Tags

, , , , , , , , , , , , ,

                                                        March, 19-21, 2016

     தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

தன் பக்தர்களுக்கேற்ப சேவை சாதிக்கும் பகவான்

    தமிழ் நாட்டில் ஒரு பாணியான அமைப்பும் பூஜை முறைகளையும் கொண்ட பெருமாள்-தயார், வேறு ஒரு பாணியாக, அமைந்த மலை நாட்டுத் தலங்கள்.

******Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

65.திருநாவாய்

ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)-நாவாய் முகுந்தன் (நாராயணன்); ஆற்றங்கரை சந்நதி

 65

       துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.

66.திருவித்துவக்கோடு (திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)- பாண்டவர் வழிபாடு

ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)-உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்); ஆற்றங்கரை சந்நதி.

66

        திருச்சூர் மாவட்டத்தில் பரதப்புழா நதிக்கரையில் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்த ஒரு உன்னதமான திவ்ய தேசம் திருவித்துவக்கோடு உய்ய வந்த பெருமாள் கோவில்.

66(a)        பாண்டவர்கள் மஹா பாரதப் போருக்கு பின் ஷேத்ராடனம் மேற்க்கொண்ட பொழுது இந்த இடத்தில் பகவானை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறுகிறார்கள்.

         பெருமாள் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.இந்த திவ்ய தேசத்தில் காசி விஸ்வநாதரும் எழுந்தருளியிருப்பது மற்றுமொரு தனிச் சிறப்பு.

67.திருக்காட்கரை

ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)-காட்கரையப்பன்.

 67  68.திருமூழிக்களம்

ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் திரு மூழிக்களத்தான்  (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)தலவிருட்சம் அரசு-மா-பலா

68

69.திருக்கடித்தானம் சகாதேவன் வழிபாடு

ஸ்ரீ கற்பக வல்லி-ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்

       கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் தொண்டை நாட்டுத் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், மலைநாட்டுத் திருக்கடித்தானம் ஆகியன.

 69

         கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்

70.திருவல்ல வாழ் (திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)

ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்-ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன், ஸ்ரீவல்லபன்),

7071.திருப்புலியூர் (குட்டநாடு) பீமன் வழிபாடு

ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்-மாயப்பிரான்,

       இக்கோயில் ‘பீமன் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. சிபிச்சக்கரவர்த்தியின் மகன் வருஷாதர்பி அரசாண்டபோது ஸப்தரிஷிகள் (அத்திரி, காசியபர், கௌதமர், வசிஷ்டர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்கினி) அங்கு வந்தனர். அரசன் அவர்களுக்கு தானம் செய்ய முன்வர, நாட்டில் வறுமை உள்ளதால் தங்களால் தானத்தை ஏற்க இயலாது என்று ஸப்தரிஷிகள் கூறிவிட்டு சென்றனர்.

     பின்னர் தனது அமைச்சர்கள் மூலம் பொன் கலந்த பழங்களை கொடுத்தனுப்ப, முனிவர்கள் அதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட வருஷாதர்பி ஒரு வேள்வியைச் செய்து, அதில் ‘க்ருத்யை’ என்ற தேவதையை உண்டாக்கி முனிவர்களைக் கொல்ல அனுப்பினான்.

71    ஸப்தரிஷிகள் மகாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் இந்திரனை அனுப்பினார். இந்திரன் புலியாக மாறி, அந்த தேவதையைக் கொன்றான். அதனால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருப்புலியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஸப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், மாயப்பிரானாகத் தோன்றி காட்சி அளித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.

72.திருவண்வண்டுர் நகுலன் வழிபாடு

ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்-பாம்பணை அப்பன்,

 73.திருச்செங்குன்றூர் (செங்கன்னூர்; திருசிற்றாறு)-தர்மர் வழிபாடு

ஸ்ரீ செங்கமல வல்லி-இமயவரப்பன்,

7374.திருவாறன்விளை (ஆறமுளா)- அர்சுனன் வழிபாடு

அர்ச்சுனன் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி
பிரம்மா, அர்ச்சுனன் தவம் செய்த திவ்யதேசம்

74a

ஸ்ரீ  பத்மாஸநி  நாச்சியார்-திருக்குறளப்பன் (செஷாசனா)-பார்த்தசாரதி

74c

உற்சவர் : திருக்குறளப்பன்
கோலம் : கிழக்கு-நின்ற திருக்கோலம்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : வேதவியாச சரஸ், பம்பா தீர்த்தம்

74b

தலவரலாறு :

      பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத் தூக்கி நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜீனன் கர்ணன் மீது அம்பெய்தியதால் இறந்து போனான்

 74

     போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால், போரில் பிற உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும், அர்ச்சுனன் இத்தலத்தில் தவம் செய்ததாகவும், இவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பார்த்தசாரதியாகவே அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம்.

       அர்ச்சுனன் அருகில் இருந்த வன்னி மரத்தில் தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் புராணம் கூறுகிறது. இந்த வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து விற்கிறார்கள்.

பிரம்மா தவம்

    ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். வேதங்களை மீட்டுத் தரும்படி பிரம்மா பெருமாளை வேண்டினார்.

     பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததார்.

மங்களாசாசனம்:-நம்மாழ்வார் இத்தலத்தில் 11 பாசுரங்கள் பாடியருளியுள்ளார்.

 75.திருவனந்தபுரம்

ஸ்ரீஹரி லக்ஷ்மி-அனந்தபத்மநாபன்,

 75

          வில்வமங்கல சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன.

         ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு’ எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “”பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார்.

            தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார்.

         அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக’ இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை, அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார்.

             அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாயில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாயில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம்.

             முதல் வாயில் வழியாக, நாம் பரம சிவனை வணங்குகிறோம், இரண்டாம் வாயில் வழியாக நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாயில் வழியாக விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம்,

          மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசி எடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

76.திருவட்டாறு

ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்-ஆதி கேசவ பெருமாள்

76            பெரும்பாலும் பெருமாளின் பள்ளிகொண்ட திருக்கோலம் இடமிருந்து வலம் நோக்கி அமையும். இங்கு வலமிருந்து இடம் நோக்கி! 108 திருப்பதிகளில் இவ்வாறு பள்ளி கொண்டது இந்த ஆதிகேசவனும், காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாளுமே!

        தமிழ்நாட்டுக் கோவில்களைப் போன்று கம்பீரமான ராஜகோபுரங்கள் கிடையாது. தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட பெரிய புத்தகத்தைப் போன்ற மேற்கூரைகளே கோபுரங்கள். மலையாளத்து திவ்ய தேசங்கள் சதுரவடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை.

    இதற்குள் வட்ட வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்துக்கு மேல் முக்கோண வடிவக் கூரைகள். இங்குள்ள ஸ்தலங்களில் மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுரவடிவிலான மேடை ஒன்று இருக்கும். இதைப் பொதுவாக பலிபீடம் என்று கூறுவர். இது சில ஸ்தலங்களில் பிரம்மாண்டமானதாயும், சிலவற்றில் சுமாரானதாயும் அமைந்துள்ளது. இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டுதான் பகவானை வழிபட வேண்டும். மேடையில் ஏற யாரையும் அனுமதிப்பதில்லை.

      பெருமாள் – ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம். திருவனந்தபுரம் பெருமாளைப் பார்த்தபடி மேற்கு நோக்கிய திருக்கோலம். இடதுகரம் தொங்கவிட்ட நிலையிலும், வலதுகரம் யோகமுத்திரை காட்டியபடி அமையப்பெற்ற பெரிய, அரிய திருக்கோலம்.

தாயார் – மரகதவல்லி நாச்சியார்.
பொய்கை –  கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்.
விமானம் – அஷ்டாங்க விமானம்.
பாடியவர் – நம்மாழ்வார்.

           வரலாறு!  பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி கேசியின் மீது பள்ளி கொண்டார்.
கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதிதேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு!

தலத்தின் சிறப்புகள்!

     திருவனந்தபுரம் பத்மநாபனைத் தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.

     இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் கதிரவன் தன் அஸ்தமனக் கதிர்களால் வாட்டாற்றானை வணங்குவது சிறப்பான காட்சி.

       திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.

    திருவனந்தபுரம் அனந்தபத்மநாபப் பெருமாளைப் போன்று நீளமான திருமேனி. திருமுகம், திருமேனி, திருப்பாதங்களைத் தனித்தனி சாளரங்களில் தரிசிக்கவேண்டும்!

    கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள் முற்பட்டது! மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்று!

          கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்பவன் இந்து ஆலயங்களில் கொள்ளையிட்டான்.திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிடத் திட்டமிட்டான். ராணியும், குறுநில மன்னர்களும் திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றித் தொழுதனர்.

         பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள் முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின. முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்! வேண்டுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும் பெருமாள்!

    நிச்சயம் அருள்வான் ஆதிகேசவன் என அறுதியிட்டுக் கூறுகிறார் நம்மாழ்வார்!

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே!

 77.திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்-ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்); சிரம்-பாதம் மாறி சயனச் சேவை

77

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

*****************************************************************

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

                     Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

 

 

Advertisements