Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

        தாயார் சமேதராய், 106/108 திவ்ய தேசங்களில், உம்மை காண அருளிய மாதவா, “உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியர்களைப் பணிந்து”, உமக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்.

(May 27 to June 7, 2016) ;  (May 23 to 30, 2017) & Oct 2017

ஸப்த புண்ணிய ஷேத்ரங்கள்-முக்தி தரும் மோட்சத் தலங்கள்-7

 1. வடமதுரை
 2. துவாரகை
 3. அயோத்தி
 4. ஹரித்வார்
 5. காசி
 6. உஜ்ஜயினி (அவந்திகா)
 7. காஞ்சி

96.துவாரகை(கண்ணன் ஆட்சி புரிந்தது) குஜராத்(முக்தி தலம் 7 ல் ஒன்று-மோட்ச துவாரம்).குஜராத்

ஸ்ரீகல்யாண நாச்சியார் (ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீருக்மிணி)
கல்யாண நாராயணன் (துவாரகாதீசன், துவாரகாநாத்ஜி)
56.1 Gomathi Dw

பஞ்ச துவாரகை

 • 1. கோமதி துவாரகா-குஜராத்
 • 2. பேட் துவாரகா-குஜராத்- கிருஷ்ணன் திருமாளிகை
 • 3. டாகோர் துவாரகா-குஜராத்
 • 4. நாத துவாரகா-ராஜஸ்தான்
 • 5. காங்க்ரொலி துவாரகா-ராஜஸ்தான்

Please கீழ்கண்ட இணைய தளத்தில் (LINK) விவரமாக காணவும்

https://drdayalan.wordpress.com/2017/06/05/hre-56

 97. திருவாய்ப்பாடிகோகுலம் கண்ணன் வளர்ந்தது, உத்தர பிரதேஷ்

ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா-ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன்

கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர்.

கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள்.

இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாததால் இரண்டையும் ஸேவித்துவிடுவது நல்லது.

98

98.வடமதுரை(கண்ணன் அவதாரத் தலம்) பிருந்தாவனம்- கோவர்தனம்,உத்தர பிரதேஷ்

 துவரக்நத்ஜு & மதுராநாத்ஜு இரு ஆலயங்கள்

ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்-கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)

     மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, “கிருஷ்ண ஜென்மபூமி‘’ அல்லது விரஜ பூமி என்கின்றனர்.

  முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, “ஜென்மபூமி’ என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானது. இந்த நதியை, “தூய பெருநீர் யமுனை’ என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது.

99.திருக்கண்டம் (கடிநகர், தேவப்பிரயாகை)- கங்கைகரைத் தலம்- நதிகள் கூடுமிடம், உத்தராஞ்சல் 

பீமன் வேள்வி-75 km from Reshikesh

ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நீலமேக பெருமாள்
(ஸ்ரீ புருஷோத்தமன்)

      மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று.

99-a

    தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.

99-b

      இத்தலத்தில் வழிடுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.

99-c

      இத்தலத்தில் கங்கையமுனை கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும்-ஆதிகங்கை  சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது.

99-d

     இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள்.

    ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும்.

100.திருப்ப்ரிதி (நந்தப் பிரயாகை, ஜோஷி மடம்); உத்தராஞ்சல் 

6 மாதம் பத்ரி நாராயணன் சேவை சாதிப்பு-175 km from Devapriyagai; (250 km from Rishikesh)

ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்-பரம புருஷன்

       இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.

100-a

     பத்ரி நாராயணணன் 6 மாத குளிர் காலம், திபாவளி To சித்ரா பௌர்ணமி வரை தங்கும் திருத்தலம்.

100-b

     இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது. பத்ரிநாத் கோயில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

     பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது, கோயிலிலுள்ள முக்கிய தெய்வச்சிலைகளை தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலினுள் வைத்து வழிபடுவர்.

101. திருவதரி ஆசிரமம் (பத்ரிநாத்); உத்தராஞ்சல்      

ஸ்ரீ அரவிந்த வல்லி-ஸ்ரீ பத்ரி நாராயணன்

    வெந்நீர் ஊற்று ஸ்நானம்-கருட தரிசனம்-குரு சிஷ்ய உபதேசம்-திருமந்தரம்-சித்ரா பௌர்ணமி To தீபாவளி-திரையிடுவதில்லை.45 km from Joshi Mutt; (300 km from Rishikesh)

     ROUTE

 1. ரிஷிகேஷ்
 2. திருக்கண்டம்-தேவப்பிரயாகை(75 km from ரிஷிகேஷ்)
 3. சமோலி-பல்கோடி
 4. ஜோஷி மடம் (245 km from ரிஷிகேஷ்)
 5. விஷ்ணுப்பிரியாகைநரதர்-அஷ்டாக்ஷர மந்திர பூஜை செய்த இடம்
 6. பாண்டுகேஸ்வர்- பாண்டவர் ஸ்தலம்
 7. அநுமன் கட்டி(கந்தமாதன பர்வதம்)-அநுமன் & பீமன் சண்டை
 8. அலகாநந்தா கரை-பத்ரிநாத் (300 km from ரிஷிகேஷ்).
  100-d

         சில படிகள் மேலேறி கருடாழ்வானுக்கு வந்தனம் செலுத்திவிட்டு கோவிலின் பிராகாரத்தை அடைய வேண்டும்.

100-c

    ஸ்ரீ பத்ரிநாராயணன் அரவிந்தவல்லித்தாயார், கருடன், நாரதன், நாரநாராயணர்கள் முதலியவர்களுடன் காட்சி தருகிறார். பெருமாள் மட்டும் ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே.

100-f

      எத்தனை தரம் வேண்டுமானாலும்  .  கர்ப்பக்ருஹத்திற்கு வெகு அருகாமையில் அமர்ந்து அபிஷேகங்களையும் அர்ச்சனைகளையும் மனத்திருப்தியுடன் ஸேவிக்கலாம்.

     இப்பெருமானுக்கு எதிரில் திரை போடுவதே இல்லை. திருமஞ்சனம், சாத்துப்படி, நைவேத்யம் எல்லாம் மக்கள் எதிரிலேயே நடக்கின்றன.

      பத்ரிநாராயணன் ஜடாமுடியுடன் சதுர்புஜங்களுடன்  பத்மாசனத்தில் தபஸ் கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாளின் வலதுபுறம் குபேரனும்,

     கருடனும், இடதுபுறத்தில் நர நாராயணர்கள், பூமிதேவி, நீளாதேவி, ஊர்வசி, நாரதர் மற்றும் உற்சவர் ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

      நர நாராயணர் இரு மலைகளின் நடுவே, அலக்நந்தா நதியின் தீரத்திலே பத்ரிநாராயணன் சேவை சாதிப்பது அரிதான காட்சி. அவரை தரிசிப்பதாலும் ஒருமுறை ப்ரதக்ஷினம் செய்தால் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கிறது. பெருமாளின் வக்ஷஸ்தளம் (மார்பு) விஷாலமாக இருக்கிறது.

      பிரம்ம-கபாலம்கோவிலுக்கு வடக்கு (கங்கைக் கரை)-பித்ரு சிரார்த்தம்– மிகச்சிறப்பு

வியாச குகை (Near the temple)- மகாபாரதம்

     நாரதர் ஒரு சமயம் தான் ஆராதனம் செய்துவந்த சாளக்ராம மூர்த்தி காணவில்லை என்று வருத்தத்துடன் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து வந்த சமயம், நான் பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளி இருப்பதாகக் கூறினார். நாரதரும் பத்ரிகாஷ்ரமம் வந்து ஆராதனம் செய்யத் தொடங்கினார். காலையில் பத்ரியிலும், மதியம் போஜனத்திற்கு பூரிஜெகன்னாத் கோயிலுக்கும், இரவு சயனத்திற்கு த்வாரகைக்கும் செல்கிறார். நின்ற நிலையில் கூப்பிய கரங்களுடன் கருடன் பெருமாளின் ஆக்ஜையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.

      யக்ஷராஜன், அலகாபுரி ராஜன் குபேரன் பெருமாளை தரிசிக்க வந்து அங்கேயே தங்கிவிட்டார். ப்ரும்மாவாலும், நாரதராலும் ஆராதிக்கப்பட்டவர்.

     உத்தவர் ஒருமுறை கண்ணனிடம் நீர் வைகுண்டம் சென்றபிறகு பூலோகம் மிகவும் மோசமாகி மக்கள் நிறைய அதர்மங்கள் செய்கிறார்கள். உம்மை எப்பொழுது எங்கு தரிசிப்பது என்று வருந்தியபொழுது பத்ரியில் நான் வாசம் செய்கிறேன். நீர் அங்குவந்து எம்மை தரிசிக்கலாம் என்றார்.

      சக்கரத்தாழ்வாருக்கு சிலா ரூபம் கிடையாது. சக்ர ரூபமாக காட்சி தருகிறார். ப்ருகு முனிவர் பகவானை கோபத்தில் பெருமாளின் வக்ஷஸ்தளத்தை (மார்பு) உதைத்ததால் கோபம் கொண்டு லக்ஷ்மி மார்பை விட்டு அகன்று அங்கே இலந்தை மாற வடிவில் (இலந்தை என்றால் சம்ஸ்க்ருதத்தில் பத்ரி என்று அர்த்தம்) பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

      ஆதிசங்கரர் ஜோஷிமட்டில் த்யானத்தில் இருந்த சமயம் கனவில் பத்ரிநாராயணன் தோன்றி பத்ரிகாஷ்ரமத்தில் சரியான (முகம்) நிலையில் இல்லாமல் தபஸ் கோலத்தில் வீற்றிருக்கிறேன். நீர் அங்கு வந்து தப்த குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடினால் உம் கையில் சாளக்ராம ரூபமாக நான் கிடைப்பேன். என்னை (சாளக்ராமத்துடன்) அந்த ஸ்வயம்பு மூர்த்தியின் முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று கூறி மறைந்தார்.

      ஆதிசங்கரரும் மூன்று முறை தப்த குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) மூழ்கி நீராடிய பிறகும் சாளக்ராமம் கிடைக்கவில்லை. அவர் பகவானிடம் இவ்வாறு வேண்டினார். நீர் கனவில் கூறியபடி நான் நீராடிவிட்டேன். நீர் ஏன் கையில் அகப்படவில்லை. ஆதலால் நான் செல்கிறேன் என்று கூறி மூழ்கியபொழுது அவர் கையில் சாளக்ராமம் கிடைத்தது. அதை எடுத்துச் சென்று ஸ்வயம்பு திருமேனியின் முகமாக பிரதிஷ்டை செய்து ஆராதனம் செய்தார்.

      ஆறு மாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனுஷ்ய பூஜை, தீபாவளி முடிந்து நான்காம் நாள் அகண்ட தீபம் ஏற்றி, சந்தனக்காப்பு சாற்றி கதவை கூடி விடுவார்கள். சித்திரை மாதம் மேளதாளத்துடன் சென்று கதவு திறந்து அன்று முழுவதும் மகா ஹாரத்தி செய்து தரிசனம் ஆரம்பிப்பார்கள்.

   ப்ரம்மாவாலும், நாரதராலும், உத்தவராலும் ஆராதிக்கப்பட்டு இப்போது மனிதர்களால் ஆராதனம் செய்யப்பட்டு வருவதால் இந்த கோவில் மிகவும் பெருமை வாய்ந்தது.

      ஆதிசங்கரர் பெருமாளுக்கு ஆராதனம் செய்ய எவரும் இல்லாததைக் கண்டு அவருடைய சிஷ்யர்களிடம் பெருமாளுக்கு ஆராதனை செய்ய கூறினார். எவரும் முன்வராத போது நம்பூதிரி வம்சத்தில் உள்ளவர்கள் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய சம்மதம் தெரிவித்தார்கள்

.      சங்கரரும் மிகவும் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தான் செய்து தருவதாக கூறி 56 நபர்களை (திருமணம் ஆகாதவர்களை) ஏற்பாடு செய்திருக்கிறார்.

பத்ரிகாசிரமத்திற்க்குச் சமமானத் தலங்கள்

 • திருமணிமாடக்கோயில்திரு நாங்கூர் திவ்ய தேசம்-சீர்காழி11 கருட சேவை

ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு); நாராயணன், அளத்தற்கரியான்,

திருவாலி திருநகரி, சீர்காழி

திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி,
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), ஸ்ரீ திருவாலி நகராளன்,

திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி- Vedha Rajan-செல்வம்

ஸ்ரீ வேதராஜன்
ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்

     பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து திருமங்கை ஆழ்வாராக ஆட்கொண்டது.

102.அயோத்தி சரயு நதிக்கரை

       முக்தி தரும் தலங்கள்-7 ல் ஒன்று-தென் இந்தியபாணி-விபீஷணன் ரங்க விமானம் பெற்ற இடம்

சீதாப் பிராட்டி-ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)

102

இராமர், ஸரயு நதியில் மூழ்கி வைகுந்தம் சென்றார்-இந் நதியில் மூழ்கி நீராடுவது வைகுந்தம் பிராப்தி.

103.நைமிசாரண்யம் வேள்வித்தலம்

ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீபுண்டரீகவல்லி)-ஸ்ரீஹரி (தேவராஜன்);  உத்தர பிரதேஷ் 

      சௌகனர் தலைமையில் 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு பிரம்மனிடம் வேண்டினர்.

103-c

      பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார்.

       கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.

      நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் (காடு) ஆனதால் நேமி-ஆரண்யம் நைமிசாரண்யம் ஆயிற்று.

      வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார்.

      இந்தக்கருத்தைப் பின்பற்றியே இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

     இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.

      இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.

   குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது.

104.சாளக்ராமம் (முக்திநாத்)- கண்டகி நதித் தலம்(23-10-2017)

ஸ்ரீதேவி நாச்சியார்-ஸ்ரீ மூர்த்தி; நேபால்

     நேபாள நாட்டில் காட்மாண்டு நகருக்கு வடமேற்கு 250 கி.மீ தொலைவில் கண்டகி நதிக்கரையில் அமைந்துள்ளது போக்ராவிலிருந்து 1மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம்.

1

     மூலவர் : ஸ்ரீமூர்த்தி (நின்ற-மே); தாயார்  : ஸ்ரீதேவி நாச்சியார்

தீர்த்தம்  : சக்ர தீர்த்தம், கண்டகி நதி

விமானம்  : ககன விமானம்

     இந்த ஸ்தலம் பற்றி மாறுபாடான கருத்துகள் உள்ளன. எனினும் நேபாள தலைநகரமான காட்மண்டு நகரிலிருந்து 272 கி.மீ தொலைவிலுள்ள முக்திநாராயண (முக்திநாத்) சேத்திரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் சுமார் 600 அடி உயரத்தில் இக்கோயில் உள்ளது.

முக்தி நாராயண சேத்ரம் சாளக்ராமம் என்று கூறுவோரும் உண்டு. கண்டகீ நதிக்கரையில் காட்மண்டுவிலிருந்து சுமார் 104 கி.மீ தூரத்தில் உள்ள தாமோதரகுண்டம் என்னும் இடம் தான் சாளக்ராமம் என்றும் கூறுகிறார்கள்.

      நேபாளம் என்பது தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசம். ஹரிபர்வதம் மலை இங்கு இமயத்தின் அடிவாத்தை ஒட்டினால் போல் உள்ளது. சக்ர தீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகிறது. இந்தப் பகுதியே சாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள எல்லா கற்களிலும் விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணிய காலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்கு சாளக்கிராம வடிவத்தில் மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

2

      விஷ்ணு சொரூபம் சாளக்கிராமம். இது ஒருவகை கல். நேபாளத்தின் கண்டகி நதிக்கரையில் கிடைக்கிறது. பூசிப்பதற்கு உகந்த மங்களகரமான சாளக்கிராமத்தின் அவதாரத் தலம் முக்திநாத் ஆகும். முக்திநாத்தில் தரிசனம் செய்தவர்கள் பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். எம்பெருமானின் இருப்பிடமான வைகுந்தத்தில் நித்ய சூரிகளாக வாசம் செய்வார்கள்.

      இக்கோயிலில் ராமானுஜருக்கும் சன்னதி இருப்பது சிறப்பான அம்சம். வடநாட்டு நதிகள் எல்லாம் விஷ்ணுவின் சம்பந்தம் பெற்றிருப்பது போல கண்டகி நதியாகிய பெண் தேவதையும் பெருமாளிடம் அருள் பெற வேண்டும் என்று தவம் செய்தாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சாளக்கிராம ரூபத்தில் இந்நதியின் கரையோரத்தில் பெருமாள் அவதரித்தார்.

105.அகோ பலம் – அகோபிலம்(சிங்கவேள் குன்றம்):

12, 13 & 14-8-2016

Please also visit at the LINK given below:

    அகோபிலம் LINK (HRE-53) :  https://drdayalan.wordpress.com/2017/03/08/hre-

ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)

ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்); ஆந்திரம்

      இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ (தூண்) உள்ளது.

அகோபிலம்: 1 + (1 to 9); A to D

கீழ்-அகோபிலம்:

       பிரகலாத வரதன் (லஷ்மி நரசிம்மர்- அம்ருதவல்லி, செஞ்சுலஷ்மி): GROUND LEVEL. Will not come under Nava Nasomhar-Blesses Nava Nasimhar Darshans

       திருப்பதி சீனிவாசப் பெருமாள் தனது திருக்கல்யாணம் முடிந்து வணங்கிய பெருமாள்-சீனிவாசப் பெருமாள் சநநிதியும் உண்டு.

       (உற்ச்சவ-ஜ்வாலா நரசிம்மர் அகோபில (உக்ர) நரசிம்மர் சந்நதியிலும், மாலோல-உற்ச்சவர் அகோபில மட திருவராதனையிலும் உள்ளனர்).

105

      நவ-நரசிம்மர்களில் ஏழு உற்ச்சவ நரசிம்மர்கள் இங்கு உள்ளனர்

தூணில் நவ-நரசிம்மர்கள்- பெருமானின் இடது பக்கத்தில், ஒரே பக்கமாக மஹாலஷ்மி தாயார் ஆண்டாள் சந்நதிகள்.

அகோபில மடம்-Head Quarters. 45-வது பீடாதிபதி- ஸ்ரீநாராயண யதீந்திர மகாதேசிகன்; 46-வது பீடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்.

நவ நரசிம்மர்கருடாத்ரி (திருமங்கையாழ்வார்-10 பாசுரங்கள்)

 1. ஜ்வாலா நரசிம்மர்: மலை மேல்-செவ்வாய்- CAR Followed by foot path

                மிக கடின வழி-நடை வழி முதலாவது ஜியர் நியமனம்

      இரண்யனை வதைத்த இடம்-எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர்
2. அகோபில (உக்ர) நரசிம்மர் லஷ்மி: குரு மலை மேல்புராதனப்

    பெருமாள்-CAR

      6-வது ஜியர் சிரஞ்சீவியாக குகையில் தியானம்

      உற்ச்சவ-ஜ்வாலா நரசிம்மர் இங்கே உள்ளார்.

3. மாலோல நரசிம்மர்: மலை மேல்-சுக்கிரன்- கடின வழி- CAR Followed by-நடை வழி

      மா=லட்சுமி; லோலன் =பிரியன்; அகோபிலத்திலிருந்து 2 km.

4. க்ரோத (வராக) நரசிம்மர்: மலை மேல்-ராகு- மலை மேல்-CAR

   பாபநாசினி நதிக்கரை-லட்சுமி நரசிம்மர் & வராக நரசிம்மர்-இரட்டை நரசிம்மர்-

    வேதகிரி, கருடாத்ரி மலை பள்ளத் தாக்கு-வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி.

5. கராஞ்ச (சாரங்க-வில்) நரசிம்மர்: மலை மேல்-சந்திரன்-CAR

      மேல் அகோபிலத்திலிருந்து 1 km -கராஞ்ச மரத்தடி

6. பார்க்கவ நரசிம்மர்: மலை மேல்-சூரியன்- பார்க-தீர்த்தக்கரை

      மலை மேல்-2 km; ஜீப் travel 2km -நடைபாதை-100 படிகள்- பரசு ராமர் & ராமரால்

   வழிபடப்பட்டவர்- (பார்க்கவன்=ராமன்)- வற்றாத அட்ஷைய தீர்த்தம்..

7.யோக-நரசிம்மர்:GROUND LEVEL: சனி

      கீழ் அகோபிலம்-மலையடிவாரத்தில்-Car 2km-யோக நிலை-பிரகலாதனுக்கு யோகம்- பக்கத்தில், நவநரசிம்மர்கள் நவகிரகத்துடன் சேவை

      சிறிய மேல்பாகத்தில், காசி ரெட்டியார் பிருந்தாவனம் , ..

8.சத்ரவட நரசிம்மர்: GROUND LEVEL –கேது

      கீழ் அகோபிலம்-மலையடிவாரத்தில் Car 2 km–அமர்ந்த வண்ணம்- கையில்

    தாளம் சங்கீத ஞானம்(NB-யோக-நரசிம்மர் & சத்ரவட நரசிம்மர் nearby sides).

9.பாவன நரசிம்மர்: மலை மேல்-புதன்-(வேதாதிரி மலை)- கடின வழி-நடை வழி

   பவனி நதிக்கரை-அகோபிலம்-6 km; கீழ்-அகோபிலம்-22km.

106.திருவேங்கடம் (திருப்பதிதிருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

     அலர்மேல் மங்கை (பத்மாவதி)-ஸ்ரீதிருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி); ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்); ஆந்திரம்

106

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements