Tags

, , , , , ,

ஓம் நமோ நாராயணாய

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரமாகிய பல்லாண்டு என்னும் மாணிக்கவாசகத்தை ,தனக்கு பிராட்டியுடன் காட்சி தந்த பெருமாள் முன்பு, அருளியவர் பெரியாழ்வார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 1. பெரியாழ்வார் அவதாரம்

    பெரியாழ்வார் குரோதன வருடம்; (700–785AD); ஆனி-9, ஞாயிற்றுக் கிழமை- சுவாதி நட்சத்திரம்; ஏகாதசி திதியில்; கருடன் அம்சமாக; முகுந்தாச்சார்யார்-பதுமையார் தம்பதியர்க்கு மகனாக அவதாரம் செயதார்.

  பெரியாழ்வாரின் இயற்பெயர் ராமஆண்டான் . இவர் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.

   வேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.

 1. வில்லிபுத்தூர்

    `***1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள், சென்னை மாகாணமாக (பிற்காலத்தில் தமிழ்நாடாக) உருப்பெற்றன. தமிழ்நாட்டின் அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் திகழ்கின்றது.

      பாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

     வில்லி, திருமகள்நாதன் அளித்த செல்வத்தைக் கொண்டு, தன் தம்பியை இரட்சித்த, திருமாலுக்கு ஒரு கோயிலை எழுப்பினான். புத்தூரில் உள்ளவர்களை அவ்வூரில் குடியேறச் செய்து, குடியேறியவர்களது ஊராகிய புத்தூர் என்பதோடு தன் பெயராகிய வில்லி என்பதையும் சேர்த்து, வில்லிபுத்தூர் என்று அத்திருப்பதிக்குப் பெயரிட்டுக் பூசை செய்தற்குரிய வழிகளையும் செய்தான்.

    வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர்-பதுமவல்லி என்னும் தம்பதியர் , நல்லறத்தை நடத்தி வந்தகாலத்தே, திருமகள் நாதனின் அருளால் அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே பிற்காலத்தில் போற்றிப் புகழப்படும் பெரியார்வார் ஆவார்.

    பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தர். இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த ஒரு பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி வருவாராயினார்.

 1. கூடல் மதுரை நகரில் வல்லப பாண்டிய அரசன்

   வல்லபதேவ பாண்டியன் கூடல் என்ற மதுரை நகரில் அரசு செலுத்திவந்தான். வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார்.
அந்த வேதியரும்
***மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும்,
***இரவுக்காகப்பகலிலும்.
***கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும்,
***மறுமைக்காக இம்மையிலும்
முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார்.

       மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.

   அந்த அந்தணனின் வாக்கின்படி இந்த உலகத்திலேயே பரலோகத்திற்கு வேண்டிய நற்கதியைப் பெறுவதற்கான விஷயங்களை ஏற்படுத்தித் தருதல் என்பதை அறிந்து தன் புரோகிதனான செல்வநம்பியை பரம்பொருளை நிர்ணயம் செய்வது எவ்வாறு என்று விளவினான்.

   செல்வநம்பி வித்வான்களைக் கூட்டி விவாதம் நடத்தி செல்வம் நிறைந்த பொற்கிழி ஒன்றை சபா மண்டபத்தில் ஒரு தோரணத்தில் கட்டி,, எந்த வித்வானுக்குக் கிழி தாழ்கிறதோ, “பரம்பொருள்” இதுதானென்று அவர் அளிக்கும் விளக்கமே உண்மையானது என்றுகொள்ளவேண்டும் என்று பணித்தான்.

 1. விஷ்ணுசித்தர்-நராயணனே பரம்பொருள் என நிருபணம் செய்தல்

    இதனிடையில், விஷ்ணுசித்தரின் கனவில் எம்பெருமான் தோன்றி, அவரை அந்த மண்டபத்திற்குச் சென்று தன்னைப் பற்றி பேசி, தன் பரத்துவத்தை நிரூபணம் செய்யுமாறு பணித்தான். இதைகேட்ட இவர் மிகவும் அஞ்சி, பெரிய வித்வான்களுக்கு இடையில் ஒன்றும் தெரியாத தான் எப்படி உம்மைப்பற்றி பேசி வெற்றிகொள்வது என்று கேட்க, எம்பெருமான் “நீர் அங்கு செல்லும் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார்.

     பின்னர் தான் கனவில் கொண்ட எம்பெருமானின் ஆணைப்படி பல வித்வான்கள் கூடியிருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது கூடியிருந்தவர்கள் நகைத்துப் பேசினர். சபைக்கு வந்தோரை அவமதித்தல் தருமமன்று என்று கூறி, செல்வநம்பி விஷ்ணுசித்தரை அழைத்து வேதாந்தங்கள் கூறும் பரம்பொருள் யார் என்று நிச்சயிக்க வேண்டினான்.

    விஷ்ணுசித்தர் ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள் என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார்.

***’ஐயா, நாம் மறுபிறவியில் துன்பமின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?’ என்று வினவினார்.

பெரியாழ்வார் ‘ஒருவருக்குப் பிறவி என்பதே துன்பமானது.

இப்பிறவியில் நன்மைகள் செய்தாலும் , தீமைகள் செய்தாலும் அவற்றை அனுபவிக்க நமக்கு பிறவி என்பது வந்து கொண்டேயிருக்கும்.
    எனவே துன்பமின்றி வாழ வேண்டுமானால், நாம் பிறவியின்றி வாழ வழி செய்ய வேண்டும்.

***பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும் பெருமாளின் பொற்பாதத்திலே ஒப்படைத்துவிட வேண்டும்.

அனைவரையும் கண் பார்வையாலேயே மயக்குபவன், மாலவன்-திருமால். அவன் ஒருவனே நம் பாவ, புண்ணியங்களைப் போக்கி, உலகவாழ்வின் மயக்கத்தை நீக்குபவன்என்பதை தெள்ளத்தெளிவாய், வேதங்களில் உவமானம் கொண்டு எடுத்துக் கூறினார், பெரியாழ்வார்.

     உடனே, அந்த பொற்கிழி வளைந்து வந்து அவர் கைகளை எட்டியது. அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்த வியப்புடன் ஆழ்வாரைப் பார்த்தனர்.

 1. விஷ்ணுசித்தர் (பட்டர்பிரான்)

***பெரியாழ்வார் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார். இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தனர். மேலும் அரசன் இவருக்கு “பட்டர்பிரான்” என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.

    தன்னை நிரூபித்து இப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காண, எம்பெருமான் தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான்.

***தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர். இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார்.

***தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று பாடத் தொடங்கினார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோமொடும் நின்னொடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே! 

சிறு கணக்கு………….!!!
பல்லாண்டு(பலஆண்டு)= X ; என வைத்துக்கொண்டால்

பல்லாண்டு(X) பல்லாண்டு(X) பல்லாயிரத்தாண்டு(X1000) பல்கோடி(X100,00,000) நூறாயிரம்(1,00,000) எனலாம்

அதாவது, (X)(X)(X1000)(X100,00,000)(100,000) = X4103107105 = X41015

பல, பல, [பலஆயிரம் (பலகோடிலட்சம்)] ஆண்டுகள், என்றும்

பல, பல, பல, பல (ஆயிரம்கோடிலட்சம்) ஆண்டுகள், என்றும் சொல்லலாம்

 பல, பல, பல, பல, ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்……………!!!
ஆனால், ஆழ்வார் கணக்கு என்னவோ…………???

***வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்’என்ற வாழ்த்தொலிகள் முழங்க, விஷ்ணுசித்தர் வீதிகள்தோறும் உலா வந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.

 1. விஷ்ணுசித்தர் (பட்டர்பிரான்-பெரியாழ்வார்)

    விஷ்ணுசித்தர் பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார். தான் பெற்ற செல்வமனைத்தையும் வடபெரும் கோயிலுடையானுக்கு அளித்து, தன் பழைய தொண்டான திருமாலை கட்டுதலையே நித்தியமாகக் கொண்டார். எம்பெருமானிடம் அன்பைக் கூட்டி பரிவு கொண்டிருந்தார். திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால், ‘பெரியாழ்வார்‘ என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர்.

நான்மாடக்கூடல்-கூடலழகர்(21-2-2015)

    ஒரு முறை தொடர்ந்து மழை பெய்தது. மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தங்களைக் காக்க வேண்டினர். பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாகக் கூடி மக்களைக் காத்தன. இவ்வாறு, மேகங்கள் கூடியதால், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. பெருமாளும் கூடலழகர் ஆனார்.

***பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

    இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார்.

    இராமானுஜரால் பெரிதும் உவந்து புகழப்பெற்ற தலம். பல்லாண்டு பாடப்பெற்றதால் இத்தலத்தை பரமபதத்துக்கு நிகராகக் கருதினார்.

    ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

***பொதுவாகப் பெருமாள் கோவில்களில் நவக்கிரகத்துக்குத் தனியாக சன்னதிகளோ, சிலைகளோ இருக்காது. 108 திருப்பதிகளில் நவக்கிரக சிலைகள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே!

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரியநாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல்நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.

***நான்கு யுகங்களாக இருக்கும் ஆலயம். கிருதயுகத்தில் பிரம்மனின் மைந்தன் திருமாலை சிலைவடிவில் வழிபட விரும்பினான். விஸ்வகர்மாவினால் ஆலயம் எண்கோண விமானத்தோடு அமைக்கப்படுகிறது.  இதே யுகத்தில்தான் சிவன் இத்தலத்தில் உமையவளை மணம்புரிந்தார்.

திரேதாயுகத்தில் பிருது என்ற மன்னன் விமானத்தில் பல தலங்களை வழிபட்டு, இங்கு வரும்போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்கவில்லை! இறங்கி எம்பெருமானைக் காண்டு, அவரது பேரழகில் கவரப்பட்டு இங்கேயே தங்கி முக்தியடைகிறான்.

துவாபரயுகத்தில் அம்பரீசன் என்ற சிறந்த திருமால் பக்தன் இந்தப் பெருமாளை வழிபட்டு முக்தியடைந்தான்.

கலியுகத்தில் வல்லபதேவபாண்டியன் அவையில், திருமாலே பரம்பொருள்; வைணவமே முக்தியளிக்கும் மதம் என்பதைத் பெரியாழ்வார் ஐயமின்றி எடுத்துரைத்ததும் பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது!

 1. மகள்ஆண்டாள்

    ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; ஆடி மாதம், பூரத்தில் (திருவாடிப்பூரத்தில்), அவதரித்தாள். பொரியாழ்வார், ‘கோதை‘ என பெயரிட்டு வளர்த்தார். ‘கோதை’-எனில் நல்ல வாக்கு தருவபவள் என்று பொருள்.
***பெரியாழ்வாரும், கோதைக்குகந்த மணாளன் நம்பேருமானே‘ என எண்ணினார். ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார்.

 அதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார். ‘ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்’ என்ற பெரியாழ்வாரின் பாடலுக்கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.

    ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கி ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள்.

  பெரியாழ்வார், இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயாய் இருந்து, தாரை வார்த்துக் கொடுத்த மாமனும் ஆவார்.

   பெருமாள் அருகில் கருடாழ்வார்:பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.

 1. பெரியாழ்வார் பாசுரங்கள்

     கண்ணனது திருஅவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் நூனூற்று அறுபத்தொன்று பாடினார்.
***திருப்பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு. ஆக விஷ்ணுசித்தர் பாடிய பாசுரங்கள் நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள் ‘பெரியாழ்வார் திருமொழி’என்று வழங்கப்பட்டு, நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் முதற்கண் அமைக்கப்பட்டுள்ளன.
***திருப்பல்லாண்டு=12 பாசுரங்கள்
***பெரியாழ்வார் திருமொழி=461 பாடல்கள் .
சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்டே பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

 1. பெரியாழ்வார் வேறு பெயர்கள்

  1.பட்டர்பிரான், 2. ஸ்ரீ வில்லிபுத்தூர்கோன்,
  3. கிழியறுத்தான், 4. புதுவைக்கோன்.

 2. பெரியாழ்வார் பாடிய தலங்கள்

  1.திருவரங்கம், 2. திருவெள்ளாறை,
  3. திருப்பேர்நகர், 4. கும்பகோணம், 5. திருக்கண்ணபுரம், 6. திருச்சித்திரக்கூடம்,
  7. திருமாலிஞ்சோலை 8. திருக்கோட்டியூர், 9. ஸ்ரீவில்லிபுத்தூர்,
  10. திருக்குறுங்குடி, 11. திருவேங்கடம், 12. திருவயோத்தி, 13. சாளக்கிராமம்,
  14. வதரியாச்சிரமம், 15. திருக்கங்கைக் கரைக்கண்டம், 16. துவாரகை, 17. வடமதுரை, 18. திருவாய்பாடி, 19. திருப்பாற்கடல், 20. பரமபதம்.

 1. பெரியாழ்வார் தனியன்கள்

  ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது

  குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷான்
  நரபதி – பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
  ஸ்வஸுர மமவரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
  த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.

  ***குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்து வேதங்களையும் குறைவின்றி அறிந்து, மக்கள் தலைவனான பாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்த, தேவர்களால் வணங்கப்பெறும் திருவரங்கநாதனுக்கு மாமனாரான, வேதியர் குலத் திலகமான, விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.

  பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை

  மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்
  சொன்னார் கழற்கமலம் சூடினோம் ;- முன்னாள்
  கிழியறுத்தா னென்றுரைத்தோம்; கீழ்மையினில் சேரும்
  வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து,

  ***மனமேநீயும் நானும்ஒளிவீசும் பெரிய மதில்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் என்று ஒரு முறையேனும் சொன்னவர்களின் திருவடிகளைத் தலையின் மேல் சூடினோம்; முன்பொரு நாள் பொறிகிழியை அறுத்தான் என்று அவன் புகழ் உரைத்தோம்; அதனால் கீழ்மையினில் சேரும் வழியை அடைத்துவிட்டோம்.

  பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று, 
  ஈண்டிய சங்க மெடுத்தூத – வேண்டிய
  வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
  பாதங்கள் யாமுடைய பற்று.

  ***வல்லப தேவ பாண்டியன் கொண்டாடும் வகையில் பட்டர்பிரானான பெரியாழ்வார் மதுரைக்கு வந்தார் என்று போற்றி வகை வகையாக பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சங்குகளை பலரும் ஊத, பரம்பொருள் யார் என்று நிறுவும் வகையில் வேண்டிய வேதங்களை எல்லாம் ஓதி பொற்கிழியை அறுத்தவராம் பெரியாழ்வாரின் திருவடிகளே எங்களுக்கான பற்றுதல்.

 2. பெரியாழ்வார் வாழித்திருநாமம்

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.

———————-&&&————————>>>HRE-9:பெரியாழ்வார்

RELATED ARTICLES-ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்யன்பரே,

 • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
 • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு  மிகுந்த நன்றி


Please click below:

To CONTENTS: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements