Tags

, , , , , , , , ,

 24-1-2016

LIST of தொண்டை நாடு (காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு &

சென்னை) திவ்யதேங்கள்-22 (43 to 64)

***தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

&&&&&&&&&&&&&&

CONTENTS for this article (HRE-37)

HRE-37(A).சின்ன-காஞ்சிபுரம் திவ்யதேங்கள்
HRE-37(B).பெரிய-காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள்+உட்பிரகாரம்
HRE-37(C).
பெரிய-காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவில்
HRE-37(D).
பெரிய-காஞ்சிபுரம், ஏகாம்பரீஸ்வரர் கோவில்
HRE-37(E).
பெரிய-காஞ்சிபுரம் மற்ற திவ்யதேங்கள்
HRE-37(F).
சென்னை & சென்னை சுற்றி திவ்யதேங்கள்
HRE-37(G).
43- திருக்கச்சி (விளக்கம்)

HRE-37(A).சின்ன-காஞ்சிபுரம் திவ்யதேங்கள்

  • 43-திருக்கச்சி, அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத  க்ஷேத்ரம்)

ஸ்ரீபெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீபேரருளாளன், வரதராஜன்,
சின்ன-காஞ்சிபுரம்

  • 44-அஷ்டபுயகரம்,

ஸ்ரீஅலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஸ்ரீஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
சின்ன-காஞ்சிபுரம்

  • 45-திருத்தண்கா (விளக்கொளி பெருமாள்)

ஸ்ரீமரகத வல்லி
ஸ்ரீதீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தூப்புல். சின்ன-காஞ்சிபுரம்

  • 46-திருவேளுக்கை(அழகியசிங்கர்),

ஸ்ரீவேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
ஸ்ரீஅழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீமுகுந்த நாயகன்)
சின்ன-காஞ்சிபுரம்

  • 47-திருவெஃகா(யதோத்காரி-சொன்னவண்ணம் செய்த பெருமாள்)-பொய்கையாழ்வார் அவதாரத்தலம்

ஸ்ரீகோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீயதோக்தகாரி  (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
சின்ன-காஞ்சிபுரம்

 HRE-37(B).பெரிய-காஞ்சிபுரம்,உலகளந்த பெருமாள்+உட்பிரகாரம்-(1+3)=4

  • 48-திருஊரகம்(உலகளந்த பெருமாள்)

ஸ்ரீஅமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீத்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
பெரிய-காஞ்சிபுரம்

  • 49-திருநீரகம் (உலகளந்த பெருமாள் கோவில் உள்- வடக்கு),

ஸ்ரீநிலமங்கை வல்லி
ஸ்ரீஜகதீச்வரர்
பெரிய-காஞ்சிபுரம்

  • 50-திருக்காரகம்(உலகளந்த பெருமாள் கோவில் உள்- தெற்கு),

ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீகருணாகர பெருமாள்
பெரிய-காஞ்சிபுரம்

  • 51-திருக்கார்வானம்(உலகளந்த பெருமாள் கோவில் உள்- கொடிமரம் அருகில்),

ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
பெரிய-காஞ்சிபுரம்

HRE-37(C). பெரிய-காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவில் உள்-1

  • 52-திருக்கள்வனூர்(காமாட்சி அம்மன் கோவில்)- அம்மன்   சந்நதி பின்புரம்),

ஸ்ரீஅஞ்சில வல்லி நாச்சியார்
ஸ்ரீஆதி வராஹப் பெருமாள்
பெரிய-காஞ்சிபுரம்

HRE-37(D). பெரிய-காஞ்சிபுரம், ஏகாம்பரீஸ்வரர் கோவில் உள்-1

  • 53-திருநிலா திங்கள் துண்டம் (ஏகாம்பரீஸ்வரர் கோவில்  -முதல் பிரகாரம் வடகிழக்கு மூலை),

ஸ்ரீநேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
ஸ்ரீசந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
பெரிய-காஞ்சிபுரம்

HRE-37(E)-பெரிய-காஞ்சிபுரம் மற்ற திவ்யதேங்கள்-4

  • 54-திருப்பாடகம் (பாண்டவ தூதர்)

ஸ்ரீருக்மிணி, சத்ய பாமா
ஸ்ரீபாண்டவ தூதர்
பெரிய-காஞ்சிபுரம் ; கங்கைகொண்டான் மண்டபம்

  • 55-திருப்பவளவண்ணம்,

ஸ்ரீபவள வல்லி
ஸ்ரீபவளவண்ணன்
பெரிய-காஞ்சிபுரம்

  • 56-திருப்பரமேஸ்வர விண்ணகரம் (வைகுந்தநாதர்)

ஸ்ரீவைகுண்ட வல்லி
ஸ்ரீபரமபதநாதன் (வைகுந்தநாதன்)
பெரிய-காஞ்சிபுரம்

HRE-37(F).சென்னை & சென்னை சுற்றி-8

  • 57-திருப்புட்குழி

ஸ்ரீமரகத வல்லி தாயார்
ஸ்ரீவிஜய ராகவப் பெருமாள்
சென்னை-வேலூர் Rd, பாலுசெட்டி சத்திரம், காஞ்சிபுரம்

         திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார்

     மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.

HRE-37-F

இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

      இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த இறைவி ‘வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

        இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடம் இராமானுஜர்அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர்.

     இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது.

        இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது.

  • 58-திருநின்றவூர் (தின்னனூர்)

ஸ்ரீசுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)

  • 59-திருஎவ்வுள்(திருவள்ளூர்) (புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்

ஸ்ரீகனக வல்லி (வசுமதி)
ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள்
திருவள்ளூர்

  • 60-திருஅல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)

ஸ்ரீருக்மிணித் தாயார்
ஸ்ரீவேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீபார்த்தசாரதி, சென்னை

  • 61-திரு நீர்மலை

ஸ்ரீஅணிமாமலர் மங்கை
ஸ்ரீநீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்),  சென்னை

  • 62-திருஇட வெந்தை

ஸ்ரீகோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீலக்ஷ்மி வராஹப் பெருமாள்
ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள், சென்னை

  • 63-திருக்கடல் மல்லை,

ஸ்ரீநில மங்கை நாயகி
ஸ்ரீஸ்தல சயனப் பெருமாள்
ஸ்ரீஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்), மஹாபலிபுரம்

  • 64திருக்கடிகை (சோளிங்கர்)

ஸ்ரீ அம்ருத வல்லி
ஸ்ரீயோக ந்ருஸிம்ஹன்
சோளிங்கர்

&&&&&&&&&&&

HRE-37(G) :  43- திருக்கச்சி (விளக்கம்)

43-திருக்கச்சி, அத்திகிரி(அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்

மூர்த்தி:

   புண்ணியகோடி விமானம்-ஸ்ரீதேவராஜர்-தேவ பெருமாள்-அத்தியூரான்-அத்திவரதன்- பேரருளாளன்-தேவாதிராஜன்-யக்ஞோத் பவர்-கஜேந்திர வரதர்-தேவராஜ ஸ்வாமி-மாணிக்க வரதன்-பிரணதார்த்திஹரன்.

          கல்யாண கோடி விமானம்-பெருந்தேவி-அரித்ரா தேவி-மகாதேவி

தலம்:

     திருக்கச்சி-அத்திகிரி-சத்யவ்ரத க்ஷேத்ரம்- ஸ்ரீவிஷ்ணு சேத்திரம்-விஷ்ணு சாலை-ஹரி சேத்திரம்-புண்ணியகோடி சேத்திரம்- வைகுண்ட சேத்திரம்- திரிஸ்ரோத சேத்திரம்-தியாக மண்டபம்ஸ்ரீசக்ர பீடம்.

தீர்த்தம்:

        அனந்த சரஸ்- ப்ரஹ்ம தீர்த்தம்-ஸ்வர்ண பத்ம தீர்த்தம்- அக்னி தீர்த்தம்-குஸ தீர்த்தம்-வேகவதி ஆறு

தல-வரலாறு

     ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு ஸ்ரீவித்தையை உபதேசித்த தலம்-சக்தி பீடங்களுள் ஸ்ரீசக்ர பீடம்.

    முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சி, ஸ்ரீநாராயணரின் இடுப்பு பகுதி. மற்றவை: அவந்தி (காலடி), துவாரகை (தொப்புள்), ஹரித்வார் (மார்பு), மதுரா (கழுத்து), காசி (மூக்கு) அயோத்தி (தலை).

 பஞ்ச மூர்த்தி தலங்கள்; பஞ்சாமிர்த சேத்திரங்கள் என போற்றப்படும் தலங்களுள் ஒன்றாக காஞ்சி. மற்றவை: திருவரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம்.

   வைணவத்தலங்களில்,

திருநாராயணபுரம்= ஞான மண்டபம்
திருவேங்கடம்= பூ மண்டபம்
திருவரங்கம்= போக மண்டபம் 

       காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள், தனக்கு திருமஞ்சன கைங்கர்யம் செய்த ஸ்ரீராமானுஜரை வைணவத் தலைமை ஏற்க ஸ்ரீரங்கத்துக்கு தியாக உணர்வுடன் அனுப்பியதால், இந்தத் தலத்தை தியாக-மண்டபம் என்பர்.

     பிரம்மா, யாகம் செய்து வழிபட்டதால், (க- பிரம்மா; அஞ்சி-பூஜிக்கப்பட்டது) காஞ்சி.

     இந்தத் தலத்தை ஸ்ரீவிஷ்ணு சேத்திரம், விஷ்ணு சாலை, ஹரி சேத்திரம், புண்ணியகோடி சேத்திரம், வைகுண்ட சேத்திரம், ஹஸ்திசைல சேத்திரம், திரிஸ்ரோத சேத்திரம், திருக்கச்சி மற்றும் ஹஸ்திகிரி ஆகிய பெயர்களாலும் போற்றுவர்.

HRE-37-1     இந்த ஸ்ரீவரதராஜ பெருமாளை கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதா யுகத்தில் கஜேந்திரனும் (யானை), துவாபார யுகத்தில் பிரகஸ்பதியும், கலி யுகத்தில் அனந்தசேஷனும் வழிபட்டு அருள் பெற்றனராம்.

    தீர்த்த யாத்திரை சருக்கத்தில் அர்ஜுனன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜர், அஷ்டதச புஜ பெருமாள் ஆகியோரை தரிசித்ததுடன், ஏழு நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன், தாதாச்சார்யார், அப்பய்ய தீட்சிதர், புரந்தரதாசர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மான் ஆகியோர் அருள் பெற்ற தலம்.

HRE-37-2    ஸ்ரீவரதராஜ பெருமாள் மீது திருக்கச்சி நம்பிகள்- தேவராஜ அஷ்டகமும், வேதாந்த தேசிகர்- வரதராஜ பஞ்சாசத்தும், மணவாள மாமுனிகள்- தேவராஜ மங்களமும் பாடி மகிழ்ந்துள்ளனர்.

   அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் முதலான அறிஞர்கள், கல்வியும் ஞானமும் பெற்ற தலம்.

ஸ்ரீசரஸ்வதி

     ஒரு முறை திருமகள், கலைமகள் இருவருக்கும் இடையே, ‘தங்களில் பெரியவர் யார்?’ என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர்.

‘      லட்சுமியே சிறந்தவள்!’ என்றார் பிரம்மா. இதனால் கோபம் கொண்ட கலைமகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்ததுடன் அவரை விட்டும் பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால், படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது.

பிரம்ம தவம்

   பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் இருந்தார். மகாவிஷ்ணு, ”நூறு அஸ்வ மேத யாகம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒன்றுக்கு நூறாக பலன் தரும் திவ்ய சேத்திரமான காஞ்சி சென்று அங்கு, ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்!” என்று அருளி மறைந்தார்.அதன்படி பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் துவங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரை அழைத்து, ‘கலைவாணியை அழைத்து வர’ கட்டளையிட்டார். ஆனால், கலைவாணி மறுத்து விட்டாள். எனவே, சாவித்திரி தேவியுடன் யாகத்தைத் துவக்கினார் பிரம்மன். இதனால் அதிக கோபம் கொண்ட கலைவாணி, யாகத்தைத் தடுக்குமாறு அக்னி, அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.

HRE-37-3    பிரம்மன், திருமாலை சரணடைந்தார். பகவான், கலைவாணியால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தார். இறுதியில் சரஸ்வதி, நதியாக பிரவாகித்தாள். வேகவதியாய் பாய்ந்து வந்த நதியை வழிமறித்து தம் கை-கால்களைப் பரப்பி குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. நதி, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது; வெட்கம் அடைந்த ஸ்ரீசரஸ்வதி, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைந்தாள்! யாகம் இனிதே நிறைவுற்றது.

     யாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்குத் தந்தருளினார். பிரம்மனின் வேண்டுகோள்படி, அங்கேயே புண்ணியகோடி விமானரூடராக ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டார்.

பிரகஸ்பதி

   ஒரு முறை ‘சிறந்தது இல்லறமா? துறவறமா?’ என்ற தர்க்கம் எழுந்தபோது, ‘துறவறமே சிறந்தது!’ என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி. மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான். ‘பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!’ என்று சாபம் கொடுத்தான். அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து உணவுக்கு வழியில்லாமல் துன்புற்றார் பிரகஸ்பதி. இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது. அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், ‘நீ நாயாக பிறப்பாய்!’ என்று அவரை சபித்தது. இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம். எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

    மேற்கு நோக்கிய ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் உண்டு. புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நூறு கால் மண்டபம்

     மாட வீதி எனப்படும் வெளிப்பிராகரத்தில் மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒப்பனை செய்யும் பெண், விஸ்வாமித்ரர் யாகம், சீதா கல்யாணம், வாலி வதம், ராமபிரானின் கணையாழியை சீதாவிடம் தரும் அனுமன், கிளி வாகனத்தின் மீது ரதிதேவி, அன்ன வாகனத்தின் மீது மன்மதன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வரும் அனுமன் மற்றும் தசாவதார காட்சிகள் என்று சிற்ப களஞ்சியமாகத் திகழ்கிறது நூறு கால் மண்டபம். இதன் ஒவ்வொரு மூலையிலும் விதானத்தில் தொங்கும் கருங்கல்லினால் ஆன சங்கிலிகள் சிற்ப அற்புதம்!

   இதன் மையத்தில் பிரமாண்டமான மேடை ஒன்று விமானம் மற்றும் நான்கு மரத் தூண்களுடன் அமைந்துள்ளது. இவற்றையும் சேர்த்தே நூறுகால்! விசேஷ நாட்களில் உற்சவ மூர்த்தியர் இந்த மேடையில் எழுந்தருள்கின்றனர்.

அனந்த சரஸ் தீர்த்தம்

     நூறுகால் மண்டபத்தின் அருகே அனந்த சரஸ் எனும் தீர்த்தம். சனிக்கிழமைகளில் இதில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிடைக்குமாம். ஆதிசேஷன் இதில் நீராடி பூமியைத் தாங்கும் வல்லமை பெற்றாராம். இதை சேஷ தீர்த்தம் என்றும் கூறுவர்.

ஸ்ரீஅத்தி வரதர்

   அனந்த சரஸ் குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் ஒன்றைக் காணலாம். இதன் அடியில் நீருக்குள் வெள்ளிப் பேழை ஒன்றில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீஅத்தி வரதர்.

     ஒரு முறை அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய வரதர், ”யாகத் தீயில் தோன்றியதால் என் உடல் எப்போதும் வெப்பத்தால் தகிக்கிறது. எனவே, தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங் களில் நீர் கொணர்ந்து எனக்கு திருமஞ்சனம் செய். இது இயலாவிடில், எம்மை நிரந்தரமாக அனந்த சரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்!” என்று பணித்தார். அர்ச்சகரும், தினமும் நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் கொணர்ந்து அபிஷேகிப்பது சிரமம் என்பதால், அத்திவரதரைத் திருக்குளத்தில் வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்ட அத்திவரதர் நீருக்குள் உறைந்தார்.

மூலவர்

     அர்ச்சகர் கனவில் மீண்டும் தோன்றிய அத்திவரதர், பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே மற்றொரு வரதர் இருப்பதாகக் கூறி, அவரை இங்கு கொண்டு வந்து எழுந்தருளச் செய்யும்படி பணித்தார். அத்துடன் நீருக்குள் இருக்கும் தன்னை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளி கொண்டு வந்து ஒரு மண்டலம் ஆராதித்த பிறகு, மீண்டும் நீருக்குள் வைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்

     கடந்த 1979-ஆம் ஆண்டில் வெளியே எழுந்தருளிய அத்திவரதர் வசந்த மண்டபத்தில் ஒரு மண்டல காலம் பக்தர்களுக்கு தரிசனம் அருளினார். அப்போது, திருப்பதி கோயிலில் இருந்து பட்டாடை முதலியன அத்திவரதருக்கு அனுப்பப்பட்டு சிறப்பு செய்யப்பட்டதாம். இனி 15.7.2019-ல் அத்தி வரதரை தரிசிக்கலாம்.

சக்கரத்தாழ்வார்

      அனந்த சரஸ் குளத்தின் கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. உள்ளே 16 ஆயுதங்கள் தரித்து சேவை சாதிக்கிறார் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இந்த விக்கிரகத்தின் மறுபுறம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி. அதாவது ஒரே விக்கிரகத்தில் முன்னும் பின்னுமாக இரு மூர்த்திகள். அருகே, உற்சவர் விக்கிரகம்.

    அனந்த சரஸ் தீர்த்தக்குளம் தவிர ப்ரஹ்ம தீர்த்தம், ஸ்வர்ண பத்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், குஸ தீர்த்தம், வேகவதி ஆறு ஆகிய தீர்த்தங்களும் இங்கு உண்டு.

    அனந்த சரஸ் திருக்குளத்தின் மேற்கில் வேணு கோபாலன் மற்றும் பூவராகன் ஆகியோரது சந்நிதிகள். குளத்தின் வடகரையில் ஸ்ரீரங்கநாதர் சந்நிதி. இந்த சந்நிதிகளை தரிசித்து, திருக்குளத்தைக் கடந்து சென்றால் ஆழ்வார் வீதி எனப்படும் முதல் பிராகாரம். பொதுவாக ‘ஆழ்வார்’ என்றால் நம்மாழ்வாரையே குறிக்கும். இவர், ‘அவர் வீதி’ என்று வேண்டி பாடியதால், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போதெல்லாம் இந்த வீதியிலேயே முதலில் எழுந்தருள்கிறார். எனவே இது, நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில் ஆழ்வார் வீதி எனப்படுகிறது. இங்கு ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களது சந்நிதிகளை தரிசிக்கலாம். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள்.நம்மாழ்வாருடன் மதுரகவி, நாதமுனிகளும் எழுந்தருளி உள்ளனர். உடையவர் சந்நிதியில் முதலாழ் வார்கள் மூவர், திருமழிசை பிரான், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரையும் ஆளவந்தார், கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர்களையும் தரிசிக்கலாம்.

     மேற்கில் திருக்கச்சி நம்பிகள் சந்நிதி. கொடிமரத்துக்கு முன்னுள்ள வேதாந்த தேசிகன் சந்நிதியில் கோடிகா தானம் ஸ்ரீலக்ஷ்மி குமாரதேசிகனும் அவர் மனைவி அம்மங்காரும் உள்ளனர்.இங்குள்ள அம்மாள் காலட்சேபக் கூடம் குறிப்பிடத் தக்கது. வேதாந்த தேசிகரின் குரு நடாதூர் வரதாச்சார்யார் தினமும் பெருமாளுக்கு பாலை ஆற்றி அமுது செய்து வந்தவர். இவ்வளவு வாஞ்சையுடன் தாயைப் போல் செயல்பட்டதால், பெருமாள் இவரை ‘அம்மாள்’ என்று அழைத்தாராம். இவர்தம் சீடர்களுக்கு உபதேசிக்கும் இடமே காலட்சேபக் கூடம்.

    ஆழ்வார் பிராகாரத்தில் இருந்து 4-ஆம் பிராகாரத்துக்குள் (ஆளவந்தார் பிராகாரம், மடைப்பள்ளி பிராகாரம்) கோபுர வாயிலை தோடர்மால் வாயில் என்பர். இதில் உற்சவ காலங்களில் பெருமாள் எழுந்தருளும் கண்ணாடி அறை, அபிஷேக மண்டபம், வாகனக் கிடங்கு, ஸ்ரீராமன் சந்நிதி, திருவனந்தாழ்வான் சந்நிதி, கருமாணிக்கப் பெருமாள் சந்நிதி, மடைப்பள்ளி, ராப்பத்து விழா மண்டபம் மற்றும் பெருந்தேவி தாயார் சந்நிதி ஆகியன உள்ளன.

பெருந்தேவி தாயார்

    தனிச் சந்நிதியில் பெருந்தேவி தாயார், கல்யாண கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை ஏந்தி, அபய- வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில் கருணை நாயகியாகக் காட்சி தருகிறார். ‘மஹா தேவ்யை’ என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார். இவருக்கு அரித்ரா தேவி, மகாதேவி ஆகிய பெயர்களும் உண்டு.

   திருமகள், பிருகு மகரிஷியின் புத்திர காமேஷ்டி யாகத்தில் ஸ்ரீபெருந்தேவி தாயாராக அவதரித்து, பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரை பூஜித்து வந்தாராம். அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார் பெருமாள். அதன்படி- பரமசிவன், பிரம்மர், பிருகு மகரிஷி, காசிபர், கண்வர், காத்தியாயனர், ஹரிதர் முதலிய முனிவர்கள் மற்றும் தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெருந்தேவியின் கரம் பற்றினாராம் வரதராஜர்.

   இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார். பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, ‘படிதாண்டாப் பத்தினி’ என்பர்.

     மேற்கில் கருடன் சந்நிதி. கிழக்கில் ஸ்ரீஅழகிய சிங்கர் (நரசிம்மர்) சந்நிதி. மேலும் இந்த பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதிகளை தரிசிக்கலாம். இந்த பிராகாரம் சேனையர்கோன் திருமுற்றம் எனப்படுகிறது. இதன் வடகிழக்கு மூலையில் தீர்த்தக் கிணறான பிரம்ம தீர்த்தம். தென் கிழக்கு மூலையில் தன்வந்திரி சந்நிதி. தென் மேற்கு மூலையில் வலம்புரி விநாயகர் சந்நிதி. இவர், தும்பிக்கை ஆழ்வார் என்றில்லாமல் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பு. இந்த பிராகாரத்திலேயே மலையாள நாச்சியார் சந்நிதியும் உள்ளது.

மூலவர் ஸ்ரீதேவராஜர்

     அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றனவாம். கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர். இவருக்கு தேவ பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், பேரருளாளன், தேவாதிராஜன், யக்ஞோத் பவர், கஜேந்திர வரதர், தேவராஜ ஸ்வாமி, மாணிக்க வரதன், பிரணதார்த்திஹரன் ஆகிய வேறு நாமங்களும் உண்டு.

HRE-37-4    திருவேங்கடத்தான்-ஸ்ரீகிருஷ்ணாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கநாதர்- ஸ்ரீராமர் அம்சம் கொண்டவர். காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து ‘ராம கிருஷ்ண’ அம்சத்துடன் விளங்குகிறார்.

     சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மதேவன் இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். இதையடுத்த 14 நாட்கள் மாலைக் கதிரவனின் கிரணங்கள் மூலவரின் திருப்பாதங்களைத் தழுவுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

உண்மை வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகரது, ‘அடைக்கலப் பத்து’ என்ற பாசுரங்களை வெள்ளிப் பதக்கங்களில் பொறித்து ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். தவிர, திருவத்தியூரன் மீது அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச் சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் வரதராஜ ந்யாஸ தசகம் உட்பட இன்னும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் வேதாந்த தேசிகர்.

   எம்பெருமானை சேவிக்க உகந்த வேளை, உஷத் காலம் என்பர். அப்போது, ‘திருப்பள்ளியெழும் பெருமாளின் கழுத்தில், பெருந்தேவி தாயார், வரதரை இறுக அணைத்து சயனித்திருந்ததால் பதிந்திருக்கும் பொன் வளையல்களின் தழும்புகள் காணப்படுமாம். இதனால் மலர்ச்சியுடன் திகழும் பெருமாளை இந்த வேளையில் தரிசிப்பது, மகத்தானது!’ என்கிறார் வேதாந்த தேசிகர்.

     இந்த பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது. வெங்கடாத்ரி என்கிற வைணவர் காஞ்சிக்கு வந்தபோது ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு தங்கக் கொண்டை அளிக்க விரும்பினார். அதற்கான போதிய பணம் இல்லாததால் யாசகம் செய்து பொருள் சேர்த்தார். ஆபரணத்தின் நடுவில் பதிக்க வேண்டிய எமரால்ட் கற்களை, நகைத் தொழிலாளி தன் ஆசை நாயகியான நடன மாது ஒருத்தியிடம் கொடுத்து விட்டான். வெங்கடாத்ரி தஞ்சை சென்று, எமரால்டு கற்களைப் பெற்று வந்து ஆபரணம் செய்து முடித்து பெருமாளுக்கு அணிவித்தார் வெங்கடாத்ரி. ‘அதைப் போன்ற ஆபரணங்களை பூதேவி- ஸ்ரீதேவி நாச்சியார்களுக்கும் அளிக்க வேண்டும்!’ என கனவில் தோன்றி, பெருமாள் வேண்டிக் கொள்ள அவர்களுக்கும் விலை உயர்ந்த கொண்டைகளை அணிவித்தார் வெங்கடாத்ரி. இவர் கவி பாடுவதிலும் வல்லவராம்.

   ஆற்காடு யுத்தத்தின்போது நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ், ஸ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி, நோய் நீங்கப் பெற்றாராம். இதற்கு நன்றிக்கடனாக போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, விலை உயர்ந்த மகர கண்டி (கழுத்தில் அணியும் ஆபரணம்) ஒன்றை வரதராஜருக்கு சமர்ப்பித் தாராம்.

       ஒரு பிரம்மோற்சவத்தின்போது பெருமாளை தரிசித்த கிளைவ், ஸ்வாமியின் தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து, தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்கு அணிவித்து மகிழ்ந்தாராம். இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.

       ஆங்கிலேய அதிகாரியான பிளேஸ் துரை என்பவர், ஸ்ரீவரதருக்கு தலையில் அணியும் தங்க ஆபரணத்தை அன்பளிப் பாகத் தந்து மகிழ்ந்தாராம்.

ஸ்ரீவரதராஜர்

      ஸ்ரீவரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும். எல்லா வைணவத் திருக் கோயில்களிலும் உற்சவருக்கு இரு புறமும், முறையே ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருப்பர். ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீபூமாதேவியே அருள் பாலிக்கிறார். மாலிக்காபூரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி இங்கிருந்த உற்சவ விக்கிரகங்கள் உடையார்பாளையம் ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. போர் அபாயம் நீங்கி, மீண்டும் உற்சவர்களை எடுத்து வந்தபோது இரண்டு உபய நாச்சியார்களும் பூமி பிராட்டியாகவே அமைந்து விட்டனராம்!

     பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால், வெப்பத்தின் காரணமாக பெருமாளின் திருமுகத்தில் வடுக்கள் ஏற்பட்டனவாம். அவற்றை உற்சவரின் திருமுகத்தில் காணலாம்.

பல்லி தரிசனம்

   ஸ்ரீவரதராஜர் கோயிலில் உள்ள ‘வையமாளிகை பல்லி’ தரிசனம் சிறப்பானது. ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன். இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர். தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான தீர்த்தம் மற்றும் ஹோம சமித்துகளை சேகரித்துத் தருவது இவர்களின் வழக்கம். ஒரு நாள் குரு முன் வைத்த தீர்த்தக் குடத்தில் இருந்து இரண்டு பல்லிகள் குதித்து வெளியேறின. சீடர்களது கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று எண்ணிய கௌதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். பிறகு, தவறுணர்ந்து சாப விமோசனம் வேண்டிய சீடர்களிடம், ”ஒன்றுக்கு நூறாக பலன் தரும் சத்தியவிரத சேத்திரம் (காஞ்சி) சென்று ஸ்ரீவரதராஜரை தியானித்து தவம் செய்தால் நலம் பெறலாம்!” என்றார் குரு. அதன்படியே, சீடர்கள் இருவரும் பல்லி ரூபத்தில் இங்கு வந்து தவம் செய்தனர். பிற்காலத்தில், யானை ரூபத்தில் இருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்த போது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.

       இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கம்- வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான். இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

   அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆயினர். பின்னர் உபமன்யு முனிவரது அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர். இவர்கள் நினைவாக அமைந்ததே பல்லி ரூபங்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

பெருமாளுக்கு துளசி மாலை, தாயாருக்குப் புடவை சாத்துதல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்தல் ஆகியன இங்கு நேர்த்திக் கடன்களாக இருக்கின்றன

    பசித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் இங்கு பிரம்மா வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்று, பெருமாளுக்கு பிரசாதம் படைத்து விட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவர். ஒரு நாழிகை கழித்து உள்ளே சென்றால், பிரசாதம் நறுமணத்துடன் திகழுமாம்!

   வெள்ளிக்கிழமை தோறும் பிராகாரங்களுக்குள் பிராட்டியார் திருவீதி உலா வருவார். ஏகாதசி தோறும் பெருமாள் உலா நடைபெறும். வெள்ளியும் ஏகாதசியும் சேர்ந்து வரும் நாளில் பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து உலா வருவர்.

திருவிழாக்கள்

      சித்திரை தமிழ் வருட பிறப்பு; திரு அவதார உற்சவம்; சித்ரா பௌர்ணமி, தோட்டோற்சவம்; ஸ்ரீராமநவமி; ஸ்ரீபாஷ்யகார சாற்று முறை; ஸ்ரீமதுரகவிகள் சாற்றுமுறை.

      வைகாசி பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி

     ஆனிகோடை உற்சவம்; கருட சேவை; ஸ்ரீபெரியாழ்வார் சாற்று முறை; ஸ்ரீவைனதேய ஜயந்தி; ஸ்ரீசுதர்சன ஜயந்தி; ஸ்ரீமந் நாதமுனிகள் சாற்று முறை; ஸ்ரீபேரருளாளன் ஜ்யேஷ்டாபிஷேகம்; ஸ்ரீபெருந்தேவியார் ஜ்யேஷ்டாபிஷேகம்

       ஆடி திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை,

         ஆவணி ஸ்ரீஜயந்தி,

          புரட்டாசி ஸ்ரீதூப்புல் தேசிகன் மங்களாசாஸனம்; திருக்கோயில் தேசிகன் சாற்று முறை; நவராத்திரி; விஜயதசமி பார்வேட்டை,

        ஐப்பசி தீபாவளி; ஸ்ரீசேனைநாதன் சாற்றுமுறை; ஸ்ரீபொய்கை ஆழ்வார் சாற்று முறை; ஸ்ரீபூதத்தாழ்வார் சாற்று முறை; ஸ்ரீபேயாழ்வார் சாற்று முறை; ஸ்ரீமணவாள முனிகள் சாற்றுமுறை,

   கார்த்திகை-கைசிக புராண படனம்; பரணி தீபம்; திருக்கார்த்திகை; ஸ்ரீதிருப்பாணாழ்வார் சாற்று முறை; ஸ்ரீலக்ஷ்மிகுமார தாததேசிகன் சாற்றுமுறை,

        மார்கழிஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் சாற்று முறை; திருவத்யயன உற்சவம்; பகல் பத்து-ராப்பத்து வைபவம்; அனுஷ்டான குள உற்சவம்; ஆண்டாள் நீராட்டு உற்சவம்; போகி திருக்கல்யாணம்.

        தைசங்கராந்தி; சீவரம் பார் வேட்டை; தெப்போற்சவம்; தைப்பூசம்; ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை; வனபோஜன உற்சவம்; ரதசப்தமி உற்சவம்;

        மாசி தவனோற்சவம்,

        பங்குனிதிருக்கல்யாணம், பல்லவோற்சவம்.

        சித்ரா பௌர்ணமி-நடபாவி உற்சவம்

கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் ‘நடபாவி உற்சவம்’ சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.

    மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும் பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புரிந்தார். ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது. இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.

வனபோஜனம்

     பொங்கல் அன்று இரவு 10 மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோயிலுக்கு செல்வார். அங்கு ‘வனபோஜனம்’ விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்மபெருமாள் சந்நிதியை அடைகிறார். பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் ‘திருமுக்கூடல்’ எனும் இடத்தில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

கருடசேவை

   இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி-விசாகம் (நம்மாழ்வார் திருநட்சத்திரம்) பிரம்மோற்சவம், ஆனி-சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.

HRE-37-5தோடர்மால்

    முகம்மதியர் ஆதிக்கத்தின்போது காஞ்சி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருந்த உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பு கருதி, உடையார்பாளையம், ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிற்காலத்தில் உடையார்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு உற்சவர் விக்கிரகங்களை எடுத்து வர, ஆத்தான் ஜீயர் என்ற பெரியவர், தோடர்மால் என்பவர் உதவினர். அவற்றில், எது காஞ்சி வரதர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, மூர்த்திகளின் திரு ஆடையை முகர்ந்து பார்த்த சலவைத் தொழிலாளி குங்குமப்பூ வாசனையை வைத்து காஞ்சி வரதரைக் கண்டுபிடித்தாராம்! நவராத்திரி விழாவின்போது சலவைத் தொழிலாளி வம்சத்தவர்களுக்கு மாலை மரியாதைகள் அளிக்கப்படுகின்றன.

தொட்டாச்சார்யர் சேவை

   வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்-சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர். அப்போது சில நிமிட நேரம்… குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர். இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.

    சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தோட்டாச்சார்யர். இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம். ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை. சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார். அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர். இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.

யக்ஞமூர்த்தி

       ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீராமானு ஜரிடம் வாதிட வந்தார். வரதராஜர் அவர் கனவில் தோன்றி, ‘யாம் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம். ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைக் கொண்டு வாதிட்டு யக்ஞமூர்த்தியை வெல்வீராக!’ என்று கூறினார்.

    ராமானுஜர் நடந்து வருவதைக் கண்டு பதறிய யக்ஞமூர்த்தி, ராமானுஜரின் கால்களில் விழுந்து தங்களின் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். ராமானுஜரும் காஞ்சி வரதராஜரின் அனுக்கிரகத்தை எண்ணி மனதார வணங்கி, யக்ஞமூர்த்தியை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகள்

 திருக்கச்சி நம்பிகள் பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டம் (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார். அவருடன் நேரடியாகப் பேசி வந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்முடைய கட்டளைகளை அவர் மூலமாகவே ஸ்ரீராமானுஜருக்கு தெரிவித்து வந்தாராம்.

கூரத்தாழ்வார்

    ராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார், ‘ஸ்ரீவரதராஜ ஸ்தவம்’ என்ற பாடலைப் பாடி கண்களைப் பெற்ற திருத்தலம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

*****************************************************************

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

                     Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 105)-To be published soon

(VII) விண்ணுலகம் (106 & 108)- To be published soon

Advertisements