Tags

, ,

63-நாயன்மார்; 9-தொகையடியார்

கலியுகம் 5118, ஹேவிளம்பி ஆண்டு, பங்குனி-16 (30-3-2018) ; பங்குனி உத்திரம்

 1. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு திருவோடு கொடுத்து அறம் புரிந்த     குயவர்.
 2. இயற்பகையார்: எதையும் அளித்தவர். தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
 3. இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
 4. மெய்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்பொருளாகக் கொண்டவர்.
 5. விறன்மிண்ட நாயனார்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்.
 6. அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்காக ஈடு செய்ய தன் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
 7. எறிபத்த நாயனார்: கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
 8. ஏனாதிநாத நாயனார்: திருநீற்றின் பொலிவைக் கண்டு கொல்லாமல் தாமே இறந்தவர்.
 9. கண்ணப்ப நாயனார்: சிவபெருமானுக்குத் தம் கண்களையும் கொடுத்த வேடுவர்.
 10. குங்கிலியக் கலய நாயனார்: நாள்தோரும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
 11. மானக்கஞ்சாற நாயனார்: தம் மகளின் நீண்ட கூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்.
 12. அரிவாட்டாய நாயனார்: பூசைப் பொருள்கள் தவறித் தரையில் உள்ள நிலவெடிப்பில் சிந்தியமையால் தாமே அறுக்க முனைந்த வேளாளர்.
 13. ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை குழலில் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
 14. மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.
 15. முருக நாயனார்: மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பணியில் ஈடுபட்ட மறையவர்.
 16. உருத்திர பசுபதி நாயனார்: நாள்தோரும் ருத்திர மந்திரங்களை ஓதி முக்தியடைந்த மறையவர்.
 17. திருநாளைப் போவார்: (நந்தனார்): தில்லையில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
 18. திருக்குறிப்புத் தொண்டர்: அடியார்களின் ஆடைகளை துவைத்து உதவியவர்.
 19. சண்டேசுவர நாயனார்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தந்தையின் கால்களை வெட்டிய மறையவர்.
 20. திருநாவுக்கரசு சுவாமிகள்: தேவாரம் பாடியவர். புறச்சமய இருளை நீக்கிய வேளாளர்.
 21. குலச்சிறை நாயனார்: பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
 22. பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
 23. காரைக்காலம்மையார்: இறைவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர். இறைவனால் அம்மையே என அழைக்கப்பட்டவர்.
 24. அப்பூதியடிகள்: திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்றவர்.
 25. திருநீலநக்க நாயனார்: திருஞான சம்பந்தரின் திருமணத்தை தரிசித்துச் சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
 26. நமிநந்தியடிகள்: சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரையே கொண்டு விளக்கு எரித்த மறையவர்.
 27. திருஞானசம்பந்தர்: இறைவி தந்த ஞானப்பால் உண்டவர். தேவாரம் பாடிச் சைவமும், தமிழும் தழைக்கச் செய்த மறையவர்.
 28. ஏயர்கோன் கலிக்காமர்: சுந்தரர் சிவபெருமானைத் தூது அனுப்பியதால் அவரைப் பகைத்துப் பின்னர் சூலைநோய் அடைந்து சுந்தரரின் தொடர்பைப் பெற்ற வேளாளர்.
 29. திருமூலர்: திருமந்திரம் பாடிய சித்தர்.
 30. தண்டியடிகள்: திருவாரூர் கமலாலயக் குளத்தை பிறவிக் குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.
 31. மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்க்கு அன்னதானம் செய்த வேளாளர்.
 32. சோமாசி மாறர்: சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
 33. சாக்கிய நாயனார்: நாள்தோரும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்.
 34. சிறப்புலி நாயனார்: தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.
 35. சிறுத்தொண்ட நாயனார்: இல்லை எனாமல் பிள்ளைக் கறி சமைத்துச் சிவனடியாரை வழிபட்டவர்.
 36. கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளனைச் சிவ வேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.
 37. கணநாதர்: திருஞானசம்பந்தரை வழிபட்டுத் திருக்கயிலையை அடைந்த மறையவர்.
 38. கூற்றுவ நாயனார்: நடராசப் பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.
 39. புகழ்ச்சோழ நாயனார்: தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
 40. நரசிங்க முனையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையர்.
 41. அதிபத்த நாயனார்: நாள்தோரும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப் படைத்த மீனவர்.
 42. கலிக்கம்ப நாயனார்: சிவ வேடம் கொண்ட பணியாளனையும் வழிபட்டவர். மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
 43. கலிய நாயனார்: எண்ணெய் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து கோயிலில் ஒளி உண்டாக்கிய வாணியர்.
 44. சக்தி நாயனார்: சிவனடியார்களை இகழ்ந்தவர்களின் நாவைத் கத்தியால் அரிந்த வேளாளர்.
 45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: ஆட்சியைத் துறந்து சிவத் தலங்களை வழிபட்டு “ஷேத்திர வெண்பா” என்னும் நூலை இயற்றியவர்.
 46. கணம்புல்லர்: கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீப திருப்பணி புரிந்தவர். நெய் இல்லாததால் தலைமுடியையே எரித்தவர்.
 47. காரிநாயனார்: “காரிக்கோவை” என்னும் நூல் இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்.
 48. நின்றசீர் நெடுமாறர்: சமண சமயத்தவராக இருந்து திருஞானசம்பந்தரால் சைவ சமயத்துக்க திரும்பப் பெற்றவர்.
 49. வாயிலார் நாயனார்: சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோயில் அமைத்து திருமஞ்சனம் தூப தீபம் பெற்றவர்.
 50. முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டியபொருளை அடியார்க்கு வழங்கிய வேளாளர்.
 51. கழற்சிங்க நாயனார்: பூ மண்டபத்தில் கீழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டியவர்.
 52. இடங்கழி நாயனார்: தம் செல்வத்தை சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்ட ஒரு குறுநில மன்னர்.
 53. செருத்துணை நாயனார்: கழற்சிங்கரின் மனைவி பூமண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கை அறுத்த வேளாளர்.
 54. புகழ்த்துணை நாயனார்: சிவபெருமான் திருவருளால் பஞ்சத்தில் நாள்தோரும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.
 55. கோட்புலி நாயனார்: சிவபெருமானுக்குப் படைப்பதற்காகத் தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தினரைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய வேளாளர்.
 56. பூசலார் நாயனார்: மனக்கோயில் கட்டிச் சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.
 57. மங்கையர்கரசியார்: நின்றசீர் நெடுமாறனாரின் மனைவியாவார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரைச் சைவராக்கினார்.
 58. நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம் முதலியன கொடுத்த சாலியர்.
 59. கோச்செங்கட் சோழ நாயனார்: திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர். 70 சிவன் கோயில்களைக் கட்டியவர்.
 60. திருநீலகண்ட யாழ்பாணர்: திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் அமைத்துப் பாடியவர்.
 61. சடைய நாயனார்: சுந்தரரின் தந்தையார்.
 62. இசைஞானியார்: சுந்தரரின் அன்னையார்.
 63. சுந்தரமூர்த்தி நாயனார்: சடையனார், இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர். சிவபெருமான் தோழர், தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

9 தொகையடியார்

 1. தில்லைவாழ் அந்தணர்:தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்
 2. பொய்யடிமை இல்லாத புலவர்: சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
 3. பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதல் கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
 4. பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள். பிற தெய்வத்தை பாடாதவர்கள்.
 5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
 6. திருவாரூர்ப் பிறந்தார்: திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.
 7. முப்போதும் திருமேனி தீண்டுவார்: மூன்று காலங்களில் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
 8. முழுநீறு பூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்கள்.
 9. அப்பாலும் அடிசார்ந்தார்: தமிழ் நாட்டுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.
  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&மெய்யன்பரே,

  • Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கில் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
  • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.
  • இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கில் (LINKs) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  Also, Please click below to go  to CONTENTS for all the Articles in HRE:

  https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements