HRE-74 :திரு உத்தரகோச மங்கை

Tags

, , , , , , ,

திருஉத்தரகோச மங்கை. “மண் முந்தையதோ, மங்கை முந்தையதோ”, என்ற பழமொழி கொண்டு புகழப்படும் ஸ்தலம். மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட தலம்.

பழம்பெரும் ஸ்தலங்களில் ஒன்றாகும். யுகங்கள் கடந்த புராணங்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பழமையையும் பெருமையையும் ஒருசேர உலகிற்கு எடுத்துக்கூறும் சைவஸ்தலம்.

இறைவன் – மங்களநாதர்
இறைவி – மங்களாம்பிகை
நடராஜர் – ஆதி சிதம்பரேசர் (மரகத நடராஜர்)
தலவிருட்சம்-இலந்தை மரம்
இறைவன்- இறைவி தனித் தனி ராஜகோபுரம்-விமான்-சந்நதி.

“பக்தரெல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோச மங்கையூர்!” என்ற வரிகளின் வாயிலாக மாணிக்கவாசகர் இதை உலகிற்கு உரைத்துள்ளார். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் இங்கு தான் காட்சி தந்தார். அதை பறைசாற்றவே, மாணிக்கவாசகரும்,”சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே” என்று சிவபெருமானிடமே பக்தியுடன் வினவினார்!

உத்தரம் – உபதேசம். கோசம் – ரகசியம். மங்கை – பார்வதி தேவி. எம்பெருமானாகிய சிவபெருமான், பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் இரகசியங்களை இங்கு தான் உபதேசித்தார்.

Continue reading

HRE-73:ஸ்ரீராம நாம மகிமை

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

I. நாம மகிமை

“சதுர் யுகங்களில்”-கிருத யுகம்-தவம்; திரேதா யுகம்-யாகம்; துவாபர யுகம்-பாத சேவை; கலி யுகம்-நாம சங்கீர்த்தனம்

Symbol of the GOD and the name the GOD are GOD
  1. “ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
    • நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
  2. கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.
    • கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
  3. பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
    • பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.
  4. நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
    • நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்
  5. எல்லா நாமமும் பரபிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.
    • பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
  6. நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.
    • நாமத்துக்கு விலக்கு இல்லை.
  7. நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
    • நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
  8. நாமம் தாய்-தந்தை போன்றது.
    • நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
  9. பவரோக அருமருந்து நாமம்.
    • சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
  10. நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.
    • நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
  11. காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
    • நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்
  12. சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
    • நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.
  13. நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
    • நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
  14. நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
    • நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
  15. நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
    • நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
  16. நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
    • நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.
      &&&&&&&&&&

      பாராயணம்: ஆயிரம் நாமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு தடவை………….(சகஸ்ர நாம பாராயணம்).

      ஜபம்: ஒரு நாமா ஆயிரம் தடவை………(நாம ஜபம்).

      நாம (சித்தாந்தம்)=வேதாந்தம்; பேச்சு=மூச்சு , சிந்தனை=வந்தனம்;ஒழுக்கம்=பழக்கம்; உணர்வு=உணவு; வழி=மொழி)

      இறைவனும்-இறைவன் நாமாவும் ஒன்றே
      • ஸ்ரீமந்நாராயணின் நாமாவும் நாமமும் ஒன்றே
      • ராமனும்-ராமமும் (ராம நாம-மகிமை) ஒன்றே
GOD, the symbol of GOD and the GOD, all the three are same

II. வினைகள்

  • கர்ம வினை (ஆசை, பாவ, புண்ணியங்கள்) மீண்டும் பிறக்க வைக்கின்றன. கர்ம வினைகளை சுமந்தால் எழ முடியாது. பாவம் என்ற மலமும் புண்ணியம் என்ற தங்கக் கட்டிகளும் சுமை தான்.
  • கர்ம வினை சுமையை உலகில் சுற்றி கொஞ்சமுமாக கொட்டுகிறோம், கொட்டிவிட்டு இன்னும் வேறு சுமைகளை அள்ளுகிறோம்.
  • கர்மவினை அவ்வளவு எளிதல்ல. அதை விழிப்புணர்வோடு செய்ய வேண்டும். அதனால் தான் மிக எளிதான அறிவுரைகள் தரப்பட்டு அவைகளை பின்பற்றினாலே கர்மங்களை தொலைத்து மேலுலகம் அடைலாம்.
  • ராம நாமம் கர்ம வினைகள் தீர்ந்து பிறப்பு என்ற பரிமாணத்திலிருந்து பரமபத பரிமாணத்திற்கு கடத்திச் செல்லும்.
  • ஞானி சுமையை கொட்டி, வேறு சுமையை அள்ளாமல் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடந்து வெற்றிக்கரமாக செல்கிறார்!.

III. ராம நாமம்

  • ராம நாமம்; தாரகம் மந்திரம். சைவ-வைஷ்ண ஆகமத்திற்கு உரியது.
  • ‘ராம’ என்று கடலைக் கடந்த அநுமான்
  • சிரஞ்சீவி வாயு புத்திரன் அநுமான். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம், ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
  • ‘ராம’ என்று சேது அணை கட்டிய வானரங்கள்
  • ஸ்ரீராமஜெயம்: அநுமான்-சீதைக்கு, இராமனின் வெற்றியை சுருக்கமாக தெரிவித்தது
  • “மரா” என்று உச்சரித்து “ராமா” என்று ராமாயணம் இயற்றிய வால்மிகி.
  • வால்மீகியை ராமாயண காவியம் எழுத அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், “ராம” நாமம்.
  • காசியில் சிவபெருமான், ‘ராம’ என ராம நாம உபதேசம்
  • தசாவதாரத்தில் ராமநாமம் கொண்ணட அவதாரங்கள் மூன்று-பரசுராமன், இராமன், பலராமன்
  • ராம அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்தில் இருக்கும் நாமம்
  • ராம= ராமன்= ராம நாமம்

IV. ராம நாம மகிமை

பாமர மக்கள் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை எங்கணம் பாராயணம் செய்ய முடியும்? என்ற அம்மை பார்வதியின் ஆதங்கத்திர்க்கு, பரமேஸ்வரன், ஈஸ்வர உவாச

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீ ராம நாம வரானன ஓம் நம இதி…..ராம:3 Times=1000”

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-27)
என உச்சரிததாலே பலன் என்று உறுதியளிக்கின்றார்.

V. ராம (நாராயணாயா & நமசிவாயா)

  • நமோ=நம
  • ஓம் நமோ நாராயணாய
  • நமச்சிவாய

ஓம் நமோ நாராயணாய’ என்பதில் உள்ள நாராயணாய‘ ‘ரா’ (5-ல் 2-வது) என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான ‘நமசிவாய‘ என்ற எழுத்தில் ‘ம’ (5-ல் 2-வது) என்ற எழுத்தையும் சேர்த்து ‘ராம‘ என்றானது

ரா = இரண்டாவது இடையினம்=2; நாராயணாய
ம = ஐந்தாவது மெல்லினம்= 5; நமசிவாய
தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்கள்:

ய், ர், ல், வ், ழ், ள்-இடையின வரிசை.
ங், ஞ், ண், ந், ம், ன்- மெல்லின வரிசை
க், ச், ட், த், ப், ற்-வல்லின வரிசை

மேற்கண்ட மெய் எழுத்து வரிசைகள் “” என்ற உயிர் எழுத்துடன் சேரும்போது கிடைக்கும் உயிர்மெய் எழுத்துக்கள்

ய, ர, ல, வ, ழ, ள- இடையினம்……….……2
ங, ஞ, ண, ந, ம, ன-மெல்லினம்…….……5
க, ச, ட, த, ப, ற-வல்லினம்

அதேபோன்று, “” என்ற உயிர் எழுத்துடன் சேரும்போது கிடைக்கும் உயிர்மெய் எழுத்துக்கள்

யா, ரா, லா, வா, ழா, ளா- இடையினம்.……….…..2
ஙா, ஞா, ணா, நா, மா, னா-மெல்லினம்.…………5
கா, சா, டா, தா, பா, றா-வல்லினம்

நாராயண‘ என்ற வாக்கியத்தில் “ரா”வை நீக்கினால் ‘நாயணா’ அதாவது நா+அயணா என்று மாறும். அயணம்=மோக்ஷம், கதி . நா=இல்லை எனவே மோக்ஷம் இல்லை என்று பொருள் கிடைக்கும்.

அது போல ‘நமசிவாய‘ என்னும் வாக்கியத்திலுள்ள ‘ம:’ என்ற எழுத்தை நீக்கிவிட்டால் ‘நசிவாய’ அதாவது ‘ந+சிவாய’ என மாறிவிடும். ‘சிவாய=’சிவன், மங்களம் ந=இல்லை. அதாவது சிவன் இல்லை, மங்களம் இல்லை என்பதாகும்.

எனவே “ரா & ம” என்ற அக்ஷரங்களை நீக்கினால் அஷ்டாக்ஷரமும்,பஞ்சாக்ஷரமும் அர்த்தமற்றதாக ஆகிவிடும்.

VI. ராம rather than-இராம-ராமா-ராம்

  • .இவ்வாறு வைணவம், சைவம் என்னும் இரண்டுக்கும் பொதுவாக , மையமாக அமைந்த காரணத்தால் முன்னோர்கள் ‘ராம’ மந்திரத்தை தாரக மந்திரம் என்று போற்றி ஜபம் செய்து வந்தனர்.
  • Hence, one can understand significance of ராம rather than இராம-ராமா-ராம்

VII. Numericals of ராம நாமம்

  • ராம = (ரா=2; ம=5) இரண்டை ஐந்தால் பெருக்கினால் பத்து (2 x 5 = 10); ராம என்ற சொல்லுக்குரிய எண் 10,
  • ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10 x 10 அதாவது ஆயிரம்.
  • ராம= 2 × 5 = 10; ராம என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும்.
  • ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
  • ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே……….1000 (ராம=2×5=10); ராம ராம ராம=1000= 1VSN
  • மூன்று முறை 1000 x1000 x1000=1000000000 =10 லட்சம்
  • “ராம” நாமத்தை ஒரு லட்சத்து எண்ணூறு (1,00,800) முறை சொன்னால் (மேலும் எழுதினால் One Book) என்ன கணக்கு என்பதை நினைத்து பார்க்கவேண்டும்
  • 1000 or 24 or 12 or 3 or 1 ராம (Three times) or 1 கிருஷ்ண (Once) =1VSN
  • “விஷ்ணு காயத்ரி”-நாராயணா, வாசுதேவ, விஷ்ணு

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

“மஹாமந்திரம்”: உபநிஷத்-(பிரம்மா To நாரதர்)

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • ராம ராம ராம = கிருஷ்ண=1000 நாமம் = 1VSN
  • ராம ராம ராம ராம = 10 10 10 10 = 10^4 நாமம்
  • கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண = 10^3 10^3 10^3 10^3 = 10^12 நாமம்
  • மஹா மந்திரம் (Once) = 10^4 x 10^12 நாமம் =10^16 நாமம் = 10^13 VSN = 10^1 x10^5×10^7 VSN = பத்து லட்ஷம்

NB:10^4 =10 power 4 = 10x10x10x10=10000

VIII. இலக்கியத்தில் ராம நாமம்

கம்பராமாயணம் (கடவுள் வாழ்த்து)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே
பால காண்டம்-29(கம்பர்)

Rama-பால காண்டம்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்ற இரண்டு எழுத்தினால்

கம்ப ராமாயணம்: வாலி படலம்.

வாலி சுக்ரீவனோடு போர் புரிந்து கொண்டிருக்கையில் எதிர்பாராது வந்த பாணம் அவன் நெஞ்சில் தைக்கிறது. பாணம் தைத்துத் திகைத்தவன், ‘அழுத்தும் இச்சரம் எய்தவன் ஆர் கொல்?’ என்று அறிய அம்மைப்பற்றிப் பார்க்கும் பொழுது அதில் ‘ராம’ என்னும் நாமத்தைக் காண்கிறான். இந்த இடத்தை ‘ராம’ நாம மகிமையைச் சொல்ல அருமையான வாய்ப்பாகக் கொள்கிறார் கம்பர்,

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

முற்பிறவி, இப்பிறவி, இனி வரும் பிறவி என்னும் மூவகை பிறவிகளுக்கும் இடமாக இருக்கின்ற இந்தப் பூவுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமந்திரமாய் இருந்து; ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு “நான் பிரம்மம்” என்று அறிந்து கொள்ளும் ஞானப் பொருளை; இனி பிறவியில்லை என்னும் நிலையை இந்தப் பிறவியிலேயே தரக்கூடிய அருமருந்தாகிய மந்திர சொல்லாகிய, “ராம” எனும் பெருமை மிக்க இரண்டு எழுத்தை வாலி தன் கண்களால் தெரியக் கண்டான்.

இராமனைக் கண்டு வியந்த இராவணன்

சிவனோ அல்லன் ,நான்முகனோ அல்லன் ,திருமாலாம்
அவனோ அல்லன் ,செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்,
இவனோ அவ்வேத முதல் காரணன்

ராம நாம பலன்

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே.

  • விரும்பியதை அடைந்து, அறிவுத் திறனும், புகழும் கிடைக்கும்
  • முக்தி மார்க்கத்தை அடையும் வழியும் கொடுத்தருளப் பட்டு திருமகளும் அருட்பார்வை புரிவாள்.
  • எண்ணிலடங்கா அரக்கர்கள் நிறைந்த போர்ப்படையை அழிந்து வெற்றி மாலையை சூடிய.
  • ராம பெருமானின் வலிமை மிகுந்த வில்லினை ஏந்திய தோள். அப்படிப்பட்ட பெருமானை போற்றி பாடுபவர்க்கு நன்மைகள் பல அமையப்பெரும்

ராமன் எத்தனை ராமன்:

ராமன்; அனந்தராமன், பரசுராமன்; ரகுராமன்; தசரதராமன்; கோசலராமன்; கோதண்டராமன்; கல்யாணராமன்; சீதாராமன்; ஜானகிராமன்; வைதேகிராமன்; ஸ்ரீராமன்; சேதுராமன்; ஜெயராமன்; சிவராமன்; முத்துராமலிங்கம், முத்துராமன், அயோத்திராமன்; பட்டாபிராமன்; ராஜாராமன், ராமசந்திரன், ராமகிருஷ்ணன், ராமநாதன், ராமலிங்கன்; சுந்தரராமன், சாய்ராம்; பலராமன், வெங்கட்ராமன்; சாந்தாராமன்.

IX. ஸ்ரீ ராமபிரானின் வம்சம் இக்ஷ்வகு குலம்-ரகு குலம்.

திருமால்–பிரம்மா—மரீசி—-காஸ்யபர்—சூரியன்—மனு—இக்ஷ்வகு—குக்ஷி—விகுக்ஷி—பாணு–அரண்யகன்—விருது—திரிசங்கு—துந்துமாரன்—மாந்தாதா—சுசந்தி—துருவசந்தி—பரதன்—ஆஷிதன்—சாகரன்—அசமஞ்சன்—அம்சமந்தன்—திலீபன்—பகீரதன்—காகுஸ்தன்—ரகு—பிரவருத்தனன்—சங்கன்—சுதர்மனன்—அக்நிவர்ணனன்—சீக்ரவேது—மருவு—பிரஷீக்யன்—அம்பரீஷன்—நகுஷன்—யயாதி—நாபாகு—அஜன்—தசரதன்—ராமன்.

X. தாரக மந்திரம் (ஓம் & ராம)

தாரகம்

  • தாரகம் என்றால் நுண்ணிய——-நுட்பமான——-உயர்ந்த——-வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது——- கடக்க செய்வது——- சம்சார & மன அலையை கடக்க செய்வது என்று பொருள்.
  • பரமபதத்தை அடைய வைப்பது இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடி பலன் கிடைக்கும்.
  • ராம நாமமும் ஓம் என்ற ஓங்காரமும் தாரகமந்திரம்.
  • பரம பதம் அடைய எந்த சுமையும் இல்லாத இலகுவான ஒரு ஆத்மாவாக இருக்க வேண்டும்

ஓம்(பிரணவம் & தாரகம்)

  • ஓம் என்ற ஓங்காரம் யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது.
  • தகுதி பக்குவம் தேவை. கண்ட இடத்தில் சொல்ல கூடாது.
  • ஒழுக்கம் முக்கியம் என பல கட்டுப்பாடுகள் கொண்டது.

ராம (தாரகம்)

  • ஓங்காரம், தன் சௌலப்யத்தால் “ராம” என்று ஆனது
  • ராம நாமத்தை பிற மதத்தவர், நம்பிக்கை இல்லாதவர் கூட சொல்லலாம்.
  • எங்கும் எப்போதும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
  • இப்படி சுலபமான தாரக மந்திரத்தை தான் ஆஞ்சநேயர் எடுத்து கொண்டார்.
  • கோபம், பொறாமை, வெறுப்பு, தவிர்த்து அன்பை பின்பற்றினாலே பரம பதத்தை அடைந்து விடலாம். அனால் இவை மிக சிரமம். இறைவன் இதை விட எளிதான உத்தியை கொடுத்தது தான் ராம நாமம்
  • ராம நாமத்தை சொன்னால் தீய பழக்கங்கள். தீய வினைகள் மறையும். நல்ல பழக்கங்கள் தோன்றும், பரமபதம் அடைய முற்படும்.
  • சிவபெருமான் காசியில் அனுதினமும் சொல்வது “ராம” மந்திரமே

ஸ்ரீ ராம “சரம ஸ்லோகம்”


ராமாவதாரத்தில், விபீஷணன் சரணாகதியின் போது, ஸ்ரீராமன் கூறியது

சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம

The acceptance of Rama

“எவனொருவன், என்னை நண்பன் என்று சொல்லிக்கொண்டு வருகிறானோ, அவனை, அவன் யாராக இருந்தாலும், ராவணனேயக இருந்தாலும், அவனை காப்பது எனது விரதம்”.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

நாம த்ரைய அஸ்த்ர மந்தரம்:

அச்சுதாய நம:-VSN Slogam 11, 35
அநந்தாய நம:- VSN Slogam 33
கோவிந்தாய நம:- VSN Slogam 20, 58

மஹா மந்தரம்: பிரம்மா To நாரதர்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.
ஹரே கிருஷண ஹரே கிருஷண கிருஷண கிருஷண ஹரே ஹரே

ஸ்ரீ ராம….நீ நாமம்……எந்த…….ருசிரா!!!!
எந்த…..ருசிரா…..ராமா…..ஏமி…..ருசிரா!!!
ஸ்ரீராமஜெயம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-72: திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்

Tags

, , , , , , , , , , , ,

திதியையும் விதியையும் மாற்றிய (திதியும் விதியும் மாறிய) திருத்தலம்

ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீகால சம்ஹார மூர்த்தி-
விதியை மாற்றிய (விதி மாறிய) திருத்தலம்

Posted on the Auspicious 60th Birth day (20-4-2019) of my WIFE (Prof.Dr.A.Dayalan & Mrs.D.Parimala

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலம்———–>>>>

அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார்.

      அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.

       மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் யமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.

புராண வரலாறு:

பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார்.பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது.

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும்.

அபிராமி அந்தாதி


திதியை மாற்றிய (திதி மாறிய) திருத்தலம்

இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து தை-அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.

      இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார். பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை அபிராமி மீது 100 பாடல்கள் கொண்ட அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றியது. 79-வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

அபிராமி அந்தாதி பாடல்-79

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன                வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்                பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்                குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”

ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார்.பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.

       இக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதிதேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே.

திருப்புகழ் முருகன்

                திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காடசியாகும்

 தல வரலாறு

மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார். சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.

 தலத்தின் சிறப்பம்சம்:

கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.

60-வது வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61-வது வயது தொடக்கத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71-வது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80-வது வயதில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும்.


My 60th Birth Day on 8-3-2014

திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்து கொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.


My 60th Birth Day on 8-3-2014

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அருள்மிகு அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோவில்

திருக்கடையூர்

சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள்.

அம்பாள் : அமிர்தவள்ளி.

தலச்சிறப்பு:

ராமானுஜர் வழிபட்ட தலம்.  அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த  பிறகு,  அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்  முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.  ராகு–கேது பரிகார தலமாகவும்  கருதபடுகிறது.

 திருத்தல வரலாறு

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.  மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது.  பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு  மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார்.  தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை  கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார்.  அப்போது அம்பாள் அபிராமி என்ற  திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள்.  அமிர்தத்தை தேவர்களுக்கு  விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.

      இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான்.   சாகாவரமும் தேவபலமும் பெற்றான்.  அவனை வெட்டினார் விஷ்ணு.  அமிர்தம் பருகியதால்  அவனுக்கு உயிர் போகவில்லை.  துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக  மண்டலத்தில் இணைந்தனர்.  அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம்  கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில்  அருள்பாலிக்கிறார்.  ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர்.  அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத  பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

12(A):Hindu Religious Extracts (HRE), இந்து மதச் சாரம்: CONTENTS

HRE:71-பிறவி (வேண்டும், வேண்டாம்)

பிறவி வேண்டும்: குலசேகர ஆழ்வார்

பிறவி வேண்டும்:ஆண்டாள் நாச்சியார்

பிறவி வேண்டாம்: தொண்டரடிப்பொடியாழ்வார்; திருப்பாணாழ்வார்; அநுமான்

A. பிறவி வேண்டும்: குலசேகர ஆழ்வார்–பெருமாள் திருமொழி (4.1 to 4.10)

                பெரியாழ்வார் போலவே தனது மகள் சேரகுலவல்லியை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் மாதவன் மாமன்எனும் பெருமை பெற்றார்.

திருப்பதி-திருமலை: மங்களாசாசனம்

மங்களாசாசனம்:10-ஆழ்வார்கள் (Except தொண்டரடிப்பொடியாழ்வார் &  மதுரகவியாழ்வார்)

மொத்த பாசுரங்கள்:202

             குலசேகர ஆழ்வார்பாசுரங்கள்: பெருமாள் திருமொழி105 (திருப்பதி=11/105)

திருப்பதி-திருமலையில் குலசேகர ஆழ்வார் வேண்டும், திருவேங்கட பிறப்பு

1.குருகாய்(நாரையாய்)—2.மீனாய்3.பொன்வட்டில்-4.செண்பகமாய்5.தம்பமாய்(புதராய்)6.பொற்குவடா(சிகரமாய்)—7.கானாறாய்—8.நெறியாய்(வழியாய்)9.படியாய்—10.ஏதேனும்

i) கோனேரி வாழும் குருகாய்ப்———-பெருமாள் திருமொழி-4.1
ii) மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே:——————4.2
iii) பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறு வேனாவேனே:—-4.3
iv) செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே:———–4.4
v) தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே:——————-4.5
vi) அன்னனைய பொற்குவடா அருந்தவத்தன் ஆவேனே:—–4.6
vii) கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே:————–4.7
viii) நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே:——-4.8
ix) படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே:—————-4.9
x)எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே——-4.10

1) திருவேங்கடத்து ஸ்வரமி புஷ்கரிணியில் நாரையாக

ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே:—-4.1

Continue reading

HRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்

Tags

, , , , , , , , , ,

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு அடிப்படையான, “பகவத் / பாகவத / ஆசார்ய கைங்கர்யம்”.

பகவத் சம்பந்தத்தை விட , பாகவத (பகவான் சம்பந்தத்தை விட, பாகவதர்) சம்பந்தமே வேண்டும்

நம்பிகளும்-உடையவரும்

திருக்கச்சி நம்பிகள்

 திருக்கச்சி நம்பிகள் பகவான் தேவாதி தேவருக்குச் செய்த திரு ஆலவட்டக் கைங்கர்யம், அவருடைய அடையாயாளமாக விளங்கியது.

 திருவரங்கருக்கும், திருவேங்கடவருக்கும் அவர் விசிறிக் கைங்கர்யம் செய்ய விழைந்த போது, அவர்கள் குளிர்ந்த சீதோஷ்ணம் இருப்பதால், வேண்டாம் என்றும், வெப்பபூமியில் எழுந்தருளியிருக்கும், வரதருக்கு வீசும்படி சொன்னார்களாம்!

ஒருவர் தினமும் திருக்கச்சி நம்பிகள் பாதம் பட்ட மண் தூளியை அட்சதையாக இட்டுக்கொள்வார். அவர் நம்பிகளிடம், தனக்கு மோட்சம் கிட்டுமா?, என்று வரதரிடம் கேட்டுச் சொல்லுமாறு வேண்டினார். அவருக்கு மோட்சம் கிட்டும், என்று வரதர் சொன்னதை, அவரிடம் தெரிவித்தார்.

 அப்படியானால், திருக்கச்சி நம்பிகளுக்கும் மோட்சம் உண்டா? என்று வரதரிடம் கேட்குமாறு கூறினார். வரதரிடம் நித்யமும் பேசிக் கொண்டிருக்கும் தமக்கு மோட்சம் நிச்சயமாக உண்டே, என்றிருந்த நம்பிகள் இந்தக் கேள்வியால் பெரிதும் ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் வரதரிடம் உறுதி செய்து கொள்ளலாம் என்று கேட்டார்.’உமக்கு மோட்சம் கிடையாது‘ என்று வரதர் அருளியதைக் கேட்டு அதிர்ந்த நம்பிகள்,”தேவரீருக்கு அடியேன் ஆலவட்ட கைங்கர்யம் பங்கமில்லாமல் செய்கிறேன். தேவரீரும் அடியேனுடன் நித்யமும் உரையாடுகிறீர்கள. அடியேனுக்கு எப்படி மோட்சம் மறுக்கலாம்”என்று புலம்பினார்.

 தேவாதிதேவன் “நீர் விசிறினீர்…நான் பேசினேன்“. இரண்டும் சமமாகி விட்டது. மோட்சம் ஏன் தர வேண்டும்” என்று சொல்லி, மோட்சம் அடைவதற்கு பகவத் சம்பந்தத்தை விட , பாகவத சம்பந்தமே வேண்டும்; அது நம்பிகளிடம் இல்லை என்றார்.

 உண்மை உணர்ந்த நம்பிகள் திருக்கோஷ்டியூர் சென்றார். மாட்டுக்காரன் போல வேடம் அணிந்து திருக்கோஷ்டியூர் நம்பிகளின் மாடுகளைக் கவனித்தும் அவருக்கு மாட்டு வண்டி ஓட்டியும் வேலை செய்து வந்தார். அவர் செய்த கைங்கர்யத்தை மெச்சிய, திருக்கோஷ்டியூர் நம்பி “நம்மவண்டிக்காரன்“என்று பெரிதும் கொண்டாடினார். ஒரு மழை நாளில் இவர் வேடம் கலைந்து விட, திருக்கோஷ்டியூர் நம்பி இவர் யாரென்று அறிந்து, அபசாரப்பட்டோமே என்று வருந்தினார். நம்பிகள், அவரிடம் தமக்கு மோட்சம் கிட்டுவதற்கான பாகவத சம்பந்தம் தந்தமைக்குக் தெரிவித்தார்.

தாம் கொண்டாடும் அடியார்களுக்கு, உவந்து கைங்கர்யம் செய்த பெருமாள்!

             நம்பிகள், ஒருநாள் இரவு கைங்கர்யம் முடிந்து பூந்தமல்லிக்குச் செல்ல கோவிலை விட்டு வெளியே வந்து தம் மிதியடிகளைக் காணாமல், அவருடன் வழித்துணைக்கு வரும் வேலக்காரரை அழைத்தார். உடனே மிதியடிகளைக் கொடுக்க, இருவரும் பேசிக்கொண்டே பூந்தமல்லி சென்றனர்.

          நம்பிகள் தம் திருமாளிகை அடைந்த சிறிது நேரத்தில் அவருடைய வேலைக்காரர் ஓடிவந்து, ஐயா தாங்கள் புறப்படும் போது அங்கில்லாமல் சற்று வெளியே சென்று விட்டேன். அதற்குள் நீங்கள் புறப்பட்டு வந்து விட்டீர்கள். மன்னித்து அருள வேண்டும். இதோ உங்கள் மிதியடிகள் “என்று கூறி வைத்தார். அப்படி என்றால் அவருடன் வந்தது யார்? யோசித்த நம்பிகள் வந்தவரின் பேச்சு, வரதரின் பேச்சு போல இருந்ததை உணர்ந்தார். வரதரே அவருக்குத் துணையாக அவர் வேலைக்காரராக வந்தார்!

             ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த தம் ஆசார்யர் ஆளவந்தாரைச் சேவிக்க அடிக்கடி காஞ்சியிலிருந்து, வரதரிடம் உரிய அனுமதி பெற்று! ஸ்ரீரங்கம் வந்து ஆசார்யர் உகக்கும் வண்ணம் கைங்கர்யம் செய்தார். ஆசார்யருக்கு செய்த மிகப்பெரிய கைங்கர்யம் அவர் பல நாள் தவமிருந்து காணத் துடித்த ராமானுஜரைக் காட்டிக் கொடுத்தது.

ராமானுஜர்

       ராமானுஜரை நித்ய / லீலா விபூதிகளுக்கு உடையவர் ஆக்கி, மோட்ச அதிகாரத்தையும் கொடுத்து விட்டார் ஸ்ரீரங்கநாதர். ஆனாலும் தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி ஆணயை மீறி, அனைவருக்கும் மந்திர அர்த்தத்தைச் சொன்னதால் தமக்கு மோட்சம் கிட்டாது என்று எண்ணியிருந்தார் ராமானுஜர்.

               பல ஆண்டுகளுக்குப் பின்னர் கூரத்தாழ்வான், ஸ்ரீரங்கநாதரிடம் செய்த பிரார்த்தனையை ஏற்று அவருக்கு உடனே மோட்சம் கொடுப்பதாக அருளிவிட்டார். இதனைச் செவியுற்ற ராமானுஜர் ‘ஆழ்வானின் சம்பந்தத்தால் தமக்கும் உறுதியாக மோட்சம் கிட்டும் என்று மகிழ்ச்சியடைந்து, ஆனந்தக் கூத்தாடினார்.

            ராமானுஜர், நீராடச்செல்லும் போது உயர் குடி முதலியாண்டான் கரம் பற்றிச் சென்று, நீராடி வரும்போது உறங்காவில்லி தாசர் கரம் பற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வில்லிதாசர், பொன்னாச்சியார் மேன்மையை உலகோர் அறிய செய்தார் . எந்த சாஸ்திரம்/அனுஷ்டானத்தையும் பின்பற்றாத முடவனுக்கும், தும்பையூர் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கும் மோட்சம் கிடைக்க வழி செய்தார்.

         ராமானுஜர் தம் மனதில் வரித்த ஆசார்யர் திருக்ச்சி நம்பிகள், மானசீக ஆசார்யர் ஆளவந்தார், பெரியநம்பிகள் முதலான பஞ்ச ஆசார்யர் களுக்கும், சிஷ்ய லட்சணத்துடன் ஒரு சீடர் செய்யவேண்டிய பல கைங்கர்யங்களையும் செவ்வனே செய்தார்.

       ராமானுஜர், ஆழ்வான், ஆண்டான் போன்ற அடியார்களுக்குச் செய்த கைங்கர்யங்களும், எம்பார், உறங்காவில்லி தாசர், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார் ஆகியோரைத் திருத்திப் பணிகொண்டதும் பாகவதக் கைங்கர்யங்ளாகும்.

          திரு அனந்தபத்மநாபர், ராமானுஜரை திருவனந்தபுரத்தில் இருந்து, இரவோடு இரவாக திருக்குறுங்குடியில்-வட்டப்பாறை என்னுமிடத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். மறுநாள் காலை எழுந்து நீராடி முடித்த உடையவர் எப்போதும் தம்முடன் இருக்கும் வடுகநம்பியை அழைக்கும் விதத்தில்”வடுகா!,திருமண் பெட்டி எடுத்து வா“என்றார். உடனே “அடியேன் ஸ்வாமி” என்று பணிந்து திருமண் பெட்டியைக் கொணர்ந்து வைத்தார்.திருமண் இட்டுக்கொண்ட உடையவர், கலந்த திருமண் சேஷத்தை (மிகுதியை) வடுக நம்பியிடம் கொடுக்க, அவர் வாங்கி இட்டுக்கொண்டார்.

           கோவிலுக்குச் சென்ற உடையவர் திருக்குறுங்குடி நம்பி பெருமாளின் திருமுகத்தில் தாம் எப்போதும் இடும் திருமண் காப்பு, புதிதாக இட்டது போல ஈரமாக இருக்கக் கண்டு திகைத்தார். திரும்பிப் பார்த்தால் அவருடன் வந்த வடுகநம்பியைக் காணவில்லை.

         திருவனந்தபுரத்தில் இருந்த வடுகநம்பி, அங்கு உடையவரைக் காணாமல் தேடிக்கொண்டு மறுநாள் வந்து சேர்ந்தார். திருக்குறுங்குடி நம்பி பெருமாளே, உடையவருக்குத் திருமண்பெட்டி எடுத்துக் கொடுத்து, அவரிட்ட திருமண் காப்பை இட்டுக்கொண்டு உடன் வந்தவர்! எம்பெருமான், எம்பெருமானாருக்குச் சேவை செய்த இடத்தை இன்றும் வட்டப்பாறையில்சேவிக்கலாம.

தேவப்பெருமாள் பெயர் சூட்டி மகிழ்ந்த பெரும்பேறு,பெற்ற உத்தமர்கள்

           தேவாதிதேவனே பெயர் சூட்டி அழைத்த பாக்கியம் பெற்றவர்கள் இந்த இரு மஹநீயர்கள்.

திருக்கச்சி நம்பிகளுக்குகஜேந்திர தாஸர்’என்று பெயரிட்டார்.
ராமானுஜருக்கு எதிராஜர் என்றும்,’ராமானுஜமுனி‘ என்றுபெயரிட்டார். வரதர்

        இப்படிப் பெயரிட்டதும், முதன் முதலில் ராமானுஜரை இந்தப்பெயரிட்டு அழைத்தவர் திருக்கச்சி நம்பி!

      காஞ்சி தேவப்பெருமாள் கோவில் கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதி மேடையில் நின்று தான் நம்பிகள் ஆளவந்தாருக்கு, ராமானுஜரை அடையாளம் காட்டினார்.

       காஞ்சிபுரம் ‘அனந்தசரஸ்’ தீர்த்த நீராடி ராமானுஜர் காஷாயம் தரித்தார். வரதரும், தம்பிகளும் அவரை ‘எதிராஜா’என்று அழைத்தனர்.

ராமானுஜருக்கு

எதிராஜர் என்றும்,’ராமானுஜமுனி‘ என்றும் வரதர் பெயரிட்டார்.

உடையவர் ‘என்று ஸ்ரீரங்கநாதரும்,’

தேசிகேந்திரர்‘என்று திருவேங்கடவரும்,

ஸ்ரீபாஷ்யகாரர்‘ என்று சரஸ்வதி தேவியும்,’

கோவில் அண்ணன்‘என்று ஆண்டாளும் பெயர் சூட்டி அழைத்தனர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

69(A): About MYSELF, The Author of this Blog (Prof.Dr. A. DAYALAN, Former Professor & Head, Dept. of Chemistry, Loyola College , Chennai-34)

Tags

,

Untitled-2

Prof.Dr. A. DAYALAN, M.Sc., M.Phil., Ph.D., F.I.C.S

Former Professor & Head,

Dept. of Chemistry, Loyola College, Chennai-34

Author of this BLOG (https://drdayalan.wordpress.com/)

About Me (My Profile ABSTRACT, சுருக்கமாக)

(1) QUALIFICATIONS

M.Sc., M.Phil., Ph.D., F.I.C.S

(2) TOTAL TEACHING

36 Years in Loyola College ,  (1977-2013) as Professor of Chemistry & Head of the Dept 2008-2013

(3) RESIDENCE

Sri Guruprasath Illam,

28, NGO Colony, 1st Main Road,

Choolaimedu, Chennai-94.

Websites: https://drdayalan.wordpress.com/  (ஆன்மீகம்-HRE)

https://dradchem.wordpress.com/  (CHEMISTRY)

12(A):Hindu Religious Extracts (HRE), இந்து மதச் சாரம்: CONTENTS

(4) SCHOOL STUDIED

M.V.S., Elementary School, Mosur,

(Primary Level) Arakkonam Taluk, N.A.Dt

(5) EDUCATIONAL QUALIFICATIONS

Qualification, Institution, Year of Passing

S.S.L.C St. Andrew’s High School, Arakkonam, 1971

P.U.C Sir Thiagaraya College, Chennai-21, 1972

B.Sc (Chem) Loyola College, Chennai-34, 1975

M.Sc (Chem) Loyola College, Chennai-34, 1977

M.Phil (Chem) Dept. of Physical Chemistry, University of Madras , 1987

Ph.D (Chem) Dept. of Physical Chemistry, University of Madras , 1993

FICS Indian Chemical Society, Calcutta June, 1993

Sanskrit studies: Up to the level of reading, writing and understanding spiritual documents in Sanskrit.

(6) TEACHING & ADMINISTRATIVE EXPERIENCES

Demonstrator, Loyola College, Chennai-34 (1977-1980)

Asst.Professor, Loyola College, Chennai-34 (1980-1993)

Reader, Loyola College, Chennai-34 (1993-2006)

Professor, Loyola College, Chennai-34 2006-2013)

Research Supervisor, Loyola College, Chennai-34 (2004-2013)

Coordinator, IDE, Univ of Madras Loyola College, Chennai-34 (2011-2013)

Prof & Head, Dept of Chemistry Loyola College, Chennai-34 (2008-2013)

(7) SPECIAL INTEREST

Spiritual, Editorial, Research & Administrations.

(8).ஆன்மீகம்

(A) ஆன்மீக யாத்திரைகள்(Selected & Significant)

           

(i) சபரி மலை யாத்திரை:Three times with Swamiji

(ii)காசி-யாத்திரை

(ராமேஸ்வரம்காசிகயாதிரிவேணி சங்கமம்ராமேஸ்வரம்)–ரிஷிகேஷ்-அரித்துவார்

(iii) 108 திவ்யதேச தரிசனங்கள்:(106/108)

சோழ நாடு-40 (திருச்சி-6, தஞ்சாவூர்-4, கும்பகோணம்-11, நாகை-1, மாயவரம்-3, சீர்காழி-14, சிதம்பரம்-1)

நடு நாடு-2 (கடலூர்-1, விழுப்புரம்-1)

தொண்டை நாடு-22 (சென்னை-7, காஞசிபுரம்-15)

மலை நாடு-13 (கேரளா)

பாண்டி நாடு-18 (திருநெல்வேலி-12, மதுரை-3, ராமநாதபுரம்-3)

வட நாடு-11 (ஆந்திரா, மதுரா, துவாரகை, நைமிசாரண்யம், தேவப்பிரியா, ஜோஷிமட். பத்ரிநாத்)

(iv)ஜோதிர்லிங்கத்தலங்கள்

(v)தேவாரத்தலங்கள்

(Pl click at the LINK given below)

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

(B) படித்ததில் மிகவும் பிடித்தது

ராமாயணம், மஹாபாரதம், ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத்பகவத்கீதை, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிரம் திவ்யபிரபந்தங்கள் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், பன்னிரு திருமுறைகள்

(9) COUNTRIES VISITED

Singapore , Malaysia, Thailand, Nepal, Dubai 

(10) RESEARCH INTERESTS (Projection of Academics continued)

 Homogeneous reaction kinetics

 Bioinorganic Chemistry

 Cobalt(III) macro cyclic complexes

 Antimicrobial activities of cobalt(III) complexes

 Cobalt(III) complexes as catalyse mimics

 Antioxidant properties of metal complexes

 Toxicity of cobalt(III) complexes

 X-Ray diffraction studies on crystals

(11) RESEARCH DEGREES GUIDED & COMPLETED

Ph.D Degrees: Completed-8

M.Phil Degrees : Completed-47

M.Sc Projects : Completed-59

(12) EXPERT SERVICES RENDERED: 4

  • Resource person for a training programme organized for the Secondary grade graduate teachers by Dept of teacher education (DTE), 2004.
  • Advisory Member of Several School administrations & Panel member for Recruitment of Teachers in Matriculation Schools.
  • Resource person for a training programme organized for the Higher Secondary Post-grade Graduate Teachers (PGT) by Department of teacher education (DTE), Tamil Nadu, 2004.
  • Coordinator , M.Sc (Chem)-IDE (Theory & Practicals), University of Madras(2012-2013)

(13) SEMINARS AND SYMPOSIUM ORGANIZED: 12

a) Inter National Symposium on Chemical Education and Research,2004

b) Refresher course for Govt. College teachers, 2005

c) DAE Workshop on Radiation Awareness , 2007.

d) Student Seminar on Chemistry for Competitive Exams 2009.

e) National Conference on Advances in Nanomaterials in Catalysis, 2010.

f) International Year of Chemistry (IYC-2011) , 2011.

g) Biotechnological Approach to Combat Malnutrition , 2011.

h) Hands-On Training , DBT Sponsored Workshop , 2012.

i) Micro scale Experiments in Chemistry , 2012.

j) Nutrition Week Celebration, 2012.

k) Detection of Adulteration and Biochemical Analysis of Food,  2013.

l) Analytical Techniques in Food Processing ,  2013.

(14) PUBLICATIONS

(i). Publications in Journals (Research Level) : 43

(ii). Publications in Souvenirs & Proceedings(Research Level): 59

(iii). Publications as Books (Academic Level): 5

(iv). Publications as Articles & Books (Spiritual Level): 32

(v). Publications in the websites:

https://drdayalan.wordpress.com/ (ஆன்மீகம்-HRE)

https://dradchem.wordpress.com/ (CHEMISTRY)

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

Abt Me

       எஙகள் குருநாதர் ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரர், நமாழ்வார் முதலான ஆழ்வார்கள், மற்றும் ஸ்ரீராமாநுஜர்-ஸ்ரீமணவாளமாமுனிகள் முதலான ஆச்சாரியர் திருவடிகளே சரணம்.

Prof. Dr. A. DAYALAN, M.Sc., M.Phil., Ph.D., F.I.C.S

A.தயாளன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

To CONTENTS:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-69: திருத்தண்கால்(திருத்தங்கல்)

Tags

, , , , , , ,

மகாலெட்சுமி தாயாரே விருப்பத்துடன் வந்து தங்கியிருக்கும் தலம்.
அருள்மிகு நின்ற நாராயணன் திருக்கோவில் :-
மூலவர் : நின்ற நாராயணன்
தாயார் :

அன்னநாயகி (ஸ்ரீதேவி)
அம்ருதநாயகி (பூதேவி)
அனந்தநாயகி (நீளாதேவி)
ஜாம்பவதி

உற்சவர்: திருத்தண்காலப்பன் & செங்கமல நாச்சியார்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம் : தேவச்சந்திர விமானம்
தீர்த்தம் : பாப விநாச தீர்த்தம்
மங்களாசாசனம் : பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

Kovil
கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. நாகதோஷம் நீக்கும் தலம்!

        ஒரு சமயம் திருப்பாற்கடலில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்கும், தம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவி வைகுண்டத்தைவிட்டு இந்த ஸ்தலத்திற்கு வந்து நாராயணனை நோக்கி கடும்தவம் புரிந்தாள். அவளது தவத்திற்கு மெச்சிய பெருமாள் காட்சியளித்து ‘நீயே, பெரியவள்’ என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் வந்து தங்கி தவமியற்றியதால் இந்த ஸ்தலம் ‘திருத்தங்கல்’ என்னும் பெயர் ஏற்பட்டது.

சிறப்பு
நாராயணன் நான்கு நாச்சியார்களுடன் காட்சி தந்து அருளும் தலம். மூலவரின் வலதுபுறம் ஸ்ரீதேவி அன்னநாயகி என்ற திருநாமத்துடன், நீளாதேவி அனந்த நாயகி என்ற திருநாமத்துடன், இடதுபுறம் பூதேவி அம்ருத நாயகி என்ற திருநாமத்துடன், ஜாம்பவதி ஆகியோர் உள்ளனர்.

      எல்லாத் திருமேனிகளும் சுதையால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளதால் திருமஞ்சனம் நடைபெறுவதில்லை. செங்கமலவல்லித் தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணைக் காப்பு திருமஞ்சனம் உண்டு.வினாசக முனிவர் “வைகானஸ ஆகமம்” விதிகளை முனிவர்களுக்கு எடுத்துரைத்த தலம். திருமகள் “மகாலஷ்மி” வந்து இங்கு தங்கியிருந்த தலம் ஆதலால் திரு + தங்கல் “திருத்தங்கல்” என்று பெயர் பெற்றது.

       குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள அற்புதத் திவ்யதேசம். தங்கால மலையில் அமைந்துள்ள அற்புதத் திவ்யதேசம்.

தாயார் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் ஒரே திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி செங்கமல தாயார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அமிர்த கலசத்துடனும் காட்சி தரும் ஒரே திவ்யதேசம்.

          இவ்வூர் சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாய்த் திகழும் இத்தலத்தில் “கருநெல்லிநாதர்” என்ற திருப்பெயரோடு சிவபெருமானும், “ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள்” என்ற திருநாமத்தோடு பெருமாளும் தரிசனம் தருகின்றனர்.இவர்கள் இருவருக்கும் தென்புறத்தில் முருகப் பெருமான் பழனி ஆண்டவராக மிக இளமையாக காட்சி தருகிறார்.

Darshan
வள்ளி-தெய்வானையுடன் குடும்ப சகிதமாய் இல்லாமல் தனித்து அருள்பாலித்தாலும், திருத்தங்கல் மக்களின் பெரும்பாலான திருமணங்கள் இவர் முன்னிலையில் தான் நடக்கின்றன.

வைகனாஸ புராணம் பெற்ற தலம்

            எம்பெருமான் உகந்து எழுந்தருளியுள்ள 108 திவ்யதேசங்களுள் மிகவும் முக்கியமானது நைமிசாரண்யம் என்கிற திவ்ய திருத்தலம்.

              இங்கு தான் ஸ்ரீ விகனஸர் “வைகனாஸ பகவத் சாஸ்திரம்” என்னும் ஆகம விதியை (பகவானை ஆராதிக்கும் முறையை) அத்ரி, ப்ருகு, காச்யபர், மரீசி முதலிய நான்கு முனிவர்களும் உபதேசித்து அருளினார்.

          ஒரு சமயம் இத்தலத்திலே தவம் செய்து வரும் முனிவர்கள் எல்லோரும் ஒன்று சூதவரிடம் “உங்களிடமிருந்து ‘தர்மம், அதர்மம், காமம் மற்றும் மோக்ஷம்‘ ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அடையும் வழிகளையும்; பகவானுடைய திவ்ய அவதாரங்களையும்; அவர் எழுந்தருளியுள்ள பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சாவதாரம் ஆகிய நிலைகளை பற்றியும்; நமக்கு மேலும் கீழும் உள்ள சப்த லோகங்களின் நிலைகளையும்; பல புண்ணிய திருத்தலங்களின் பெருமைகளையும்; புண்ணிய தீர்த்தங்களின் மாகத்மீயங்களையும்  தெரிந்து கொள்ளலாம்.

             மேலும், “ஸ்ரீதேவியானவள்” வாசம் செய்யும் க்ஷேத்திரங்கள் பல உள்ளன , அவற்றுள் தென்திசையில் “ஸ்ரீக்ஷேத்திரம்” என்கிற திவ்ய திருத்தல மகத்துவங்களை கேட்பதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். எனவே, கருணை கூர்ந்து ஸ்ரீக்ஷேத்திரமாகிய “திருத்தங்கல்” திருத்தலத்தின் பெருமைகளை எங்களுக்கு விரிவாகக் கூறியருள வேண்டும் என பிரார்தித்தார்கள்.

           சூதர் புண்ணியத்தின் புகழிடமாக திகழும் ஸ்ரீக்ஷேத்திரத்தின் மகத்துவம் மிகவும் ரகசியமானது. அதை உங்களுக்கு சொல்கிறேன். மேலும், யாரொருவர் இத்தலத்தின் மாகத்மீயத்தை சிரத்தையுடன் கேட்கிறார்களோ அல்லது படிக்கிறார்களோ அவர்களிடம், எம்பெருமான் வலமார்பில் வாசம் செய்யும் திருமகளாகிய மகாலட்சுமி குடியிருப்பாள், அவர்கள் சகலவிதமான ஆபத்துகளிலிருந்தும் விடுபடுவர்.

         நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று முடிவில் உயர்ந்த மோட்சத்தை அடைவார்கள் என்றார்.இவ்வாறு “வைகாநஸ புராணம்” பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது.

திருமணக்கோலம்

        ஜாம்பவிதேவி என்பவள் இராம அவதாரத்தில் கிட்கிந்தையில் இருந்த ஜாம்பவானின் மகளாவாள். அவளைத் திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க ஆவல் கொண்ட ஜாம்பவான், கிருஷ்ண அவதாரத்தில் திருமணம் செய்து வைத்ததாகவும், அவர்களின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

        இத்தலத்தில் நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம் என இரண்டு திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தந்தாலும் நின்ற மூர்த்தியே பிரதானமாகக் கருதப்படுகிறார்.

மலையாக மாறிய ஆலமரம்

         சுவேதம் என்றதீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் தாங்கள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவோ “ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் இப்போதும் சயனிக்கிறார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்” என்றார்.

      இதைக் கேட்டு வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கித் தவமிருந்தது. அதன் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் “உனக்கு என்ன வரம் வேண்டும்?? என்று கேட்க, ஆலமரமோ “தாங்கள் எப்போதும் பான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொள்ள வேண்டும்” என்று கேட்டது.

       “திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக!!! நான் திருமகளை மணம் செய்ய வரும் காலத்தில் உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்”, என்றார் ஸ்ரீமந்நாராயணன்.

             மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், “தங்கும் ஆல மலை” எனப்பட்டது, காலப்போக்கில் இதுவே மருவி “தங்காலமலை” திருத்தண்கால் (திருத்தங்கல்) என்றானது.

மங்களாசாசனம்

      இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார்-1 பாசுரம், திருமங்கையாழ்வார்-4 பாசுரங்கள் என மொத்தம் 5 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

 

HRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்

Tags

, , , ,

           சம்பந்தர் பாடல் பெற்ற, கிருத யுகத்திலிருந்து உள்ள திருமீயச்சூர் மேகநாதர் தலம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் 119 வது தேவாரத்தலமாகவும் அமைந்துள்ளது.

         இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டார். அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீலலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார்.

Untitled

       ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.

மூலவர் விமானம்

            கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில்-கொடி மரம், பலிபீடம், நந்தி-அடுத்து மற்றொரு கோபுரம். எதிரே உள்ள திருச்சுற்றில் விசுவநாதர் சன்னதி. கோயிலின் இடது புறம் லலிதாம்பிகை அம்மன் சன்னதி.இரண்டாவது கோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம். அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள். கருவறையில் மேகநாதசாமி.

அம்பாள் : மேகலாம்பிகை, சௌந்தர்ய நாயகி, லலிதாம்பிகை.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.

         கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சேத்திர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாரூடர். திருச்சுற்றில் தேயுலிங்கம், விநாயகர் சன்னதிகள். அடுத்து இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வருணலிங்கம், நிருத்வி லிங்கம், அகத்திய லிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம், சித்தி விநாயகர், மகாலட்சுமி, பிரித்வி லிங்கம். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்.

லலிதாம்பிகை கோயில்

        கோயிலின் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி லலிதாம்பிகை கோயில். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய,-வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.

Lalithambigai

          இத்தலத்தில், லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும்.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்

      திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார்.

       ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். ‘அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார்.

      அவ்வாறே ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் அம்பிகைக்கு அர்ப்பணித்தார்.பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

கொலுசு

        பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

      1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தாள்.

        விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பிகை யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார். மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.

         பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை.

          இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.

         பெரும் புண்ணியம் செய்த பக்தை கொலுசினை செய்து கொண்டு கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார். இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசிட துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர்.

சிறப்புகள்

 காசிப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகிய இருவரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பிள்ளைபேறு பெற்றனர்.
 சூரிய பகவான் இங்கு தவமியற்றி சாப விமோசனம் பெற்றார்.
 ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 21 லிருந்து 27 வரை சூரிய கிரணங்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடும். இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது-ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

புராண காலத்தில் இங்கு பிறந்தோர்

        கருடன்; அருணன்(சூரியனின் தேரோட்டி); வாலி; சுக்ரீவன்; எமன்; சனீஸ்வரன்.

         காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் தலா ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார்.

          ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ”நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்” என கூறினார்.

           இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ”நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்” என்று கூறினார்.கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான்.

தலவரலாறு & தலச்சிறப்பு

              இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவது பாவம். ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும் செய்தார்.

            சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.

      சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன் தான் வாலி. எண்ணம் ஈடேறியது. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். ‘மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார்.

       அருணன், மோகினியாக மாறினான். அழகில் சூரியனை மயக்கினான். விளைவு.. சுக்ரீவன் பிறந்தான்.

      தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்தத சிவனார் சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்’ என அருளினார்.

        இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ என்று கேட்க… வெகுண்டாள் பார்வதி. ‘உரிய நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார், ‘எற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.

       பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது! சூரியனாருக்கு அருளிய ஈசன், மேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில், அருள் புரிகிறார்,

      சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.

      அம்மனின் அருள் பெருக்கு அதிகமான ஆலயம். ஆபரணம் கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம், சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்முக சண்டேசுவரர் சிறப்பு ஆகும். கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு. ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம். ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு – கேது முதலான சகல தோஷங்களும் விலகும், திருமணம் முதலான அனனத்து வரங்களும் கிடைக்கும்.

க்ஷேத்ரபுராணேஸ்வரர்

        இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது.

Shethrapuraneswarar

         இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.

        மூலவர் கருவறை கோஷ்டத்தில் அம்பிகை சமேத க்ஷேத்ரபுராணேஸ்வரர் சிற்பம், அம்பிகையை சிவன் சமாதானப்படுத்தும் முறையில் அழகாக அமைந்துள்ளது. இச்சிற்பம் மிகவும் புகழ் பெற்ற சிற்பமாகக் கருதப்படுகிறது.

பாஸ்கர ராயர்

               ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். 2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

                செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர்.

             இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

               கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

                இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர்.

                 பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் “சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா” (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,

 இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
 மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
 இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

12(A):Hindu Religious Extracts (HRE), இந்து மதச் சாரம்: CONTENTS

HRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்

Tags

, , , , ,

      “திராவிட வேதம்” என்று பெயர் பெற்ற இந்த அமிர்தத்தை(முக்திக்கு வித்தை) ஆதி மூலமான ஸ்ரீமன் நாராயணன், அரையர்கள் மூலமாக கேட்டருள்கிறார்.

திருமொழி என அழைக்கப் படுபவைகள் ஐந்து

பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார்)-461

பெரியாழ்வார் திருமொழி:1.2.1-21= 21 பாசுரங்கள்(10 extra)
பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13 = 13 பன்னிரு திருநாமப்பாடல்கள்(2 extra)
1.1-9…….2.1-10; 3.1-10; 4.1-10; 5.1-4
43 பத்துக்கள் (பாசுரங்கள் 10, 11 என மாறி மாறி எண்ணிக்கை)

நாச்சியார் திருமொழி(ஆண்டாள் நாச்சியார்)-143

14 திருமொழிகள்
4, 5, 6-ம் திருமொழிகள் 11-பாசுரங்கள் (extra 3)
மற்ற-11 திருமொழிகள் 10-பாசுரங்கள்
(14 x 10) + 3 = 143

பெருமாள் திருமொழி(குலசேகர ஆழ்வார்)-105

10 திருமொழிகள் பாசுரங்கள் as follows:
11, 10, 9, 11, 10, 10. 11, 11, 11, 11 = 105 பாசுரங்கள்

பெரிய திருமொழி(திருமங்கையாழ்வார்)-1084

1.1-10…….10.1-10; 11.1-8
(10 x 10) + 8 = 108 பத்துக்கள்
10.7. 1-14 =14 பாசுரங்கள்(4 extra)
மற்றவைகள் அனைத்தும் 10 பாசுரங்கள்
(108 x 10) + 4 =1084

திருவாய்மொழி-சாம வேதசாரம்(நம்மாழ்வார்)-1102

ஒவ்வொரு திருவாய்மொழியும் (திருமொழியும்) அதன் முதற்பாடல் சொல்லைத் தலைப்பாக கொண்டுள்ளது.
ஆக, 100 திருவாய்மொழிகள் (திருமொழிகள்) 100 x 11 பாசுரங்கள் = 1100 பாசுரங்கள்
இரண்டாம் பத்து, 7-ம் திருவாய்மொழியில் (திருமொழி-7ல்) மட்டும், 13 (11+2) பாசுரங்கள் (2.7.1 to 13)
திருவாய்மொழி: 2.7.1-13 பன்னிரு திருநாமப்பாடல்கள் (extra 2)
100 பத்துக்கள்
(10 x 10 x 11) + 2 = 1102 பாசுரங்கள்

உயர்வர: பாசுரம்-1………………உயர்ந்தே: பாசுரம்-1102

       மற்ற திவ்ய பிரபந்தங்களை வீதிகளில் ஓதி செல்வது போல் அல்லாமல், திருவாய்மொழி ஓரிடத்தில் அமர்ந்து ஓதக்கூடியது

      நம்மாழ்வாரின் நூல் வாழ வேண்டுவது , அந்த நூலால் தான் மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்களும் நமக்குக் கிடைத்தன! உலகமே உய்ய தமிழில் மறையும் கிடைத்தது!

      அவர் தம் “ஆயிரத்துள் ஒரு பத்தும்” பாடலை, ஒரு சிலர் பாடக் கேட்டுத் தான் (திருவாய்மொழி 5-8-1 to 11) நாதமுனிகள், மற்ற பிரபந்தங்களைத் தேடலானார்.

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!

 …..திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே

….திருவாய்மொழி 5-8-11

              நம்மாழ்வார் அருளால் அனைத்து ஆழ்வார் பாடல்களும் நாதமுனிகளுக்கு கிடைத்தன;திருவாய்மொழிக்கு இழந்ததை மீட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிறப்பு!

       நம்மாழ்வார் ‘அர்ச்சராதி கதி‘ வாயிலாக பரமபதம் சேரவிருப்பது திருவாய்மொழியில் சொல்லப்பட்டுள்ளது! (திருவாய்மொழி:10.9.1 to 11)

          திருப்பேர் நகர் பெருமானாகிய அப்பக்குடத்தான் மார்க்கண்டேயருக்கு இறவா வரம் தந்ததால், இத்தலத்தில் இருக்கும் தீர்த்தம் (குளம்) மிருத்யு விநாசினி என்றழைக்கப்படுகிறது.

திருவாய்மொழி நூற்றந்தாதி-மணவாளமாமுனிகள்

        திருவாய்மொழி நூற்றந்தாதி மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ் நூல்களில் இது ஒன்று.

          நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன. ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன.

            ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் இறுதிச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.

             இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.

&&&&&&&&&&&&&&&&&&&&&

பன்னிரு திரு நாமப்பாடல்கள்

 பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13
 நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

பன்னிரு திரு நாமப்பாடல்கள் அல்லாது, 11 க்கும் அதிகமான பாசுரங்களைக் கொண்ட திருமொழிகள்

 பெரியாழ்வார் திருமொழி:1.2.1-21
 திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி: 10.7. 1-14

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

HRE-66:காவிரி-காவேரி-பொன்னி-பொன்னியம்மன்

Tags

, , , , , , , , , , , , , , ,

             காவிரி ஆறு காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சமமலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.

           நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, மைசூர், மாண்டியா, பெங்களூர் வழியாக தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

              இது பொன்னி ஆறு என்றும் பொன்னி’ என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில்] இருந்திருக்கிறது.

            கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.

       தமிழ்நாட்டில், காவிரி (கொள்ளிடம் என்றும் காவிரி என்றும்) இரண்டு கிளைகளாக பிரிகிறது.கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு அருகே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.

கவேரமுனிவர்-லோபமுத்திரை-அகத்தியர்-விநாயகப்பெருமாள்-காக்கை-காவேரி-பொன்னி

           கவேர முனிவர் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பிரம்மனிடம் வேண்டி தவமிருந்தார். அவரது தவத்தை ஏற்ற பிரம்மன், அவர் வேண்டியபடியே ஒரு பெண் குழந்தையை அருளினார்.முனிவர் அவளுக்கு லோபமுத்திரை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

        லோபமுத்திரை, சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ வேண்டும் வரத்தை கேள்” என, தான் நதி உருவமாகி பூமியை வளப்படுத்த வேண்டும் என்று தன் ஆசையை அவள் கூறினாள். ‘கங்கைக்கு இணையான புனிதமுடையவளாய் காவேரி என்று நீ அழைக்கப்படுவாய். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை திருமணம் செய்து வாழ்வாயாக. காலம் வரும் போது நதி வடிவம் எடுப்பாய்’ என்று கூறி மறைந்தார்.

       அவர் கூறியபடியே அகத்தியரும் லோபமுத்திரையும் திருமணம் செய்து வாழ்ந்தனர். அகத்தியர் லோபமுத்திரையை நதி வடிவத்தை தன் கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார்.

        குடகு மலையில் இருவரும் பல நாட்கள் தங்கி சிவ பூசை செய்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அங்கிருந்த நெல்லி மரத்தடியில் தன் கமண்டலத்தை வைத்துவிட்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் அகத்தியர். அப்போது சிவனின் ஆணைப்படி, லோபமுத்திரை காவேரியாக மாறி நதி வடிவம் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் முறையிட்டனர்.

      விநாயகர் காகமாக மாறி, கமண்டலத்தை கவிழ்த்து லோபமுத்திரையை காவிரியாக பொன்னி பெருக்கெடுக்கச் செய்தார். கண் விழித்த அகத்தியர் நடந்ததை உணர்ந்து வருந்தினார். அனைத்தும் இறைவனின் திருவருள் படியே நடைபெறுகிறது என்று உணர்ந்து, காவிரிக்கு வழிகாட்டியவாறு நடந்தார். அவர் நடந்த சென்று பாதைகளில் தான் இன்றைக்கும் காவேரி பாய்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன.

        ஆடி பதினெட்டம் பெருக்கன்று ,காவேரி பெருகி வருவதால் , மக்கள் அன்று காவேரியை சிறப்பாக பூஜித்து மகிழ்கின்றனர்.

காவிரி நதிக்கரையில் அமைந்த திருத்தலங்கள்

வைணவ திருத்தலங்கள்-ரங்க தலங்கள்
ஆதிரங்கம், மத்தியரங்கம், பஞ்சரங்கம், சதுர்த்தரங்கம், அப்பாலரங்கம்.

ரங்கம்=அரங்கம்= மண்டபம்=சபை=ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி

ஆதிரங்கன்-ஆதிரங்கம் மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம்
காவேரி ரங்கன்– மத்தியரங்கம்; அனந்தரங்கம் ; ஸ்ரீரங்கம்
பரிமள ரங்கன்– பஞ்சரங்கம்; மாயவரம்,ஸ்ரீதேவி-கங்கை, பூதேவி-காவிரி
சார்ங்கன்– சதுர்த்தரங்கம் ; கும்பகோணம்
அப்பாலரங்கன்-அப்பக்குடத்தான்-அப்பாலரங்கம்; திருப்பேர் (கோவிலடி)-நம்மாழ்வாருக்கு மோட்சம்.

சிவ திருத்தலங்கள்-தேவாரத்தலங்கள்

 காவிரியாற்றின் வட கரை (63),
 காவிரியாற்றின் தென் கரை(127)
 மொத்தம் 190 out of 276

       நீர்வளம் அளிக்கும் தென்னிந்திய பொன்னி ஆற்றை பொன்னியம்மன் என்றும், வடஇந்திய கங்கை ஆற்றை கங்கையம்மன், என்னும் போற்றுவது எங்கும் உள்ள தமிழர்களின் கலாச்சாரம்.

பொன்னியம்மன்

         சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது.

Indian Rivers

காவிரியின் துணை ஆறுகள்

                   கபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.

காவிரியின் அணைகள்

கர்நாடகா அணைகள்

1.தலைக்காவேரி,  2.ஹாரங்கி அணை,  3.ஹேமாவதி அணை, 4.கிருஷ்ணசாகர் அணை,  5.கபினி அணை.

தமிழக அணைகள்

        6.மேட்டுர் அணை,  7.மாயனுர் மதகு அணை, 8.கல் அணை.

           மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

             குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது.

         ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது.

           கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது.

            காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது.

IMG_Kaveri KA & TN        பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.

காவேரி கடந்து வரும் பாதை

          கர்நாடக மாநிலம்குடகு மாவட்டத்தில் தலைக் காவிரியில் உருவாகி மைசூர் மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையை அடையும்போது ஹேமாவதி, ஹேரங்கி, ஆகிய 2 கிளை ஆறுகளும் காவிரியுடன் இணைகின்றன.
ThaliKaveri           ஸ்ரீரங்கப்பட்டணத்தை தாண்டியவுடன் கேரளாவின் வயநாட்டில் உருவாகும் கபினி ஆறு கர்நாடகாவின் திருமுக்கூடல் பகுதியில் காவிரியுடன் கலக்கிறது.

              கர்நாடக மாநிலம் சோமநாதபுரம் அருகே சிவசமுத்திரம் என்ற அருவியாக மாறும் காவிரி ககனசுக்கி அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. பின்பு காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்து சேருகிறது.

தமிழகத்தில் காவிரியின் போக்கு

              மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.

Kaveri River

       இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. அதன் பின் ஓகேனக்கலில் அருவியாக கொட்டி சேலம் மேட்டூரில் அணையாக நிறைந்து ஈரோடு மாவட்டம் மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது.

        ஈரோடு நகரைக் கடந்து நாமக்கல் மாவட்டத்தில் நொய்யல் கிராமத்தில் நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கிறது.

              நாமக்கல்லை அடுத்து கரூருக்கு அருகே அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது.

      வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.

       கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.

            காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி கல்லணையை அடைந்த பின் சிறு ஆறுகளாக பிரிந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கங்கையம்மன்

               சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்கா அவதர தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்! இந்திய மக்களின் கலாச்சாரத்தையும் ஆழ்ந்த பக்தி மார்க்கத்தையும் ஒருங்கே வளர்த்து, அனைவராலும் போற்றி வழிபடப்படும் ஆறு கங்கை.
கங்கை நதி: https://drdayalan.wordpress.com/2018/02/15/hre-61

புஷ்கரம்

                 புஷ்கரம் நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். இந்த விழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறும்.

           குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து தங்களுடைய புஷ்கரம் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

     அதன்படி, மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர், ஆண்டுக்கு ஒருதடவை, குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்வார்.

கவேரி புஷ்கரம்

                    குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 12 நாட்கள் அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன்.

          மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் குரு பெயரச்சியாகும்போது அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் 12 நாட்கள் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

               அதன்படி புஷ்கரம் மேஷம் ராசி (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் ராசியில் (பிரணீதா) நதி/ஆற்றிலும் என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த ராசியில் பெயர்ச்சி நாள் முதல் 12 நாட்கள் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.

         அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

     மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

           இம்முறை (2017) குரு பகவான் துலா ராசியில் செப்டம்பர் 12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது. மேலும் இம்முறை கொண்டாடப்பட்ட காவேரி புஷ்கரம் என்பது   முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும்…. அதனால் 2017 செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர் 24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரமாகவும் கொண்டப்பட்டது.

     கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்:–

கர்நாடகா

         தலைக்காவேரி-பாகமண்டலா-குஷால் நகர்-ஸ்ரீரங்கப்பட்டினம்- கிருஷ்ணராஜ் சாகர் அணை-மாண்டியா-ஷிவனசமுத்திரா-பன்னூர்- திருமாக்குடல் நரசிபுரா-தலக்காடு-முடுகுத்தூர்-கனகபுர்.

தமிழ்நாடு

         மேட்டூர்-பவானி-பள்ளிப்பாளையம் (ஈரோடு)-கொடுமுடி- பரமத்தி வேலூர்-ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி- திருவையாறு- தஞ்சாவூர்- சுவாமிமலை- கும்பகோணம்- மயிலாடுதுறை- மருதூர் அக்ரஹாரம்-பூம்புகார்.

                மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஷ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்

ஆடிபெருக்கு

                 ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.

Adiperukku

                  நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர். இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.

அம்மன் திருவிழாக்கள்

       ஊர்மக்கள், பொன்னியம்மனை கிராம தேவதையாக போற்றுகின்றனர். கிழக்கு எல்லை அம்மனாக, பொன்னியம்மனையும், மேற்கு எல்லை அம்மனாக படவேடு அம்மனையும் கூடவே கங்கை அம்மனையும், ஊர்மக்கள்,  வழிபடுகின்றனர்.

        ஜாத்திரை விழா, என்பது சிற்றுர்களில் நடைபெரும் மிகவும் சிறப்பான விழாக்களில் ஒன்று.கங்கை அம்மனையும், படவேடு அம்மனையும் முதலில் வழிபட்டபின்னர் கிராம தேவதை பொன்னியம்மனை வழிபட்டு மாரியம்மன் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

       சக்தியை அன்னை-தாயார் என்றும் அம்பாள்-அம்மன் என்றும் பலபல நாமங்களால் போற்றுவது எங்கும் உள்ள இந்து மத கலாச்சாரம்.

தேவி-ஸ்ரீதேவி
ஈஸ்வரி-பரமேஸ்வரி
அம்பிகை– லலிதாம்பிகை
அம்பாள்-கர்பாகாம்பாள்
அம்மன்-பொன்னியம்மன்

 மோசூர்-மோட்டூர் கிராம ஸ்ரீபொன்னி அம்மன் ஆலய கும்பாபாபிஷேகம்(25-6-2018)

              எங்கள் பூர்வீக கிராமம்-(அரக்கோணம் தாலுக்கா, மோசூர் அடுத்த மோட்டூர்) இந்த கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொன்னி அம்மன் ஆலய கும்பாபாபிஷேகம் ஆனிமாதம், 11-ம் நாள் (25-6-2018), காலை 9.00-10.30 மணியளவில் நடந்தேறியது.

Untitled&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யன்பரே,
• Hindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கில் (LINK) வந்து இந்த    கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
• மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
• இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.

          இங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கில் (LINKs) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/