் இறைவன் கண்ணன், பலதேவன் என்ற இரு சகோதரர்களாக அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கின்றான். நீர் திரும்பிப் போய் உங்கள் பெண்ணை பலதேவனுக்கு மணமுடியுங்கள்’ என்றார். ககுத்மியும் அப்படியே செய்தார்.

48. 9. மகாபாரதத்தில் பலராமன்

        பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா.

        வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான்.

    திருமணம் பேச தன் மாமா சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்று பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான்.

48. 10. வத்ஸலா-அபிமன்யூ திருமணம்

        முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

       அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான்.

            சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான்.

            முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான்.  செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர்.

        பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

      வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார்.

   வாசுதேவன் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

         தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார்.

            வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார். அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான்.

48. 11. சாம்பன்லட்சுமளை திருமணம்

           துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன்.

       துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் அவனுடன் யுத்தம் செய்தனர். சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப்படுத்தினார்கள்.

          இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான்.

      அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். பலராமன் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் என்று தன் கலப்பையால்  அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் காண செய்தான். துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

48. 12. பலராமன் தீர்த்த யாத்திரை

          கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே விரோதம் முற்றியது. இரு சாராரும் உறவினர்களே. ஆக அவர்கள் தம்மைப் போருக்கு உதவ கேட்கும் போது தாம் யாருக்கு உதவுவது என்ற தர்மசங்கடமாக சூழ்நிலையை எண்ணிப் பலராமன் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான்.

     பலராமன் நைமிசாரண்யத்திற்கு வந்தான். அனைவரும் பலராமனைக் கண்டதும் எழுந்து நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டதும் பலராமனுக்குக் கோபம் வந்து விட்டது. பதினெட்டுப் புராணங்களையும் மற்றவர்களுக்குத் தாம் தானே உபதேசம் செய்தோம் என்ற கர்வத்தால் இப்படி எழுந்திராது இருந்தார் என்பதைப் பலராமன் உணர்ந்தான். கையில் ஒரு தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் சென்றது.

         தாங்கள் அவர் பிழை பொறுத்து அவரை உயிர் பெற்று எழச் செய்ய வேண்டும் என மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் பலராமன்.

          தீர்த்த யாத்திரை முடித்து குருஷேத்திர யுத்தம் முடிவடையும் நேரம் அங்கே பலராமன் வந்தான். பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனன் தொடையில் பீமன் கதையால் ஒங்கி அறைந்தான். உடனே பலராமன் பீமா! கதை கொண்டு பகைவனை அவனது தொடையில் தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி பீமனைத் தாக்க பலராமன் கலப்பையைக் கையில் எடுத்தான்.

      கண்ணன், அண்ணா! நீங்கள் தீர்த்த யாத்திரை போகும் முன்பு இங்கு நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க முடியாது. துரியோதனன் ஆரம்பம் முதல் இன்று வரை தர்மத்திற்கு விரோதமாகவே நடந்து கொண்டு இருக்கிறான். திரௌபதையை அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து அவள் சேலையை அவிழ்த்து அவமானப்படுத்தினான்.

           நீங்கள் மட்டும் அந்த சபையில் அன்று இருந்திருந்தால் அப்போதே அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். அன்றைய தினம் தொடையிலே கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் அவனை அதே தொடையில் அடித்து அது முறிய அவனை பீமன் மாளச் செய்வான் என்று திரௌபதை சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! என்றான் கண்ணன். பலராமனும் சாந்தம் ஆனான்.

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் – என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு.

     என்றாற் போல பெருமாளுக்கு பாற்கடலிலே படுக்கையாகவும், நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நின்றால் பாதுகையாகவும், விளங்கும் அனந்தாழ்வார்,

திரேதா யுகத்திலே இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்தி’லே அவரே பலராமராக அவதரித்தார்.

     இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஸ்ரீபெரும்புதூரில் 1017 ல் இராமனுஜராக அவதரித்தார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED ARTICLES:-

Pl Also, Click & Look for each தசாவதாரம் at HRE Links for தசாவதாரம் given below

     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-47: ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)

Tags

, , , , , , , , , , , , , , ,

47.1. அநுமன், அஞ்சனை மைந்தன், கேசரி-நந்தனன், வாயுபுத்திரன், சுந்தரன், மாருதி, வானரவீரன், ராமதூதன், சொல்லின் செல்வன்

புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்

    அநுமனைத் தியானிப்பவர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். சொல்லின் செல்வன் ஆன அநுமன் நம்மையும் சொல்லின் செல்வர்களாக மாற்றுவான்.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

36.1.

நலமே நல்கும் நாயகன்,ஹநுமான் காரிய சித்தி மந்திரம்:

    ஸ்ரீ ராம தூத மஹா தீர
    ருத்ர வீர்ய சமத்பவ
    அஞ்சனா கற்ப சம்பூத
    வாயு புத்ரா நமஸ்துதே
    ஸ்ரீ நாமகிரி லக்ஷ்மி ஸகாயம்
    ஸ்ரீ நரசிம்ம பரப்பரம்மணே நம
    ஸ்ரீ ஆஞ்சநேய மகாகுருவே நம

ஸ்ரீ ஹநுமான் காயத்ரி

ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்

 ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் தத்புருஷாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!

 ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: ஹநுமத் ப்ரசோதயாத்!

 ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

     மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சன்னிதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனி கோவில்களும் உள்ளன. எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைபோல் ஆஞ்சநேயருக்கும் அதிக ஆலயங்கள் உள்ளன.

   அனுமன் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமருக்கு சேவை செய்தார். எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் இணைந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

47.2.புஞ்சிதஸ்கலை

    வருணனின் பெண்ணான புஞ்சிதஸ்கலை என்பவளைக் கண்ட ராவணன் அவள் அழகில் மயங்கி வலுக்கட்டாயமாய் அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்கிறான். ராவணனால் வஞ்சிக்கப் பட்ட புஞ்சிதஸ்கலை ராவணனைப் பழி வாங்க ஈசனை நினைத்து தவம் இருக்க அரம்பித்தாள். வரம்பு மீறிய ராவணனின் காமத்தையும் சுட்டுப் பொசுக்க ஈசனாலேயே முடியும் என மனதார நம்பினாள்.

    அவள் இந்தப் பிறவியை விட்டொழிக்க எண்ணியதால் ஈசனும் அவளுக்கு அவ்விதமே வருணனின் மகள் என்ற பிறவியை விட்டு வேறொரு பெண்ணின் வயிற்றில் பிறக்க வைப்பதாகவும், ஆனால் அந்தப் பிறவியில் தாமே அவளுக்கு மகனாய்ப் பிறந்து ராவணனின் காமத்தை மட்டுமல்லாமல் அவன் அழிவுக்கும் காரணகர்த்தாவாய் அமையப் போவதாயும் உறுதி அளித்தார்.

47.3.அகலிகை-அஞ்சனை

    புஞ்சிதஸ்கலை மறுபிறவியில் அகலிகைக்கு அஞ்சனை என்னும் பெண்ணாக அழகற்ற வானரப் பெண்ணாய்ப் பிறக்கிறாள்.

    இவ்விதம் அவள் பிறப்பதற்கு காரணம் அவள் தாய் அகலிகை, இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு அதன் காரணமாய் ஒரு தூசி மாத்திரம் ஒதுங்கி இருந்தவள். பின்னர் ஸ்ரீராமனால் மறு வாழ்வு கிடைக்கப் பெற்றவள். அந்த அகலிகை தன் அழகில் தானே மயங்கி இருந்ததால் தனக்கு நேர்ந்த இழிவை நினைத்து எண்ணி வருந்தி, தனக்குப் பெண் பிறந்தால் அழகே இல்லாத பெண்ணாகப் பிறக்கவேண்டும், என்றும், அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான காமம் என்பது இருக்கக் கூடாது எனவும் பிரார்த்தித்துக் கொண்டாள். ஆகவே புஞ்சிதஸ்கலையின் தவத்தின் வேண்டுகோளும், இப்படியே அமையவே அகலிகைக்குப் பெண்ணாய்ப் பிறந்தாள் அஞ்சனை.

47.4.கேசரி

    அஞ்சனை வளர்ந்து வாநர வீரன் கேசரியை மணந்தாள். இந்தக் கேசரி வனத்தில் வசிக்கும் முனிவர்கள் தவத்திற்கு இடையூறு செய்து வந்த மதயானைகளைக் கொன்றதால் கேசரி என்னும் பெயர் கிடைத்தது. இருவரும் மணவாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். என்றாலும் இடையே தங்கள் பெயர் சொல்ல ஒரு புத்திரன் பிறக்கவில்லை என்ற எண்ணமும் தோன்றியது.

    உடல்ரீதியான சம்பந்தமே இல்லாமல் இருவருமே தவமியற்ற ஆரம்பித்தனர். அப்போது ஈசனுக்குத் தான் அவதாரம் செய்யவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது எனத் தோன்றியது.

47.5.வாயுதேவன்

    சிவசக்தி சொரூபமான உணர்வு நிலை ஒன்று திரண்டு பேராற்றல் மிக்கதொரு சக்தியாக மாறி வாயுவிடம் கலந்தது. தவம் புரியும் அஞ்சனையை அந்த வாயு நெருங்கவே, அந்தச் சக்தியானது அவள் மூச்சுக் காற்றின் மூலம் உள் புகுந்தது.

    ஈசன் வரம் கொடுத்துவிட்டு ராவணனை அவரால் அந்த வரங்களுக்கு மாறாய் அழிக்க முடியாது. ஆனால் வரங்களைத் தவறாய்ப் பயன்படுத்திய ராவணனோ திருந்தவே இல்லை.

     மேலும் விஷ்ணுவிற்கு பிருகு முனிவரின் சாபமும் இருக்கிறது. பூமியில் மானிடனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து துக்கம் அநுபவிக்கவேண்டுமென. அதையும் நிறைவேற்ற வேண்டும்.

     கையிலை மலையைப் பெயர்க்கச் சென்ற ராவணன் நந்தியைப் பார்த்துக் குரங்கு எனப் பழிக்க, அவரும் குரங்காலேயே உன் வம்சம் அழியும் எனவும் கூறி உள்ளார். அதுவும் நடந்தாகவேண்டும். இத்தனை காரண, காரியங்களை உள்ளடக்கியே அநுமன் விஜயம் ஆரம்பம் ஆனது.

     அஞ்சனாதேவிக்கு வாயுவின் உதவியால் சிவாம்சமாய் ஆஞ்சநேயர் பிறந்தார். அஞ்சனை பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்த ஆஞ்சநேயர் உருவம் பெரியதாக இருந்ததால் பிரசம் நடக்கக் கஷ்டப் பட்டது.

   அஞ்சனைக்கு வரமளித்த ஈசனையும், அந்த வரத்தை நிறைவேற்றிய வாயுவையும் இருவருமே துதித்தனர். வாயு பகவான் மும்மூர்த்திகளையும் அண்டிப் பிரார்த்திக்க, விஸ்வகர்மா பிரசவவலியோடு துடித்துக் கொண்டிருந்த அஞ்சனையின் வயிற்றில் இருந்த குழந்தையிடம் தாய்க்குச் சிரமம் கொடுக்காமல் வெளியே வரும்படியும், பராக்கிரமசாலியாக விளங்கப் போகும் அந்தக் குழந்தை பிறக்கச் சரியான தருணம் வந்துவிட்டதாகவும், தானே வெளியே வரும்படியும் சொன்னாராம்.

     அந்தக் குழந்தையோ விஸ்வகர்மாவைப் பார்த்து, தன் பருமனான உடல்காரணமாய் வெளியே வரமுடியவில்லை என்றும், உடல் சிறிதாக ஆக அருளவேண்டும் எனவும், மேலும் தனக்குத் தேவையான பொற்கோவணம், பொன் பூணூல், பொற்குண்டலங்களைக் கொடுத்து அருளவேண்டும் எனவும் கேட்க அவ்விதமே விஸ்வகர்மா கொடுத்ததாக புராணக் கதை சொல்கிறது.

         இந்த அஞ்சனா தேவி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை ஹரித்வாரில் சண்டி கோயிலுக்கு எதிரே இருக்கும் அஞ்சனை மலையில் காணமுடியும்.

    அழகான சுதைச் சிற்பங்கள். அஞ்சனை மடியில் பால ஆஞ்சநேயன். அவரை அணைத்த வண்ணம் தன் இன்னமுதை ஊட்டும் அஞ்சனை. காணக் கிடைக்காத காட்சி.

 36.5

    அனுமன் ஜாதகத்தை வைத்து பூஜிப்பதால் வளங்களும், நலங்களும் வந்து சேரும்.

         மேலும் தமிழ்நாட்டில் ஹநுமத் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் அனுசரிக்கப் படுகிறது. வடக்கே உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து மற்ற வட மாநிலங்களில் எல்லாம் சித்திரை மாதம் பெளர்ணமி அன்றே ஹநுமத் ஜெயந்தி அநுசரிக்கப் படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வைசாக பெளர்ணமிக்கு மறுநாள் அநுமத் ஜெயந்தி அனுசரிக்கப் படுகிறது.

       ஆஞ்சநேயர் சூரியனின் சீடர். சூரியனைச் சுற்றி வந்து அவரின் வேகத்துக்கு ஏற்ப அவருடன் சென்று பாடங்களைக் கற்று நவவியாகரணபண்டிதன் என்னும் பட்டத்தைப் பெற்றவர். சூரியனையே மிஞ்சும் அளவுக்கு ஞானம் அடைந்தவர்.

       ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். என்றாலும் அவன் கையிலை மலையையே அசைத்துப் பார்த்துச் சிவனாரால் கை நசுக்கப் பட்டு தண்டனை பெற்றான். கையிலையில் நுழையும் முன்னர் நந்தியெம்பருமானின் அநுமதி வாங்காமல் அவரைக் கேலி பேசப் போக அவரால், வாநரர்களாலே உனக்கு அழிவு என்னும் சாபத்தைப் பெற்றவன்.

          வேதவதியை பலாத்காரம் செய்ய முயன்ற ராவணனை அவளும் சபிக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடை அண்ணனான குபேரனின் மருமகளும் தனக்குப் பெண் போன்றவளும் ஆன நளகூபரனின் மனைவி ரம்பாவை அவள் சம்மதமில்லாமல் அநுபவிக்க அவளாலும் சாபம் பெற்றவன். இத்தனை கொடுமைகள் செய்தாலும் சிவபக்தனாகத் திருநீறு அணிந்து ஈசனைத் தொழுது கொண்டிருந்தான். ஆகவே அவனை அழிப்பதென்றாலும் ஈசனின் இசைவு முக்கியமே. அதற்கு அவரே வந்தால் தான் உண்டு. ஆனால் மஹாவிஷ்ணு அவதாரங்கள் எடுப்பது போல் ஈசனோ அவதாரங்களை எடுப்பதில்லை. தன் அம்சத்தை மட்டுமே மஹாவிஷ்ணுவிற்குத் துணையாக அனுப்பி வைக்கிறார். அந்த ருத்ராம்சமே ஆஞ்சநேயர்.

47.6.நைஷ்டிக பிரம்மசாரி

        இதற்காகவே தேவர்களெல்லாம் ஈசனிடம் வேண்ட, முக்கியமாய் வாயுதேவன் ஈசன் காலடியில் விழ  அவன் புத்திரனாகவும் தோன்ற வேண்டி எடுத்த திரு அவதாரம் ஆஞ்சநேயர் அவதாரம். மேலும் ராவண சம்ஹாரத்திற்காகவே ஈசன் இந்த ருத்ராம்சத்தில் நைஷ்டிக பிரம்மசாரியாகவும் தோன்றினார். ஏனெனில் நடக்கவேண்டியது ஸ்ரீராம காரியம். ராமருக்கு சகல உதவிகளையும் செய்யும் பொருட்டுத் தோன்றவேண்டும். ராமநாமமே ஸ்மரணையாக இருக்கவேண்டும். விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் ராம சப்தமே இருக்கவேண்டும். ஆகவே தான் மட்டும் வந்து பிறக்கிறார் ஈசன்.

        அவர் ஆற்றல் அளப்பரியதாக இருக்கும் எனவும் எப்போதுமே தர்மத்தின் வழியிலேயே செல்வான் என்றும் முனிவர்களும், ரிஷிகளும் ஆசி கூறினார்கள். மேரு மலைச் சாரலிலே ஒரு ஸ்வர்ணத்தைப் போன்ற நிறத்திலே பிறந்த இந்தக் குழந்தையை “ஸ்வர்ண மேரு” என்ற பெயரிலே அழைக்கலாம் எனினும் அக்கால வழக்கப்படி அஞ்சனையின் புத்திரனை ஆஞ்சநேயன் என்றே அழைத்தனர். சிறு வயதிலேயே அழும் குழந்தை “ராம” நாமத்தைக் கேட்டால் அழுகையை நிறுத்திவிடுவான் என்றும், ராம நாமத்தைச் சொல்லுபவர்களைக் கை கூப்பி வணங்குவான் என்றும் சொல்கின்றனர்.

சூரிய கிரகணம்

         மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து வானில் பாய்ந்தார். ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்.

       ராகு, இந்திரனிடம் சென்று முறையிட  இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தான். அடியுண்ட அனுமன் தாடை உடைபட்டு விழுந்தார்.

       தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். தேவர்களும் அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட, பிரம்மா தனது கரத்தால் தடவிக் கொடுக்க, அனுமன் மீண்டு எழுந்தார்.

     பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.

          இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

      வருணன்-காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

       விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்று அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

       தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே, அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்கவும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று அவருக்கு தெரியும் என்று நியமித்தனர்.

ஆஞ்சநேயரின் ராம-கைங்கர்யம்

47.7. சுந்தரகாண்டம்:

       அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத சுந்தர காண்டம்; {24,000 சுலோகங்களைக் கொண்ட வால்மீகி (ரத்னாகரன்) ராமாயணத்தில் (ஏழு காண்டங்களில்); 5-வது காண்டமாக 68 அத்தியாயங்கள் 2885 சுலோகங்களைக் கொண்டது.

   இராமாயணம்=இராமன்அயனம்; அயனம்=பயணம். இராமாயணம்= இராமனின் பயணம்.

 அஞ்சைத் தாண்டிய அஞ்சலை மைந்தன் ஆஞ்சநேயன்

பஞ்ச (ஐந்து) பூதங்கள்=நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம்

 அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்”
…………..கம்பர்

     அஞ்சிலே (ஐந்திலே) ஒன்று என்ற சொல்தொடர் ஐந்து முறை வருகின்றது. ஐந்துநிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள்

ஐந்து(பஞ்ச)பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,…….

 36.7-1

 ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,…..

36.7-2

 ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாக, ஸ்ரீராமனுக்காக,

36.7-3

 ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,……

36.7-4

        ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை அயல் தேசமான இலங்கையில் வைத்தான்,

36.7-5

       அஞ்சிலே ஒன்று (*வாயு) பெற்றான்அஞ்சிலே ஒன்றைத்(*நீர்) தாவி அஞ்சிலே ஒன்றாறாக(*ஆகாயம்) ஆரியர்க்காக(*இராமனுக்காக) ஏகி அஞ்சிலே ஒன்று (*நிலம்) பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்(*இலங்கையில்) அஞ்சிலே ஒன்று(*நெருப்பை) வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான்

அத்தகைய அனுமன், நமக்கு வேண்டியன எல்லாம் அளித்து காப்பான்- ராம்ராம்

பஞ்சபூத தத்துவம்

 • சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர்
 • சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர்.
 • பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர்
 • வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம்
  செய்ததால் நெருப்பை வென்றவர்
 • வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர்.
 • இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்.

 36.7-6

 47.8.ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய்

      நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம்.

    அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.வெண்ணெய் சாத்துதல்:

    ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான்.
36.7-7
அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.

       ராகுவிற்குரிய உளுந்து, சனிக்குரிய எண்ணெயில் செய்த வடையை மாலையாக சாற்றுவதால் கிரக தோஷ தடை விலகுவதாக ஐதீகம்.

47.9.பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர்-மயில் ராவணன்

        ராவணன் ‘மயில் ராவணன்’ என்ற மற்றொரு அசுரனது துணையை நாடினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.

      இந்த யாகம் நடந்தால் ராமலட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.

36.9

         இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ விளங்குகிறார்.

         பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு, நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத் துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை

47.10.நாமக்கல் ஆஞ்சநேயர்

    ஶ்ரீஹரியை நம்பியவர்கள் கைவிடக்கூடாது என்னும் தின்னமான வலுவான காரணத்தால் எடுக்கப்பட்ட ரூபம் இந்த ஶ்ரீநரஸிம்மர் என்னும் உக்ர ரூபம். மற்ற அவதாரங்கள் யோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்ட அவதாரங்கள், ஆனால் நரஸிம்ஹாவதாரம் ஒரு நொடியில் எடுக்கப்பட்டது. ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு கூட தெரிவிக்கும் முன் எடுக்கப்பட்ட அவதாரம்.

36.10

     பக்த பிரஹல்லாதனின் பக்தியை பற்றி நமது “சோளிங்கர்” யோக ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் தலப்புராணத்தில் பார்க்கவும்.

ஶ்ரீலக்ஷ்மி தேவியின் தவம்

      ஶ்ரீநரஸிம்மரின் உக்ரத்தை கண்டோர் நடுங்கினர். அவரை சாந்தபடுத்த எல்லோரும் குழந்தை பிரஹல்லாதனை வேண்டினர். அவனும் ஶ்ரீஹரியிடம் உலக நலனுக்காக சாந்தமடைய பிராத்தனை செய்தான்.

      அதே சமயம் ஶ்ரீஹரியின் இந்த ரூபத்தை பார்த்த தேவர்கள் ஶ்ரீஹரியை சாந்தபடுத்த ஶ்ரீமஹாலக்ஷ்மியிடம் சென்று வேண்டினர்கள். ஶ்ரீமஹாலக்ஷ்மி ஹரியின் உக்ரத்தை தணிக்க பூமிக்கு வந்தார். ஆனால் அவன் வரும் முன்னேயே குழந்தை பிரஹல்லாதனின் பிரார்த்தனைக்கு இசைந்து தனது உக்ரத்தை தணித்துக்கொண்டு விட்டார்.

    ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஹரியின் இக்கோலம் ஏமாற்றத்தை கொடுத்தது. அக்காட்சியை காண வேண்டும் என்பதால் அருகிலிருந்த தாமரைதடாகத்தில் இறங்கி தவமிருக்க ஆரம்பித்தாள். அப்படி தாயார் தவமிருந்த ’கமலாலயம்’ என்று அழைக்கப்படும் தாமரைகுளம் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது.

ஶ்ரீஆஞ்சநேயரும் சாலிகிராமமும்

    பிரஹல்லாதன் எப்படி ஶ்ரீஹரியிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தானோ அதே போல் ஶ்ரீஹரியின் அவதாரமான ஶ்ரீராமரிடம் அசைக்க முடியாத பக்தி வைத்திருந்தவர் ஶ்ரீஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் நீராடும் போது அவரிடம் ஒரு சாளிக்கிராம் கிடைத்தது. அதை அவர் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டார்.

    விஷ்ணுவின் ஏதாவது ஒரு ரூபமாக சாலிக்கிராம் இருக்கும். இது நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் மிக அபூர்வமான கல். சங்கும் சக்ரமும் இயற்கையாகவே இருக்கும் சாலிக்கிராமத்தை பூஜிப்பார்கள். இதனை பூமியில் வைக்க மாட்டார்கள்.

       மாலை சந்தியாகாலம் வந்தஉடன் ஆஞ்சநேயர் தனது நித்யகர்மவான சந்தியா வந்தனத்திற்கு ஆறு, குளம் தேடினார். நாமக்கல் கமலாலயம் கண்ணில் பட்டதும், இறங்கி அங்கு இருந்த தேவியிடம் சாலிக்கிராமத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டி ஸந்தியா வந்தனம் செய்யத் தொடங்கினார். முடிந்த உடன் தேவியிடம் சாலிகிராமம் பெறுவதற்கு சென்றார். தியானத்திலிருந்த தேவி தன்னிடம் உள்ளது சாலிகிராமம் என்பதை உணரும் முன் அதனை பூமியில் வைத்து ஆஞ்சநேயரை எடுத்துக்கொள்ள செய்கையால் காண்பித்தார்.

நாமக்கல்

    சாலிகிராம் பெரிதாக வளர ஆரம்பித்தது. ஆஞ்சநேயர் தனது வாலால் சாலிகிராமத்தை கட்டி எடுக்கப் பார்த்தார். வெடித்து சிதறிய சாலிகிராமத்திலிருந்து உக்ர ரூபத்தில் நரசிம்மர் வெளிப்பட்டார். அதை கண்டு ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி அச்சத்துடன் கூடிய ஆனந்தத்தில் ஆழ்ந்தாள். ஆஞ்சநேயர் வைத்த கண்னெடுக்காமல் தரிசித்தார். பகவான் “ஆஞ்சநேயா! நீ கொணற்ந்த சாலிகிராம் உக்ர நரசிம்மருக்கு உரியது. அதை இங்கு நீ எடுத்து வந்ததால் என்னை உக்ர ரூபத்தில் தர்சித்ததால் ஶ்ரீதேவியின் தவம் பூர்த்தியடைந்தது. சாலிகிராம் மலையாக மாறியதால் இவ்விடம் ’நாமகிரி’ நாமக்கல் என்று நிலைக்கட்டும்” என்றார்.

நாமக்கல் கோயில்

       நாமக்கல் உச்சியில் உள்ள குடைவறை கோயிலில் ஶ்ரீநரசிம்மரை தர்சிக்கலாம். ஶ்ரீநரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது வலது திருபாதம் பூமியில் அழுந்தியும் இடது கால் வலது தொடையின் மேல் அமர்ந்துள்ளது. அவரது திருகரங்களின் ’வஜ்ரநகம்’ பார்க்கவே அச்சத்தை கொடுக்கிறது. ஹிரண்யனை ஸம்ஹாரம் செய்த நகங்கள் என்பதால் அச்சம் தவிர்த்து பக்தி மேலிடுகிறது. ஶ்ரீஜன்கன் அவரின் இடது புறமும் ஶ்ரீசனாதன் அவரின் வலது புறமும் இருந்து லோக க்ஷேமத்தை விவரிக்கிறார்கள். இடதுபுறம் உள்ள சிவனும் வலதுபுறம் உள்ள ப்ரம்மாவும் உக்ரத்தை தணிக்கச் சொல்லும் பாவனையில் உள்ளார்கள். ஆக இங்கு வரும் பக்தர்களுக்கு திரிமூர்த்திகளையும் தர்சிக்கும் ஆனந்தம் கிடைக்கும். உக்ரமூர்த்தி போல் தெரிந்தாலும், ஶ்ரீலக்ஷ்மியின் தவத்தை பூர்த்தி செய்து ஶ்ரீலக்ஷ்மியும் இங்கு இருப்பதால் இவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆவார்.

          இத்க்ஷேத்திரத்தில் ஶ்ரீலக்ஷ்மி தேவி நாமகிரி தாயார் என்று பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

நாமக்கல்-ஆஞ்சநேயர்

    குடவறை கோயிலை நோக்கியவாரு ஶ்ரீஆஞ்சநேயர் இருக்கிறார். கூறை வெய்யா கோயிலில் கூப்பிய கரங்களுடன் ஶ்ரீநரசிம்மரை வணங்குவதாக உள்ளார்.

   ஶ்ரீஆஞ்சநேயரின் கண்களுக்கு நேர் எதிரே தெரிவது பகவான் ஶ்ரீநரசிம்மருடைய திருபாதங்களே. இதை இன்றும் கருடர் சன்னதியிலிருந்து பக்தர்கள் காண்கிறார்கள். சுமார் 18 அடி நெடிந்து வளர்திருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரின் மூர்த்தம் கண்கொள்ளா காட்சி. அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் மிக அற்புதம். ஶ்ரீநரசிம்மரை பார்க்கும் நேர்த்தியான கண்களும், அவரின் திருபாதங்களும் என்றும் நம் கண்முன் நிற்கும்.

   ஶ்ரீஆஞ்சநேயரின் திருபாதங்கள் படிமம் கமலாலயம் குளக்கரையில் படிதுறையில் உள்ளது.

 47.11. ஸ்ரீபேடி ஆஞ்சநேயர்-திருப்பதி: 

   திருப்பதி சன்னதி வீதியில் ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. பெருமாள் கோயிலின் எதிரே கருடன் அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அவ்வகையில் வெங்கடாசலபதி கோயிலின் எதிரே இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

     “பேடி’ என்றால் “விலங்கு‘ என பொருள். அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக சொல்வதுண்டு. வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள்.

     ஆனால் விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன்பின்னும் அவர் எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க வேண்டும் என கட்டளையிட்டாள்.

     இந்த விலங்கை நம்மால் காண இயலாது. ஏனெனில் அஞ்சனாதேவி விண்வெளியையே கயிறாக திரித்து அவரது கைகளில் கட்டி வைத்தாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர் என்பதால் இவரை “பேடி ஆஞ்சநேயர்’ என்கிறார்கள். இதுதவிர வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.

       வாயு பூதர் என அன்போடு அழைக்கப்படுவர் ஸ்ரீமன் ஆஞ்சநேயர் ஆவார். பெருமாள் திரு அவதாரம் எடுக்கும் போதெல்லாம் வாயு பூதர் கண்டிப்பாக அவதரிக்கின்றார். திரே தாயுகத்தில் அனுமனாகவும், சூவாபரயுகத்தில் பீமனாகவும் கலியுகத்தில் மத்வாச்சாரியராகவும் உலகில் அவதரித்து பெருமாள் கைங்கர்யம் செய்வதுடன் மக்களையும் காத்தருள் புரிகின்றார் என்பது உலகம் அறிந்ததே.

    கடவுள் தான் எல்லாருக்கும் நன்மை செய்வார். ஆஞ்சநேயரோ, கடவுளுக்கே உயிர் கொடுத்தவர். சீதையைப் பிரிந்த ராமபிரான், உயிரையே விட்டு விட இருந்த சூழ்நிலையில், “கண்டேன் கற்புடைய சீதையை’ என்ற வார்த்தையால் மூச்சு கொடுத்தார்.

      எங்கோ இருக்கிற அயோத்தியில் இருந்து வந்த ராமன் என்ற முகம் தெரியாத ஒருவருக்கு, அனுமன் சேவை செய்தார். அவரது மனைவியைக் கண்டுபிடித்து தரும் பணியில் அரும்பணி செய்தார்.

    இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

   வனவாசம் முடித்து ராமர் அயோத்திக்கு வந்தவுடன் அனுமன் நேராக கைகேயியைப்பார்க்கச் சென்றார். கைகேயி ராமனைக் காட்டுக்கு அனுப்பியதால் தான் தன்னால், ராம கைங்கர்யம் செய்ய முடிந்தது என்று கூறி அவளை நமஸ்கரித்தார் ஆஞ்சநேயர்.

     எத்தனை வீரதீரனாக ராம கார்யங்களை சாதித்தாலும் அத்தனை பிரபுவின் ஸந்நிதியில் பய பக்தியோடு கைகட்டி வாய் புதைத்து விநயத்தோடு ஸேவை செய்வதைத்தான் நாம் கண்ணார ஸேவிக்கிறோம். ஹநுமான் சரீரத்தினாலும் மனஸ்ஸினாலும் கபடமில்லாமல் ஸேவையே லட்சியமாக கைங்கர்யத்தில் ஈடுபட்டார். அப்பேற்பட்ட கொஞ்சம் கூட சுயநலமில்லாத ஹனுமானின் ஸேவைக்கு ஈடாக ஸன்மானம் செய்ய முடியாமல் ராமன் தவித்தார்.

    பரதனுக்கு தனக்கே சொந்தமான அயோத்யா ராஜ்யம்-சுக்ரீவனுக்கு வானர ராஜ்யம்-விபீஷணனுக்கு லங்கா ராஜ்ய மெல்லாம் வாரி வழங்கின பிரபுவுக்கு ஹநுமானின் ஸேவைக்கு ஈடான ஸன்மானம் உலகத்திலே ஒன்றுமே கிடையாது என்று தோன்றியது.

     தன்னையே ஹநுமானுககு அர்ப்பணம் செய்து அவரை மார்போடு அணைத்து ஆலிங்கனம் செய்து கொண்டார்.

47.12.‘’-ராமாயணம் (அநுமன் மகிழ, பலவிதமாக ராமாயணம் )

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்!

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு அனுப்பினாள்!

அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்!

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

 அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!

47.13.லவ-குசலர் பாடிய இராமாயணம் (அநுமன் மகிழ, பலவிதமாக ராமாயணம் )

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே ®
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

36.12-1

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே ®

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே ®
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே ®
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின் ®
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

36.12-2

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன ®
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

36.12-3
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு ®
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே ®

36.12-4
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்

சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே ®
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு ®
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

36.12-5

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன் ®
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் ®

36.12-6

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை ®
ராமபிரான் மீது மையல் கொண்டாள் ®
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

36.12-7

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான் ®
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

36.12-8
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான் ®
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

36.12-9

    எவன் ஒருவன் தனக்கு இந்த காரியத்தினால் என்ன கிடைக்கும்? என்பதை நினைக்காமல் ‘‘தேவைப்பட்டவருக்கு சகாயம் செய்கின்ற ஸந்தர்ப்பம் கிடைக்கின்றதே, அதுவே பாக்கியம்’’ என்று நினைக்கிறானோ அவனுக்கு பரமாத்மா தன்னையே கொடுத்துவிடுகிறார்.

      ராம கைங்கர்யத்தில் மகிழ்ந்த அனுமான் ராம நாமத்திலும் ராம காவியத்திலும் மகிழ்பவர்

ஜெய் ஸ்ரீராம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED ARTICLES (HRE)

Pl Also, Click for each தசாவதாரம் at HRE Links given below

 • HRE-42: தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)

          https://drdayalan.wordpress.com/2016/05/03/hre-42

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/