Tags

, , , , , , , , , ,

பாண்டிநாடு திவ்யதேசங்கள்:18 (No.78 to 95)

(திருநெல்வேலி To திருசெந்தூர் Rd)

25th, 26th & 27th Dec., 2015 

***தாயாருடன் உம்மை தரசனம் செய்ய அருளிய அனந்த சயனா, உமக்கு உமது ஆழ்வார்கள்-ஆச்சாரியரகளுடன் அடியேனின்   அனந்தகோடி நமஸ்காரங்கள்.

திவ்யதேசங்கள் LIST:: Pl click the link “Div-108 LIST” given below

Div-108 LIST

CONTENTS
HRE-35(A):பாண்டிநாடு திவ்யதேசங்கள்-LIST
HRE-35(B).தாமிரபரணி நதி
HRE-35(C):நவதிருப்பதிகள் (S.No.80 to 87)-தாமிரபரணி-ஆற்றங்கரை.

HRE-35(D):பாண்டிநாடு திவ்யதேசங்கள் (88 & 95)

For திருப்புல்லாணி (S.No-93)-விளக்கம்; Pl Click the LINK (HRE-38 : https://drdayalan.wordpress.com/2016/02/24/hre-38)
Also under S.No-93 below 

AND FOR

விரிவான விளக்கம்- for S.No.80 to 87  (நவதிருப்பதிகள்-

தாமிரபரணி-ஆற்றங்கரை திருத்தலங்கள் -Pl refer

below at the END of the LIST HRE-35(B)

HRE-35(A):பாண்டிநாடு திவ்யதேசங்கள்:18 (No.78 to 95)-LIST

78-திருக்குறுங்குடி

ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்-சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி); திருநெல்வேலி
Thiru Kurungudi-1
இந்த திவ்ய தேசம் வாமன ஷேத்ரம், இங்கு தான் மகாபலிசக்கரவர்த்தி மோட்சம் அடைந்ததது மற்றும் இங்கு ஸ்ரீ விஷ்ணு ராமானுஜரிடம் இருந்து மந்தரோபதேசம் பெற்று வைஷ்ணவ நம்பி என்ற தாஸ்ய  நாமத்துடனும், சிவன் பக்கம் நின்றார்.

Please click below to go to CONTENTS for all the Articles in HRE: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

79-திரு சிரீவர மங்கை(வானமாமலை),

தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)

Nanguneri-Thothathri

ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்-ஸ்ரீ தோதாத்ரிநாதன்  (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்; திருநெல்வேலி

80-ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி (S.No.80 to 87, Pl refer below at the END of the LIST)

ஸ்ரீ வைகுந்தவல்லி-ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்); திருநெல்வேலி

81-திருவரகுணமங்கை, நவதிருப்பதி

ஸ்ரீ வரகுண வல்லி (ஸ்ரீ வரகுணமங்கை)-விஜயாசனப்  பெருமாள்
திருநெல்வேலி

82-திருப்புளிங்குடி, நவதிருப்பதி

ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி-ஸ்ரீ காய்சினவேந்தன்
திருநெல்வேலி

83-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி

ஸ்ரீ அலமேலுமங்கை, ஸ்ரீ குளந்தை  வல்லி-ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்; திருநெல்வேலி

84-திருக்குருகூர் ; ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி

ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி-ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்; திருநெல்வேலி

85-தென் திருப்பேரை), நவதிருப்பதி

ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
திருநெல்வேலி

86-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி

ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்) ; திருநெல்வேலி

87- திருக்கோளூர், நவதிருப்பதி (S.No.80 to 87, Pl refer below at the END of the LIST)

ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
திருநெல்வேலி

88-ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)-ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
விருதுநகர்

89-திருதண்கால் (திருதண்காலூர்)

ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்’ விருதுநகர்

90-திருமாலிரும் சோலை (அழகர் கோயில்)

ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
மதுரை

91-திருக்கூடல்,

ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்; மதுரை

92-திரு மோகூர்

ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)-ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்; மதுரை

93-திருப்புல்லாணி

ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ  பத்மாஸநி த் தாயார்-ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
ராமநாதபுரம்

For திருப்புல்லாணி விரிவான விவரத்திற்க்கு, please click the LINK below:

HRE-38; LINK : https://drdayalan.wordpress.com/2016/02/24/hre-38

94-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)

திருமாமகள் நாச்சியார்-ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்; புதுக்கோட்டை

For திருக்கோஷ்டியூர், விரிவான விவரத்திற்க்கு, please click the LINK below:

HRE-39; LINK: https://drdayalan.wordpress.com/2016/03/04/hre39

95-திருமெய்யம்

ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்-ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்; புதுக்கோட்டை

HRE-35(B).தாமிரபரணி நதி

       தாமிரபரணி நதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.

           வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளின் நவத்திருப்பதி தலங்கள் கொண்ட நதிக்கரைகள்.

Thamirabarani-

        இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம். தாமிரபரணி மேன்மையை ஆதிசேஷன், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கூறினாலும் முடிவு பெறாது. அத்தகைய பெருமை உடையது என்று வியந்து போற்றுகிறார்.

       இந்தியாவில் இரண்டு நதிதான் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. ஒன்று காசியில் உள்ள கங்கை மற்றொன்று தாமிரபரணி. தாமிரபரணியில் குளிப்பது. காசியில் குளிப்பதற்கு நிகரானது என்று மகாத்மியம் கூறுகிறது. மேலும் கங்கையின் பாவத்தினை தாமிரபரணி போக்குவதால் மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த பகுதியில் குளித்தாலும் கங்கையில் குளித்த புண்ணியம் கிட்டும்.

          இந்த நதி இப்பெயரை பெற காரணமாக இருந்தது தாமிரம் என்ற உலோகம் இங்கு அதிகமாக காணப்படுவதே. மேலும் இயற்கை மூலிகைகள் பலவற்றை கொண்டுள்ள பொதிகை மலைகளை கடந்து வருவதால், இந்த ஆற்றுத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

HRE-35 (C) : நவதிருப்பதிகள் (S.No.80 to 87)-தாமிரபரணி-ஆற்றங்கரை திருத்தலங்கள்-விளக்கம்

நவத்திருப்பதிகள்-9 (*திவ்யதேச எண்ணிக்கையில்-8)

***இரட்டைதிருப்பதிகள் (86a & 86b) சேர்ந்து ஒரே திவ்ய தேசம்

        தாமிரபரணி ஆற்றங்கரை மீது அமர்ந்த நவ திருப்பதி திருத்தலங்களும், 108 திவ்ய தேசங்களுள் அடங்கும். திருத்துலைவில்லிமங்கலத்தில் இருக்கும் இரு திருப்பதிகளும், திவ்யதேச வரிசையில் ஒரே திவ்யதேசமாக கருதப்படுகின்றன.

    தாமிரபரணி, பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் ஸ்தலத்தின் வழியாக வருகிறது.

      காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, திருக்குளந்தை(பெருங்குளம்), இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம்-திருவரகுணமங்கை என்ற வரிசையில் ஆலய தரிசனம் அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

தாமிரபரணி வட-ஆற்றங்கரை திருத்தலங்கள் (6 திருப்பதிகள்; 1-6)

ஸ்ரீவைகுண்டம்Tentative தரிசன நேரம்:7.30-12.00 & 5.00-8.00
திருவரகுணமங்கை
Tentative தரிசன நேரம்:9.00-6.00
திருப்புளியங்குடி-T
entative தரிசன நேரம்:9.00-6.00
தொலைவில்லிமங்கலம்தெற்கு இரட்டைதிருப்பதி Tentative தரிசன நேரம்:9.00-6.00
தொலைவில்லிமங்கலம்வடக்கு இரட்டைதிருப்பதி
Tentative தரிசன நேரம்:9.00-6.00

திருக்குளந்தை(பெருங்குளம்)Tentative தரிசன நேரம்:7.30-12.00 & 5.00-8.00

தாமிரபரணி தென்-ஆற்றங்கரை திருத்தலங்கள் (3 திருப்பதிகள்; 7, 8, 9)

தென்திருப்பேரைTentative தரிசன நேரம்:7.30-12.00 & 5.00-8.00
திருக்கோளுர்
Tentative தரிசன நேரம்:7.30-12.00 & 5.00-8.00
ஆழ்வார்திருநகரி
Tentative தரிசன நேரம்:7.30-12.00 & 5.00-8.00 HRE-35

     தாமிரபரணி ஆற்றங்கரை மீது அமைந்த, நவ திருப்பதி திருத்தலங்களும், 108 திவ்ய தேசங்களுள் அடங்கும். திருத்துலைவில்லிமங்கலத்தில் இருக்கும் இரு திருப்பதிகளும், திவ்யதேச வரிசையில் ஒரே திவ்யதேசமாக கருதப்படுகின்றன.

(80)-ஸ்ரீவைகுண்டம்–சூரியன்

   நவதிருப்பதி தலங்களில் முதலாவதான தலம் சூரியன் வழிப்பட்டது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்

நெல்லையில் இருந்து 28 கி.மீ ; தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ.

மூலவர்-வைகுண்ட நாதர்- நின்ற  திருக்கோலம்  .
உற்சவர்-கள்ளபிரான்.
தயார்-வைகுண்டநாயகி, சோரநாயகி, பூதேவி

1

       சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார். பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

    தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க பிரம்மா வேண்ட திருமாலும் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    காலதூஷகன் எனும் திருடன் திருடிய பொருளில் பாதியை ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்துள்ளான். ஒருநாள் திருடனின் கூட்டத்தினர் திருடச்சென்றபோது பிடிபட்டனர். திருடன் வைகுண்டநாதனிடம் சரணடைந்து தன்னை காக்க வேண்டினான். அதன்பொருட்டு வைகுண்டநாதனே அரண் மனைக்கு வந்து அரசனுக்கு தனது சுயரூபத்தைக்காட்டி, தர்மம் காக்க உன்னை தர்மத்தில் ஈடுபடச்செய்யவே நான் வந்தேன் என்று கூற, அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவமூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடதொடங்கினான்.

    ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோவில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இந்த லிங்கம் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரால் வழிபடப்பட்டது. சனீசுவரர் இறைவனை வழிபட்ட தலமாதலால் நவகைலாயங்களில் இது சனீசுவரத் தலம் ஆகும்

     ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ கலைவாணியைக் குறித்துப் சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார்.

(81)-திருவரகுணமங்கை (நத்தம்) – சந்திரன்

     ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ நத்தம் திருத்தலம்

  • மூலவர்– விஜயாசநன பெருமாள்-அமர்ந்த திருக்கோலம்  
  • உற்சவர் எம்மிடர் கடிவான்
  • தயார்-வரகுணமங்கை; வரகுணவல்லி2      ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.  இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம்.

(82)-திருப்புளியங்குடி–புதன்

     நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ.

  • மூலவர்– பூமிபாலகன்-கிடந்த திருக்கோலம்
  • உற்சவர்-காய்சினவேந்தன்.
  • தயார்-மலர் மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடிவல்லி3

    திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டு கொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும்.

(83)-திருக்குளந்தை (பெருங்குளம்)–சனி

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ.

  • மூலவர்-வேங்கடவாணன்-நின்ற திருக்கோலம்
  • உற்சவர்-மாயக்கூத்தர்.
  • தயார்– கமலாவல்லி, குழந்தைவல்லி
    4

     பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண்-குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

   ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

(84)-ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்)–குரு

   (நம்மாழ்வார் அவதார தலம்)

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ.

  • மூலவர்–ஆதிநாதன்- நின்ற திருக்கோலம்
  • உற்சவர் பொலிந்து நின்றபிரான்
  • தயார்– ஆதிநாயகி, திருகுருகூர்நாயகி9

       திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார். அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று திருமால் கூறிய இடமான ஆழ்வார்திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால்  ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது.

   ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால், சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப்படுகிறது. சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப்படுகிறது.

    வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சி அளித்ததால் வராஹ ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.

(85)-தென்திருப்பேரை – சுக்கிரன்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் ரோட்டில் 38 கி.மீ.

  • மூலவர்- மகரநெடுங்குழைக்காதன்-அமர்ந்த திருக் கோலம்
  • உற்சவர்- நிகரில் முகில்வண்ணன்.
  • தயார் குழைக்காதுவல்லி, திருப்பேரைநாச்சியார்7

       துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பெய்ப்பதில்லை.

(86a)-தொலைவில்லிமங்கலம்-தெற்கு கோவில்

   (இரட்டைதிருப்பதி)-ராகு

   பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி.

  • மூலவர் ஸ்ரீனிவாசன்-நின்ற திருக்கோலம்
  • உற்சவர் தேவர்பிரான்.
  • தயார்– அலர்மேல்மங்கை, பத்மாவதி5

   ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது.

(86b)-தொலைவில்லிமங்கலம்-வடக்கு    

(இரட்டைதிருப்பதி)–கேது

     தெற்கு கோவிலில் இருந்து எட்டிய தூரத்தில் உள்ளது வடக்கு கோவில் இங்குள்ள

  • மூலவர் அரவிந்த லோசனர்-அமர்ந்த திருக்கோலம்
  • உற்சவர் செந்தாமரைக்கண்ணன்.
  • தயார்– கருத்தடங்கண்ணி
    6A
    தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார்.

 (87)-திருக்கோளுர்–செவ்வாய்

(மதுரகவி ஆழ்வார் அவதார தலம்)

    தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் ரோட்டில் 2 கி.மீ.

  • மூலவர்-வைத்தமாநிதி-கிடந்த திருக்கோலம்
  • உற்சவர்-நிச்சோபவிந்தன்.
  • தயார்– குமுதவல்லி, கோளுர்வல்லி8

    சிவனை வழிபட கைலாயம் சென்ற குபேரன் பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம். பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள். குபேரனின் உடல் விகாரமானது. குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான். பார்வதி கோபம் தணியாதவளாய் உன் உடல் விகாரம் மாறாது, உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளை வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்

Untitled

.    குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரஹதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

HRE-35(D):பாண்டிநாடு திவ்யதேசங்கள் (88 & 95)

88. ஸ்ரீவில்லிபுத்தூர் (வராக-ஷேத்திரம்)

ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)-ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்) ; Pl Click LINKs HRE-9 & HRE-20 given below:

 89.திருத்தங்கல், திருதண்காலூர் (சிவகாசி)

ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவில்,

     ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க ‘தங்காலமலை’ என்னும் இத்தலத்திற்கு வந்து “செங்கமல நாச்சியார்” என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள்.

      பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால்-“திருத்தங்கல்’.
Thiru Thangal-1        திருத்தங்கல்-தங்காலமலை’ மீது .சுவேத தீவில் இருந்த ஆலமரத்திற்கு தந்த வரத்தின்படி பெருமாள் இங்கு மலையாக நிற்கும் ஆலமரத்தின் மேல் தங்கி இருப்பதால் ‘தங்காலமலை” என்றும் “தங்காலப்பன்” என்று மூலவருக்கும் திருநாமம்!

     மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள்-மூலவரான “நின்ற நாராயணப்பெருமாள்-இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதி. இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.

     கருடாழ்வார் நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலை-பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. நாகதோஷம் நீக்கும் தலமுமாம்!

     இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவ பெருமான் , முருக பெருமானுக்கும் கோயில்கள் உள்ளன.

அருகிலுள்ள நகரங்கள்:சிவகாசி, விருதுநகர் , ஸ்ரீவில்லிபுத்தூர்

      பூதத்தாழ்வார் (1-பாசுரம்) ; திருமங்கையாழ்வார் (4-பாசுரம்).

     விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்து பெருமாளை வணங்கலாம்!

      மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி(பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம். இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

    ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)-ஸ்ரீ நின்ற  நாராயணன். 

 90. திருமாலிரும் சோலை(அழகர் கோயில்), மதுரை 

ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)-திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)

91. திருக்கூடல் (தென்மதுரை)

ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)

கூடல் அழகர், மதுரை 

Koodal Madurai

நான்கு யுகம் கண்ட இறைவன்:-

      நான்-முக பிரம்மாவை தனது நாபியால் படைத்த இறைவன் நாராயணன், நான்கு யுகங்களாகக் கோயில் கொண்டு அருள்புரியும், தொன்மை.

      கிருதயுகத்தில், பிரம்மாவின் மைந்தன் அர்ச்சா ரூபமாக வழிபட விரும்பி, இத்தலம் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

      திரேதாயுகத்தில் “பிருது” மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும், இத்தல இறைவனான “கூடலழகர்” அழகில் கவரப்பட்டு இங்கேயே பல காலம் தங்கி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

      துவாபரயுகத்தில், அம்பரீசன், கூடலழகரை வழிபட்டு முக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

    கலியுக-ஆரம்பத்தில் புதனின் மைந்தனான புரூரவசு, அவனது மகன் இந்திரத்யும்னன் ஆகியோர் கூடலழகரை வழிபட்டு முக்தியடைந்ததாகச் சொல்லப்படுகிறது

92. திரு மோகூர், மதுரை 

ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)-ஸ்ரீ காளமேக

பெருமாள்; ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்

93. திருப்புல்லாணி, ராமநாதபுரம்( 25th, 26th & 27th Dec., 2015 & on 3-7-2017)

ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ  பத்மாஸநித் தாயார்-ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்).

Please Refer: https://drdayalan.wordpress.com/2016/02/24/hre-38

94. திருக்கோஷ்டியூர்(கோஷ்டி க்ஷேத்ரம்)

திருமாமகள் நாச்சியார்-ஸ்ரீ உரகமெல்லணையான்; ஸ்ரீ சௌம்ய நாராயணன்.

95. திருமயம் (புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ- குடைவரைக்கோவில். ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்-ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி); ஸ்ரீ மெய்யப்பன்;      சத்திய மூர்த்தி & திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

     சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன.

95.Thirumoiyam

     ஆதிசேஷனின் வேண்டுகோளுக்கிணங்கி, திருப்பாற்கடல் தரிசனத்தை மகாவிஷ்ணு காட்டிய ஸ்தலம். ஆதிசேஷன் தனது விஷக்காற்றை விட்டு அசுரர்களைக் கொன்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

                ஒரு சமயம் மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் பெருமாள் பாம்பைனணயில் படுத்து நித்திரையில் இருக்கும் பொழுது ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி ஆகியோரை அபகரிக்க வருகின்றனர். அது கண்டு அஞ்சி ஸ்ரீ பூ தேவி தாயார் பெருமாளின் திருவடி அருகிலும், ஸ்ரீ தேவி தாயார் பெருமாள் திருமார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர். பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாத ஆதி சேஷன் தனது வாயில் இருந்து விஷ ஜவாலையை கக்கி விரட்டி விடுகிறான். பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில் பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்து இருக்கிறாய் என்று கூறுகிறது திருமயம் ஸ்தல புராணம். இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த திருஸ்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.

மூலவர் சத்யகிரிநாதன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.

மற்றொரு மூலவர் உய்யவந்தான் கிடந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விடப் பெரிய திருமேனி.
Thiru Meiyam-1      இக்கோயில் ஓர் அழகிய குடவரைக் கோயில். மூலவர் பின்புறம் சுவற்றில் பிரம்மா முதலிய சகல தேவர்களும் செதுக்கப்பட்டுள்ளனர். ஆதிசேஷன் தனது விஷக்காற்றை அசுரர்கள் மீது விடும் சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

     இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது-‘ஆதி ரங்கம்’- சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

*****************************************************************

RELATED திவ்யதேசங்கள் ARTICLES:-

                     Pl Also, Click & Look for other திவ்யதேசங்கள் at HRE Links given below

 (I) சோழநாட்டுத் திவ்யதேசங்கள் (1 to 40)
https://drdayalan.wordpress.com/2016/03/08/hre-40

(II நடு நாடு திவ்யதேசங்கள் (41 & 42)
https://drdayalan.wordpress.com/2016/04/20/hre-41

(III) தொண்டை நாடு திவ்யதேசங்கள்(43 to 64)
https://drdayalan.wordpress.com/2016/02/22/hre-37

(IV) மலை நாடு திவ்யதேசங்கள் (65 to 77)
https://drdayalan.wordpress.com/2016/06/12/hre-43

(V) பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்கள்(78 to 95)
https://drdayalan.wordpress.com/2015/12/29/hre-35

(VI) வட நாடு திவ்யதேசங்கள் (96 to 106)-To be published soon