Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

   தாயார் சமேதராய், 106/108 திவ்ய தேசங்களில், உம்மை காண அருளிய மாதவா, “உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியர்களைப் பணிந்து”, உமக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்.

60.1:முக்திநாத் (சாளக்கிராமம்)-First Dasrshan in the Trip

முக்திநாத் தலம்- தரிசனம்:23.10.2017

      முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

           வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

         கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்

ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.

                                                பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.
                                  திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)

சாளக்கிராமம்-ஆழ்வார்கள்-மங்களாசாசனம்(12-பாசுரங்கள்) : Please refer at the END of this Article.

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below (or at the END of this Article)

(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
      https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

 (III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
      https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
      https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

 (VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
      https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

&&&&&&&&&&&&&&&&&&&&

முக்திநாத் பூமி நுழைவு வாசல்

60.1(a) முக்திநாத் பூமி நுழைவு வாசல்

 • ஜொம்ஸம்கண்டகி நதியோரம் வேனில் பயணம்பினனர் குதிரை சவாரிசிறிது தூரம் நடை பயணம்முக்திநாத் தலம்.60.1(b) மலையடிவாரம்
 • முக்திநாத் கோவிலின் பாதை நுழைவு வாசல்- மூன்று கலசங்களோடு ஒரு அமைப்பு.60.1(c)
 • மூலஸ்தான விக்ரகங்கள்-பஞ்சலோகம்
 • எதிரே ஒருபுரம் ஹோமம்-மறுபுரம் விளக்குகள்60.1(d)
 • மூலவர் : ஸ்ரீமூர்த்தி ; தாயார்  : ஸ்ரீதேவி நாச்சியார்
  தீர்த்தம்  : சக்ர தீர்த்தம், கண்டகி நதி
  விமானம்  : ககன விமானம்.
 • கருவறைக்குள், ஸ்ரீசாளக்ராம நாராயணன், முக்தி நாராயணன்  ஸ்ரீதேவி, பூதேவியர்.
 • பெருமாளின் இடது பக்கம் ராமானுஜர், பிள்ளையார். பெருமாளின்  பக்கம் புத்தர் சிலை தாய்லாந்து பாணியில் கிரீடம்.
 • பெருமாளுக்கு வலது பக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் இரண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  இரண்டு சாளக்ராமங்கள்.60.1(e)
 • காலை இந்து முறை பூஜை, மாலை புத்த முறை பூஜை
 • ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது.
 • கோவில் உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். இரண்டு பக்கமும் செவ்வக  தீர்த்தக்குளங்கள். ஒன்று பாவங்கள் களைய, இன்னொன்று புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்டம், லக்ஷ்மி குண்டம்  என்ற பெயரில் இருக்கும்.

    60.1(f)

           கோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.

60.1(g)

         மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம்.வெளியே அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது.

60.1(h)

                கோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை.

            Please refer, SOME IMPORTANT TIPS TO THE NEPAL TRIP, given at the end of this article.

தலபுராணம்

       முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.

    ஜலந்திரன் சாகா  வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.

      ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப்படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்

       அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.

        இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.

        அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது.

     உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.

       பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.

      அதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.

சாளக்கிராமம்

      முக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று.

         ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி!

      உன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.

      அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!” என்று அருள்பாலித்தார்.

       அது முதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.

இராமாநுஜ கூடம்-ராணிபௌவா-ஆஸ்ரமம்

      இவ்விடத்தில், முக்திநாத் பக்தர்கள், முன்கூட்டியே அறிவித்தால், தேவையான தங்கும் வசதி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

 60.1(i)

       இங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப்படும் கற்கள் கிடைக்கின்றன.

       நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும், புஷ்கரத்தில் நீராகவும், பத்ரிநாத்தில் மலையாகவும், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும், முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.

      இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது  நல்லது.

       ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள்   நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்  என்பார்கள்.

60.2:கண்டகி ஆறு (நாராயணீ ஆறு)-கங்கா நதியின் துணை ஆறு: on the way to return

     காளிகண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு, நாராயணீ ஆறு  நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாறை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

     நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.
        இமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது.

      பின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

        காளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி, கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.

      இந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.

    சோன்பூர்பீகார் கண்டகி ஆறு, கங்கா நதியில் சங்கமம்-கங்கா-கண்டகி-கார்கா” நதிகள் சங்கமம்”-கஜேந்திர மோட்சம் 

     கண்டகி நதியில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது. இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது. நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.

       ஐப்பசி-பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் பிரம்மனை போற்றி கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர் மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.

       கங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்!

         இத்தகு பெருமைகள் மிக்க சோன்பூர், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்… சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன.
      முற்காலத்தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ-வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம-லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.

      கோயிலுக்கு அருகில் உள்ளது கோன்ஹரா’ படித்துறை (கோன்ஹரா என்றால் ‘தோல்வி யுற்றது யார்?’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)! சண்டையில் தோற்றது யானையா, முதலையா? வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் பொருத்தம்.

      ஐப்பசி-பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கையில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு! இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், சகலமும் கிடைக்குமாம்!

கந்தர்வன்-ஹூஹூ:முதலையாக

     திரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.

    அப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், ‘ஹுஹு’வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, ‘பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்’ என்று கூறிச் சென்றார் முனிவர்.

இந்திரயுத்யும்னன்:யானையாக

     அதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும்னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறினான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி  அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, ‘பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்!’ என்று அருளிச் சென்றார் அகத்தியர்.

     இதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.

     ஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர்வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

    இதையட்டியே ஹரிஹர்நாத் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம்.

         ஐப்பசி பௌர்ணமியன்று, ‘கோன்ஹரா’ தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர்நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்!

வரலாற்றில் கண்டகி ஆறு

      மகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.

     நேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும்.

      இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

சித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

சாளக்கிராமங்கள்

      முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

 • முற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
 • சக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
 • முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்’ என்பர்.
 • இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
 • வட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
 • குடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
 • சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
 • சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
 • நீல நிறம்—செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)
 • பச்சை—பலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)
 • .வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)
 • கருப்பு—புகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)
 • மஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்
 • பசும்பொன் (அ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்
 • People say that Shalagramam must be obtained from pious person or must be collected from riverbed directly. But it requires extensive search for 1-2 days to find a shalagram from the riverbed.
 • Salagram are usually sold in open form tied together with rubber band. Though it can be used for Pooja purposes, but it is still recommended to buy intact ones. It is difficult to find shops which sell intact salagramams and are usually sold at Muktinath, Pokhara and Kathmandu.
 • சப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.
 • சாளக்கிராமம் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.
 • புகை நிறம் சாளக்கிராமம் துக்கம் , தரித்திரம்

      சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .

      சாளக்கிராமத்தை பால் (அ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் (அ) விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.

60.3: ஜொம்ஸம்-Cold climate(Visit on the way return to India)

       பொக்காரா-ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகு-ரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி, துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக்கூடியது.வாநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம்.

        பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடுகளைத் தொட்டுவிடுவது போல் தாவிச் சென்றது

            Jomsom also known as Dzong-Sampa or New Fort, is a town located at an altitude of about 2700 m in Mustang District, Nepal. It extends over both the banks of the Kali Gandaki River.
           The soaring peaks of Dhaulagiri and Nilgiri form a backdrop. As the district headquarters, it is primarily an administrative and commercial center with government officials and merchants rubbing shoulders with the local residents of the region, known as Thakalis. A company of the Nepalese Army is stationed here. Nearby is Jomsom Airport from where there are regular flights.

         Only jeeps ply between Jomsom and Muktinath. One may inquire with the hotel people or locals as to where the jeep stand is, it is walkable from any hotel in the small town of Jomsom. It is best to leave for Muktinath from Jomsom early in the morning.  The jeeps are share jeeps and take about 12 people on board and charge about Indian Rs. 400 per head for Indian nationals.  The only problem one may face going in a small party is that they have to wait for more passengers so that the jeep gets filled up. Jeeps on the return journey also work in the similar way. Last jeep may be available till evening 4pm. It takes about 2 hours from Jomsom to Ranipuhawa, which is the last stop about 1.5 Km short of Muktinath temple.

       ஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது. வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது  நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.

            Travelers must keep some medicines for altitude sickness; the height climb is quite steep. Trekkers usually take diuretic drug(Eg Diamox). Consult your doctor before taking any medications. From Ranipuhawa, the pilgrims have to walk the 1.5 Km distance to the temple. Horse ride is available from Jeep parking and usually costs about INR 300 per person for one way trip.

             The walk may be difficult for elderly people as the air is quite thin in the high altitude and the last reach to temple has about 80 steps, climb which may prove harder.

60.4: பொக்காரோ-(Visit on the way return to India)

Devi falls-Mahadev Cave-Budha Stuba(World Peace Pagoda) on the Hill

           Pokhara is a metropolis and the largest city of Nepal in terms of area. It is the provincial capital of Province number 4, headquarter of Gandaki Zone and Kaski District
        It is located 200 km west of the capital Kathmandu. It is nine times larger than Kathmandu. The altitude varies from 827m in the southern part to 1,740.

        The Annapurna mountain range, the city is a base for trekkers undertaking the Annapurna Circuit through the Annapurna Conservation Area region of the Annapurna ranges in the Himalayas.

60.5:காட்மாண்டூர் (நேபாள நாட்டின் தலைநகர்), Head quarters of SAARC countries:Visit on the way return to India

      Afghanistan, Bangladesh, Bhutan, India, Nepal, the Maldives, Pakistan and Sri Lanka)-on the way to return

       Some important places of visit at Kathmandu: Pasupathi Nath Temple, Kugeswari Temple, Budha Stuba on the ground level, Floating Vishnu, Kumari of Nepal

60.5.1.பசுபதிநாத் கோவில்

       உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான  காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.

       இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.

      இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

      பசுபதிநாதரின் பக்தர்கள் (இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

தல புராணம்

    கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார்.

      பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம் மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார்.

60.5.2.குஹ்யேஸ்வரிசக்தி பீடம்

      அன்னை சதி தேவியின் திரு முழங்கால்கள் விழுந்து நிலை கொண்ட சக்தி பீடமாக ‘நேபாள நாட்டில் காட்மாண்டுவில் அமைந்துள்ள குஹ்யேஸ்வரி திருக்கோயில்’ போற்றப்பட்டு வருகின்றது.

         எனினும் மேரு தந்திரம் எனும் நூலோ ‘குஹ்ய எனும் பதம் இரகசியத்தினைக் குறிப்பது என்றும் உலகீன்ற அன்னையின் இரகசிய பாகமான திருப்பிருஷ்ட பாகம் விழுந்த காரணத்தினாலேயே இங்குறையும் பீடேசுவரி குஹ்யேஸ்வரி என்று துதிக்கப் படுகின்றாள் என்றும்’ தெரிவிக்கின்றது.

          இவ்விதம் இருவேறு அங்கங்கள் நிலை கொண்டதாகப் புராணங்களும், இன்ன பிற நூல்களும் குறிப்பிட்டாலும், இவையனைத்துமே ‘இத்தலம் 51 சக்தி பீடங்களுள் இடம்பெறுகின்றது’

      உலகப் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் திருக்கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில், பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ளது ‘குஹ்யேஸ்வரி திருக்கோயில்’. இங்குறைந்தருளும் சக்தி பீட தேவியைத் தரிசித்த பின்னரே ஸ்ரீபசுபதிநாதரைத் தரிசிப்பது மரபு.

60.5.3. புத்தானிகந்தாஜல நாராயணர்: ஸ்ரீமன் நாராயண மூர்த்தி

நீரின் மேல் சயனத் திருக்கோலத்தில் திருக்காட்சி.

       நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

     பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை.

         நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 10 km தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 14 அடியில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

       இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில்   சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

        காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது நீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும்.

60.5.4. குமாரி: நேபாள மக்களின் வாழும் கடவுள்

     பௌத்த மதத்தின் ‘சாக்யா’ எனும் பிரிவிலிருந்து பல சோதனைகளுக்குப் பின்னர் ஒரு சிறுமி அம்பிகையாகக் கோயில் கொள்ளத் தேர்வு செய்யப்படுகின்றாள். ‘குமாரி’ எனும் திருநாமமும் சூட்டப் பெற்று அரியாசனம் ஏறியருளும் அச்சிறுமி அதுமுதல் அனைத்து பூசைகளையும் ஏற்றருள்வதோடு மட்டுமல்லாது, அனைத்து உற்சவங்களிலும் அவளே பல்லக்கில் எழுந்தருளியும் வருகின்றாள்.

            நேபாள தேசத்தின் மன்னர் முதல் அனைவரும் இவள் திருவடியினை வணங்கிப் போற்றுவர். பருவம் எய்தியதும் ‘குமாரி அரியாசனத்தை அலங்கரிக்க’ வேறொரு சிறுமி தேர்வு செய்யப்படுவாள். ஆச்சர்யமான இம்மரபு இத்தலத்திற்கே உரித்தான சிறப்பம்சமாகும்.

       மேற்குறித்துள்ள ஆலயங்களைத் தரிசிக்கச் செல்லும் பயணத் திட்டத்தில், இத்தலங்களிலிருந்து 6 மணி நேர பயணத் தொலைவில் (220 கி.மீ) அமைந்துள்ள, அன்னை சீதை அவதரித்தருளிய ஜனக்பூர் சக்தி பீடத்தையும் அவசியம் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

60.5.5. BOUDHA STUPA

            Thousands of Buddhas and Heavenly Deities incarnated as Lamas in the Baudha stupa. Because of Rabne, the rays of bodhisattvas entered in the song from heaven and the holy sound of was heard in the sky. Due to being empowered by the Bodhisattvas, this stupa is viewed with a great reverence.

Myths of the Holy Stupa

           Once in Nepal, there lived a rude and irreligious man. He was detested by everyone and never did anything pious in his life. He owned a shop in the city complex, but hardly anyone came to his shop because he spoke ill of everyone who came there. When he died, he fell straight to hell. Just before he was to be sentenced for his sins, The Buddha appeared and nullified his sentence. When the demons asked The Holy One why he did this, The Buddha answered, “Yes, this man has committed many sins in his life, but once he circled around Boudha Nath while chasing a dog, he had gained a little merit; thus, the Buddhas shall grant him one chance to atone.” After this incident, it is believed that if a person has committed great sins, they can circle around the stupa if only one time–and be granted one chance to atone for their sins.

          People prayed for themselves, but they did not pray for the animals, who transported the brick, soil, and stone. These animals became angry and the elephant prayed to be the Demon in the next life to eliminate the religion, and became the King of Tibet in the next life, where Tajibu had disseminated the holiest religion. In the same way, the Donkey prayed to become a minister in the next life to destroy the religion.

        A crow listened to the prayers of these animals who prayed for the destruction of the holiest religion, and the crow prayed to the Buddha Stupa to be a minister to protect and preserve Buddhism by killing the anti-Buddhist king in the next life. He was born as Lhalung in the next life, and assassinated Langdarma with a bow and arrow.

            The cowherds and shepherds, who prayed for the protection of religion and suppression of demons, were born in Tibet to conserve the religion. In the same way, Chodpurchan and Sarse, two Brahmins who prayed to the stupa to be born in the holy country and to write the holy literature were reborn in the next life. these two translated thousands of holy teachings of Buddha into Tibetan.

          In addition, two crown princes of Nepal prayed to be helpers in disseminating the religion, and became Denma Tsemang in their next lives, and wrote many holy books. Additionally, the religious king of Tibet, Dechen Dewachan, asked the greatest teacher: “what could be the factor and cultural background of our previous life that made us deeply devoted in religion and active in disseminating religious matters”? He was answered and was reverently referred by the Guru as ‘Jyarung Khashor.

ஆழ்வார்கள் மங்களாசாசனம்

(12 பாசுரங்கள்): பெரியாழ்வார்(2) & திருமங்கையாழ்வார்(10)

 பெரியாழ்வார் (2 பாசுரங்கள்)

பெரியாழ்வார் திருமொழி-2.9.5 & 4.7.9 (206 & 399)

206:
பாலை கறந்து அடுப்பின் மேலே வைத்து காய்ச்சுவதற்காக நெருப்பெடுத்துவர மேலண்டை வீட்டிற்குப் போய் அவ்விடத்தில் சிறிது காலம் பேசிக்கொண்டிருந்து விட்டேன்; அவ்வளவிலே சாளக்ராமத்தை இருப்பிடமாக உடைய கண்ணன் வந்து  அந்த பாலை பருகிவிட்டான்

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டி இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனையசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்.                                                     பெரியாழ்வார் திருமொழி-2.9.5 (206)

 399:
வட-மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவாரகா, அயோத்தி, வதரிஆஸ்ரமம்-(பத்ரிகாஸ்ரமம்), கடிநகர் (திருக்கண்டம்-தேவபிரியாகை) என ஏழு திவ்ய தேசங்களை ஒருங்கே மங்களாசாசனம் செய்த பாசுரம்

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.

பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

திருமங்கையாழ்வார்(10 பாசுரங்கள்)

திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி-1.5.1 to 10 (988-997)

சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

988:
இலங்கை இராவணனுடைய பத்துத்தலைகளையும் அறுத்துத்தள்ளிய  எம்பெருமான் ராமனுடைய திவ்ய தேசமாகிய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.

989:
சுவர்க்கத்து தேவர்கள் எங்கும் சூழ்ந்துவணங்க, ஆச்ரயிக்கத்தக்க புஷ்பவாசனைகள் பரவி வீசுகின்ற தடாகங்களால் சூழப்பட்டு எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற எம்பெருமான் ராமனுடைய திவ்ய தேசமாகிய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

கடம் சூழ்க்கரியும் பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,
உடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடிய வடிவாய்ச்சரம் துரந்தான்,
இடம் சூழ்ந்தெங்குமிரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்,
தடம் சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.

990:
தன்னை ஆச்ரயியாத ராக்ஷஸர்களுக்கு , எப்போதும் நன்மை செய்யாத எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்திய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.

உலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா வெண்திக்கும்,
நிலவும் சுடருமிருளுமாய் நின்றான் வென்றி விறலாழி
வலவன், வானோர்த்தம் பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன், சலம் சூழ்ந்தழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.

991:
திருவூரகம் இருப்பிடமாக கொண்ட, திருக்குடைந்தை புருஷோத்தமன், ஸ்ரீராமாவதாரத்தில் ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்து திருப்பேர்நகரில் கண் வளர்ந்தருள்பவனும் திருத்துழாய் மாலையையுடை யவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற சாளக்ராமத்தை சென்று சேர் மனமே.நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே மங்களாசாசனம் செய்த பாசுரம்

ஊராங்குடந்தை யுத்தமன் ஒருகாலிருகால் சிலை வளைய,
தேராவரக்கர்த் தேர்வெள்ளம் செற்றான் வற்றாவரு புனல் சூழ் பேரான்,
பேராயிரமுடையான்  பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான், தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமமடை நெஞ்சே.

992:
மலையை ஏந்தித் தடுத்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற அழகான சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

அடுத்தார்த்தெழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான், விளங்கு சுடராழி விண்ணோர்ப் பெருமான்  நண்ணார் முன்
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக்  கல்லொன்றேந்தியின நிரைக்காத்
தடுத்தான்  தடம் சூழ்ந்தழகாய சாளக்கிராமமடை நெஞ்சே.

993:
தாய் வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும் தயிரையும் வெண்ணெயையும் அமுதுசெய்தவனும் மாவலியிடம் மூன்றடி நிலம் யாசித்து, எல்லாவுலகங்களையும் தாவியளந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுது முடனுண்ட
வாயான் தூயவரியுருவிற் குறளாய்ச் சென்று மாவலையை
ஏயானிரப்ப  மூவடி மண்ணின்றெதா வென்று உலகேழும் தாயான்
காயாமலர் வண்ணன் சாளக்கிராமமடை நெஞ்சே.

994:
நரசிங்கமூர்த்தியாக ஹிரண்யன் மார்பு கிழியும்படி செய்து யாவுமாய் இருக்கும் எம்பெருமானுடைய சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

ஏனோரஞ்ச வெஞ் சமத்துள் அரியாய்ப் பரிய விரணியனை,
ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிருசுடராய்,
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாயலை நீருலகனைத்தும்
தானாய் தானு மானாந்தன் சாளக்கிராமமடை நெஞ்சே.

995:
பரமசிவன் தன் சாபத்தை நீக்கியருள வேண்ட, திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமானின் சந்தனமர சோலைகள் சூழ்ந்த சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

வெந்தாரென்பும் சுடு நீறும் மெய்யில் பூசிக்கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு லகேழும் திரியும் பெரியோந்தான் சென்று, என்
எந்தாய்! சாபம் தீரென்ன இலங்க முதநீர்த்திருமார்பில் தந்தான்,
சந்தார்ப் பொழில் சூழ்ந்த சாளக்கிராமமடை நெஞ்சே!

996:
பாகவதர்களுடைய சமூகம், வண்டுகள் நிறைந்த  சோலைகள், நீர்நிலங்கள் நிறைந்த எம்பெருமானின் சாளக்ராமத்தை சென்று சேர் மனமே

தொண்டாமினமுமிமையோரும் துணை நுல் மார்பினந்தணரும்,
அண்டா வெமக்கேயருளாயென்று அணயும் கோயிலருகெல்லாம்,
வண்டார்ப் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய,
தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமமடை நெஞ்சே.

997:
ஸ்ரீ வைகுண்டநாதனின் ஆயிரந் திரு நாமங்களை ஓதுங்கள் அல்லது திருமங்கையாழ்வார் சாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுக்காக அருளிச்செய்த இப்பாசுரங்கள் சொல்லுங்கள்

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப் புறவின் மங்கை வேந்தன் கலியனொலி செய் தமிழ் மாலை,
ஆராருலகத்தறிவுடையார்  அமரர் நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள்  அன்றியிவையே பிதற்றுமினே.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

60.2(bb)
இந்த நல்ல 108 திவ்யதேச யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள 108 திவ்யதேச புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும் எல்லா தெய்வங்களுக்கும், அனைத்து திவ்ய-தேசங்களையும் தங்கள் திவ்யப்பிரபந்தங்களால் அடையாளம் காட்டியருளிய அனைத்து ஆழ்வார்-ஆச்சாரிய பெருந்தகையர்க்கும் ஆயிரம்-ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கின்றோம்.

         இராமேஸ்வரம், காசி, திரிவேணிச்சங்கமம், கயா, இராமேஸ்வரம், மற்றும் 108 திவ்யதேச யாத்திரைகளை திட்டமிட்டு நன்முறையில் செயல் படுத்திய அனைத்து சொந்தங்களுக்கும் எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றி.


மகன் தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல்: குறள் 70

        மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

*********************************

     SOME IMPORTANT TIPS TO THE NEPAL TRIP

        The South Asian Association for Regional Cooperation (SAARC) is the regional intergovernmental organization and geopolitical union of nations in South Asia, having its Headquarters at Kathmandu, the capital of NEPAL.

 • Its member states include eight countries Afghanistan, Bangladesh, Bhutan, India, Nepal, the Maldives, Pakistan and Sri Lanka.
 • October-November & March-April are suitable sessions to visit NEPAL
 • Since NEPAL is a SAARC country like India we do not require VISA. Indians ID cards like Voter ID, Ration card, Aadhar etc will serve the trip. Anyhow passport if available will be the best.
 • Indian money can be directly paid in Nepal according to the NEPAL money value. Be careful with roadside vendors as they might charge more if paid through INR.
 • It is better to check these TWO ASPECTS at the time of trip for not only to NEPAL even for other SAARC countries as the procedure could likely to change because of some their administrative requirements.
 • ACAP and TIMS permit is required to visit Muktinath. It can be applied at Pokhara and costs NPR 200 and NPR 1000 for Indian nationals. Carry 6 photographs for each passenger. Payments accepted in Nepal Rupee only. Get your ACAP card sealed at checkpost in Jomsom opposite Hotel Oms Home.
 • As of Oct,2017 , direct flights to KATHMANDU are cheaper from Bangalore than from Chennai.A typical flight schedule is given in the following Table

 • PL click below “Flight Plan” for a better clear view of the above table
  Flight Plan
 • Flight from Kathmandu to Pokhara has better view of Himalayan range on the right side. Similarly Kathmandu to Bangalore has good view for the first 30 minutes on the right side. Ask for seats accordingly while check in.
 • It is better to go to Mukthinath first, day by day, in the order (KATHMANDU POKHARA-JOMSOM-MUKTHINATH) and visit the other places while returning from Mukthinath . This will enable the adjustment to the climate & avoid any tiredness that may happen to visit the primary place of the Divya Desam.
 • At higher altitude it is advisable to consume water frequently and take as much electrolyte packets to prevent Altitude sickness.
 • Nepal currency can be usually exchanged at the Hotel where you are staying.
 • Apply for Nepal SIM outside the Kathmandu airport arrival. Ncell is good.
 • The climate at Kathmandu and Pokhara are quite normal like, almost Chennai, but only at JOMSOM it is cold like Ooty and Kodaikanal in India.
 • Travel to Mukthinath: ஜொம்ஸம்-கண்டகி நதியோரம் வேனில் பயணம்-பினனர் குதிரை சவாரி-சிறிது தூரம் நடை பயணம்-முக்திநாத் தலம்.
 • காட்மண்டு விமான நிலையத்தில் கொடுக்கப்படும் இமிகிரேஷன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும்.
 • விமானம் மூலம் வருபவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அவசியம் கொண்டு வேண்டும்.
 • நேபாளத்தில் ISD போன்வசதி உண்டு. சிம்கார்டு தேவைப்படுவோர் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் நகல் கொடுத்துவாங்கி கொள்ளலாம்.
 • இந்திய பணம் ரூ. 50, ரூ.100, ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நேபாளில் பயன்படுத்த முடியும்.
 • முக்திநாத் பயணத்தின் போது போக்ராவில் இருந்து ஜோம்சோம்விற்கு செல்லும் விமானம் இயற்கை சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டால், பேருந்து மூலம் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
      https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

 (III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
      https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
      https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

 (VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
      https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

&&&&&&&&&&&&&&&&&&&&

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 

Advertisements