Tags

, , , , , , ,

Contents

22.1 : பஞ்ச பூத தலங்கள்-5
22.2: ஜோதிர்லிங்க தலங்கள்-12
22.3: முக்தி தர வல்ல சிவலங்கள்-7
22.4: சப்த விடங்க தலங்கள்-7
22.5: அட்ட மூர்த்தங்கள்-8
22.6:  நவ கயிலாய தலங்கள்-9
22.7. தாண்டவ சிவத்தலங்கள்-5
22.8.மன்ற சிவத்தலங்கள்-5
22.9.தேவார பாடல் பெற்ற சிவத்தலங்கள்
-274 (TN,264)

Related LINKs

@@@@@@@@@@@@@@@@@@@@@

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

22.1 : பஞ்ச பூத தலங்கள்-5 (TN=4 ; AP=1)

(A)நிலம்-பிருத்வி தலம்காஞ்சி:

{ஏகாம்பரநாதர் ; ஏகாம்பரேஸ்வரர்) & காமாட்சி (ஏலவார்குழலி)

     காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கம் மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் லிங்கத்தில் உள்ளது.

(A) Ekabreswarar(B)நீர்-அப்புத்தலம்- திருவானைக்கா:

ஜம்புகேசுவரர் & அகிலாண்டேஸ்வரி

        ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

       சிவலிங்கம் கூரையில்லாமல் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.(B) Jabukeswarar         யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.

      தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

(C) அக்னி தலம்-திருவண்ணாமலை:

அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் & அபீதகுஜாம்பாள், உண்ணாமுலையம்பாள்

     அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது).

(C) Anamali
(D)காற்று,
வாயு தலம் – திருக்காளத்தி:

காளகத்தீசுவரர் & ஞானபிரசுனாம்பிகை.(AP)

        இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும். சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும் வழிபட்டு வீடுபேறு அடைந்த தலம். (சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை) ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.

         இம்மூன்றும் அமைந்துள்ளன. மூலலிங்கம் வேறெங்கும் இல்லாத வகையில் உயரமாக உள்ளது. வரிவரியான் கவசம் சார்த்தப் பட்டுள்ளது.சம்பந்தர் பாடல் பெற்ற தலம்

(D) KathiNathar

     காளஸ்த்திரி தலம் சிறந்த ‘ராகு, கேது க்ஷேத்ரம்’ என்று அழைக்கப் படுகிறது.

      ராகு-கேது கிரகங்களுக்கு திட உருவங்கள் இல்லாமல் நிழல் அல்லது சாயா கிரக நிலை உடையனவாக உள்ளன. அப்ரதட்ஷணமாக சுற்றுபவைகள்-வக்ரம் அடைவதில்லை-சூரிய சந்திர கிரகண காரணமானவர்கள்.ராசி சக்ரத்தில் இவைகளுக்கு சொந்த மற்றும் உச்ச-நீச்ச வீடுகள் கிடையாது.

     பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இங்கு இவ்ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி – இவ்வடிம் மிகச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்புக்குச்சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற தலம்.

இறைவன்: காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்
இறைவி – ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும்.

           இது வாயுத்தலம். அதனை விளக்கும் வகையில் மூலவர்க்கு முன் எரியும் விளக்குகளின் ஒன்றின் சுடர் காற்றினால் உந்தப்பட்டு எந்நேரமும் அசைந்து கொண்டே இருக்கும்.

     மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி – சதுர ஆவுடையார்.

     சர்பப் (பாம்பு) தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம் இராகுகால சாந்திகள் செய்தல் முதலியன விசேஷம். இக் கோயிலில் உச்சிக்காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

     தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது.

     சிவயோக நெறியில், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு திருத்தலமுள்ளதை அறிவோம். அதன் படி, திருக்காளத்தி(காளஹஸ்தி) விசுத்தி (தொண்டைப்பகுதியில் இருக்கும் சக்கரம்) தலமாகத் திகழ்கிறது. கைலாசகிரி மலையடிவாரத்தில் உள்ளது இக்கோவில்.

(E)ஆகாயதலம்- சிதம்பரம்:

நடராஜர் & சிவகாமசுந்தரி

      மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்.

       மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

    ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சு விடுகிறார். கோயிலின் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

      மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது

(E) Chid-Natarajar22.2: ஜோதிர்லிங்க தலங்கள்-12 (TN=1 ; AP=1; Guj=2; Maha=4; MP=2; UP=2)

       ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் . இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன.

      திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.

       பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள்.

 (i) சோமநாதம்-குஜராத்-சோமநாதர் & பார்வதி, சந்திரபாகா

i    

   கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு.

(ii) வைத்தியநாதம்-மகாராஷ்டிர:வைத்தியநாதர் & தையல்நாயகி

iiதிருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.

(iii) பீமசங்கரம்-மகாராஷ்டிர: பீமாசங்கரர் & கமலாட்சிபச்சிஷ்டா தேவி

iiiகருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும்.

(iv) நாகேசம்-தாருகாவனம்,ஜாம்நகர், குஜராத்-நாகநாதர் & நாகேஸ்வரி

ivதெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்

(v) த்ரயம்பகம்-மகாராஷ்டிர:திரியம்பகேஸ்வரர் & ஜடேசுவரி

vகருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்தி ஸ்நானம்

(vi) குஸ்மேசம்-மகாராஷ்டிர:குஷ்மேஸ்வரர் (குங்குமணேசுவரர், கிருஷ்ணேஸ்வரர்) & குங்குமணேசுவரி

viஅம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்=குங்குமம்) .

(vii) ஸ்ரீசைலம்-ஆந்திரா: மல்லிகார்ஜுனர், பர்ப்பதநாதர் , ஸ்ரீசைலநாதர், & பிரமராம்பாள்,

    சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.

vii         சிலாதர் மிகவும் வருந்தினார். நந்தி,”தந்தையே!நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.

       நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. பர்வதனும் தவமிருந்தான். சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார்.ஸ்ரீபர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப்பொருள்படும்.

     சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.

      மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார்.

(viii) ஓங்காரம்-மத்தியப் பிரதேசம்:ஓம்காரேஷ்வரர் & அமலேஸ்வரி

viii     மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு

(ix) உஜ்ஜையினி-மத்தியப் பிரதேசம்: மகாகாளேஸ்வரர் & சங்கரி, ஹரசித்திதேவி

ix     கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.

(x) விச்வேசம் (வாரணாசி)-உத்திரப் பிரதேசம்:விஸ்வநாதர் & விசாலாட்சி

x       இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.

(xi) கேதாரம்-உத்திரப் பிரதேசம்:கேதாரீஸ்வரர் & கேதார கவுரி

xiஇமயமலையில் பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.

(xii) இராமேஸ்வரம்தமிழ்நாடு: ராமநாதர்-பர்வத வர்த்தினி

        சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைக்க,ராமர் அந்த மணல் லிங்கத்தை பூசித்தார்.

xii      கங்கை நீரை கொண்டு அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

Pl also click below to refer more about இராமேஸ்வரம்

22.3: முக்தி தர வல்ல சிவலங்கள்:7(TN=6 ; UP=1)

  1. திருவாரூர்பிறக்க முக்தி

    தியாகராஜர்(வன்மீகநாதர்) & கமலாம்பிகை1

  • திருவாரூர் தியாகராஜர் கோவில்-பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம்
  • நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்
  • மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேர்
  • தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை-ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
  • எமபயம் போக்கும் திருத்தலம் .
  • சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்து சென்று பெண் கேட்ட திருத்தலம்.
  • சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது.
  • காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் “மீளா அடிமை“ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
  • நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
  • கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
  • நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
  • பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
  • திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
  • இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 15 தீர்த்த கிணறுகள், என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
  • 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம்.
  • இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன.
  • ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர்.
  • வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியது- இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.
  • தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் தரிசனம் செய்யலாம்.
  • உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.
  • சுந்தரர், அடியார்களின் “திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, பெருமை இப்பதிக்கேயுரியது
  • சுந்தரர் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):
  • சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று பொன் வேண்ட, இறைவன் பன்னீராயிரம் பொன் அருளினார். சுந்தரர், மேலும் பல தலங்களைத் தரிசிக்க எண்ணி இருந்ததால், பொன் கட்டிகளை திருவாரூரில் தான் பெறுமாறுச் செய்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் அசரீரியாய் ‘இவற்றை மணிமுத்தா நதியில் இட்டுப் பின் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்’ என அருளிச் செய்தார்.
  • சுந்தரர் பொன்னை மணிமுத்தா நதியில் இட்டார்.
  • பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருவாரூர் வந்து சேர்ந்தார்.
  • பரவையாரிடம் கமலாலயக் குளத்தில் பொன்னை வருவித்துத் தருவேன் எனக் கூறி, திருக்குளம் சென்றார். குளத்தில் பொன் கட்டிகளை தேடத் துவங்கினார்.
  • பொன் தந்த பொன்னார் மேனியன்: இறைவன் சுந்தரரின் தேவாரம் கேட்கும் பெரும் விருப்பத்தால் பொன்னைத் தருவித்துத் தராமல் இருந்தருளினார். பரவையார் புன்சிரிப்புடன் ‘ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறீரோ’ என உரைத்தார்.
  • சுந்தரர் ‘பொன்செய்த மேனியினீர்’ என்னும் பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறைவன் மிக மகிழ்ந்து பொன்னை வருவித்து அருளினார்.
  1. சிதம்பரம்தரிசிக்க முக்தி

    நடராஜர் & சிவகாமசுந்தரி

2

  1. திருவண்ணாமலைநினைக்க முக்தி

    அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் & அபீதகுஜாம்பாள் (உண்ணாமுலையம்பாள்)

3

  1. காசிஇறக்க முக்தி

    விஸ்வநாதர் & விசாலாட்சி

         இவ்வூருக்கு வாரணாசி, பனாரஸ், ஆனந்த பவனம், அபிக்தம், மகாமயானம் ஆகிய பெயர்களும் உள்ளன.

4            புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரக பதவி பெற்றார். மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

       சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், சனிதேவன் நவக்கிரகங்களில் கிரகமாகப் பதவி பெற்றார்.

Pl also click below to refer more about காசி

5. காஞ்சிவாழ முக்தி

{ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) & காமாட்சி (ஏலவார்குழலி)5

6.மதுரைசொல்ல முக்தி

மீனாட்சிசுந்தரேசுவரர்

6

  1. அவிநாசிகேட்க முக்தி

    தட்சிண வாரணாசி (கோயமுத்தூர்) அவிநாசியப்பர் & கருணாம்பிகை

7

22.4: சப்த விடங்க தலங்கள்-7

        திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாசுர யுத்தத்தின் போது இந்திரனுக்கு உதவி செய்தான். அதனால் மகிழ்ந்த இந்திரன், என்ன வரம் வேண்டுமோ தருகிறேன் என்றான். முசுகுந்தன், இந்திரன் பூஜை செய்யும் சிவலிங்கம் வேண்டும் என்றான். அதிர்ச்சியுற்றான் இந்திரன்.

   தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தன்னிடம் உள்ள லிங்கம் போன்றே ஒன்றை செய்யப் பணித்து அதைப் பரிசாக முசுகுந்தனிடம் அளித்தான். ஆனால் சிவபெருமானோ முசுகுந்தனின் கனவில் அது உண்மைச் சிலை அல்ல என்று கூறிவிட்டார்.

   இதனால் மீண்டும் இந்திரனிடம் சென்று கொடுத்த வரத்தை நிறைவேற்றக் கோரினான் முசுகுந்தன். இந்திரன் ஆறுமுறை ஏமாற்றிய பிறகு ஏழாம் முறை தன்னிடம் உள்ள சிவலிங்கத்தைக் கொடுத்தான்.

     இந்திரனின் பூஜை விக்ரகத்தைத் திருவாரூரிலும் ஏனைய ஆறு மூர்த்திகளை சுற்றியுள்ள ஆறு ஊர்களிலும் பிரதிஷ்டை செய்தான்.

        டங்கம்=உளி. ; வி=செதுக்காதது; விடங்கம்= உளியால் செதுக்காத சுயம்பு.

     தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இந்த லிங்க சொரூபங்கள் உளியால்(டங்கம்) செய்யப்படாமல் அவருடைய மனோசக்தியினால் செய்யப்பட்டவை. இதனால் இவை சப்த விடங்க மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

     ஒவ்வொரு தலத்திலும் இறைவனின் திருநடனம் பல்வேறு வகையில் பிரசித்தி பெற்றது. கீழ்க்கண்ட சப்த விடங்க ஏழு மூர்த்திகளின் பெயர்களும் நடனங்களும் வெவ்வேறாக இருந்தாலும், ‘தியாகராஜா என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.

  • திருவாரூர் வீதி விடங்கர் – அஜபா நடனம்-சுவாச ரூபம்- மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது.
  • நாகப்பட்டினம் சுந்தர விடங்கர் – பாராவார தரங்க நடனம்-கடல் அலைகள் அசைவதுபோல் ஆடுவது.
  • திருக்காறாயில் ஆதி விடங்கர் – குக்குட நடனம்-கோழி நடப்பது போல் ஆடுவது.
  • திருக்குவளை அவனிவிடங்கர் – பிருங்க நடனம்-மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது.
  • திருவாய்மூர் நீலவிடங்கர் – தாமரை நடனம்- கமல நடனம்-நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல ஆடுவது.
  • திருநள்ளாறு நாக விடங்கர் – உன்மத்த நடனம்- உன்மத்த நடனம்-பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல் ஆடுவது.
  • திருமறைக்காடு புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்- அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.

    22.5.அட்ட மூர்த்தங்கள்-8

    நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். [1] அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள். அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

    • நிலம் – திருவாரூர்
    • நீர் – திருவானைக்கா
    • தீ – திருவண்ணாமலை
    • காற்று – திருக்காளத்தி
    • ஆகாயம் – சிதம்பரம்
    • சூரியன் – திருச்சிராப்பள்ளி
    • சந்திரன் – மதுரை
    • ஆன்மா – திருப்பெருந்துறை

    22.6:  நவ கயிலாய தலங்கள்-9

             தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

    1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. குன்னத்தூர் 5. முறப்பாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென் திருப்பேரை 8. இராஜபதி 9. சேர்ந்த பூமங்கலம்

      22.7. தாண்டவ சிவத்தலங்கள்-5

      சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.

  • தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
  • திருவாரூர்-அசபா தாண்டவம்.
  • மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
  • அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
  • திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.

    22.8.மன்ற சிவத்தலங்கள்-5

    இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம். அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)

  • தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
  • திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
  • மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
  • திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
  • திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

    22.9.தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள்-274 (TN,264)

          இந்தியாவில் பல சிவத்தலங்கள் இருப்பினும், தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்து நான்காகும். இவைகளில் இருநூற்று அறுபத்து நான்கு தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

    Pl also click below to refer more about தேவாரம் & பன்னிரு திருமுறைகள்

  • HRE-29:பன்னிரு திருமுறைகளின்(முதல்-நிறை) பாடல்கள்:
    https://drdayalan.wordpress.com/2015/10/11/hre-29&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Please click below for for related LINKs

    **************************************************

    மெய்யன்பரே,

    • Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
    • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
    • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி
    • இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கிள் (LINK) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

    Also, please click the link below to go to CONTENTS for all the Articles in HRE:

####################################

Advertisements