• About

Hindu Religious Extracts(HRE)

~ Vainavam & Saivam: Total Surrender and Sacrifice

Hindu Religious Extracts(HRE)

Tag Archives: திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

HRE-40: I.சோழ நாடு திவ்யதேசங்கள்-40 (1-40); திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-28 to 39

08 Tuesday Mar 2016

Posted by Prof. Dr. A. DAYALAN in வைணவம், Vainavam

≈ 4 Comments

Tags

அரிமேய விண்ணகரம், சோழ நாடு திவ்யதேசங்கள், தாடாளன் கோயில், திருக்காழிச்சீராம விண்ணகரம், திருநாங்கூர் கருடசேவை, திருநாங்கூர் திவ்ய தேசங்கள், திருவாலி-திருநகரி, தென்திருப்பதி, மணிமாடக் கோயில், வைகுந்த விண்ணகரம்

திருச்சி, கும்பகோணம், சீர்காழி,

தஞ்சாவூர், நாகப்பட்டினம் & மாயவரம்

{February, 25th to 28th & March 5th , 2016}

###அனைத்து சோழ நாடு திவ்ய தேசங்களிலும், மூலஸ்தானத்தில், உற்ச்சவர்களுடன், சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் சேவை சாதிக்கின்றார்.

***தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

CONTENTSEdit

HRE-40A: சோழ நாடு திவ்யதேசங்கள்(1-40)-LIST
HRE-40(B): திருக்காழிச்சீராம விண்ணகரம்-தாடாளன் கோயில்
HRE-40(C): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-LIST
HRE-40(D): திருநாங்கூர் திவ்ய தேசங்கள் (28 To 39)-விபரங்கள்

&&&&&&&&

Pleases click below “HRE-Div-108 LIST“, for 108 திவ்யதேச பட்டியல்-Table form:-
HRE-Div-108 LIST

&&&&&&&&&

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

Pl Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below (or at the END of this Article)

(I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
      https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

 (III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
      https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
      https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

 (VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
      https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

&&&&&&&&&

Also, please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

&&&&&&&&&&&&&&&&&&&&

  • (1) ஸ்ரீரங்கம் (திருவரங்கம்)

ஸ்ரீரங்க நாச்சியார்-ஸ்ரீ ரங்கநாதன்; நம்பெருமாள், திருச்சிராப்பள்ளி-சுயம்புத்தலம்– மத்யரங்கம்–புஜங்க சயனம்

ஸ்ரீரங்கம்-சிறப்பு

  • சோழநாடு திவ்ய தேசங்களில், 108 திவ்ய தேசங்களிலும், முதன்மையானது ஸ்ரீரங்கம்.
  • பூலோக வைகுந்தம்
  • ஸ்வயம்வ்யாகத (சுயம்பு) ஷேத்ரம்
  • தமிழ்நாட்டில், திருச்சி அருகே, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம்.
  • மத்தியரங்கம் என்று பெயர். இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
  • பன்னிறு ஆழ்வார்களில், 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம்.
  • மங்களாசாசன பாசுரங்கள்-247
  • பகாவானுடன் நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்த மதுரகவியாழ்வார், எந்த திவ்யதேசங்களைக் குறித்துப் பாடவில்லை.

          7…7…7…7…7…7…7… பெருமைகள்

  • அவைகளில் சில—->>>>>>>
  • ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்கள் ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் கோவில்.
  • (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் பெரிய பெருமை உடையது ஸ்ரீரங்கம்.
  • ரங்கனாதருக்கு 7-நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார்.
  • நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
  • நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
  • உற்சவத்தில் 7ம் நாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
  • நவராத்ரி உற்சவத்தில் 7ம் நாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
  • தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
  • ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
  • இராப்பத்து 7ம் நாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
  • தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.
  • பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்
  • இராப்பத்து 7ம் நாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக சேவை சாதிப்பார்.
  • பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.
  • ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.
  • வருடத்திற்கு ஏழு சேவைகள் (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.
  • ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை
  • சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் ஆக ஏழு முறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள்-சித்திரை (2) வசந்த உற்சவம்-வைகாசி(3) பவித்ரோத்சவம்-ஆவணி (4) ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி (5) அத்யயன உற்சவம்-மார்கழி (6) பூபதி திருநாள்-தை (7) பிரம்மோத்சவம்-பங்குனி.
  • நம்பெருமாள் எழுந்தருளும் வாகனங்கள்-7 (1) யானை- தை, மாசி, சித்திரை (2) கருடன்- தை, பங்குனி சித்திரை (3) பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமன்- தை, மாசி, சித்திரை (7) ஹம்சம் – தை, மாசி, சித்திரை

ஏன் பள்ளி கொண்டீரய்யா?

^^^ஸாந்தாகாரம் புஜக ஸயநம்……….>>>

***ஜனகர் மருகனே-பெரியாழ்வார் மாப்பிள்ளையே ஏன் பள்ளி கொண்டீரய்யா?—->>>

40 குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
எந்தை கடல் நிறக் கடவுளே அரவணை மேல்
ஏன் பள்ளி கொண்டீரய்யா……?

ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த
ஆற்றின் நடுவிலே! ஏன் பள்ளி கொண்டீரய்யா?

ஸ்ரீரங்கநாதரே! ஏன் பள்ளி கொண்டீரய்யா?
என்ன இளைப்போ? ஏன் பள்ளி கொண்டீரய்யா?

கோஸிகன் சொல் குறித்ததற்கோ?
அரக்கி குலையில் அம்பு தெறித்ததற்கோ?

ஈசன் வில்லை முறித்தததோ? பரசுராமனின் வீரம் பறித்ததோ?
மாசில்லா மிதிலேசன் மகளுடன் நடந்ததோ?

தூசிலா குகனோடத்திலே கங்கைக் கடந்ததோ?
சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்ததோ?

(ஏன் பள்ளி………..)

காசினில் மாரீசனோடிய கதி தொடர்ந்ததோ?
ஓடிக்களைத்தோ தேவியைத தேடிய இளைப்போ?

மரங்கள் ஏழுந் துளைத்ததோ? கடலைக் கட்டி வளைத்தோ?
இலங்கை நகரை இடித்ததோ? ராவணாதிகளை முடித்ததோ?
(ஏன் பள்ளி கொண்டீரய்யா………..)

  • (2)திருக்கோழி (உறையூர், நிசுலாபுரி)

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்-ஸ்ரீ அழகிய மணவாளன்,திருச்சிராப்பள்ளி, திருப்பாணாழ்வார் அவதார தலம்–நந்த சோழன்

  • (3)திருக்கரம்பனூர்(உத்தமர் கோவில்), கடம்ப க்ஷேத்ரம்

ஸ்ரீ பூர்வ தேவி-ஸ்ரீ புருஷோத்தமன், திருச்சிராப்பள்ளி-பெருமாள் கடம்பமாக–திருமங்கையாழ்வார் தங்கியது; சிவனின் பிரம்மஹத்தி தோஷ நிவரத்தி- சிவன்-பிக்ஷடனர்

  • (4)திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்; வராக-ஷேத்திரம்)

ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்-ஸ்ரீ புண்டரீகாக்ஷன், திருச்சிராப்பள்ளி-சிபி,வெண்பன்றியாக பூஜை– உய்யங்கொண்டார் ராமாநுஜர் தங்கிய தலம்; உத்ர-தட்ஷிண வாயில்கள்- ஸ்வேத வராகம்

  • (5)திருஅன்பில்

ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்-ஸ்ரீ வடிவழகிய நம்பி; ஸ்ரீ சுந்தரராஜன், திருச்சிராப்பள்ளி –மண்டுக ரிஷி சாப விமோசனம்- ஆண்டாளுடன் அமர்ந்த கோலம்

  • (6)திருப்பேர்நகர்(கோவிலடி)-அப்பக்குடத்தான்

ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)- அப்பக்குடத்தான்; அப்பலரங்கநாதன், திருச்சிராப்பள்ளி –கல்லணை அருகில்; – நம்மாழ்வார் வைகுந்தம் புறப்பட்ட தலம்–மக்கட்பேறு அப்பாலரங்கன்–அப்பம்— வலது கை கீழ் குடம்

  • (7)தஞ்சைமாமணிகோயில்

(i) ஸ்ரீ செங்கமல வல்லி-நீலமேகப் பெருமாள்
(ii) ஸ்ரீ தஞ்சை நாயகி-நரசிம்மர்
(iii)
ஸ்ரீ அம்புஜவல்லி-மணிக்குன்ற பெருமாள் ; தஞ்சாவூர் 

  • (8)திருக்கண்டியூர்

ஸ்ரீ கமலவல்லி-ஹர சாப விமோசன பெருமாள்; கமலநாதன், திருவையாறு, திருச்சி-அரன் சாபம் தீர்ந்தது

  • (9)திருக்கூடலூர் (ஆடுதுறை பெருமாள் கோவில்) (வராக-ஷேத்திரம்)

ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)-வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்); கும்பகோணம் –அம்பரிஷன்–தூர்வாசர்

  • (10)திருகவித்தலம் (கபிஸ்தலம்)

ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)- கஜேந்திர வரதன்; கும்பகோணம் –Gajendra Motsam

  • (11)திருப்புள்ளம்(பூதங்குடி)

ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)-ஸ்ரீ வல்விலி ராமர்; கும்பகோணம்-ஜடாயுக்கு ஈமக் கடன்

  • (12)திருஆதனூர்

ஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ  ஆண்டளக்குமையன்; கும்பகோணம்-இந்திரன் பூஜை

  • (13)திருகுடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்)

ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)-ஸ்ரீ சாரங்கபாணி; கும்பகோணம்- பிருகு–திருமழிசையாழ்வார்- சதுர்த்த ரங்கம்-உத்தான சயனம்.

  • (14)திருவிண்ணகர், ஒப்பிலியப்பன் கோயில்

ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்-ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்); கும்பகோணம் 

  • (15) திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)-தக்ஷிண ஜகந்நாதம்–சீனிவாச தலம்) 

ஸ்ரீ செண்பக வல்லி தாயார்-ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்), கும்பகோணம் -Jaganatha Perumal-நந்தி–தவம்- நந்தி வாசம் சிபி புறா நிகழ்வு

  • (16)திருநறையூர்(நாச்சியார் கோயில்)

ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்-திருநறையூர் நம்பி; கும்பகோணம் – கல்கருடன்-; மமானார்-மேதாவி ரிஷி ; 108 DivDesa விக்ரங்கள் தரிசனம்

  • (17)திருச்சேறை- பஞ்சஸார சேத்திரம் 

ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)-ஸ்ரீ சாரநாதன்; கும்பகோணம்–பிரமன் பானையில் வேதம் காத்தல் ; மேற்கு குளக்கரை-வர ஆஞ்சநேயர்

  • (18)திருகண்ணமங்கை

ஸ்ரீ அபிசேக வல்லி-பக்த வத்சல பெருமாள்; கும்பகோணம் – பாற்கடல்–திருமகள் திருமணம்-வைகுண்ட நாதன் கருடசேவை சிலைகள் அழகு; தயார் சந்நதி-மூலவரும் உற்சவரும் ஒரே முக-ஜாடை

  • (19) திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)

ஸ்ரீ கண்ணபுர நாயகி-நீல மேகப் பெருமாள்; சௌரிராஜ பெருமாள்;     நாகப்பட்டினம்-வரதஹஸ்தம்-மந்தர சித்தி ஷேத்திரம்;

  • (20)திருகண்ணங்குடி- வெண்ணை–கண்ணன்

ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)-ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்); தாமோதர நாராயணன்; கும்பகோணம் -காயாமகிழ்-சந்நதி பின்புரம்

  • (21)திருநாகை

ஸ்ரீ சௌந்தர்ய வல்லி-நீலமேகப் பெருமாள்; சௌந்தர்யராஜன்; நாகப்பட்டினம்- நரசிம்மர் நாகன் பட்டினம்

  • (22)திருசிறுபுலியூர்

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்-அருள்மாக்கடல் (குழந்தை வடிவ-ஜலசயனப் பெருமாள்); க்ருபா  சமுத்ரப் பெருமாள்; மயிலாடுதுறை- புலி கால் வியாக்கபாதர்–மோட்சம்.

மூர்த்தி சிறியது எனினும் கீர்த்தி பெரியது.

          பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.

22.1

    பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

        108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.

   ஜலசயனத் திருக்கோலத்தை பெருமாள் கொண்டிருப்பது இந்த திருச்சிறுபுலியூரில்தான். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம்.

         மூலவருக்கு அருமா கடல் அமுதன் என்று பெயர். உற்சவர், கிருபா சமுத்திரப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுர த்தினுள் நுழையும்போது பெருமாளும் பிரமாண்ட தோற்றம் கொண்டிருப்பார் என்று நினைத்து அவரை தரிசித்தால் வியப்பு விழிகளையும் மனதையும் கவ்வும்.

22.2

        ஏற்கெனவே பிரமாண்ட எழிலுடையவராகப் பெருமாளை வேறு திவ்ய தேசங்களில் தரிசித்தவர்களுக்கு இந்தச் சிறு வடிவம் வித்தியாசமான தோற்ற மாகப்படுவதில் ஆச்சரியமில்லை.

            ஆனால் இதே ‘ஏமாற்றம்’ திருமங்கையாழ்வாருக்கும் ஏற்பட்டது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. புலிக்கால் முனிவருக்காக அவர் இப்படி குறுந்தோற்றம் கொண்டார் என்றாலும் தனக்கு அது திருப்தியளிக்கவில்லை என்பதால், ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டார் ஆழ்வார். உடனே இவரையும் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், பெருமாள் அசரீரியாக, ‘நீ பார்க்க விரும்பும் வடிவை திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் காண்பாயாக’ என்று அருளிச் செய்தார்.

     திருவனந்தபுரம் போல தலையை இடது ஓரத்துக்கும், வலது ஓரத்துக்குமாக அசைத்து தரிசிக்க வேண்டிய அவசியம் போல, திருக்கண்ணமங்கையில் தலையை கீழிருந்து மேலாகக் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டிய அவசியம்!

     திருக்கண்ணபுரத்தில் வேறு அமைப்பில், பிரமாண்டமாகத் தனக்கு தரிசனம் தர உத்தரவாதம் அளித்திருக்கும் பெருமாளின் கருணையில் நெகிழ்ந்து இந்த திருச்சிறுபுலியூர் பெருமாளை உள்ளம் உருகி மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார்:

கருமா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெருமால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே!

             ‘மிகப் பெரிய, கருநிறம் பூண்ட மேகம் போன்றவனே நீ குளிர்ச்சி மிக்கவன்தான்; ஆனால், அன்பு இல்லாதவர் உன்னை நெருங்க முடியாதபடி நெ ருப்பாக தகிப்பவன் நீ. அதேசமயம், அன்பர்களுக்கு குளிர்ந்த நீர் போன்று மகிழ்வளிப்பவன்.மிகப் பெரிய மலை போன்ற வடிவுடையவன் நீ; ஆனால் இந்த சிறுபுலியூர் தலத்தில் அன்பருக்காகத் தன்னைச் சுருக்கிக்கொண்டபெருந்தகை நீ. இந்தத் தலத்தில் திருமகள் நிலைத்து வாழ்கிறாள். இது போதாதென்று பெறற்கரிய கடல் அமுது போன்றவனாகவும் நீ திகழ்கிறாய். உனது திருவடிகளைச் சரணடைகிறேன்’ என்கிறார்.

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே (பெரிய திருமொழி 7-9-1)

       கள்ளத்தனம் செய்யும் மனம், தூய்மையை அடையும் வழியினை எண்ணுபவர்களே நீங்கள் சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் உறையும் சலசயனப் பெருமான் திருவடிகளைத் தொழுவீர்களாக. அவன் அருள்மாகடல். எனவே நம் மனதை நிச்சயம் தூய்மை செய்திடுவான். தொன்று தொட்டு விளங்கும் சிறுபுலியூர் திவ்ய தேசமானது, பரந்த நீர் நிலையினை உடையது. அதில் உள்ள அலைகளின் வெள்ளமானது, கரையில் பற்பல மணிகளைக் கொண்டு வந்து தள்ளுகிறது.

           தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார்.

            ஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர். இவ்வாறு, புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.

            இங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன், சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள். வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.

          பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.

  • (23)திருதலைச் சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)

ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்-நாண்மதியப் பெருமாள்  (வெண்சுடர் பெருமாள்) , வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்); மயிலாடுதுறை 

  • (24)திருவெள்ளியங்குடி- சுதை வடிவ மூலவர் 

ஸ்ரீ மரகத வல்லி-கோலவல்வில்லி ராமன் (சுதை வடிவம்), ஸ்ருங்கார சுந்தரன்; சீர்காழி-சுக்ரன் வழிபட்ட தலம் ; கருடன் சங்கு–சக்ரம்

  • (25)திருவழுந்தூர்(தேரழுந்தூர்)

ஸ்ரீ செங்கமல வல்லி-தேவாதிராஜன்; ஆமருவியப்பன்; மயிலாடுதுறை– பிரம்மா–பசுக்களை கவர்தல்– கம்பர் பிறந்த தலம்–கம்ப மேடு

  • (26)திருஇந்தளூர்

ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி), பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்); மயிலாடுதுறை 

  • (27)திருக்காழி ஸ்ரீராம விண்ணகரம்

ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)-திரு விக்ரமன் (தாடாளன்); திரிவிக்ரம நாராயணன்; சீர்காழி- திருமங்கையாழ்வார் சம்பந்தரை வாதில் வென்றது,

  • (28)திருவெள்ளக்குளம் (அண்ணன்கோயில்),திரு நாங்கூர்- தென்திருப்பதி

ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி; ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்; சீர்காழி

  • (29)திருதேவனார் தொகை- திரு நாங்கூர்

ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி-தெய்வநாயகன்; மாதவப் பெருமாள்; சீர்காழி 

  • (30)திருக்காவளம்பாடி-திரு நாங்கூர்

ஸ்ரீ மடவரல் மங்கை-ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)-– கிருஷ்ணன் பாரிஜாத மலர்; சீர்காழி 

  • (31)திருபார்த்தன் பள்ளி-திரு நாங்கூர்

ஸ்ரீ தாமரை நாயகி-ஸ்ரீ தாமரையாள் கேள்வன்; ஸ்ரீ பார்த்தசாரதி; சீர்காழி- அர்ஜுனன் பூஜை 

  • (32)திருவைகுந்த விண்ணகரம்-திரு நாங்கூர்

ஸ்ரீ வைகுந்த வல்லி-ஸ்ரீ வைகுந்த நாதன்; சீர்காழி-வைகுண்டம்-கருடன் பெருமாள் பாத சேவை 

  • (33)திருவண்புருடோத்தமம்-திரு நாங்கூர்

ஸ்ரீ புருஷோத்தம நாயகி-ஸ்ரீ புருஷோத்தமன்; சீர்காழி-Ayothi-Raman

  • (34)திருசெம்பொன்செய் கோயில்-திரு நாங்கூர்

ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்-ஸ்ரீ பேரருளாளன்-ஹேமரங்கன் (செம்பொன்னரங்கன்); சீர்காழி-தங்க-பசு

  • (35)திருமணிக்கூடம்- திரு நாங்கூர்

ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி ; வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்) ; சீர்காழி 

  • (36)திருத்தெற்றிஅம்பலம்- திரு நாங்கூர்

ஸ்ரீ செங்கமல வல்லி-செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்);             சீர்காழி-அம்பலம்

  • (37)திருஅரிமேய விண்ணகரம்-திரு நாங்கூர்-

ஸ்ரீ அம்ருதகட வல்லி-குடமாடுகூத்தன்; சதுர்புஜ கோபாலன்;  சீர்காழி-கோவர்த்தன மலை

  • (38)திருமணிமாடக்கோயில்-திரு நாங்கூர்

ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு); நாராயணன், அளத்தற்கரியான்; சீர்காழி – பத்ரிகாசிரமம் –11 கருட சேவை

  • (39)திருவாலி– திருநகரி- திரு நாங்கூர்

திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), ஸ்ரீ திருவாலி நகராளன்,

திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி, ஸ்ரீ வேதராஜன், ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்– Vedha Rajan-செல்வம்

சீர்காழி

  • (40)திருச்சித்திரக்கூடம்

ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-கோவிந்தராஜன்; தேவாதி தேவன் (பார்த்தசாரதி); சிதம்பரம்

HRE-40(B): திருக்காழிச்சீராம விண்ணகரம்-தாடாளன் கோயில்- ஸப்த-ராம சேத்திரம்-சீர்காழி

மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

  உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.

தலவரலாறு

     உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.

    திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்

    திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாலி, திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகின்றார்.

     பரமபதத்திற்கு சமமான தலம் தாள்களால் உலகம் அளந்தமையால் தாள்+ஆளன் = தடாளன். தன் ஆயுள்பற்றி கர்வமடைந்த பிரமனை அடக்க உரோமசமுனி தலையிலிருந்து ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுள் 1வருடம் குறைய தவமிருந்து அருள் -வேண்டு கோளுக்கு திரிவிக்ரம அவதாரக் காட்சி தலம். பிரம்மனின் ஆயுளும் உரோமச முனியின் ஒருரோமமும் இனை எனக்கூற பிரம்மனின் கர்வம் அடங்கியது.

HRE-40(C): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-12(28 To 38)- LIST

திருமங்கையாழ்வார் மங்களாசனம்

(திருநாங்கூருக்கு வெளியே)-5

  1. திரு வெள்ளக்குளம்-அண்ணன் கோவில்-28
  2. திரு தேவனார்த் தொகை-29
  3. திரு பார்த்தன் பள்ளி-31
  4. திரு மணிக்கூடம்-35
  5. திரு தெற்றியம்பலம்-36

(திருநாங்கூருக்குள்)-6

  1. திரு காவளம்பாடி-30
  2. திரு வைகுந்த விண்ணகரம்-32
  3. திரு வண்புருடோத்தமம்-33
  4. திரு செம்பொன் செய்கோயில்-34
  5. திரு அரிமேய விண்ணகரம்-37
  6. திரு மணிமாடக் கோயில்-38 ; 11(5+6) -கருட சேவை தை அமாவாசை மறு நாள் 1pm to 11 pm}

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

HRE-40(D): திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-12 (28 To 39)- விபரங்கள்

“மற்ற திவ்ய தேசங்களையும் தரிசித்த பலனைத் தரும் திவ்யமான திவ்ய தேசங்கள்”

28.திருவெள்ளக்குளம்-அண்ணன் பெருமாள் கோயில்-தென்திருப்பதி

இறைவன்– கிழக்கு நோக்கி நின்ற அண்ணன் பெருமாள் எனப்படும்           ஸ்ரீநிவாசன்
இறைவி–அலர்மேல் மங்கை

28    திருமலையில் வழங்கப்படும் இறைவனின் பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.

  திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.

    திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும்.

   “திருவெள்ளக்குளம் திருமால்’, திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார். 

29.திருத்தேவனார் தொகை

இறைவன்–தெய்வநாயகன், மாதவநாயகன்
இறைவி–கடல்மகள் நாச்சியார்

29    திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.

      “திருத்தேவனார் தொகை பெருமாள்’, தன்னுடன் கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார்.

30. திருக்காவளம்பாடி

இறைவன்: ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)
இறைவி: மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

31  கண்ணன் சத்தியபாமாவுடன் நரகாசுரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான்.

  வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான்.

   துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான்.

   திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.

   “திருக்காவளம்பாடிப் பெருமாள்’, காஞ்சியிலுள்ள பாடகப்பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார்.

31.திருப்பார்த்தன் பள்ளி

   இறைவன்–மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்,தாமரையாள் கேள்வன்
இறைவி– தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்

    திருவெண்காட்டிலிருந்து 2 மைல் தூரம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.

   பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.

  “திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான்’ சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேரளிக்கிறார்.

32. திரு வைகுந்த விண்ணகரம்

வைகுண்ட நாதர் திருக்கோவில்-வைகுண்ட விண்ணகரம்.

  மூலவர் வைகுண்ட நாதர்-அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியர்களுடன் காட்சி.

*வைகுண்டதில் பெருமான் காட்சி தருவது போல் இங்குள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி காட்சி தருவது கூடுதல் சிறப்பு.

33*இந்த திவ்ய தேசத்தில் தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது.

  *பொதுவாக அனைத்து பெருமாள் ஸ்தலங்களிலும் கருடன் பெருமாள் எதிரே நின்று காட்சி கொடுப்பார், ஆனால் இந்த புண்ணிய திவ்ய தேசத்தில் கருடன் பெருமாளின் திருவடி கீழ் காட்சி தருகிறார்.

  *மூலவர் மேல் உள்ள விமானம் ” அனந்த சத்ய வர்த்தக” விமானம் என்று அழைக்கப்படுகிறது.

  *பெருமாள் வைகுண்ட நாதன் வைகுண்டதில் காட்சி தருவது போல் இருப்பதால், இந்த ஸ்தலம் ” பரமபதத்திற்கு” சமமான ஸ்தலம்.

*பெருமாள் “தாமரை கண்ணன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

     “வைகுந்த விண்ணகரப் பெருமாளை’, வணங்கியோர் ஸ்ரீ வைகுந்த நாயகனையே வணங்கிய அருள்பெறுவர்

33. திருவண்புருடோத்தமம்

இறைவன்: புருடோத்தமன்-கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
இறைவி: புருடோத்தம நாயகி

    வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார்.

     “திருவண் புருஷோத்தம நாயகனை’, வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.

34. திருச்செம்பொன் செய்கோயில்

இறைவன்: செம்பொன் ரங்கர்; ஹேமரங்கர்; பேரருளாளன்
இறைவி: அல்லிமாமலர் நாச்சியார்

     இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததது.

    “செம்பொன்சேய் கோயில் பெருமாள்’, காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார்.

35.திரு மணிக்கூடம்

     இறைவன்-கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்
இறைவி- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி

     “திருமணிக்கூட நாயகன்’, தானும் காஞ்சி வரதனை வணங்கிய நற்பலன்களை வழங்கிறார்.

36.திருத்தெற்றியம்பலம்

இறைவன்-கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் செங்கண்மால் ரங்கநாதர்,   லட்சுமிரங்கர்.
இறைவி -செங்கமலவல்லி

108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது

37  “திருதெற்றியம்பலம் அருளாளன்’, ஸ்ரீ ரங்கத்து அரங்கனை தரிசித்த சிறப்புகளை அருள்கிறார்.

37. திரு அரிமேய விண்ணகரம்- குடமாடு கூத்தன் கோயில்

இறைவன்: குடமாடு கூத்தன், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
இறைவி: அம்ருத கடவல்லி

38  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக வரலாறு.

   “அரிமேய விண்ணகரப் பெருமாள்’, தன்னை சேவிப்பவர்களுக்கு வடமதுரைப் பெருமாளை சேவித்த பாக்கியத்தை அருள்கிறார்.

38. திரு மணிமாடக் கோயில்

இறைவன்–கிழக்கு நோக்கி அமர்ந்த நாராயணன்,            அளத்தற்கரியான்
இறைவி–புண்டரீகவல்லி

    பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.

திருநாங்கூர் கருடசேவை

   திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது.

39    தை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 மணி அளிவில் கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் திருநாங்கூர் மணி மாடக்கோயிலில் எழுந்தருள, திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லி நாச்சியாருடன் மணவாளமாமுனிகள் சகிதம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அனைத்து பெருமாள்களுக்கும் ஒரேநேரத்தில் தீபாராதனை காட்டப்படும்!

39(a)    “மணிமாடக்கோயில்’, எம்பெருமானை வழிபடுவதால் இமயமலை, பத்ரிநாத்திலுள்ள திருபத்திரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும்”

39. திருவாலி-திருநகரி

     இரண்டும் ஒன்றாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டது! பஞ்ச நரசிம்ஹத் தலங்களுள் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்ஹர் தலமாகும்!

  மற்ற நரசிம்ஹ-தலங்கள்: இத்தலத்தை சுற்றி உள்ள திருக்குறையலூர் ஸ்ரீஉக்ரநரசிம்மன், மங்கைமடம் ஸ்ரீவீரநரசிம்மன். திருநகரியில் ஸ்ரீயோகநரசிம்மன் மற்றும் ஸ்ரீஹிரண்யநரசிம்மன் ஆகியனவாம்!

   செல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். ஹிந்து மதத்தைக் காத்து வளர்க்க வணங்கி அருள் பெற வேண்டிய கோவில்,

30     நீலன் என்ற குறுநில மன்னன், அவரது மனைவியார் குமுதவல்லி நாச்சியாரால், திருமாலின் திருப்பாதச்சுவை (அருகில் உள்ள தேவராஜபுரம்) கண்டு திருமங்கையாழ்வார் என தீவிர வைணவராகிய திருத்தலம்.

     பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து திருமங்கை ஆழ்வாராக ஆட்கொண்டது.

     TIRUNAGARI (Thirukuraiyur) is the avatharasthalam of Thirumangai Azhwar. A separate sannadhi exists for the Azhwar (in the form of a hunter) in this temple.

    The famous Vedupari Uthsavam is held at Vedarajapuram near this place, where Azhwar waylaid the travelers for temple funds. On one such occasion from the foot, the Lord shows His real form with Lakshmi and gives Tirumantra Upadesha. The name Kalyana Ranganathan is given as the Lord gave darshan in bridal attire. Kalyana shethram

     Kumudavalli, the Azhwar’s wife was brought up at TIRUVALI. The murthy is only at Tirunagari

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 *****************************************************************

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

                     Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)
https://drdayalan.wordpress.com/2017/10/25/hre-59

 

Advertisements

Share this:

  • Twitter
  • Facebook
  • Google
  • Email

Like this:

Like Loading...

Follow Hindu Religious Extracts(HRE) on WordPress.com

Recent Posts

  • HRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்
  • 69(A): About MYSELF, The Author of this Blog (Prof.Dr. A. DAYALAN, Former Professor & Head, Dept. of Chemistry, Loyola College , Chennai-34)
  • HRE-69: திருத்தண்கால்(திருத்தங்கல்)
  • HRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்
  • HRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்

Recent Comments

Prof. Dr. A. DAYALAN on 69(A): About MYSELF, The Autho…
அனுபிரேம் on 69(A): About MYSELF, The Autho…
Prof. Dr. A. DAYALAN on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…
Jambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…
Prof. Dr. A. DAYALAN on HRE-22:பிரசித்தி பெற்ற{பஞ்ச பூ…

Meta

  • Register
  • Log in
  • Entries RSS
  • Comments RSS
  • WordPress.com

Archives

  • October 2018
  • September 2018
  • August 2018
  • July 2018
  • June 2018
  • April 2018
  • March 2018
  • February 2018
  • November 2017
  • October 2017
  • September 2017
  • June 2017
  • May 2017
  • April 2017
  • March 2017
  • January 2017
  • November 2016
  • October 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • September 2015
  • August 2015
  • July 2015
  • June 2015
  • April 2015
  • March 2015
  • February 2015
  • January 2015
  • December 2014
Advertisements

Recent Comments

Prof. Dr. A. DAYALAN on 69(A): About MYSELF, The Autho…
அனுபிரேம் on 69(A): About MYSELF, The Autho…
Prof. Dr. A. DAYALAN on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…
Jambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…
Prof. Dr. A. DAYALAN on HRE-22:பிரசித்தி பெற்ற{பஞ்ச பூ…

Create a free website or blog at WordPress.com.

Cancel
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
%d bloggers like this: