Tags

, , ,

 1. ஆலையமே சிறப்புகள் தான், எனினும் சிறப்புகள் உள்ள ஆலையங்கள் பல-அதில் சில————–<<<<

  3-Gula-Guru-Thiru

 2. ஆந்திரா-சாமல் கோட்டை சாலை சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-பத்ராசல ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
 3. திருமலை-பெருமாளுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று வில்வத் தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
 4. மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம்- நடராஜர்.
 5. திருக்கண்ணபுர-கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு, சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
 6. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
 7. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் .
 8. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.
 9. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8, 16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
 10. ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் உருவ விக்ரஹம், தாம் உகந்த திருமேனி, தம் விக்கிரகத்தை தானே தழுவித் தந்ததால் ‘தான் உகந்த திருமேனி’ என்று வழங்கலாயிற்று.
 11. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.
 12. கும்பகோணம் திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
 13. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவ-நந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.
 14. வேலூர்-விருஞ்சிபுரம்  கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.
 15. சென்னை-திருப்பதி சாலை நாகலாபுரம் ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.
 16. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.
 17. மோட்சம் தரும் எழு புனித நகரங்கள் காசி (வாரணாசி), அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை.
 18. ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன் கோவிலில் குளத்தில் கல் மிதக்கும்.
 19. காசி அதிசயங்கள்: காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்ப தில்லை.
 20. திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
 21. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.
 22. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
 23. ஆந்திராவில் உள்ள பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
 24. நாங்குநேரி பெருமாளுக்கு எண்ணெய் அபிஷேகிக்கப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 25. முக்கண் உடைய சிங்கப்பெருமாள் கோயில் மூலவர் நரசிம்மமூர்த்தி.
 26. மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.
 27. திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார்.
 28. காஞ்சி-வரதராஜப்பெருமாள் அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார். அவரது அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டு கிடைக்கும்.
 29. திருக்கோவிலூரில் மூலவர்-திருவிக்ரசுவாமி இலுப்பை மரத்தால் ஆனவர்.
 30. கர்நாடகம், ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள்.
 31. திருமலை, தான் தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சந்நதி இல்லை.
 32. பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
 33. காஞ்சிபுர-விளக்கொளிப் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
 34. மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
 35. கும்பகோணம் “தாராசுரம்” ஐராவதீஸ்வரர் கோவிலில் சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர்சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.ஆலையங்களே சிறப்புகள்-சிறப்புகள் உள்ளனவையே ஆலையங்கள்.
 36. கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
 37. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலை வாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
 38. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.
 39. மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
 40. காஞ்சி-உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
 41. திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.
 42. கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

  *****Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Advertisements