Tags

, , , , , , , , , , , , ,

அறிவோம் “அரிய-அரியின் ஆலயம்”

அஹோபிலம்; ஆச்சரியம் மிக்க பலம்; சிங்க-குகை.

August, 12 & 13, 2016

      ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கலியுக வரதனாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி. அகோபிலம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

      திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான், அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார்.

*****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

0.0      கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

         இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம். இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது.

      “அஹோ’ என்றால் “சிங்க. “பிலம்’ என்றால் “குகை. அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார்.

         இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று சொல்லி வணங்கினர்.

    இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன.

       மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்றும் அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்றும் அழைப்படுகின்றது. நவ நரசிம்மர் ஆலயங்கள் மேலும் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

      மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களை சேவிக்க முடியும் என திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் “தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!” என்று பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே.
                   (பெரியதிருமொழி:1.7.4; 1011)

       ஒரே ஒரு அரக்கனை வதைக்க மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது!

        பிரபலமான ராம, கிருஷ்ண அவதாரங்கள் பல அசுரர்களை வதம் செய்தன. அடுத்தடுத்த யுகங்களில் அரக்கத்தனம் அதிகரித்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

       ஹிரண்யன் என்ற ஒரு அரக்கன், பல்லாயிர அசுரர்களின் ஒட்டு மொத்த உருவம். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அதை ஏற்காதவர்களை, இரக்கமின்றி கொன்றழித்தவன்.

      அவனுடைய மகனே அவனுக்கு எதிரானான்.ஹிரண்யன், தன் மகனை, தன் தளபதிகளை வைத்துதான் பலவாறாகத்துன்புறுத்தினான்

       அஹோபிலம் திவ்ய தேசம், நரசிம்மம் பிளந்துகொண்டு வந்த  தூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் இன்றளவும் திகழ்கின்றன.

     இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கேசிதறிக் கிடக்கும்மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்டபோது உண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள்.

     நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்  ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

     கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் சேர்த்து ஒரே திவ்யதேசமாக வழிபடுகிறோம்.

      கருடன், ‘அஹோபிலம், மஹாபலம்’ என்று போற்றிப் பணிந்தார். உயர்ந்த மலையில் ஒரு குகையில் இவ்வாறு காட்சி தந்ததாலேயே (பிலம் என்றால் குகை) பெருமைமிக்க, பலம் வாய்ந்த அஹோபிலம் என்ற கருடனின் கூற்றாலேயே இத்தலம் இப்பெயர் பெற்றது.

     மகா பெரிய அசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக்கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள், ‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்த
தாகவும் சொல்வார்கள்.

கீழ்-அகோபிலம்

லக்ஷ்மி நரசிம்மர்-பிரகலாத வரதன் (லஷ்மி நரசிம்மர்- அம்ருதவல்லி, செஞ்சுலஷ்மி): GROUND LEVEL.

Will not come under Nava Nasimhar-Blesses Nava Nasimhar Darshans

       திருப்பதி சீனிவாசப் பெருமாள் தனது திருக்கல்யாணம் முடிந்து வணங்கிய பெருமாள்-சீனிவாசப் பெருமாள் சநநிதியும் உண்டு.

A-Lower Akblm

          நவ-நரசிம்மர்களில் ஏழு உற்ச்சவ நரசிம்மர்கள் இங்கு உள்ளனர்; (உற்ச்சவ-ஜ்வாலா நரசிம்மர் அகோபில (உக்ர) நரசிம்மர் சந்நதியிலும், மாலோல-உற்ச்சவர் அகோபில மட திருவராதனையிலும் உள்ளனர்).

      தூணில் நவ-நரசிம்மர்கள்- பெருமானின் இடது பக்கத்தில், ஒரே பக்கமாக மஹாலஷ்மி தாயார் ஆண்டாள் சந்நதிகள்.

A1.ஜெயஸ்தம்பம்

      மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை “ஜெயஸ்தம்பம்’ அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது

        புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! –

மூலவர்:
மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்
A-Lower Akblm-2உற்சவர்:
மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.

தாயார்:
மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்:      லட்சுமி

     கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் நவநரசிம்மர்களில் ஒருவர் அல்ல என்றாலும், மிகவும் பிரபலமானவர். நவநரசிம்மர் தரிசனம் காண இவரத அருளையும், ஆசியையும் முதலில் பெறுவது சம்பிரதாயம்.

A1-Lower Akblm

     இந்தக்கோயில் சந்நதித் தெருவின் முனையில் ஆஞ்சநேயருக்கான சந்நதி அமைந்திருக்கிறது. இவர் பீகாள ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். இவர் ஊருக்கு மட்டுமல்லாமல், அஹோபிலம் கோயிலுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார்.

A2.ஸ்ரீநிவாசன்-பத்மாவதி

     வசந்த மண்டபம். கடந்தால் ஊஞ்சல் மண்டபம். பிராகாரச்சுற்றில், முதலில் ஸ்ரீநிவாசன்-பத்மாவதி மங்கைத் தாயார்-விஷ்வக்சேனர் மற்றும் கிருஷ்ணரும் மூலவர்களாகவே திவ்ய தரிசனம் தருகிறார்கள். தமது திருமணத்திற்குப்பிறகு ஸ்ரீநிவாசனும், பத்மாவதி தாயாரும் இத்தலம் வந்து இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்கியதாகவும் அந்த சம்பவத்தின் ஆதாரசாட்சியாகத்தான் இவ்விருவரும் கருவறையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

A3.ராமபிரான்

     திரேதாயுகத்தில் ராமபிரான், லக்ஷ்மணனுடன் இத்தலம் வந்து நரசிம்மரைத் தொழுது ராவணன் மீதான தம் வெற்றிக்கு உறுதுணையாக உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் பிராகாரத்தைமேலும் வலம் வரும்போது ராமானுஜரை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயர்

        லக்ஷ்மணன் இரு வில்களைத் தாங்கி-அண்ணனுடைய வில்லையும் தானே ஏந்தி நிற்கிறார்! ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் கண்ணாடி மண்டபம். அடுத்து தாயார், ஆண்டாள் சந்நதிகள். சற்று தள்ளி ரங்க மண்டபம். அதற்கடுத்த கல்யாண மண்டபம் தனிச் சிறப்பு கொண்டது.

தூணில் நவநரசிம்மர்கள்

     நவநரசிம்மர்களை தரிசிப்பதற்கான முன்னோடியாக இந்த இரு மண்டபத் தூண்களிலும், வராஹ நரசிம்மர், வில் ஏந்திய காராஞ்ச நரசிம்மர், தூணைப்பிளந்து கொண்டு வெளிப்பட்ட கம்ப நரசிம்மர், ஹிரண்யனைப்  பற்றும் நரசிம்மர், அவனை வதம் செய்து அவன் குடலை மாலையாகப் போட்டுக்கொள்ளும் ஜ்வாலா நரசிம்மர், பிரஹலாதன் மற்றும் கருடாழ்வாருடன் காட்சியளிக்கும் சதுர்புஜ நரசிம்மர், அபய பிரதான நரசிம்மர், ராம-லக்ஷ்மணருக்குக் காட்சி தந்த பிரத்யக்ஷ நரசிம்மர், லக்ஷ்மியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், செஞ்சுலக்ஷ்மித் தாயாருடன் நரசிம்மர், பாவன நரசிம்மர், மேல் அஹோபிலம் உக்ர நரசிம்மர், அருள் புரிகிறார்கள்

           ஆண்டாள், சுதர்ஸனாழ்வார், கிருஷ்ணன், விஷ்வக்சேனர், ராமானுஜர், பலிபேரர், நித்யோத்சவர் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக
அருள் புரிகிறார்கள்.

    காளிங்க நர்த்தன கிருஷ்ணன்,வெண்ணெய்த் தாழியுடன் கண்ணன், வேணுகோபாலர், சஞ்சீவி மலையைத் தாங்கிய ஆஞ்சநேயர், வராஹப்பெருமாள்,

      சாளக்கிராம மாலை-காலடியில் ஆஞ்சநேயர்-உற்சவரான பிரஹலாத வரதனுக்கும் சதுர் புஜங்கள் தான். அவை, சங்கு, சக்கரம்,கதை தாங்கி அபய ஹஸ்தம்- ஸ்ரீதேவி-பூதேவியையும் காணலாம்.

           ஆழ்வார்கள்-ஆதிவண் சடகோபஜீயர் தன் கரத்தில் மாலோல நரசிம்மருடன்-முக்கியமாக இந்த கீழ் அஹோபிலக்கோயிலிலேயே, மேல் அஹோபிலத்து உற்சவ மூர்த்திகள் எல்லாம் இங்கு கோயில் கொண்டுள்ளார்கள்.

          மூலவராக அமிருதவல்லித் தாயார், இதே கருவறையில் உற்சவராகவும் தரிசனம் நல்குகிறார்.

         மேல் அஹோபில உக்ர நரசிம்மர் சந்நதியின் உற்சவ தாயாரான செஞ்சு லக்ஷ்மியும் இதே அறையில் கொலுவிருக்கிறார். இந்தத் தாயார் சந்நதியை ‘அம்மவாரு சந்நதி’ என்றழைக்கிறார்கள். தாயாருக்கு அடுத்ததாக தனியே ஆண்டாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறாள்.

A4.அஹோபில மடம்

ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகர் (வண் சடகோப ஜீயர், அழகிய சிங்கர்)

     இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.
A4-Akb Madam     உலக பக்தர்களுக்கெல்லாம் நரசிம்ம தரிசனத்துக்கு வழிகாட்டிய இந்த மகான், மைசூர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்தவர். கிடாம்பி கேசவாசார்யா என்பது இவரது பூர்வீகப் பெயர்.

     வேதாந்ததேசிகரும், அஹோபில மடத்தை உருவாக்கிய ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகரும் கோவிலில் எழுந்தருளியுள்ளார்கள். இப்படி ஒரு சேவை செய்திருக்கும் இவருக்கு இத்தலத்தில் உறையும் பகவான் லக்ஷ்மி நரசிம்மரே மரியாதை செய்திருப்பதிலிருந்து இந்த மகானின் பெருமையைப்  புரிந்துகொள்ளலாம்

    இவருக்கு வண் சடகோப ஜீயர்’ என்ற தாஸ்ய நாமத்தையும், காஷாயத்தையும் பெருமாளே வழங்கினார் பரந்தாமனைத் தொடர்ந்து  ஸ்ரீராமானுஜரும் தம்மிடமிருந்த த்ரிதண்டத்தை அளித்திருக்கிறார். மாலோலர் இப்போதும் மடத்து ஜீயருடன் புறப்பாடு கண்டருள்கிறார்.

      அகோபில மடம்-Head Quarters. 45-வது பீடாதிபதி- ஸ்ரீநாராயண யதீந்திர மகாதேசிகன்; 46-வது பீடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்

     ஆதிவண் சடகோபஜீயருக்கு மாலோலனை வழங்கும்காட்சி-இடது மடியில் மஹாலக்ஷ்மியை இருத்திக்கொண்டு சுதர்சன பீடத்தில் அமர்ந்திருக்கும் தோரணை-ஆதிசேஷன் குடை-சங்கும், சக்கரமும் ஏந்த, கீழ் இடது கரம் லக்ஷ்மியை அரவணைத்திருக்க, கீழ்வலது கரம் அபய ஹஸ்தமாக அருள் பொழிகிறது.

 மேல்-அஹோபிலம் (நவ நரசிம்மத் தலங்கள்; 1 to 9)

 • ஜ்வாலா நரசிம்மர்-செவ்வாய்
 • அஹோபில (உக்ர) நரசிம்மர்-குரு.
 • மாலோல நரசிம்மர்-சுக்கிரன்
 • க்ரோட (வராஹ) நரசிம்மர்-ராகு
 • காரஞ்ச நரசிம்மர்-வில்லேந்திய நரசிம்மர்- சந்திரன்
 • பார்கவ நரசிம்மர்- சூரியன்
 • யோக நரசிம்மர்-சனி
 • சத்ரவட நரசிம்மர்கேது
 • பாவன நரசிம்மர்-புதன்11
 1. ஜ்வாலா நரசிம்மர்-மலை மேல்செவ்வாய்

         Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by மிக கடின நடை வழி & very long 200-step path.

1.1-Jula.png
இரண்யனை வதைத்தவர். வதைத்த இடமும் இது. இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

1.2-Jula

         மேல் அஹோபிலத்திலிருந்து 3½ கி.மீ. தொலைவு. கருடாசலம், வேதாசலம் எனும் இரு மலைச் சிகரங்களுக்கு இடையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உக்ர ஸ்தம்பம் தெரிகிறது.

1.3-Jula   அந்த ஸ்தம்பத்திலிருந்துதான் நரசிம்மர் வெளிப்பட்டு ஹிரண்யனை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது.

       இந்த ஸ்தம்பத்தை அடைய ஜ்வாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மேலும் 4 கி.மீ. உயரே செல்ல வேண்டும்.

1.4-Jula^^^உபாதை இல்லா பாதை—->>>     

           ஜ்வாலா நரசிம்மர் சந்நதி-இரண்யனின் அரண்மனை-இரண்யன், ஹரி  நாம சங்கீர்த்தனம் செய்த தன் மகன் பிரகலாதனை பலவாறு  துன்புருத்திய இடம்-அதை நினைத்து சென்றால் செல்லும் பாதை உபாதையே இல்லை……… ஹரி நாராயணா!!!!.

ஜ்வாலாநரசிம்மர் அக்னிபோல் சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் அவதரித்த உக்ரம் நிறைந்த நரசிம்மர். ஹிரண்யன் மீது கோபம் கொண்டிருந்தபோதும், பிரகலாதன் மீது கொண்டது போல், நம்மீது இரக்கம் கொண்டவர்.

         ஆகையால் தான் அவர் ஆலயமுன், பக்தர்கள் தன்னை தரிசிக்கும் முன்னறே, குளிர் அருவியாய் தமது அருளைப் பொழிகின்றார். பொழியும் அருவியை அடுத்து ஜ்வாலா நரசிம்மர் சந்நதி.

1.5-Jula           இவர் தரிசனம் தருவது ‘அசலாசல மேரு’ என்னும் மலைப் பகுதியில்.  ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிகவும் சிரமமானது. வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் டோலியில் செல்லலாம். சீரான நடைபாதை வசதியை தற்சமயம் அஹோபில மடம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
1.6-Jula1.7-Jula        மற்ற கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளன. மீதி இரண்டு கரங்கள் குடலை மாலையாக அணிந்துகொள்கின்றன. மேலும் வலது பக்கம் அவதார சமயத்தில் நரசிம்மர் தோற்றம் காட்டும் சிலை. இடது பக்கம் ஹிரண்யனுடன் போர் புரிவது போல சிலை.

          இதற்கு அருகில் ஒரு சிறிய நீர்த் தேக்கம் (குண்டம்) இருக்கிறது. ஹிரண்ய வதம் முடிந்ததும் நரசிம்ம பகவான் இதில் கையைக் கழுவியதாகச் சொல்கிறார்கள்.இதிலுள்ள நீர் சிறிது சிவப்பு நிறமாக உள்ளது. இதனை ரத்த குண்டம் என்கிறார்கள்.

1.8-Jula.png

     சந்நதிக்கதவுகள் திறந்தே உள்ளன. பொதுவாக மூடுவதில்லை.சந்நதிக்குள் நரசிம்மரை ஹிரண்யவத கோலத்தில் தரிசிக்கலாம்.

      இரண்யனை வதைத்தவர் ஜ்வாலா நரசிம்மர் -வதைத்த இடம்தான்-ஜ்வாலா நரசிம்மர் சந்நதி-இரண்யனின் அரண்மனை வாயில்படி.

      இந்த சந்நதி அமைந்திருப்பது மலையின் நடுபாகம்-பூமியும் இல்லை ஆகாயமும் இல்லை-பிரம்மா வரத்தை அனுசரித்து இரண்யன் வதம் நிகழ்ந்த இடம்.

 1. அஹோபில (உக்ர) நரசிம்மர்- மலை மேல்-குரு.

Auto or CAR travel upto to a certain point followed by a short step path

     புராதனப் பெருமாள் இவரே. சிறிய மூர்த்தி-ஒரு கரத்தால் ஹிரண்யனின் தலையையும் இன்னொருகரத்தால் அவனுடைய உடலையும் பிடித்துக் கொண்டிருக்கிறார்-பக்கத்திலேயே பிரஹலாதன்-  லிங்க ரூபமாக சிவபெருமானும், ராம-லட்சுமணரும் தரிசனம். தூண்களில் கிருஷ்ணர், தாச அனுமனோடு கருடனையும் தரிசிக்கலாம்.
2.1 Ahobila Narasimhar     இதனடியில் குகை வழி ஒன்று இருந்ததாகவும், அஹோபில மடத்து 6ம் பட்டத்து ஜீயரான ஷஷ்ட பராங்குச யதீந்திர மஹாதேசிகன், தான் இந்தக்குகைக்குள் புகுந்துகொள்வதாகவும், அதற்குப் பிறகு குகை வாசலை மூடிவிடுமாறு தன் சீடர்களுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, மூடப்பட்ட இந்தக் குகைக்குள் அவர் இன்றளவும் நரசிம்மரை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

2.3    இங்கே ஆழ்வார்களும், ராமானுஜரும் சந்நதிகள் கொண்டுள்ளனர். தூணில் செஞ்சுலட்சுமி தாயாரை வித்தியாசகோலத்தில் காணலாம். வேடுவ குலத்தில் அவதரித்த இவர் அம்புவிடும் தோரணையில் காட்சியளிக்கிறார்.

     வேடுவ குலத்துக்குப்பெருமை தேடித் தந்த செஞ்சுலக்ஷ்மி தாயார், பகவானின் கோபத்தை அறவே நீக்கி, பக்தர்களுக்குகருணை பூர்வமாக, நரசிம்மப் பெருமாள் அருள் வழங்கக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தக்கோயிலுக்கு அருகிலேயே பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் படிகள் அமைந்துள்ளன.

2.2      சற்றுத் தொலைவில் ஓடும் பவநாசினி ஓடைக்கு அருகில், நூறு தூண்களைக் கொண்ட காலக்ஷேப மண்டபத்தைக் காணலாம்.

 1. மாலோல நரசிம்மர்- மலை மேல்-சுக்கிரன்

     Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by a long கடின நடை வழி & a long step path

3      “மா‘ என்றால் லட்சுமி. “லோலன்‘ என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.

      வராஹ நரசிம்மர் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில். செல்லும்வழி சற்றுக் கடுமையான அகலம் குறைவான பாதை.

      மாலோல  நரசிம்மரை தரிசிக்க அவரது சந்நதிக்குப்போகும் வழியில் சிறு கபாலிகனைக் காணலாம். பக்கத்திலேயே துர்க்காதேவி இரு பாத சிற்பத்தையும் காண முடிகிறது. ஆதிசங்கரர் உயிரைப்பறிக்க முயன்றான் கபாலிகன்.

         அப்போது சங்கரரின் பிரதான சீடரான பத்மபாதர் அவனைத் தடுக்க முயன்றார். குருவைக் காப்பாற்றமுனைந்த இவருடைய முயற்சியைப் பாராட்டும் வகையில் நரசிம்மர் இவரது உடலுக்குள் புகுந்துகொள்ள, பத்மபாதரால் கபாலிகனை எளிதாக வதைக்க முடிந்தது. தன் பொருட்டு நரசிம்மர் மேற்கொண்ட இந்த கருணைச் செயலை வியந்து போற்றிய ஆதிசங்கரர், ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ இயற்றி அவரைத் துதித்தார். குருநாதரைக் காத்த பத்மபாதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான் இரு பாதச் சுவடுகள் இங்கே காணப்படுகின்றன.

       இடது மடியில் மஹாலக்ஷ்மியை அமர்த்தி சங்கு, சக்கரம், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ்இடது கரம் தாயாரை அரவனைக்க, சதுர்புஜ நாயகனாக எழிலுடன் சேவை சாதிக்கிறார்.

   மூலவரின் சிரசுக்கு நிழல் ஆதிசேஷன். ஆதிசேஷனுக்கும் திருமங்கையாழ்வாரைதனிச் சந்நதியில் காணலாம்.

   மாலோல நரசிம்மரின் உற்சவ மூர்த்தியே அஹோபில மடம் ஜீயரோடு எழுந்தருளியிருக்கிறார். அஹோபில மடத்து ஜீயர்கள் ஆன்மீக பயணம் செய்யும்போது மாலோலநரசிம்மரின் உற்சவர் விக்கிரகம் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

 1. க்ரோட (வராஹ) நரசிம்மர்- மலை மேல்-ராகு

     Auto or CAR travel upto Ugra-Narasimhar followed by a short நடை வழி & some steps

      பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையே பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.உக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலேயே வராஹ நரசிம்மர் கோயிலைக் காணலாம். வராஹ குண்டம் என்ற தீர்த்தம்-வராஹ நரசிம்மர். குடவரை குகைக்கோயில்-இந்தக் குகையை வராஹ க்ஷேத்ரம் என்று அழைக்கிறார்கள். பொதுவாக வேறெந்த கருவறையிலும் காணவியலாத வராஹரை இங்கே தரிசிக்கலாம். வராஹ அவதாரம் கொண்ட எம்பெருமான் தன்மூக்கின்மீது பூமிதேவியாரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.
4      நாசி மீது பூமிபிராட்டியார்-வராஹ நரசிம்மர்அருள் பாலிக்கிறார். இந்தக் கருவறையிலேயே லக்ஷ்மி நரசிம்மரையும் சேவிக்க முடிகிறது. ஒரே கருவறையில் இரு மூலவர்கள்! திருமாலின் வராஹ அவதாரத்துக்கு அடுத்தது, நரசிம்ம அவதாரம். இந்த இரு அவதாரங்களையும் இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் தரிசனம்.

 1. காரஞ்ச நரசிம்மர்- மலை மேல்-சந்திரன்

Auto or CAR travel, on the way to Ugra-Narasimhar–Temple, on the Road.

            கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்துக்குச் செல்லும் வழியில் வலது புறத்தில் இவருக்கான கோயில் உள்ளது. இது சுமார் 1 கி.மீ. தொலைவில் மேல் அஹோபிலத்துக்கு முன்னாலும், கருடாத்ரி மலைத் தொடரின் மேற்கு திசையிலும் அமைந்துள்ளது.

       தெலுங்கு மொழியில் கர என்றால் கை என்றும் அஞ்ச என்றால் வில் என்றும் பொருள். அதாவது, கரஞ்ச நரசிம்மர் என்றால் வில்லேந்திய நரசிம்மர் என்று பொருள்.
5           ஆஞ்சநேயர் கருங்காலி மரத்தின்கீழே அமர்ந்து ராமனை நினைத்து ஆழ்ந்த தவம் மேற்கொண்டிருந்தார். அப்போது இங்குள்ள நரசிம்மர் சாந்த சொரூபியாய் ஆதிசேஷன் படமெடுத்து குடைபிடிக்க அனுமனுக்குக் காட்சி தந்தார். அவர் வலது கையில் சக்கரமும், இடது கையில் வில்லும் இருப்பதைப்பார்த்து திகைத்த ஆஞ்சநேயர், ‘‘நீர் எம் இறைவன் ராமர் போலத் தோற்றமளிக்க முயற்சித்தாலும் நீர் அவர் அல்லர். உடனே ராமனாக வில்லேந்திய அழகிய கோலத்தில் நரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்தார். அனுமன் இந்தக் காட்சியில் மனம் மகிழ்ந்தார்.

         ஆதிசேஷன் குடைபிடிக்க பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் காரஞ்ச நரசிம்மர். சதுர் புஜங்கள்கொண்ட இந்த பகவான் தன் வலது மேல் கரத்தில் சக்கரம், இடது கரத்தில் வில், கீழ் வலதுகரத்தில் தியான முத்திரை ஆகியன கொண்டுள்ளார். மூன்றாவது கண் கொண்டிருப்பது இவரது தனிச்சிறப்பு.

      நெற்றிக்கண்தான்! தன்னை மட்டுமல்லாமல், நவ நரசிம்மர்களையும் தன் நெற்றிக்கண் திரை மூலமாகவே ஆஞ்சநேயருக்குக்காட்டி அவரை மகிழ்வித்திருக்கிறார் இந்தப் பெருமாள். ஞான மூர்த்தியான இவரை தரிசித்தால் கல்விச் செல்வம் நிரம்பப் பெறலாம். இக்கோயிலில் மடப்பள்ளி உள்ளது. ஆகவே காரஞ்ச நரசிம்மர் பிரசாதம் பக்தர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேல் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர்கள் ஆலயங்களிலேயே காரஞ்ச நரசிம்மர் கோயில் தான் முதலாவதாகவும் எளிதாகவும் தரிசிக்கக் கூடியது.

 1. பார்கவ நரசிம்மர்- மலை மேல்- சூரியன்

         Auto or Car or JEEP travel upto a certain point followed by a short foot path & then about 100 steps

பார்கவ ரிஷி-சுக்கிராச்சார்.

     வேதாத்ரி மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுகுன்றின்மேல் அமைந்துள்ள உயரமான ஆனால், சமமான 130 படிகளில் ஏறிச் சென்று பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம். படி ஏறுமுன் பக்கவாட்டில் ஒரு திருக்குளம்.

        இதனை பார்கவ தீர்த்தம் என்கிறார்கள். இது என்றைக்குமே வற்றியதில்லை என்பதால் இதனை ஆகாய தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். பார்கவ ரிஷி இத்தலத்துக்கு, பரந்தாமனை தரிசிக்க வந்ததாகவும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாராயணன்தன் தசாவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேரக் காட்டி அவரை இன்பத்தால் திகைக்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.
6     அதனாலேயே இக்கோயிலுக்கு பார்கவ நரசிம்மர்கோயில் என்று பெயர் வந்ததாம். இந்த க்ஷேத்திரத்தின் உற்சவ மூர்த்தி வடநாட்டில் ஆஜ்மீரை அடுத்த புஷ்கரரில் உள்ளார்.

      பார்கவன் என்று சுக்கிரனுக்கு இன்னொரு பெயர் உண்டு என்றும், அதனால் அசுர குருவான சுக்கிராச்சார்யாருக்கு பிரத்யட்சமான தெய்வம் இந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள்.

       பார்கவ நரசிம்மர் நான்கு கரங்கள்-மேல் கரங்களில் சங்கும், சக்கரமம்-, கீழ்க் கரங்களால் ஹிரண்யனைத் தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில்வீற்றிருக்கிறார். ஹிரண்யனின் உயர்த்திய வலது கையில் ஒரு வாள் தெரிகிறது. நரசிம்மருடன் போரிட முற்பட்டிருக்கிறான் போலிருக்கிறது! நரசிம்மர் பாதுகைக்கு அருகே பிரஹலாதன் பெருமாளை சேவிக்கும் தோற்றத்தில் பணிவுடன் நிற்கிறான்.

     மூலவருக்குப் பின்னால் கல்லில் செதுக்கப்பட்ட தசாவதார தோரணம் தனிச்சந்நதியில் ராமானுஜரும் பக்தவத்சலப் பெருமாளும் திவ்ய தரிசனம் அருள்கிறார்கள். பக்தவத்சலப்பெருமாள், சங்கு, சக்கரம், பத்மம், கதாயுதம் தாங்கி நாற்கரங்களுடன் திகழ்கிறார். இவருக்குப்பின்னாலும் தசாவதார தோரணத்தைக் காணலாம்.

     ஹிரண்யனைவதைக்கும் பார்கவ நரசிம்மர் உக்கிர மூர்த்தியேயானாலும், பவ்யமான பிரஹலாதனாலும், தோரணமாகக் காட்சிதரும் தசாவதார மூர்த்திகளாலும், பக்தவத்சலப் பெருமாளாலும், கோபம் முற்றிலும் தணிந்த, சாந்த மூர்த்தியாகவே கருதப்படுகிறார்.

 1. யோக நரசிம்மர்-சனி– GROUND LEVEL

     வேதாத்ரி மலைத்தொடரில் மேற்கே கீழ் அஹோபிலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
7     ஹிரண்ய வதம் முடிந்ததும் பிரஹலாதனுக்கு நரசிம்மர் யோக மந்திரங்களை உபதேசித்து, யோக முத்திரைகளையும் சொல்லிக் கொடுத்தாராம்.

 1. சத்ரவட நரசிம்மர்கேது GROUND LEVEL

       சங்கீதத்தில் முன்னேற விரும்புபவர்கள் இந்தப் பெருமாளை வழிபடுகிறார்கள்.
8 .            நவநரசிம்மர்களிலேயே இவரை ‘சுந்தர ரூபன்’ என்று வர்ணிக்கிறார்கள். இவர் சத்ரவடநரசிம்மர் நரசிம்மர், என்றும் இந்த ஆலமரமே ஒரு குடைபோல கோயில் விமானத்தைக்காக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

 1. பாவன நரசிம்மர்- மலை மேல்புதன்

         JEEP Travel (not auto not car)-கடின காட்டு வழி-(22 km from lower Ahobilam)

     கருடாத்ரி மலையின் தென்புறம் அடர்ந்த காட்டுப் பகுதியில் பவன நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
9.1 Bavana Narasimhar     மேல் அஹோபிலத்திலிருந்துசுமார் 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த மலைக் காட்டுப் பகுதியில் உள்ளது. இந்தக் கோயிலை நடைப் பயணமாகவும் சென்றடையலாம்; ஜீப், டிராக்டர் ஆகிய வாகன வசதியுடனும் போகலாம். கருவறையில் நரசிம்ம மூர்த்தி சதுர்புஜங்களுடன் வீற்றிருக்கிறார். இடது மடியில் லக்ஷ்மி பிராட்டியைத்தாங்கியுள்ளார்.
9.2 Bavana Narasimhar     சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலது கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடது கரம் தாயாரை அரவணைத்துக்கொண்டிருக்கிறது. இவருடைய இருக்கை, சுருட்டி அடுக்கினாற் போல் அமைந்த ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷனின் உடல்.

     இவரது சந்நதியில் வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், ஆஞ்சநேயர் ஆகியோரையும் கண்டுகளிக்கலாம். இது பரத்வாஜ மகரிஷியால் ஏற்பட்டது. தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இந்தக் கோயிலுக்கு வந்த அவர், இங்கு தியானம் செய்து அந்தப் பாவத்தைப்போக்கிக்கொண்டு, புனிதமடைந்ததார்.

     தாயார் (செஞ்சுலஷ்மி), வேடுவ குலத்தைச் சேர்ந்தவளாக இங்கே அவதரித்திருக்கிறார். இந்தத்தாயாரை பகவான் இங்கு வந்து திருமணம் செய்துகொண்டதால் வேடுவ குலத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு வந்து விழா கொண்டாடுகிறார்கள். அச்சமயம் அவர்கள் கோழி, ஆடுபோன்றவற்றை பலி கொடுக்கிறார்கள்.

        ஆழ்வார் குறிப்பிட்டுள்ள ‘புனிதன் என்ற சொல், இந்த பாவன நரசிம்மரையே குறிக்கிறது. பிரம்மஹத்தி போன்ற கொடிய தோஷங்களையும் தீர்த்து வைக்கும் புனிதனல்லவா அவர்! இந்த பாவன நரசிம்மரை தரிசிப்போர், கொடிய பாவிகளாகவே இருந்தாலும், அந்தப் பாவங்களிலிருந்து எளிதாக விடுபட்டு அனைத்து விதமானநலன்களையும், வளங்களையும்அடைவார்கள் என்று அறிவுறுத்துகிறார் ஆழ்வார்.
10&&&&&&&&&&&&&&&&&

 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும் பூடிரிய,
சென்றுகாண்டற்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே.                 
(பெரியதிருமொழி::1.7.5; 1012)

      சீற்றத்தாலே மடித்த பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையுமுடையதாய் ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி செத்துப்போன இரணியனுடைய உடலை கூர்மையான நகங்களாலே பிளந்திட்ட புனிதன் (பரிசுத்தனான பகவான்) எழுந்தருளியிருக்குமிடமாவது சுழல் காற்றானது குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே கிட்டிச் சென்று ஸேவிக்க முடியா சிங்கவேள்குன்றம்

வேடுவ குலம்

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாதசிங்கவேள்குன்றமே.
                      (பெரியதிருமொழி::1.7.2; 1009)

     நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும் ஒளி பொருந்திய பற்களையும் உடையதாய் ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரஸிம்ஹமாய்க் கொண்டு ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்பைைைக் கிழித்தெறிந்த கூர்மையான நகங்களை உடைய எம்பெருமான்  எழுந்தருளி இருக்கு மிடமாவது வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே செய்யப்பட்ட சண்டையிலே கொடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய, வில்லைக் கையிலே உடைய வேடருடைய ஆரவாரமானது எப்போதும் மாறாத சிங்கவேள் குன்றம்.

          பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமானது .வாழ்வில் மறக்க இயலாது.      மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9-நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இது “நவ நரசிம்ம க்ஷேத்ரம்’.

     மேல் அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்- ஊன்றுகோல் அங்கே கிடைகிறது.

     இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

      அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய–திருத்தலம்.

உக்ர ஸ்தம்பம்

     மிகக் குறுகிய பாறைகளுக்கு இடுக்கிலான பாதையில், இயற்கையாக பகவான் உருவாக்கியிருக்கும் பாறைப் படிகள் மீது மெல்ல பாதம் பதித்து மேலேற வேண்டும்.உக்ரஸ்தம்பம் நிறுவப்பட்டிருக்கும் உச்சி முற்றிலும் பாதுகாப்பற்றது.

     இரண்டடிக்கு இரண்டடி சதுரத்தின் மையத்தில் தூண் ஊன்றி நிற்கிறது. அதனருகே நரசிம்மரின் பாதங்கள் காட்சி அளிக்கின்றன.  தூணைப்பிடித்துக் கொண்டு வருவதுதான் பாதுகாப்பானது. இந்தத் தூணைப் பிளந்துகொண்டு தான் நரசிம்மர் தோன்றினார் என்ற ஐதீகம் நிலவுவ தால், இத்தூணைத்தொட்டு வணங்க சிலர் விரும்பக்கூடும். இந்த உச்சிக்கு வருவது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.பொதுவாக இங்கு செல்ல யாருமே தயங்குவார்கள்.

     உறுதியான மனோதைரியமும், மலையேறும் அனுபவமும் கொண்ட இளவயதினர் மட்டுமே இங்கு செல்ல முயற்சிக்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&

சென்றறியா “அரிய-அரியின் ஆலயம்”

திருமங்கையாழ்வார்: பெரியதிருமொழி:1.7.1 to 10; 1008 to 1017

 • புனிதன்

அங்கண் ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
பைங்கணானைக்கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. (1.7.1; 1008)

     விஷ்ணு இங்கு இல்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த அவ்விடத்திலே பூமியிலுள்ள எல்லோரும் பயப்படும்படி ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு) இரணியன் கிளர்ந்த வளவிலே, அவனது உடலை கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் (சீற்றத்தால்) சிவந்த கண்களை உடைய சிங்கங்களானவை பசுமையான கண்களை உடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து பக்தியினாலே (பகவானுடைய) திருவடிகளிலே ஸமர்ப்பித்து ஆச்ரயிக்கப்பெற்ற சிங்கவேள்குன்றம்..

 • வேடர் குலம்

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்த செல்சாத்தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. (1.7.2; 1009)

       நாக்கு அலையா நின்ற பெரிய வாயையும் ஒளி பொருந்திய பற்களையும் உடையதாய் ஒப்பற்ற மிடுக்கையுடைய நரஸிம்ஹமாய்க் கொண்டு ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்பைக் கிழித்தெறிந்த கூர்மையான நகங்களை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் வேடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே செய்யப்பட்ட சண்டையிலே கொடூரமான தொனியை உடை பறை கோஷம் செய்ய, வில்லைக் கையிலே உடைய வேடருடைய ஆரவாரமானது எப்போதும் மாறாத சிங்கவேள்குன்றம்.      

 • கடின நிலம்

ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. (1.7.3; 1010)

     வடிவுக்கு தக்கப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களை உடைய ஒப்பற்ற மிடுக்கையுடைய நரசிங்கமாகி இரணியனுடைய வளர்ந்த உடலை கூர்மையான நகங்களாலே கிழித்தெறிந்த ஸ்வாமி எழுந்தருளி இருக்கின்ற இடமாவது கடினமான நிலங்களில் திரிந்து களைத்த மிருகங்களும் உடைந்த சிறு மலைகளும் இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய சிங்கவேள்குன்றம்.

 • தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்

     திருமங்கை ஆழ்வார் மானிடர்கள் தரிசிப்பது கடினம் என்றும், “தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!” என்றும் பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வு நாயும் கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே(1.7.4; 1011)

     துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தை உடையனாய் பாகவத விரோதியான இரணியனுடைய பிராணணை அபஹரித்து அவனுடைய சரீரத்தை கூர்மையான நகங்களாலே கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் கண்டவர்களை கவர்கின்ற நாய்களும் கழுகுகளும் நிறைந்திருப்பதனாலும் கொழுத்த வெய்யிலும் சுழல் காற்றும் எப்போதும் இருப்பதனாலும் தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட முடியா சிங்கவேள்குன்றம்.

 • பேழ்வாய் புனிதன்

மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும் பூடிரிய,
சென்று காண்டற்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. (1.7.5; 1012)

      சீற்றத்தால் மடித்த பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையும் உடையதாய் ஒப்பற்ற மிடுக்கை உடைய நரசிங்கமாகி செத்துப்போன இரணியனுடைய உடலை கூர்மையான நகங்களாலே பிளந்திட்ட புனிதன் (பரிசுத்தனான பகவான்) எழுந்தருளியிருக்கும் இடமாவது:- சுழல் காற்று குறைவில்லாமல் இருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியால் கிட்டிச் சென்று ஸேவிக்க முடியா சிங்கவேள்குன்றம்

 • தேவர்கள் அஞ்சிய பேழ்வாய்

எரிந்தபைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. (1.7.6; 1013)

     சீற்றத்தால் ஜ்வலிக்கின்ற கண்களோடும் விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடி இருக்கிற இந்த நரசிங்கத் திருக்கோலமானது என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி தேவர்கள் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக எழுந்தருளியிருந்த ஸர்வேசரனுடைய இடமாவது:-புலிகளானவை நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும் பெரிய வழியிலே காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான சிங்கவேள்குன்றம்

 • தினை அளவும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றம்

முனைத்தசீற்றம் விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ் சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்,
தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.(1.7.7; 1014)

      கோபமானது வளர்ந்து சென்று ஆகாயத்தைக் கொளுத்தவும் மூன்று லோகங்களும் மற்றும் உள்ளவைகளும் எல்லாம் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் பயப்படவும் ஒலி செய்கின்ற நெருப்பும் அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும் உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனால் தினை அளவும் செல்ல முடியாச் சிங்கவேள்குன்றம்.

 • நாத்தழும்ப நான் முகனும் ஈசனும்

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. (1.7.8; 1015)

     பிரமனும் சிவனும் நாக்குத் தடிக்கும்படி ஸ்தோத்ரம் பண்ண ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.காய்கள் நிறைந்த வாகை மரங்களினுடைய நெற்றுகளானவை சப்திக்க, கல்வழிகளிலேயுண்டான குழல் மூங்கிற் செடிகள் ஆகாசத்தை அளாவிப்போய் (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினால் உண்டான நெருப்பினால் ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற சிங்கவேள்குன்றம்

 • ஆயிரந்தோளன்

நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. (1.7.9; 1016)

     ஓ மனமே! நமக்கு ஸ்வாமியாய் பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்  ஆயிரந்தோள்களை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமாய், நெல்லி மரங்கள் நிறைந்து கற்களினுள்ளே வேரோட்டத்தினால் பாறைகளை உடைக்கவும் பனையோலைகள் ஒலிசெய்யவும் வழிகளிலே சுவர்க்கோழிகள் ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற சிங்கவேள்குன்றத்தை  ஸேவிப்போம்.

 • மங்களம்

செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. (1.7.10; 1017)

     சிவந்த கண்களை உடைய சிங்கங்கள் (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கும் இடமான சிங்கவேள் குன்றத்தை இருப்பிடமாக ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் உபகாரகனாமாக உள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை உடையவராய் வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் மிக்க உதாரரான ஆழ்வாரருளிச்செய்த செவ்விய இச்சொல் மாலையை ஓதவல்லவர்கள் தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

&&&&&&&&&&&&

     நடைப்பயணம் மற்றும் மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவ நரசிம்மர்களையும் சேவிக்க முடியும்.

 • கடின நிலம்
 • தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்
 • தினை அளவும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றம்

     திருமங்கையாழ்வாரே கூறியது அனைத்தும் உண்மைதான், எனினும் சிரத்தையுடன் பக்தர்கள் முயர்ச்சி செய்தால், பகவானை வழியில் கண்ட கலியன்-திருமங்கையாழ்வாரே, பகவானிடம் விண்ணப்பித்து, அதற்க்கான வழிசெய்வார்.

D. நரசிம்ம தலங்கள்

நவநரசிம்ம தலங்கள்

 1. அகோபிலம்
 2. நவநரசிம்மர், மேல்-அகோபிலம்

அட்ட நரசிம்ம தலங்கள்

 1. அந்திலி
 2. சிங்கரி கோவில்
 3. சிங்கப்பெருமாள் கோவில்
 4. சிந்தலவாடி
 5. சோளிங்கர்
 6. நாமக்கல்
 7. பரிக்கல்
 8. பூவரசன்குப்பம்

பஞ்ச நரசிம்ம தலங்கள்

 1. கேதவரம்
 2. மங்களகிரி பானக நரசிம்மர்
 3. மட்டப்பல்லி
 4. வாடப்பல்லி
 5. வேதாத்திரி

ஆந்திரப் பிரதேசம்

 1. அகிரபள்ளி வியாக்ர நரசிம்மர்
 2. எர்ரகுண்டா நரசிம்மர்
 3. கதிரி லட்சுமி நரசிம்மர்
 4. கம்மம்
 5. சிம்மாசலம்
 6. யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்

கர்நாடகம்

 1. அகர பஞ்சமுக நரசிம்மர்
 2. கர்பரா நரசிம்மர் (அரசமரம்)
 3. கனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)
 4. நரசிப்பூர் குஞ்சால நரசிம்மர்
 5. பாண்டவபுரம்-யோக நரசிம்மர்
 6. ஹம்பி லட்சுமி நரசிம்ஹர்

தமிழ்நாடு

 1. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் யானைமலை மதுரை
 2. கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள்
 3. நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்
 4. நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் யானைமலை மதுரை
 5. காட்டழகிய சிங்கப் பெருமாள், திருவரங்கம்
 6. ஸ்ரீநவனித கிருஷ்ணன் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், நங்கநல்லூர், சென்னை.
 7. ஸ்ரீ நரசிம்மர், வேளச்சேரி, சென்னை.
 8. சிங்கபெருமாள் ஸ்ரீ உக்கர நரசிம்மர், தாம்பரம், சென்னை.
 9. ஸ்ரீ அழகிய நரசிங்க பெருமாள், எண்ணாயிரம், பாண்டிசேரி.
 10. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இராமாபுரம், சென்னை
 11. ஸ்ரீ நரசிம்மர், பரிக்கல்
 12. ஸ்ரீ யோக லட்சுமி நரசிங்கப் ஸ்வாமி சோளிங்கர்
 13. ஸ்ரீ யோக நரசிம்மர் சிந்தலவாடி
 14. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உக்கடம், கோயம்புத்தூர்
 15. ஸ்ரீ உக்கர நரசிம்மர், நாமக்கல்
 16. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பொள்ளாச்சி
 17. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உக்கடம், கோயம்புத்தூர்

நரசிம்மர் சன்னதிகள்

 1. தாடிக்கொம்பு-சுதர்சன நரசிம்மர்
 2. திருகோஷ்டியூர்
 3. திருநீர்மலை-சாந்த நரசிம்மர்
 4. திருவல்லிக்கேணி-அழகியசிங்கர்
 5. திருவாலி-லக்ஷ்மி நரசிம்மர்
 6. நாகப்பட்டினம்-அஷ்டபுஜ நரசிம்மர்
 7. வேளுக்கை-அழகியசிங்கர்
 8. ஸ்ரீரங்கம்-மேட்டழகிய சிங்கர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

      Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள் (78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)-To be published soon

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements